Pages

விண்ணைத்தொடும் விலைவாசி...

Tuesday, January 4, 2011
விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனையாக ஆக்கியதன் விளைவு இப்பொழுது தான் மெல்ல மெல்ல தலை தூக்குகிறது விலை வாசி உயர்வு என்ற பிரச்சனையாக.

தமிழகத்தில் முப்போகம் விளையும் விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனையாக  ஆக்கி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலத்தின் விலையை அதிகப்படுத்தி நிறைய இடங்களில் விற்பனை செய்யப்பட்டது செய்யப்படுகிறது.  இதற்கு ஒரு சில சமூக ஆர்வலரிடம் எதிர்ப்பு இருந்த போதிலும் பொதுமக்கள் வீட்டு மனை வாங்கும் ஆர்வத்தால் எதிர்ப்புக்கள் அனைத்தும் அமுங்கிவிட்டது. இன்று தமிழகத்தில் கொடி கட்டி பறக்கும் வியாபாரமே  வீட்டு மனை விற்பனை தான்.

வீட்டு மனை வியாபாரத்தால் விவசாய உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குப்பின் சாப்பாடுக்கு வழி இருக்காது என்று  பேச்சு இருந்து வரும் இந்நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் மழை பெய்தது இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது பொருட்களின் உற்பத்தி குறைந்தது தேவை அதிகரித்தது. இது தான் சமயம் என  விலையை ஏற்றி விட்டனர் இதனால் நடுத்தர வர்க்க மக்கள் இன்று யாரும் காய் கறிகள் வாங்க கூடிய நிலைமை இல்லை என்றாகி விட்டது. இந்த விலை ஏற்றத்திற்கு பின்னால் சற்று யோசித்தமேயானால் இது மழையால் வந்த விலை ஏற்றம் இல்லை. உற்பத்தி குறைந்ததால் வந்த விலை ஏற்றம் தான். விலை ஏற்றத்திற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.


இன்னும் 5 ஆண்டுகளுக்கு பின் இருக்க வேண்டிய விலை இன்று இருக்கின்றது வெங்காயம் கிலோ 80 ரூபாய், தக்காளி 60 என்ற தினமும்  மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை விண்ணைத்தொடுகிறது. சைவ உணவு சாப்பிடும் பழக்கம் மறந்து விடும் அளவிற்கு இருக்கிறது இன்று மலையில் பயிரிடப்படும் காய்கறிகள் எல்லாம் குறைந்த பட்ச விலை 50யைத் தாண்டுகிறது.

சிக்கன், மீன், மட்டன் விற்கும் விலைக்கு இன்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வாரத்திற்கு ஒரு நாள் தான் சிக்கன், மட்டன் எடுப்போம் மற்ற நாட்களில் சைவ உணவுதான். இவ்விலை ஏற்றத்தால்  பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினரும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் தான். ஒரு காலத்தில் 100 ரூபாய் கொண்டு போனால் ஒரு பை நிறைய காய்கறிகள் வாங்கி வரலாம் இன்று 1000 ரூபாய் கொண்டு போனாலும் ஒரு பை நிறைய வாங்கி வர முடியாது என்பது தான் நிலைமை.

விலை வாசி உயர்ந்த அளவிற்கு பொதுமக்களுக்கு கூலி, சம்பள உயர்வு இல்லை அதே கூலி தான் வழங்கப்படுகிறது. இன்றைய நிலைமைக்கு பொதுமக்கள் காய் கறிகள் சமைப்பதை விட வீட்டில் எழுமிச்சை, தயிர், புளி சாதம் போன்றவற்றிக்கு சமைப்பதால் காய்கறி விலையில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம். இந்த உணவு வகைகள் தான் ஓரளவிற்கு விலை குறைந்த பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க ஏதுவாக இருக்கும். ஏறி வரும் விலை வாசியை சமாளிக்க இந்த மாதிரி  உணவுக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

ஒரே ஒரு இடத்தில் விலை உயர்வதால் அதைப்பின்பற்றி அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவிசயத் தேவையான பொருட்களின் விலை பன்மடங்கு உயருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகப்படுத்தாலம் ஆனால் அதிலும் பல சிக்கல்கள்.  இன்னும் 2 நாளில் விலை குறைந்து விடும் 4 நாளில் குறைந்து விடும் என்று அறிக்கை மட்டுமே விடுகின்றனர் குறைந்தபாடில்லை.

பொங்கல் நெருங்கி வரும் வேளையில் காய்கறிகளின் வரத்து அதிகமாக வரும் போது விலை ஏற்றம் குறைய வாய்ப்பு இருக்கிறது. விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ரியல் எஸ்டேட். விளைநிலங்களை வீட்டுமனை ஆக்க அனுமதிக்கக்கூடாது. எது எதுக்கோ கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு இந்த வீட்டுமனை விற்பனைக்கும் விதித்தால் விவசாயத்தை முன்னிறுத்த உதவும்.

விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்...

36 comments:

{ ம.தி.சுதா } at: January 4, 2011 at 11:05 PM said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

{ ம.தி.சுதா } at: January 4, 2011 at 11:07 PM said...

அப்ப இம்முறை என்ன இலவசமாம்...

{ cheena (சீனா) } at: January 4, 2011 at 11:07 PM said...

அன்பின் சங்கவி - உண்மை - விலைவாசி இறங்க வேண்டும் - இல்லை எனில் ஆட்சியில் இருந்து இறக்கப்படுவார்கள்

{ சேலம் தேவா } at: January 4, 2011 at 11:14 PM said...

//விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்..//

:-))

{ கே.ஆர்.பி.செந்தில் } at: January 4, 2011 at 11:16 PM said...

நாடு போகிற நிலைய நெனச்சா கவலையாத்தான் இருக்கு ....

{ வெங்கட் நாகராஜ் } at: January 4, 2011 at 11:19 PM said...

நல்ல நேரத்தில் நல்லதோர் பகிர்வு. விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்படுவது என்னவோ நடுத்தர மற்றும் வருமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் தான். விளைநிலங்கள் மட்டுமல்ல, எத்தனை ஆற்றுப் படுகைகளும் அடுக்கு மாடி குடியிருப்பு ஆகிவிட்டது? இதற்கு எல்லாம் எப்போது விடிவுகாலம்?

{ Sathish } at: January 4, 2011 at 11:27 PM said...

கருத்துள்ள பதிவு...

{ அகல்விளக்கு } at: January 4, 2011 at 11:32 PM said...

//விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்//

சர்வ நிச்சயமாக.... :-)

{ ரஹீம் கஸாலி } at: January 4, 2011 at 11:39 PM said...

விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்..//

same blood

{ எல் கே } at: January 4, 2011 at 11:45 PM said...

அரசு மாறினால் விலைவாசி இறங்காது

{ மாணவன் } at: January 4, 2011 at 11:51 PM said...

//விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்...//

இதுதான் நடக்கப்போகிறது....

{ ஸ்வர்ணரேக்கா } at: January 5, 2011 at 12:03 AM said...

கடைசி வரி சூப்பர்...

ஆனாலும், என்ன காய் என்ன விலை வித்தாலும், அதை வாங்கி, எப்பவும் போல் அள்ளி இறைத்து செலவு செய்பவர்களும் இருக்கிறார்களே!!!

{ கோமாளி செல்வா } at: January 5, 2011 at 12:03 AM said...

//இவ்விலை ஏற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினரும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் தான். ஒரு காலத்தில் 100 ரூபாய் கொண்டு போனால் ஒரு பை நிறைய காய்கறிகள் வாங்கி வரலாம் இன்று 1000 ரூபாய் கொண்டு போனாலும் ஒரு பை நிறைய வாங்கி வர முடியாது என்பது தான் நிலைமை//

எந்த விலை ஏற்றம் வந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ நடுத்தர வர்க்கம் தான் அண்ணா ..

{ அருண் பிரசாத் } at: January 5, 2011 at 12:27 AM said...

மக்கள் என்றைக்கு லஞ்சம் வாங்கி ஓட்டு போடுறத நிறுத்தறாங்களோ அப்போதான் அரசியல் மாறும்...பிறகு விலை வாசி பற்றி கேள்வி கேக்கலாம்

{ சே.குமார் } at: January 5, 2011 at 12:28 AM said...

விலைவாசி இறங்க வேண்டும் என்று நாம் நினைத்து ஆட்சியாளரை மாற்ற நினைத்து ஓட்டிட நினைக்கையில் 500ம் பிரியாணியும் நம்மை தஞ்சாவூர் பொம்மையாக்கிவிடுமே நண்பா.

{ ISAKKIMUTHU } at: January 5, 2011 at 12:31 AM said...

நண்பரே, தாங்களின் கூற்று முற்றிலும் சரியே. “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இன்று சுவற்றை இடித்துவிட்டு (விளை நிலங்களை விற்றுவிட்டு) சித்திரத்தை (உணவுப் பொருளை வாங்க) வரைய நினைக்கிறோம். நீங்கள் சொல்வது போல் இன்னும் 5 ஆண்டுக்குப் பிறகு…… நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால், யார் ஆட்சி செய்தாலும் இனிமேல் ஏறிய விலை இறங்காது என்பது மட்டுமே நிதர்சனம்.

{ ISAKKIMUTHU } at: January 5, 2011 at 12:37 AM said...

விலைவாசியை குறைக்க இனிமேல் எந்தக் கட்சியாலும் முடியாது. இன்று ஆளுகின்றவர்களாக இருக்கட்டும். நாளை ஆள நினைக்கின்றவர்களாக இருக்கட்டும். யாராவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது விற்கப்படும் விலையில் இருந்து குறைந்தது 10 சதவீத விலை குறைப்பு செய்வோம். அதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிப்போம் என்று உத்திரவாதம் தர முடியுமா.
விவசாயிகளுக்கு அரசு சலுகை வழங்க வேண்டும். வட்டியில்லா (காப்பீட்டுடன் கூடிய) கடன் வழங்கி விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்துப் பொருட்களையும் அரசின் அமைப்புகளே நேரடியாக கொள்முதல் செய்து பொது சந்தைக்கு சந்தைப்படுத்த வேண்டும். மொத்த விலை இவ்வளவு, அதிகபட்ச சில்லரை விலை எவ்வளவு என்பதை நிர்ணயித்து தனியாருக்கு அரசு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒழிய விலையை குறைப்போம் என்பது தேர்தலுக்கான கோசமாக மட்டுமே இருக்கும்.

{ வைகை } at: January 5, 2011 at 12:44 AM said...

மாணவன் said...
//விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்...//

இதுதான் நடக்கப்போகிறது.../////////

அதுதான் நடக்காது! வாக்காளர் விலையும் கூடும்!

{ சேட்டைக்காரன் } at: January 5, 2011 at 12:50 AM said...

மெனக்கெட்டு பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, அது மும்பைத் துறைமுகத்தில் அழுகிக்கொண்டிருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது நண்பரே! கொடுமையிலும் கொடுமை!

{ வரதராஜலு .பூ } at: January 5, 2011 at 1:23 AM said...

//ம.தி.சுதா said...

அப்ப இம்முறை என்ன இலவசமாம்...
//

ஒரு ஓட்டுக்கு 2 கிலோ வெங்காயம், 1 கிலோ தக்காளி

{ வினோ } at: January 5, 2011 at 1:25 AM said...

/ விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்... /

இப்படி தான் நடக்கும்....

{ R.Gopi } at: January 5, 2011 at 1:37 AM said...

இந்த நேரத்திற்கு தேவையான அருமையான பதிவு...

இங்கு விஷத்தை விட விரைவாக ஏறுவது விலைவாசி தான்...

//விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்..//

இது கண்டிப்பாக நடக்க வேண்டும்.. அது தான் திமிர் பிடித்த ஆட்சியாளர்களுக்கு நாம் கற்றுத்தரும் பாடம்....

யாதவன் at: January 5, 2011 at 1:57 AM said...

சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை

அருமையான அலசல் , ஏழைகள் வயித்தில் தான் அடி
வாழ்த்துக்கள்


--

{ Geetha6 } at: January 5, 2011 at 2:04 AM said...

enna panalaam?

{ Speed Master } at: January 5, 2011 at 2:16 AM said...

கருத்துள்ள பதிவு.
மக்கள்---முதலில் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்

{ கக்கு - மாணிக்கம் } at: January 5, 2011 at 2:27 AM said...

ரியல் எஸ்டேட் காரர்கள் எல்லாம் என்ன சாதாரண தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் கஷ்ட ஜீவன் களா?
அவர்கள் எல்லாம் மத்திய மாநில அரசுகளில் பங்கு கொண்டுள்ள பினாமிகள். அரசியல் பிழைபோரின் வாரிசுகள்.

{ goma } at: January 5, 2011 at 2:32 AM said...

விலைவாசியை எதிர்க்க ஒரே வழி
’விலைவாசியை வெறுப்போர் சங்கம் ’என்று தொடங்கி ,விலை இறங்கும் வரை வாங்க மாட்டோம் என்று ஸ்ட்ரைக் பண்ணனும்,
சுனாமி வந்தால் என்ன செய்கிறோம்...
...சுருண்டு கிடந்து கிடைத்ததை சாப்பிடுகிறோம் இல்லையா ...அதை ,அந்த மனோபாவத்தை நாமாக வாலண்ட்டரியாக செய்தால் என்ன

{ goma } at: January 5, 2011 at 2:34 AM said...

மிஸ் எ மீல் என்று ஒரு காலத்தில் ,அதாவது1965ல் ஒரு கட்டுப்பாடு சைனா போர் நேரம் அது.
இரவு உணவை தியாகம் செய்யும் படி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது...அது போல் விலை உயர்ந்த காய்கறிகள் கடையிலேயே கிடக்கட்டும் என்று நாமிருந்தால்தான் ஒழுங்குக்கு வரும்

{ சி.பி.செந்தில்குமார் } at: January 5, 2011 at 3:51 AM said...

good post sangavi..

{ கல்பனா } at: January 5, 2011 at 4:41 AM said...

பயனுள்ள பதிவு

{ கவிநா... } at: January 5, 2011 at 5:00 AM said...

மிகத்தேவையான, அத்தியாவசியமான பதிவு. நன்றி சகோ, விழிப்புணர்வுப்பகிர்வுக்கு.

{ கிருபாநந்தினி } at: January 5, 2011 at 6:00 AM said...

வெங்காயம்தான் கண்ணுல தண்ணியை வரவழைக்கும். இப்ப வெங்காய விலையே கண்ணுல தண்ணி வரவழைக்குது! எப்பூடி என் புதுக் கவிதை?!

{ தமிழரசி } at: January 5, 2011 at 7:31 AM said...

சரியான நேரத்தில் தெளிவான பதிவு சங்கவி..

{ தமிழ் உலகம் } at: January 5, 2011 at 10:31 AM said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

{ இந்திரா } at: January 5, 2011 at 10:34 PM said...

வெங்காயத்தப் பாத்தாலே பயமா தான் இருக்கு.

{ பாரத்... பாரதி... } at: January 5, 2011 at 11:10 PM said...

முன்பெல்லாம் இயற்கை மாற்றங்களால் தான் விலைவாசி உயர்வு ஏற்ப்படும், ஆனால் இப்பொதெல்லாம் செய்ற்கையாக விலைவாசி உயர்த்தப்படுகிறது.

Post a Comment