Pages

புதிய வலைப்பதிவு...

Thursday, January 27, 2011 44 comments
வணக்கம்...

இன்று முதல் எனது நான் வலைப்பூவில் இருந்து .comக்கு மாறிவிட்டேன். நண்பர்களாகி உங்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிறேன்.. நன்றி...
Read more »

இப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார்!

Monday, January 17, 2011 28 comments

1921-ல் மகாகவி பாரதி மறைந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் செய்தி. ஆனால், 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட நிலைமையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.

2011, ஜனவரி 2 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மிகப் பெரிய தியாகியொருவர் மறைந்தார், தனது 94-வது வயதில். மறைவு கேட்டு இல்லத்துக்கு வந்து இருந்தது சுமார் 25 பேர். நூறு பேர் வந்து சென்றவர்கள். மயானத்தில் நூற்றிச் சொச்சம். வரலாறும் இந்த சமுதாயமும் மறக்கக்கூடாத, ஆனால் மறந்துவிட்ட எத்தனையோ விடுதலைப் போராட்ட தியாகிகளில் ஜி.எஸ். லட்சுமண அய்யரும் ஒருவர். 

ஒருகாலத்தில், நகர்மயமானதன் பரபரப்புக்குள் வீழாத கோபி என்ற கோபிசெட்டிபாளையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி, அய்யர் வீடு எங்கே என சின்னக் குழந்தையைக் கேட்டால்கூட அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிடும். 

சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவருக்கு அந்தளவுக்கு மதிப்பு, மரியாதை. ஜாதி, மதப் பாகுபாடு எதுவுமின்றி இந்தப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் அய்யரைப் பார்க்கலாம். சுகம், துக்கம் எதுவானாலும் அழைப்பு வந்துவிடும், அய்யர் அங்கேயிருப்பார். இவருடைய தந்தை டி. சீனிவாச அய்யர், அந்தக் காலத்தில் கோபி, பவானி, கொள்ளேகால் இரட்டை மெம்பர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1931-ல் மகாத்மா காந்தியின் அழைப்புக்கு இணங்க காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஹரிஜன மக்களை வீட்டுக்குள் அழைத்தனர், விருந்துகள் வைத்தனர், தோட்டக் கிணறுகளில் தண்ணீர் எடுத்துக்கொள்ளச் செய்தனர். லட்சுமண அய்யரின் வீட்டுக்குள்ளும் ஹரிஜனங்கள் அழைக்கப்பட்டனர். விருந்து வைக்கப்பட்டது. 

சும்மா விடுமா, சொந்தமும் சமூகமும். 1931 முதல் 36 வரை அய்யரின் குடும்பம் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டது. உயர் ஜாதியினர் புறக்கணித்தனர். 1938 முதல் 44 வரையிலான காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அய்யர், கோவை, அலிப்பூர், பெல்லாரி, வேலூர், பவானி எனப் பல்வேறு சிறைகளில் மூன்றரை ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். மனைவி, மாமனார், மாமியாரெல்லாமும்கூட இவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கின்றனர். 

1944-ல் வார்தா சென்று மூன்று நாள் தங்கியிருந்த லட்சுமண அய்யரிடம், நீ பிராமணன்தானே, விடுதலைப் போராட்டத்துக்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஊருக்குத் திரும்பியதும் ஹரிஜன சேவை செய்யத் தொடங்கு, அதுவே என்னுடைய விருப்பம் என்று ஆணையிட்டிருக்கிறார் மகாத்மா. கடைசி வரையிலும் காந்தியின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்தார் அய்யர். துப்புரவுத் தொழிலாளர்களை ஊருக்குள்ளே அழைத்துவந்து குடியிருப்புகளைக் கட்டித் தந்தவர் அய்யர். அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில் அந்த நாள்களில் ஒரு சத்திரம் போலத்தான் இவருடைய வீடு. எந்நேரமும் சமையல் நடந்துகொண்டிருக்கும். சித்தரஞ்சன் தாஸ், பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, அருணா ஆசப் அலி, டாக்டர் அன்சாரி, சீனிவாச அய்யங்கார், காமராஜர், பெரியார் எனத் தலைவர்களின் பட்டியல் நீண்டுசெல்லும். 

1969-ல் காங்கிரஸ் பிளவுற்றபோது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றத் தொடங்கி, ஜனதா தளத்திலும் தொடர்ந்தார். ஆனால், அவருடைய செயல்பாடுகள் அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்டவையே. பிரிட்டிஷ் காலக் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்தபோது, ராஜாஜி கூறிய அறிவுரைப்படி, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு சிறுவனுடன் இவர் தொடங்கிய விடுதியில் இப்போது சில நூறு மாணவ, மாணவியர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. அந்தக் காலத்தில் இவர்கள் குடும்பத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சையும் புஞ்சையுமாக 380 ஏக்கர் நிலம். ஆனால், இப்போது அவர் குடியிருந்த வீடுதான் மிச்சம். ஒரு வீட்டைத் தவிர, இரு மகன்களுக்கும் ஒரு சென்ட் நிலம்கூடத் தரவில்லை. 

இவர் கொடையென வழங்கிய இடங்களில்தான் இன்றைக்குக் கோபிசெட்டிபாளையத்திலுள்ள பல கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வைரவிழா மேனிலைப் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, டி.எஸ். சாரதா வித்தியாலயம், விவேகானந்தா ஐ.டி.ஐ... இன்னும், ஸ்ரீராமபுரம் ஹரிஜன காலனி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான காலனி... அவருடைய மறைவுக்காக ஒரேயொரு பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்தது. கமிட்டி உறுப்பினர் (?) மரணத்துக்காக விடுமுறை வழங்குவதில்லை என்பது கொள்கை முடிவு என ஒரு பள்ளி நிர்வாகம் தெரிவித்துவிட்டது! (கோடி கோடியென விலை உயர்ந்துவிட்ட கோபி நகருக்குள் லட்சுமண அய்யருக்கென இப்போது ஒரு சென்ட் இடம்கூட இல்லை). 

தக்கர் பாபா வித்தியாலயம் என்ற தொடக்கப் பள்ளி, இரு பால்வாடிகள், இரு குழந்தைகள் காப்பு மையங்கள் எல்லாமும் இவர் தொடங்கி நடத்தியவை. எல்லாமே இலவச சேவை. விவேகானந்தா ஐ.டி.ஐ. என்ற தொழிற்கல்வி நிலையமும் உண்டு. அரசு மருத்துவமனையில் இவருடைய தந்தை பெயரில் ஒரு வார்டு உண்டு, நிலம் வழங்கியது பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை. 1952 முதல் 55 வரையிலும் 86 முதல் 92 வரையிலுமாக இரண்டு முறை கோபி நகர்மன்றத் தலைவராகவும் இருந்தவர் அய்யர். 

1955-ல் இவர் கொண்டுவந்ததுதான் கோபி நகர் குழாய்த் திட்டம். புஞ்சைப் புளியம்பட்டி செல்லும் சாலையில் கோபிக்கான நீரேற்று நிலையம் இருக்கும் இடமும்கூட அய்யருடையதுதான். 1986-ல் இவருடைய காலத்தில்தான்- கோபிசெட்டிபாளையத்தில் - முதன்முதலாக மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அரசு நிதியுதவியுடன் அனைத்து உலர் கழிப்பிடங்களும் நீரடிக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன. ஆனால், அத்தகைய அய்யருடைய மரணத்தின்போது அவரால் பயன் பெற்ற, பலன் பெற்ற பெரும்பாலானோர் வரவில்லை. 

அன்றைக்குக் கோபிசெட்டிபாளையம் வழியேதான் மாவட்ட ஆட்சியர் சென்றார், வரவில்லை. எம்.பி. வரவில்லை, எம்.எல்.ஏ. வரவில்லை. நகர்மன்றத் தலைவிகூட வரவில்லை. கோட்டாட்சியர் மட்டும் வந்தார், வாழ்நாள் முழுவதும் வழங்கிக் கெட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்த அல்ல, தியாகிகள் செத்தால் வழங்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை வழங்குவதற்காக (அந்தத் தொகையையும் உடனே ஹரிஜன விடுதிக்குத் தந்துவிட்டனர் குடும்பத்தினர். அய்யரின் விருப்பப்படியே அவருடைய கண்களும் தானமாக வழங்கப்பட்டன). 

(தி.மு.க.விலிருந்து என்.கே.கே. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜகதீசன், ம.தி.மு.க.விலிருந்து கணேசமூர்த்தி, பா.ஜ.க.விலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பி.ஆர். நடராஜன், ஜனதாதளத்தின் குருமூர்த்தி ... போன்றோர் வந்தனர். ஒரு தனியார் கல்லூரி மாணவிகளும், ஹரிஜன விடுதி மாணவிகளும் வந்து அஞ்சலி செலுத்தினர்.) போர்த்தலாமா, கூடாதா என்பதை உறுதி செய்ய முடியாத குழப்பத்தில் அவருடைய சடலத்தின் மீது தேசியக் கொடிகூட போர்த்தப்படவில்லை. 

பிராமணக் குடும்பங்களில் மரணத்துக்காக அவ்வளவாக அழ மாட்டார்கள் என்பார்கள். ஆனால், லட்சுமண அய்யரின் சடலம் கிடத்திவைக்கப்பட்டிருந்தபோது ஒரேயொரு பெண் மட்டும் கடைசி வரை கதறியழுது கொண்டிருந்தார். அவர், அய்யர் வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்துவந்த ஹரிஜனப் பெண்! 1995, ஜூலையில் ஒருநாள் அவரைப் பார்க்கக் கோபிக்குத் தேடிச் சென்றபோது அவரில்லை. வீட்டுக்கு வெளியே ஒரு நோட்டுப் புத்தகம் தொங்கிக் கொண்டிருந்தது. எழுதிவைத்துவிட்டுச் செல்லுங்கள், அவர் உங்களைத் தேடி வந்துவிடுவார் என்றார்கள் அருகே இருந்தவர்கள். எழுதிவைத்துவிட்டுப் பேருந்து நிலையம் சென்று காத்திருந்தநேரத்திலேயே, ஒருவர் தேடி வந்துவிட்டார், அய்யர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொன்னார் என்றபடி! நடமாட முடிந்தவரை அய்யர் அவ்வாறே ஒவ்வொருவரையும் தேடிச் சென்றே வாழ்ந்து கழித்துவிட்டார். 

அன்றைய தினம் நீண்ட நேரம் கடந்தகால நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்த லட்சுமண அய்யர் சொன்ன வரிகள் இப்போதும் நினைவிலாடுகின்றன: இன்று இந்தியாவிலேயேகூட கையெடுத்துக் கும்பிடக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. அத்தனை பேரும் ஆடம்பரத்திலும் விளம்பரத்திலும் சுயநலத்திலும்தான் மயக்கம் கொண்டிருக்கிறார்கள். காந்தியைப் போல, காமராஜரைப் போல ஒரு தலைவர் இல்லை. இன்று எந்த வழியிலாவது சம்பாதிப்பதையும் பிழைப்பதையுமே பெரிதாகக் கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள். தவிர, தியாகத்தைப் பெரிதாகக் கருதும் மக்களும்கூட நாட்டில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். 

அன்று அவர் சொன்னது எத்தனை பெரிய உண்மை! முன்னாள் சாராய வியாபாரியான ஒன்றியச் செயலர் ஒருவரின் மாமியார் இறந்துபோனால்கூட நூறு கார்கள் வரிசைபோட, ஆயிரம் பேர் திரண்டிருப்பார்கள். ஏனென்றால் அவரால் ஆனதும் ஆகக்கூடியதும் எத்தனையெத்தனையோ! காலாவதியாகிப்போன ஒரு தியாகியின் சாவுக்குச் செல்வதில் யாருக்கு என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால், ஒன்றுமட்டும் நாம் மறந்துவிடக்கூடாது, இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் இந்த சமுதாயத்திலிருந்து ஒரு தியாகிகூட இனி உருவாக மாட்டான், ஜாக்கிரதை.

நன்றி தினமணி

இவரால் பயன்பெற்றவர்களின் நானும் ஒருவன் 1992ம் ஆண்டு கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படிக்க எனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து சீட் வாங்கிக்கொடுத்தவர் இந்த மாமனிதர்தான்..

நேற்று முன்தினம் ஐயாவின் வீட்டுக்கு சென்றேன் அவரால் பயன் பெற்ற நிறைய பேர் இருந்தனர். ஐயாவின் படத்தின் முன் நின்று அஞ்சலி செலுத்தி திரும்பினேன்..ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
Read more »

அஞ்சறைப்பெட்டி 13.01.2011

Wednesday, January 12, 2011 12 comments
வணக்கம்.

வாரம் ஒரு முறை பல செய்திகளின் தொகுப்பாக வெளிவந்த அஞ்சறைப்பெட்டி இந்தவாரம் எதிர்பாராத குடும்ப நிகழ்வுகளால் என்னால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் அஞ்சறைப்பெட்டியும் மற்ற பதிவுகளும் நேரமின்மையாலும் , மனம் நிம்மதி இல்லாததாலும் இந்த வாரம் வெளியிட முடியாத நிலை மீண்டும் அடுத்த வாரத்தில் பல வித்தியாசமான தொகுப்புகளுடன் அஞ்சறைப்பெட்டியில் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி..

என்றும் நட்புடன்.,
சங்கவி.
Read more »

எங்கள் குல விளக்குக்கு கண்ணீர் அஞ்சலி

Saturday, January 8, 2011 38 comments
வியாழன் இரவு 11.40க்கு என் தொலைபேசியில் ஒரு 10 மிஸ்டுகால் திடீரென தூக்கத்தில் எழுந்து பார்த்தவன் என்ன என்று எங்கள் வீட்டுக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க 
எங்கள் குல விளக்கும், 

எங்களை வாழ வைத்த தெய்வமும், 

எங்கள் குடும்ப தலைவனும், 

எம்.ஜி.ஆரின் நண்பரும், 

தீவிர அதிமுக தொண்டனுமாகிய 

என் பெரியப்பா 

டாக்டர்.எஸ்.என். மாணிக்கம் 

அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

குறிப்பு : எங்கள் அண்ணன்(பெரியப்பா) அவர்கள் எனக்கு ரோல் மாடல் மற்றும் என் மேல் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர் அவருடைய இழப்பு எனக்கு பேரிழப்பு.. மேலும் பல சம்பவங்களை உங்களுடன் விரைவில் பகிர்கிறேன்..
Read more »

அஞ்சறைப்பெட்டி (#7) 06.01.2011

Thursday, January 6, 2011 40 comments

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

இந்த வருடத்தின் முதல் அஞ்சறைப்பெட்டி கடந்த வருடம் எப்படி வாசகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதோ ஆதே போல் இவ்வருடமும் பெற செய்திகளின் தொகுப்பை அனைவரும் எதிர்பார்க்கும் படி வித்தியாசமானதாகவும், புதிய செய்திகாகவும் தர முயற்சி செய்கிறேன்.

&&&&&&&&&&&&&&

இந்த புத்தாண்டு அரசு ஊழியர்களுக்கு கொண்டாடட்மான புத்தாண்டாகும். பொங்கலுக்கு போனஸ், தற்போது சம்பள உயர்வு என 13 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பட் தான். இப்போதைய சம்பள உயர்வை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும், அரசு ஊழியர்களின் வாக்கை கவருவதற்காகவே அறிவிக்கப்பட்டது போல் இருக்கிறது.

&&&&&&&&&&&&&
எங்கு காணினும் இலவசம் என்ற சொல் தான் ஒலிக்கிறது. பொங்கலுக்கு பொங்கல் பொருட்கள் அனைத்தும் அரசால் இலவசமாக தரப்படுகிறது. ஏறக்குறைய அனைத்து பொருட்களும் தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. 2011 மே மாதத்தை எதிர் நோக்கித்தான் கிடைக்கிறது. எல்லாம் நம்ம அப்பமூட்டு காசு...

&&&&&&&&&&&&&


விலைவாசி உயர்வு இந்த வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஆடம்பரத் தேவை பொருட்குளுக்கு விலை அதிகமாக இருந்தால் அது பொதுமக்களை பாதிக்காது ஆனால் பொதுமக்களின் அத்தியாவிசயத் தேவை உணவு இந்த உணவுப்பொருட்களின் விலை அனைத்தும் விண்ணைத்தொடும் அளவிற்கு உள்ளது. விலை ஏற்றம் இதோ இன்று குறையும், நாளை குறையும் என்கிறார்கள் இதுவரை குறைந்தபாடு இல்லை. இறக்குமதியை அதிகப்படுத்தும் போது தான் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.  ஆனால் இறக்குமதிக்கு தேவைக்கு அதிகமான கட்டுப்பாடுகள் இருப்பதால் சமீபத்தில் மும்பைக்கு வந்த 200டன் வெங்காயம் அழுகிவிட்டதாம். மக்களின் அன்றாட தேவை தான் முக்கியம் மக்களுக்காகத்தான் அரசாங்கம் மக்கள் சிரமப்படும்போது கட்டுப்பாடுகளை தூக்கி எறிய வேண்டும். அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

&&&&&&&&&&&&&
அழகிரியின் அதிரடியால் ராசா, கனிமொழி, பூங்கோதை ஆகியோர் கட்சியில் இருப்பார்களா அல்லாது தேர்தல் வரை நீக்குவார்களா இல்லை என்றால் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வரை நீக்குவார்களா என்று இன்னும் சில நாட்களில் கூட்டப்படும் திமுக பொதுக்குழு கூட்ட முடிவில் தெரியவரும்.
&&&&&&&&&&&&&

பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்கள் 30 பேர் தங்களது சொத்து மதிப்பை வெளியிட்டு உள்ளனர். இவர்களில் மனித வளத்துறை அமைச்சர் பிரஷாந்த் குமார் ஷாஹிதான் 30 அமைச்சர்களில் அதிக சொத்துக்கள் உடையவர். அவரின் சொத்து மதிப்புகள் மொத்தம் 4.5 கோடி ரூபாயாகும். அனைவரும் சொத்து மதிப்பை வெளியிட்டது வரவேற்கத்தாக்க விசயம். இதோ போல் நமது தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் எல்லாம் சொத்து மதிப்பை வெளியிட்டால் நிச்சயம் அனைத்து தரப்பும் வரவேற்கும். என்ன பீகாரில் ஒரு அமைச்சரிடம் மட்டும் 4.5 கோடி சொத்து உள்ளது. நம்ம ஊரில் எவ்வளவு இருக்கும்?
 
&&&&&&&&&&&&&

இலங்கையில், பொது இடங்களில் பெண்கள் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து சுற்றித் திரிவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதன் மூலம் “செக்ஸ்” குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவர கணக்குகளும் தெரிவிக்கின்றன.

எனவே ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் அங்கு குட்டை பாவாடைகளை (மினி ஸ்கர்ட்டுகளை) பெண்கள் விரும்பி அணிகின்றனர்.இது அவர்களின் உடலின் பெரும்பாலான பகுதிகளை கவர்ச்சியாக காட்டுகிறது. எனவே பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட உள்ளது.
இதற்கான ஆலோசனையில் இலங்கையின் கலாசார துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வு மற்றும் சர்வே நடத்தி வருகிறது.பாவம் இலங்கை இளைஞர்கள்...


&&&&&&&&&&&&&

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் தனது அலுவலகத்தில் பார்வையாளர்களை சந்தித்து கொண்டு இருந்த போது ரூபம்பதக் என்ற 40 வயது பள்ளி ஆசிரியையால் குத்திக் கொல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரூபம்பதக் உண்மையை ஒத்துக்கொண்டார் எனக்கு தொடந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார் பொறுமை இழந்து அவரை குத்திக்கொன்றேன் இதனால் எனக்கு தூக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்ற போர்வையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.


நாட்டு நடப்பு

சென்னை வந்த பிரதமரை முதல் நாள் சந்திக்காமல் அடுத்த நாள் காலை சந்தித்தார் முதல்வர் சந்தித்தபின் பேட்டியில் இரு கட்சிக்கும் இடையேயான உறவு வலுவாக உள்ளது என்று பேட்டி அளித்து உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் ஆளும் கட்சியின் செயல் பாடுகளை போட்டுத்தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். இவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் மேலிட செல்வாக்கால் பேதுவது போல் தான் இருக்கிறது. இந்தக் கூட்டணி இருக்குமா இருக்காதா என்று விரைவில் தெரியவரும்.

1991, 2001 போல் 2011 லும் ஆட்சியைப் பிடித்த விட வேண்டும் என்று தீவிரமாக செயல் படுகிறார் ஜெயலலிதா. ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர், மாவட்ட அமைப்பாளர் என்று வேலைகளை பிரித்துக்கொடுத்து ஸ்பெக்ட்ரம்ற்க்கு பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி தனி பொதுக்கூட்டங்கள் போட்டு தனது இரண்டாம் கட்ட தலைவர்களை விரட்டி வேலை வாங்குகிறார். இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது பார்க்கலாம் இந்த ரேசில் வெற்றி பெறப்போவது யார் என்று...


யாருடன் கூட்டணி என்று மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக தரப்பு கூறி வருகின்றது ஆனால் அவர் சேலம் மாநாட்டில் மக்களுடன் தான் கூட்டணி என்று இவ்விவகாரத்தை சஸ்பென்சாக முடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


தகவல்

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.

காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக, காஃபைன் உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதியாகக் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், காபி குடித்தால் தூக்கம் குறைகிறது.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.

மொக்கை ஜோக்

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கை இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!


பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் அஞ்சா சிங்கம் இவர் எழுத வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ஆனால் இவரின் பதிவுகளில் சிரிக்க  வைக்கவும், சிந்திக்க வைக்கவும் இருக்கும். ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் எழுதியது போலவே இருக்கும்..

http://anjaasingam.blogspot.com/

தத்துவம்

நன்மை தரும் ஏழு
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு


வழிகாட்டும் ஏழு
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்


குறுஞ்செய்தி
ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? ------ 

பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.


கடவுளே எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல, ஊர் சுத்த பிடிக்கல எனக்கு காதல் வந்திருச்சா?
அடச் சீ நாயே உனக்கு செமஸ்டர் வந்திருச்சு எந்திரிச்சி படிடா..


இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது;
**இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே
பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....?

பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே


Read more »

விண்ணைத்தொடும் விலைவாசி...

Tuesday, January 4, 2011 36 comments
விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனையாக ஆக்கியதன் விளைவு இப்பொழுது தான் மெல்ல மெல்ல தலை தூக்குகிறது விலை வாசி உயர்வு என்ற பிரச்சனையாக.

தமிழகத்தில் முப்போகம் விளையும் விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனையாக  ஆக்கி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலத்தின் விலையை அதிகப்படுத்தி நிறைய இடங்களில் விற்பனை செய்யப்பட்டது செய்யப்படுகிறது.  இதற்கு ஒரு சில சமூக ஆர்வலரிடம் எதிர்ப்பு இருந்த போதிலும் பொதுமக்கள் வீட்டு மனை வாங்கும் ஆர்வத்தால் எதிர்ப்புக்கள் அனைத்தும் அமுங்கிவிட்டது. இன்று தமிழகத்தில் கொடி கட்டி பறக்கும் வியாபாரமே  வீட்டு மனை விற்பனை தான்.

வீட்டு மனை வியாபாரத்தால் விவசாய உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குப்பின் சாப்பாடுக்கு வழி இருக்காது என்று  பேச்சு இருந்து வரும் இந்நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் மழை பெய்தது இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது பொருட்களின் உற்பத்தி குறைந்தது தேவை அதிகரித்தது. இது தான் சமயம் என  விலையை ஏற்றி விட்டனர் இதனால் நடுத்தர வர்க்க மக்கள் இன்று யாரும் காய் கறிகள் வாங்க கூடிய நிலைமை இல்லை என்றாகி விட்டது. இந்த விலை ஏற்றத்திற்கு பின்னால் சற்று யோசித்தமேயானால் இது மழையால் வந்த விலை ஏற்றம் இல்லை. உற்பத்தி குறைந்ததால் வந்த விலை ஏற்றம் தான். விலை ஏற்றத்திற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.


இன்னும் 5 ஆண்டுகளுக்கு பின் இருக்க வேண்டிய விலை இன்று இருக்கின்றது வெங்காயம் கிலோ 80 ரூபாய், தக்காளி 60 என்ற தினமும்  மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை விண்ணைத்தொடுகிறது. சைவ உணவு சாப்பிடும் பழக்கம் மறந்து விடும் அளவிற்கு இருக்கிறது இன்று மலையில் பயிரிடப்படும் காய்கறிகள் எல்லாம் குறைந்த பட்ச விலை 50யைத் தாண்டுகிறது.

சிக்கன், மீன், மட்டன் விற்கும் விலைக்கு இன்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வாரத்திற்கு ஒரு நாள் தான் சிக்கன், மட்டன் எடுப்போம் மற்ற நாட்களில் சைவ உணவுதான். இவ்விலை ஏற்றத்தால்  பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினரும், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் தான். ஒரு காலத்தில் 100 ரூபாய் கொண்டு போனால் ஒரு பை நிறைய காய்கறிகள் வாங்கி வரலாம் இன்று 1000 ரூபாய் கொண்டு போனாலும் ஒரு பை நிறைய வாங்கி வர முடியாது என்பது தான் நிலைமை.

விலை வாசி உயர்ந்த அளவிற்கு பொதுமக்களுக்கு கூலி, சம்பள உயர்வு இல்லை அதே கூலி தான் வழங்கப்படுகிறது. இன்றைய நிலைமைக்கு பொதுமக்கள் காய் கறிகள் சமைப்பதை விட வீட்டில் எழுமிச்சை, தயிர், புளி சாதம் போன்றவற்றிக்கு சமைப்பதால் காய்கறி விலையில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம். இந்த உணவு வகைகள் தான் ஓரளவிற்கு விலை குறைந்த பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க ஏதுவாக இருக்கும். ஏறி வரும் விலை வாசியை சமாளிக்க இந்த மாதிரி  உணவுக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

ஒரே ஒரு இடத்தில் விலை உயர்வதால் அதைப்பின்பற்றி அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவிசயத் தேவையான பொருட்களின் விலை பன்மடங்கு உயருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகப்படுத்தாலம் ஆனால் அதிலும் பல சிக்கல்கள்.  இன்னும் 2 நாளில் விலை குறைந்து விடும் 4 நாளில் குறைந்து விடும் என்று அறிக்கை மட்டுமே விடுகின்றனர் குறைந்தபாடில்லை.

பொங்கல் நெருங்கி வரும் வேளையில் காய்கறிகளின் வரத்து அதிகமாக வரும் போது விலை ஏற்றம் குறைய வாய்ப்பு இருக்கிறது. விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ரியல் எஸ்டேட். விளைநிலங்களை வீட்டுமனை ஆக்க அனுமதிக்கக்கூடாது. எது எதுக்கோ கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு இந்த வீட்டுமனை விற்பனைக்கும் விதித்தால் விவசாயத்தை முன்னிறுத்த உதவும்.

விலைவாசி இறங்கவில்லை என்றால் வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் இறங்குவார்கள்...
Read more »

புத்தாண்டு கொண்டாட்டமும் உயிர் பலியும்...

Monday, January 3, 2011 43 comments

வருடா வருடம் புத்தாண்டு கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் விபத்துக்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இன்றைய இளைஞர்களிடம் டிசம்பர் 31 அன்று பேச்சே மச்சான் இன்னிக்கு எந்த பார் எங்க போகலாம் இந்த பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். வருடா வருடம் போலீசாரின் கெடுபிடிகளும் அதிகமாக இருக்கும் இந்த வருடம் சென்னையில் ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று பதிவின் மூலம் அறிந்தேன்.

இந்த வருடம் புத்தாண்டின் போது நடந்த விபத்துக்களை படிக்கும் போது அனைவருக்கும் அனைத்து விசயங்களும் தெரிந்து தான் தவறு நடக்கிறது. இந்த வருடம் நான் படித்த வகையில் 3 மிகப்பெரிய விபத்துக்கள்.

விபத்து 1

சேலம் அருகே 3 இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிதந்து சென்று தாங்கள் சென்ற காரை சாலை ஓரம் உள்ள ஏரியில் விட்டதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்து 2

ஏற்காடு மலைப்பாதையில் கார் பள்ளத்தில் பாய்ந்தது. காரிற்குள் இருந்தவர்களை தியணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் (உயிரிழப்பு விபரம் சரியாக தெரியவில்லை)

விபத்து 3

மேட்டூர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இளைஞர்கள் கேக் கொடுத்து வாழ்த்து சொல்லும் போது எதிர்பாரதவிதமாக லாரிக்குள் விழந்து சம்பவ இடத்திலேயே 25 வயதுமதிக்கத்தக்க இளைஞர் பலி

இந்த விபத்துக்கள் மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் நடுஇரவில் நாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டத்தில் கை கொடுக்கும் போது மப்பில் வேகமாக ஓடிக் கை கொடுக்கும் போது சாலையில் விழுந்து அருகில் உள்ள கல் மண்டையில் ஏறி இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகினர்.

இச்சம்பவம் அனைத்தும் புத்தாண்டு அன்று இரவு நடந்தது. புது வருடம் பிறந்து இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன இந்த விபத்துக்கள் தவிர தமிழகம் முழுவதும் பார்க்கப்போனால் ஏறக்குறைய இன்னும் சில விபத்துக்கள் நிச்சயம் நடந்து இருக்கும். புத்தாண்டு அன்று விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம் அனைவரும் உற்சாக பானம் அருந்தியதாகத்தான் இருக்கும்.

தற்போதைய கலாச்சாரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே அது உற்சாக பானம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய மிக குறைவு. உற்சாக பானம் அருந்துவதோ புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடுவதோ தவறு என்பது என் கருத்து அல்ல அனைத்தும் வேண்டும் மித வேகம் மிக நன்று என்பது போல அனைத்தும் மிதமாக இருந்தால் நிச்சயம் விபத்தில் உயிரிழப்பு இல்லாமல் நமது சந்தோசங்களை கொண்டாடலாம்.

கனவுகளுடன் கூடிய உங்கள் பயணம் கவனமாக இருக்கட்டும்...
Read more »

புத்தாண்டும் எனது பிறந்தநாள் கொண்டாட்டமும்...

Sunday, January 2, 2011 29 comments
இந்த வருடத்தின் முதல் பதிவு. இந்த புத்தாண்டில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என் இனிய வாழ்த்துக்கள்...

புத்தாண்டு என்றாலே எனக்கு எப்பவும் சந்தோசம் தான் ஏன் என்றால் புத்தாண்டிற்கு அடுத்த நாள் எனது பிறந்த நாள் அது தான் சந்தோசத்திற்கு மிக முக்கிய காரணம்.

இது வரை வந்த புத்தாண்டை விட இந்த புத்தாண்டு எனக்கு மிக சந்தோசத்தை கொடுத்த ஆண்டு. இது வரை நான் கொண்டாடிய புத்தாண்டுகள் நண்பர்களுடனும், கடைசி இரண்டு புத்தாண்டு என் மனைவியுடனும் கொண்டாடியதை விட இவ்வருடம் என் மகனுடன் நான் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் மிக்க மகிழ்ச்சி...

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஓன்று எப்பவும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய எனக்கு இந்தவருடம் எனது மகன் கேக் வெட்டி கொண்டாடும் போது ஈடு இணையற்ற மகிழ்ச்சி. கடந்த வருடம் சிறப்பாக சென்றது நிறைய நண்பர்கள் பதிவுலகின் மூலம் கிடைத்தார்கள் இவ்வருடம் நிறைய புது விசயங்களை தொடங்க இருக்கிறேன்  இறைவன் அருளாளும் நண்பர்களின் உதவியாலும் வெற்றி என்ற குறிக்கோளுடன் புது வருடத்திலும் எனது 30வது அகவையிலும் கால் பதிக்கிறேன்...
எனக்கு புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன் மூலமாகவும்,  சாட் வழியாகவும், வலைப்பூ மற்றும் பேஸ் புக் மூலமாக வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
கடந்த மூன்று வாரமாக தமிழ்மணம் டாப்20ல் எனக்கு இடமும், கடந்த வருடத்தின் முன்னனி வலைப்பதிவுகளில் எனக்கு 30வது இடம் கிடைத்ததற்கு காரணம் எல்லாம் நீங்கள் தான் உங்களால் தான் இது எனக்கு சாத்தியமாகிற்று உங்களுக்கு என் நன்றி...
Read more »