Pages

அஞ்சறைப்பெட்டி (#7) 06.01.2011

Thursday, January 6, 2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

இந்த வருடத்தின் முதல் அஞ்சறைப்பெட்டி கடந்த வருடம் எப்படி வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதோ ஆதே போல் இவ்வருடமும் பெற செய்திகளின் தொகுப்பை அனைவரும் எதிர்பார்க்கும் படி வித்தியாசமானதாகவும், புதிய செய்திகாகவும் தர முயற்சி செய்கிறேன்.

&&&&&&&&&&&&&&

இந்த புத்தாண்டு அரசு ஊழியர்களுக்கு கொண்டாடட்மான புத்தாண்டாகும். பொங்கலுக்கு போனஸ், தற்போது சம்பள உயர்வு என 13 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பட் தான். இப்போதைய சம்பள உயர்வை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும், அரசு ஊழியர்களின் வாக்கை கவருவதற்காகவே அறிவிக்கப்பட்டது போல் இருக்கிறது.

&&&&&&&&&&&&&
எங்கு காணினும் இலவசம் என்ற சொல் தான் ஒலிக்கிறது. பொங்கலுக்கு பொங்கல் பொருட்கள் அனைத்தும் அரசால் இலவசமாக தரப்படுகிறது. ஏறக்குறைய அனைத்து பொருட்களும் தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. 2011 மே மாதத்தை எதிர் நோக்கித்தான் கிடைக்கிறது. எல்லாம் நம்ம அப்பமூட்டு காசு...

&&&&&&&&&&&&&


விலைவாசி உயர்வு இந்த வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஆடம்பரத் தேவை பொருட்குளுக்கு விலை அதிகமாக இருந்தால் அது பொதுமக்களை பாதிக்காது ஆனால் பொதுமக்களின் அத்தியாவிசயத் தேவை உணவு இந்த உணவுப்பொருட்களின் விலை அனைத்தும் விண்ணைத்தொடும் அளவிற்கு உள்ளது. விலை ஏற்றம் இதோ இன்று குறையும், நாளை குறையும் என்கிறார்கள் இதுவரை குறைந்தபாடு இல்லை. இறக்குமதியை அதிகப்படுத்தும் போது தான் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.  ஆனால் இறக்குமதிக்கு தேவைக்கு அதிகமான கட்டுப்பாடுகள் இருப்பதால் சமீபத்தில் மும்பைக்கு வந்த 200டன் வெங்காயம் அழுகிவிட்டதாம். மக்களின் அன்றாட தேவை தான் முக்கியம் மக்களுக்காகத்தான் அரசாங்கம் மக்கள் சிரமப்படும்போது கட்டுப்பாடுகளை தூக்கி எறிய வேண்டும். அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

&&&&&&&&&&&&&
அழகிரியின் அதிரடியால் ராசா, கனிமொழி, பூங்கோதை ஆகியோர் கட்சியில் இருப்பார்களா அல்லாது தேர்தல் வரை நீக்குவார்களா இல்லை என்றால் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வரை நீக்குவார்களா என்று இன்னும் சில நாட்களில் கூட்டப்படும் திமுக பொதுக்குழு கூட்ட முடிவில் தெரியவரும்.
&&&&&&&&&&&&&

பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்கள் 30 பேர் தங்களது சொத்து மதிப்பை வெளியிட்டு உள்ளனர். இவர்களில் மனித வளத்துறை அமைச்சர் பிரஷாந்த் குமார் ஷாஹிதான் 30 அமைச்சர்களில் அதிக சொத்துக்கள் உடையவர். அவரின் சொத்து மதிப்புகள் மொத்தம் 4.5 கோடி ரூபாயாகும். அனைவரும் சொத்து மதிப்பை வெளியிட்டது வரவேற்கத்தாக்க விசயம். இதோ போல் நமது தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் எல்லாம் சொத்து மதிப்பை வெளியிட்டால் நிச்சயம் அனைத்து தரப்பும் வரவேற்கும். என்ன பீகாரில் ஒரு அமைச்சரிடம் மட்டும் 4.5 கோடி சொத்து உள்ளது. நம்ம ஊரில் எவ்வளவு இருக்கும்?
 
&&&&&&&&&&&&&

இலங்கையில், பொது இடங்களில் பெண்கள் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து சுற்றித் திரிவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதன் மூலம் “செக்ஸ்” குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவர கணக்குகளும் தெரிவிக்கின்றன.

எனவே ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் அங்கு குட்டை பாவாடைகளை (மினி ஸ்கர்ட்டுகளை) பெண்கள் விரும்பி அணிகின்றனர்.இது அவர்களின் உடலின் பெரும்பாலான பகுதிகளை கவர்ச்சியாக காட்டுகிறது. எனவே பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட உள்ளது.
இதற்கான ஆலோசனையில் இலங்கையின் கலாசார துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வு மற்றும் சர்வே நடத்தி வருகிறது.பாவம் இலங்கை இளைஞர்கள்...


&&&&&&&&&&&&&

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் தனது அலுவலகத்தில் பார்வையாளர்களை சந்தித்து கொண்டு இருந்த போது ரூபம்பதக் என்ற 40 வயது பள்ளி ஆசிரியையால் குத்திக் கொல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரூபம்பதக் உண்மையை ஒத்துக்கொண்டார் எனக்கு தொடந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார் பொறுமை இழந்து அவரை குத்திக்கொன்றேன் இதனால் எனக்கு தூக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்ற போர்வையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.


நாட்டு நடப்பு

சென்னை வந்த பிரதமரை முதல் நாள் சந்திக்காமல் அடுத்த நாள் காலை சந்தித்தார் முதல்வர் சந்தித்தபின் பேட்டியில் இரு கட்சிக்கும் இடையேயான உறவு வலுவாக உள்ளது என்று பேட்டி அளித்து உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் ஆளும் கட்சியின் செயல் பாடுகளை போட்டுத்தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். இவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் மேலிட செல்வாக்கால் பேதுவது போல் தான் இருக்கிறது. இந்தக் கூட்டணி இருக்குமா இருக்காதா என்று விரைவில் தெரியவரும்.

1991, 2001 போல் 2011 லும் ஆட்சியைப் பிடித்த விட வேண்டும் என்று தீவிரமாக செயல் படுகிறார் ஜெயலலிதா. ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர், மாவட்ட அமைப்பாளர் என்று வேலைகளை பிரித்துக்கொடுத்து ஸ்பெக்ட்ரம்ற்க்கு பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி தனி பொதுக்கூட்டங்கள் போட்டு தனது இரண்டாம் கட்ட தலைவர்களை விரட்டி வேலை வாங்குகிறார். இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது பார்க்கலாம் இந்த ரேசில் வெற்றி பெறப்போவது யார் என்று...


யாருடன் கூட்டணி என்று மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக தரப்பு கூறி வருகின்றது ஆனால் அவர் சேலம் மாநாட்டில் மக்களுடன் தான் கூட்டணி என்று இவ்விவகாரத்தை சஸ்பென்சாக முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


தகவல்

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.

காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

மொக்கை ஜோக்

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கை இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!


பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் அஞ்சா சிங்கம் இவர் எழுத வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஆனால் இவரின் பதிவுகளில் சிரிக்க  வைக்கவும், சிந்திக்க வைக்கவும் இருக்கும். ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் எழுதியது போலவே இருக்கும்..

http://anjaasingam.blogspot.com/

தத்துவம்

நன்மை தரும் ஏழு
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு


வழிகாட்டும் ஏழு
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்


குறுஞ்செய்தி
ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? ------ 

பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.


கடவுளே எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல, ஊர் சுத்த பிடிக்கல எனக்கு காதல் வந்திருச்சா?
அடச் சீ நாயே உனக்கு செமஸ்டர் வந்திருச்சு எந்திரிச்சி படிடா..


இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது;
**இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே
பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....?

பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே


40 comments:

{ Samudra } at: January 6, 2011 at 1:26 AM said...

good information!

{ Arun Prasath } at: January 6, 2011 at 1:28 AM said...

**இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே
பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....?

பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே//

எவ்ளோ நியூஸ் படிச்சாலும் மொக்கை தான் புடிக்குது

{ karthikkumar } at: January 6, 2011 at 2:06 AM said...

அஞ்சறைப்பெட்டி கலக்கல். ஜோக்ஸ் அருமை.. குறிப்பா கடைசி ஜோக்...:)

{ பாரத்... பாரதி... } at: January 6, 2011 at 2:17 AM said...

நல்ல தகவல்களின் நீண்ட தொகுப்பு, விகடன் படித்தது போலிருக்கிறது. அஞ்சசிங்கத்திற்கு வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.

{ பாரத்... பாரதி... } at: January 6, 2011 at 2:18 AM said...

அஞ்சா சிங்கத்திற்கு வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.

{ வெறும்பய } at: January 6, 2011 at 2:18 AM said...

பல அறியாத தகவல்களுடன் அஞ்சறைப்பெட்டி அசத்தல்...

{ வெங்கட் நாகராஜ் } at: January 6, 2011 at 2:36 AM said...

இப்போது பாகிஸ்தான் வெங்காயத்திற்கும் தடை... ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் தடை செய்துள்ளது...

நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: January 6, 2011 at 2:55 AM said...

கலக்கல்

{ மாணவன் } at: January 6, 2011 at 3:15 AM said...

பல புதிய தகவல்களுடன் அஞ்சறைப்பெட்டி அசத்தல்...

{ மாணவன் } at: January 6, 2011 at 3:21 AM said...

//காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது//

இதில் “பெண்களின் கருமுட்டையை” என்று வந்தால் சரியாக இருக்குமா?

தவறாக நினைக்க வேண்டாம் இது எனது கருத்து மட்டுமே நண்பரே

{ அன்புடன் அருணா } at: January 6, 2011 at 3:27 AM said...

ம்ம் சிந்திக்கவும்,சிரிக்கவும்!!!

{ சேட்டைக்காரன் } at: January 6, 2011 at 3:27 AM said...

//உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....?

பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே//

அப்பான்னா இப்படியில்லே இருக்கணும்! :-)))

{ சேலம் தேவா } at: January 6, 2011 at 3:35 AM said...

//அழகிரியின் அதிரடியால் ராசா, கனிமொழி, பூங்கோதை ஆகியோர் கட்சியில் இருப்பார்களா அல்லாது தேர்தல் வரை நீக்குவார்களா இல்லை என்றால் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வரை நீக்குவார்களா என்று இன்னும் சில நாட்களில் கூட்டப்படும் திமுக பொதுக்குழு கூட்ட முடிவில் தெரியவரும்.//

தேர்தல் வரை நீடிப்பார்களா என்று வரவேண்டும்.தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். :-))

{ John Christober } at: January 6, 2011 at 3:56 AM said...

very good tholare

{ goma } at: January 6, 2011 at 4:03 AM said...

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

அப்படீங்களா....
போஸ்ட்மேன் போட்டா ரெண்டு மாசத்திலே டெலிவரி ஆயிடும்களா...

{ சி.பி.செந்தில்குமார் } at: January 6, 2011 at 4:12 AM said...

super sangavi

{ சி.பி.செந்தில்குமார் } at: January 6, 2011 at 4:15 AM said...

sangavi,, r u anjaa singam? y?( ha ha c barath coment)

{ இம்சைஅரசன் பாபு.. } at: January 6, 2011 at 4:25 AM said...

super sangavi

யாதவன் at: January 6, 2011 at 4:27 AM said...

என்ன ஒரு அலசல் பார்த்து வியப்படைகிறேன்

{ THOPPITHOPPI } at: January 6, 2011 at 5:50 AM said...

எப்படித்தான் இவ்வளவு கலக்ட் பண்ணி எழுதுரின்களோ போங்க

அருமையா இருக்கு

{ வைகை } at: January 6, 2011 at 6:26 AM said...

வழக்கம் போல நல்ல தகவல்கள்! விலைவாசியை பற்றி ஒன்றும் சொல்வதக்கில்லை!

{ ஸ்வர்ணரேக்கா } at: January 6, 2011 at 6:54 AM said...

//அரசு ஊழியர்களின் வாக்கை கவருவதற்காகவே அறிவிக்கப்பட்டது போல் இருக்கிறது //

-- கடைசி 2 வார்த்தைகளை நீக்கியே எழுதியிருக்கலாம்...

தப்பேயில்ல...

{ r.v.saravanan } at: January 6, 2011 at 6:59 AM said...

அஞ்சறைப்பெட்டி அசத்தல்

{ middleclassmadhavi } at: January 6, 2011 at 7:06 AM said...

அஞ்சறைப் பெட்டியில் சாமான்களிடையே சிறு கற்கள் (அவசரத்தில் spelling கவனிக்கவில்லையா தோழரே?!) மொக்கை ஜோக்ஸ், குறுஞ்செய்தி - ரசிக்கும்படி உள்ளன. (இரண்டுக்கும் என்ன வித்யாசம்? ..:-))) )

{ அமர பாரதி } at: January 6, 2011 at 7:09 AM said...

அஞ்சறைப்பெட்டி அருமை.

{ Chitra } at: January 6, 2011 at 7:35 AM said...

இதற்கான ஆலோசனையில் இலங்கையின் கலாசார துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வு மற்றும் சர்வே நடத்தி வருகிறது.பாவம் இலங்கை இளைஞர்கள்...


..... என்னே கரிசனம்! கிரர்ர்ர்ர்.......
:-))

{ ஜாக்கி சேகர் } at: January 6, 2011 at 7:39 AM said...

good

{ asiya omar } at: January 6, 2011 at 9:43 AM said...

அசத்தலான நிறைவான அஞ்சறைப்பெட்டி,சூப்பர் சங்கவி.

{ asiya omar } at: January 6, 2011 at 9:43 AM said...

அசத்தலான நிறைவான அஞ்சறைப்பெட்டி,சூப்பர் சங்கவி.

{ பிரபாகர் } at: January 6, 2011 at 10:27 AM said...

பங்காளி... அஞ்சறைப்பெட்டியிலேயே இதுதான் டாப்... தொடருங்கள்...

பிரபாகர்...

{ பன்னிக்குட்டி ராம்சாமி } at: January 6, 2011 at 10:41 AM said...

நல்ல அலசலுங்கோ......

{ டக்கால்டி } at: January 6, 2011 at 12:31 PM said...

ஒவ்வொரு முறையும் ஆட்சிமாற்றத்தின் போது அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழகுவது என்பது கலைஞரின் தந்திரம். கஜானாவை காளியாகிவிட்டு தான் தி.மு.க அரசு செல்லும். கஜானாவை நிரப்ப அடுத்து வரும் அம்மா ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படும். கஜான நிரப்பப்படும். மீண்டும் தி.மு.க ஆட்சியை பிடிக்கும்... இந்த தொடர்கதை தான் 1991 முதல் நடந்து வருகிறது...

ஜோக்குகள் அனைத்தும் பிரமாதம்.

{ ஹேமா } at: January 6, 2011 at 3:15 PM said...

அஞ்சறைப்பெட்டி நிறைவான வாசம்.

இலங்கையின் செய்தி சிரிப்பாயிருக்கு.நாட்டை நல்லபடியாக்கவும் திருத்தவும் எத்தனயோ விஷயங்கள் இருக்கு.
அதையெல்லாம் விட்டுவிட்டு குட்டைப்பாவாடை பாக்கிறாங்களா !

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: January 6, 2011 at 6:05 PM said...

நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

{ தமிழரசி } at: January 6, 2011 at 7:29 PM said...

தகவல். குறுஞ்செய்தி தத்துவம் ரொம்ப பிடிச்சிருக்கு சங்கவி அஞ்சறைப்பெட்டி என்று நீங்கள் தொடங்கிய இந்த பதிவு பல தகவல் பற்றும் பயன்களை தாங்கியவையாய் இருப்பது மகிழ்ச்சிக்குரியது வாழ்த்துக்கள்

{ Balaji saravana } at: January 6, 2011 at 7:39 PM said...

நிறைய விஷயங்களை அழகாக தொகுத்திருக்கீங்க பாஸ்! :)

{ திருப்பூர் சரவணக்குமார் } at: January 6, 2011 at 8:29 PM said...

அருமையா தொகுத்திருக்கீங்க..வாழ்த்துக்கள்...

{ அஞ்சா சிங்கம் } at: January 7, 2011 at 5:52 AM said...

இந்த வார அறிமுகப்பதிவர் அஞ்சா சிங்கம் இவர் எழுத வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஆனால் இவரின் பதிவுகளில் சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் இருக்கும். ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் எழுதியது போலவே இருக்கும்..////////////

எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் ..
நான் சத்தியமா பக்கத்துக்கு வீட்டு பையன பார்த்து எழுதல நம்புங்க .........
அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி ................

{ அஞ்சா சிங்கம் } at: January 7, 2011 at 5:53 AM said...

பாரத்... பாரதி... said...

அஞ்சா சிங்கத்திற்கு வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்....////

ரொம்ப நன்றி அண்ணா .............

{ நெல்லை தமிழன் } at: January 11, 2011 at 9:15 AM said...

all the informations that you said are very useful for me .i have been read ur blog since last month.continue it....

Post a Comment