Pages

புத்தாண்டு கொண்டாட்டமும் உயிர் பலியும்...

Monday, January 3, 2011

வருடா வருடம் புத்தாண்டு கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் விபத்துக்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இன்றைய இளைஞர்களிடம் டிசம்பர் 31 அன்று பேச்சே மச்சான் இன்னிக்கு எந்த பார் எங்க போகலாம் இந்த பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். வருடா வருடம் போலீசாரின் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும் இந்த வருடம் சென்னையில் ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று பதிவின் மூலம் அறிந்தேன்.

இந்த வருடம் புத்தாண்டின் போது நடந்த விபத்துக்களை படிக்கும் போது அனைவருக்கும் அனைத்து விசயங்களும் தெரிந்து தான் தவறு நடக்கிறது. இந்த வருடம் நான் படித்த வகையில் 3 மிகப்பெரிய விபத்துக்கள்.

விபத்து 1

சேலம் அருகே 3 இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிதந்து சென்று தாங்கள் சென்ற காரை சாலை ஓரம் உள்ள ஏரியில் விட்டதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்து 2

ஏற்காடு மலைப்பாதையில் கார் பள்ளத்தில் பாய்ந்தது. காரிற்குள் இருந்தவர்களை தியணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் (உயிரிழப்பு விபரம் சரியாக தெரியவில்லை)

விபத்து 3

மேட்டூர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இளைஞர்கள் கேக் கொடுத்து வாழ்த்து சொல்லும் போது எதிர்பாரதவிதமாக லாரிக்குள் விழந்து சம்பவ இடத்திலேயே 25 வயதுமதிக்கத்தக்க இளைஞர் பலி

இந்த விபத்துக்கள் மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் நடுஇரவில் நாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டத்தில் கை கொடுக்கும் போது மப்பில் வேகமாக ஓடிக் கை கொடுக்கும் போது சாலையில் விழுந்து அருகில் உள்ள கல் மண்டையில் ஏறி இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகினர்.

இச்சம்பவம் அனைத்தும் புத்தாண்டு அன்று இரவு நடந்தது. புது வருடம் பிறந்து இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன இந்த விபத்துக்கள் தவிர தமிழகம் முழுவதும் பார்க்கப்போனால் ஏறக்குறைய இன்னும் சில விபத்துக்கள் நிச்சயம் நடந்து இருக்கும். புத்தாண்டு அன்று விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம் அனைவரும் உற்சாக பானம் அருந்தியதாகத்தான் இருக்கும்.

தற்போதைய கலாச்சாரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே அது உற்சாக பானம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய மிக குறைவு. உற்சாக பானம் அருந்துவதோ புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடுவதோ தவறு என்பது என் கருத்து அல்ல அனைத்தும் வேண்டும் மித வேகம் மிக நன்று என்பது போல அனைத்தும் மிதமாக இருந்தால் நிச்சயம் விபத்தில் உயிரிழப்பு இல்லாமல் நமது சந்தோசங்களை கொண்டாடலாம்.

கனவுகளுடன் கூடிய உங்கள் பயணம் கவனமாக இருக்கட்டும்...

43 comments:

{ ANKITHA VARMA } at: January 3, 2011 at 9:33 PM said...

இதற்கு எல்லாமும் முக்கிய காரணமே .. குடி குடி குடி ....

{ சிவாஜி } at: January 3, 2011 at 9:34 PM said...

கொண்டாட்டம் கொண்டாட்டமாக இல்லாமல், வெறுமனே கொட்டமடிப்பதாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய உண்மையான கொண்டாட்டம் என்பது ஒரு நாள் மட்டுமல்ல....

{ சௌந்தர் } at: January 3, 2011 at 9:36 PM said...

பண்டிகை காலத்தில் அதிக விபத்து நடக்கிறது

{ சேட்டைக்காரன் } at: January 3, 2011 at 9:37 PM said...

இது குறித்து நண்பர்களோடு விவாதித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் கேட்டார்:

“ஆமாம், வருடாவருடம் சபரிமலைக்குப் போகிறவர்கள் விபத்துக்குள்ளாவதும் அதிகரித்து வருகிறதே? ஏன்??”

ஆனால், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வெறும் சரக்கடிப்பது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை நண்பரே!

{ இனியவன் } at: January 3, 2011 at 9:41 PM said...

நெப்போலியன் ஐயா உள்ளே போனால் அவர் போன இடத்திற்கே எல்லரையும் கொண்டு போகும்.

{ சி.பி.செந்தில்குமார் } at: January 3, 2011 at 10:00 PM said...

drunken driving is 80 % reason to accident

{ சி.பி.செந்தில்குமார் } at: January 3, 2011 at 10:00 PM said...

bhavani to ammapaettai road is very bad

{ சி.பி.செந்தில்குமார் } at: January 3, 2011 at 10:00 PM said...

wat a pity?

{ முனியாண்டி } at: January 3, 2011 at 10:03 PM said...

Useful post

{ ரஹீம் கஸாலி } at: January 3, 2011 at 10:05 PM said...

விபத்துக்கள் எல்லா காலக்கட்டத்திலும் நடப்பதுதான். ஆனால், பண்டிகை காலங்களில் உற்சாக(பானம்) மிகுதியில் அதிகமாக நடக்க வாய்ப்பிருக்கிறது.

{ மாணவன் } at: January 3, 2011 at 10:12 PM said...

தகவல்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி சார்

{ மாணவன் } at: January 3, 2011 at 10:12 PM said...

புத்தாண்டு சமயத்தில் இதுபோன்று விபத்துக்கள் நடப்பது மிகவும் வேதனைக்குறியது,
நீங்கள் சொல்வதுபோல் “அனைத்தும் வேண்டும் மித வேகம் மிக நன்று என்பது போல அனைத்தும் மிதமாக இருந்தால் நிச்சயம் விபத்தில் உயிரிழப்பு இல்லாமல் நமது சந்தோசங்களை கொண்டாடலாம்.”

இதை கடைபிடித்தாலொழிய விபத்துக்களை தவிர்க்கலாம்

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: January 3, 2011 at 10:16 PM said...

நெப்போலியன் ஐயா உள்ளே போனால் அவர் போன இடத்திற்கே எல்லரையும் கொண்டு போகும்//
haha

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: January 3, 2011 at 10:16 PM said...

ஆனால், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வெறும் சரக்கடிப்பது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை நண்பரே!//
sss

{ வெங்கட் நாகராஜ் } at: January 3, 2011 at 10:29 PM said...

புத்தாண்டு என்றாலே தண்ணி அடித்துவிட்டு “ஹேப்பி நியூ இயர்” என்று கத்துவது என்று நினைக்கின்றனர் பலர். அதிலும் மது மயக்கத்திலே வண்டியை ஓட்டி தனக்கும் மற்ற சக சாலை உபயோகிப்பவர்களுக்கும் யமனாய் வந்து சேர்கின்றனர் இது போன்றவர்கள். வருந்த வேண்டிய விஷயம்....

{ இரவு வானம் } at: January 3, 2011 at 11:46 PM said...

வேதனையான உண்மை

{ R.Gopi } at: January 4, 2011 at 12:42 AM said...

தலைவா....

“தல” இந்த பதிவை படிச்சா, உங்க மேல கேஸ் போட்டாலும் போடுவாரு.. எந்த வருஷமும் இல்லாம, இந்த வருஷம் சேலத்துல 30-ம் தேதி நைட் டாஸ்மாக் சேல்ஸ் பல கோடிகளாமே!!

{ தினேஷ்குமார் } at: January 4, 2011 at 12:55 AM said...

என்ன சொல்வதென்றே புரியவில்லை பெற்றவர்களின் நிலை என்ன பாடுபடுதோ

{ சங்கவி } at: January 4, 2011 at 1:20 AM said...

ANKITHA VARMA said...

இதற்கு எல்லாமும் முக்கிய காரணமே .. குடி குடி குடி ....

உண்மைதான்... கொஞ்சமா குடிச்சாதனே ஆகும்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:21 AM said...

சௌந்தர் said...

பண்டிகை காலத்தில் அதிக விபத்து நடக்கிறது

அப்ப தான் சரக்கும் அதிகம் விற்கிறது..

{ சங்கவி } at: January 4, 2011 at 1:21 AM said...

சிவாஜி said...

கொண்டாட்டம் கொண்டாட்டமாக இல்லாமல், வெறுமனே கொட்டமடிப்பதாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய உண்மையான கொண்டாட்டம் என்பது ஒரு நாள் மட்டுமல்ல....

உண்மையான கொண்டாட்டம் தினமும் வட இருக்கலாம்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:22 AM said...

சேட்டைக்காரன் said...

இது குறித்து நண்பர்களோடு விவாதித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் கேட்டார்:

“ஆமாம், வருடாவருடம் சபரிமலைக்குப் போகிறவர்கள் விபத்துக்குள்ளாவதும் அதிகரித்து வருகிறதே? ஏன்??”

ஆனால், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வெறும் சரக்கடிப்பது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை நண்பரே!

//நண்பரே சரக்கு சாப்பிட்டு விட்டு அமைதியாக நண்பர்களுடன் கொண்டாடுபவர்கள் தான் நிறைய பேர் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக சரக்கடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் அவர்களை மட்டுமே நான் தவறு என்கிறேன்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:24 AM said...

சி.பி.செந்தில்குமார் said...

wat a pity?

உண்மை...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:24 AM said...

இனியவன் said...

நெப்போலியன் ஐயா உள்ளே போனால் அவர் போன இடத்திற்கே எல்லரையும் கொண்டு போகும்.

அளவுக்கு மீறினால் மட்டுமே...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:25 AM said...

சி.பி.செந்தில்குமார் said...

drunken driving is 80 % reason to accident

உண்மையிலும் உண்மை...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:25 AM said...

சி.பி.செந்தில்குமார் said...

bhavani to ammapaettai road is very bad

உண்மை தான் ஓட்டு கேக்க போகும் போது தான் அரசியல்வாதிகளுக்கு இந்த ரோடு சரியில்லை என்று தோனும்...

{ வினோ } at: January 4, 2011 at 1:25 AM said...

குடிப்பது மட்டுமல்லாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று மித மிஞ்சிய வேகம்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:26 AM said...

மாணவன் said...

புத்தாண்டு சமயத்தில் இதுபோன்று விபத்துக்கள் நடப்பது மிகவும் வேதனைக்குறியது,
நீங்கள் சொல்வதுபோல் “அனைத்தும் வேண்டும் மித வேகம் மிக நன்று என்பது போல அனைத்தும் மிதமாக இருந்தால் நிச்சயம் விபத்தில் உயிரிழப்பு இல்லாமல் நமது சந்தோசங்களை கொண்டாடலாம்.”

இதை கடைபிடித்தாலொழிய விபத்துக்களை தவிர்க்கலாம்

உண்மை தான் சார்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:26 AM said...

ரஹீம் கஸாலி said...

விபத்துக்கள் எல்லா காலக்கட்டத்திலும் நடப்பதுதான். ஆனால், பண்டிகை காலங்களில் உற்சாக(பானம்) மிகுதியில் அதிகமாக நடக்க வாய்ப்பிருக்கிறது.

உற்சாகம் மிகுதியாலும், உற்சாக பானம் மிகுதியாலும் நடக்கிறது...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:26 AM said...

முனியாண்டி said...

Useful post

Thank you...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:27 AM said...

இரவு வானம் said...

வேதனையான உண்மை

ஆமாம் வேதனையான உண்மை...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:27 AM said...

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டு என்றாலே தண்ணி அடித்துவிட்டு “ஹேப்பி நியூ இயர்” என்று கத்துவது என்று நினைக்கின்றனர் பலர். அதிலும் மது மயக்கத்திலே வண்டியை ஓட்டி தனக்கும் மற்ற சக சாலை உபயோகிப்பவர்களுக்கும் யமனாய் வந்து சேர்கின்றனர் இது போன்றவர்கள். வருந்த வேண்டிய விஷயம்....

ரொம்ப வருத்தப்பட வேண்டிய விசயம்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:27 AM said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆனால், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வெறும் சரக்கடிப்பது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை நண்பரே!//
sss

நான் சொல்ல வருவது மித மிஞ்சினால் மட்டுமே...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:28 AM said...

dineshkumar said...

என்ன சொல்வதென்றே புரியவில்லை பெற்றவர்களின் நிலை என்ன பாடுபடுதோ

பெற்றவர்கள் நிலமை கொடுமை தான்...

{ சங்கவி } at: January 4, 2011 at 1:28 AM said...

R.Gopi said...

தலைவா....

“தல” இந்த பதிவை படிச்சா, உங்க மேல கேஸ் போட்டாலும் போடுவாரு.. எந்த வருஷமும் இல்லாம, இந்த வருஷம் சேலத்துல 30-ம் தேதி நைட் டாஸ்மாக் சேல்ஸ் பல கோடிகளாமே!!

சேலத்தில் மட்டுமல்ல தழிழகம் முழுவதும் தான்...

{ Arun Prasath } at: January 4, 2011 at 2:15 AM said...

நானும் தான் கொண்டாடினேன்... எதுக்கும் அளவு இருத்தா சரி...

{ இந்திரா } at: January 4, 2011 at 2:34 AM said...

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலே நைட் 12 மணிக்கு தண்ணியடிச்சுட்டு வண்டில ஊர் சுத்துறதுதான்னு ஒரு கட்டாயமே உருவாய்டுச்சு.
நண்பர்கள் கூட கொண்டாட வேண்டியதுதான். அதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு. அதை யாரும் யோசிக்கிறது இல்ல.

{ தமிழரசி } at: January 4, 2011 at 4:12 AM said...

ஆக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க இத்தகைய அழிவுகள் தவிர்க்க முடியாது.. நிகழ்வுகள் அனைத்தும் வருந்தக்கூடியவைகளே..

{ வைகை } at: January 4, 2011 at 5:39 AM said...

அவரவர் பொறுப்பை உணர்ந்தால் இதுபோல் நடக்காது!

{ THOPPITHOPPI } at: January 4, 2011 at 6:08 AM said...

இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ப்பதிவாக நாம் எழுதி இருந்தால் படிப்பவர்களுக்காவது விழிப்புணர்வாக இருக்கும். பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே

{ ஸ்ரீ } at: January 4, 2011 at 6:19 AM said...

நல்ல இடுகை.பாராட்டுகள்.

{ எம் அப்துல் காதர் } at: January 4, 2011 at 8:02 AM said...

So Sad :-((

{ Chitra } at: January 4, 2011 at 9:52 PM said...

மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது..... கனவுகளையும் வாழ்க்கையும் தொலைக்க வைக்கும் அளவுக்கு "கொண்டாட்டங்களா?"

Post a Comment