Pages

சங்கவியும் தம்மும்...

Friday, December 24, 2010

நான் முதன் முதலாக புகைபிடித்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான். எங்கள் ஊர் திருவிழாவிற்கு நாடகம் உள்ளுர் அண்ணன்கள் எல்லாம் நடிப்பார்கள் அந்த வருடம் நீந்த தெரியாத மீன்கள் என்ற நாடகத்தில் சின்ன பசங்க நாங்கள் நடிக்கிற சீன் கொடுத்து எங்கள தம் அடிக்க வெச்சாங்க அப்பவே எனக்கு அந்த புகை பிடித்துவிட்டது 10 நெம்பர் பீடி அப்பத்தான் எனக்கு அறிமுகம் ஆகியது. நாடகம் முடிந்த பின் அதை மறந்து விட்டேன்.

10வது படிக்கும் போது சாதா கோல்டு சிகரெட் குடிப்போம் அதுவும் கொஞ்ச நாளில் எங்கள் விடுதி வார்டனுக்கு தெரிய வர மிதி மிதி என மிதித்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார் அப்புறம் அது மறந்து விட்டது.

அப்புறம் மேல் படிப்பு படிக்கும் போது தான் முதன் முதலாக அறிமுகமாகியது வில்ஸ் பில்டர் அப்பதான் நன்றாக புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். வீட்டு பாத்ரூமில் தம் அடிப்பது. ஆத்துக்குப் போய் தம் அடிப்பது, ஊருக்குள்ள இருட்டில் ஒண்டி அடிப்பது என திருட்டு தம் அடிக்கும் சுகமே அப்ப தனியாக இருந்தது. அந்த கால கட்டத்தில் தான் புகையை உள் இழுத்து ஒரு சிப் டீ சாப்பிட்டு விட்டு புகையை விடுவது, சுருள் புகை விடுவது என புகையைப்பற்றியான அத்தனை கலைகளும் கற்றது அந்த கால கட்டத்தில் தான். நான் தம் அடிச்சி சைட் அடிக்கும் போது ஒரு பிகரு ரூட் விட்ட கதை எல்லாம் இருக்குது. (அது விரைவில் பதியப்படும்)

பிற்காலத்தில் வேலைக்கு சென்ற பிறகும் இப்பழக்கம் தொடர்ந்தது நான் முதன் முதலில் வில்ஸ் குடிக்க ஆரம்பித்தபோது அதன் விலை 1.25 பைசா ஒரு நாளைக்கு சராசரியாக 15 குடிப்பேன். இது ஒரு 5 வருடமாக தொடர்ந்தது. ஈரோட்டில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்யும் போது எதிரே உள்ள பெட்டிக்கடையில் மாதம் அக்கவுண்ட் மட்டும் 600 ரூபாய் வரும்.

2003ம் வருடம் திடீரென ஒரு நாள் பல்வலி வந்தது பல் மருத்துவரிடம் சென்று வாயைக்காட்டினாள் அவர் புதிதாக கடவாய்ப் பல் முளைக்கிறது ஆனால் முளைக்கும் பல் திரும்பி இருக்கிறது இதை பிடுங்கி தான் ஆகவேண்டும் என்றார். சரி பிடுங்குங்க என்று வாயைத்திறந்தேன். அவரும் ஊசி போட்டு அந்த இடத்தை கிழித்து கொரடு போட்டு ஒரு இரண்டு மணி நேரம் போரடினார் பல் பிடுங்க... அப்பதான் சொன்னார் நான் மருத்துவ தொழில் ஆரம்பித்து  இதுதான் நான் பிடுங்கும் முதல் கடவாய் பல் என்று. (உனக்கு நாந்தானா கிடைச்சேன் என்று கடவுளை வேண்டினேன்) அப்புறம் ஒரு வழியாக பிடுங்கிவிட்டார்.

பல் பிடுங்கியதால் ஒரு வாரத்திற்கு புனல் வைத்து தான் சாப்பாடு ஊற்றினர். ரசம் சாதமும், தயிர் சாதமும் தினமும் புனல் வைத்து ஊற்றப்பட்டது ஒரு பத்து நாள் ஆனபின்பு தான் ஆகா சிகெரெட் பிடிச்சு 10 நாள் ஆச்சு என்று திருட்டு தம் அடிக்க மொட்டை மாடி சென்று பத்த வைத்து இழுத்தேன் குமட்டலாக வந்தது சரி வேண்டாம் என்று தூக்கி விசிவிட்டேன் அடுத்த நாள் முதல் அலுவலகம் சென்று வந்தேன். ருசியாக சாப்பிட்டு 15 நாள் ஆச்சி என்று எதிரே இருந்த பாஸ்ட்புட் சென்று சில்லிசிக்கன் சாப்பிட்டு ருசி கண்டேன்(அடுத்த நடக்கும் விபரீதம் தெரியாமல்)

2 நாள் கழித்து மீண்டும் பல்வழி என்ன வென்று மருத்துவரிடம் ஓடினால் பல் புடுங்கிய இடத்தில் இருக்கும் ஓட்டையில் ஒரு சிக்கன் எழும்பு அதை எடுத்து மறுபடியும் தையல் போட்டு மீண்டும் புனல் சாப்பாடுதான். அப்படியாக ஒரு நாற்பது நாள் போய்விட்டது. நிலமை சரியாகி எதிரே இருக்கும் பெட்டி கடையில் எவ்வளவு அக்கவுண்ட் அமவுண்ட் என்றதும் 20 ரூபாய் என்றார்கள். அப்ப தான் தம் அடிச்சு 40 நாள் ஆச்சு என்று நினைப்பு வந்தது.

புகை உடல்நலத்துக்கு கேடு என்று அறிந்தும் தம் அடித்தோம் அந்த சுவையை அறிதோம் இப்ப 40 நாள் குடிக்காம இருந்ததால் எந்த இழப்பும் இல்லை இனி ஏன் குடிக்க வேண்டும் சகலமும் கற்று மற என்ற பழமொழிக்கு ஏற்ப புகையை கற்று மறந்தாச்சு என்று அன்றில் இருந்து இன்று வரை புகை பிடிப்பதில்லை அந்த நாள் 25.12.2003 கிட்டத்தட்ட 7 வருடம் ஆகிறது புகையை பிடித்து. அன்றில் இருந்து இன்று வரை தம் அடிப்பதில்லை யாருக்கும் தம் வாங்கித் தருவதில்லை என்று நான் எடுத்த முடிவை இன்று வரை கடைபிடிக்கிறேன்...

சத்தியமாக நான் நல்லவன் நல்லவன்... நம்புங்க மக்களே....

41 comments:

{ இந்திரா } at: December 24, 2010 at 12:39 AM said...

இருங்க படிச்சிட்டு வரேன்

{ இந்திரா } at: December 24, 2010 at 12:39 AM said...

வடையே தான்..

அப்பாடா.. இப்பயாவது கெடச்சுச்சே..

{ இந்திரா } at: December 24, 2010 at 12:39 AM said...

vadai?

{ இந்திரா } at: December 24, 2010 at 12:42 AM said...

பஸ் ஸ்டாப்ல ஒருத்தன் இப்டி தான் தம் அடிச்சிட்டு நின்னுட்டு இருந்தான். எனக்கு அந்தப் புகை ஒத்துக்கல. அதுனால “புகை பிடிக்கிறவங்கள விட பக்கத்துல இருக்குறவங்களுக்கு தான் பாதிப்பு அதிகம். கொஞ்சம் பொது இடங்கள்ள சிகரெட் பிடிக்காதிங்க“னு சொன்னேன்.
அதுக்கு அவர் “அப்டினா நீங்க தம் அடிக்கலாமே.. பாதிப்பு கம்மி தானே“னு நக்கலா பதில் சொல்லிட்டுப் போயிட்டார்.

சரியான தொப்பி வாங்கினேன் இல்ல..

நீங்க புகை பிடிக்கிற பழக்கத்த விட்டதுல சந்தோசம். அதுலயும் யாருக்கும் வாங்கித் தருவதில்லைங்குற முடிவு பரம சந்தோசம்ங்க..

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: December 24, 2010 at 12:42 AM said...

ம் ...

{ முனியாண்டி } at: December 24, 2010 at 12:44 AM said...

:-)

{ சேட்டைக்காரன் } at: December 24, 2010 at 12:57 AM said...

ஏனுங்கோ, நீங்க நல்லவங்கன்னு தெரியும். அப்போ, தம் அடிக்கிறவனெல்லாம் கெட்டவனா?

இருங்க, இருங்க! போயி ஒரு தம் அடிச்சிட்டு வந்து உங்க நுண்ணரசியல் இடுகைக்கு ஓட்டுப்போடுறேன்.

:-)

{ middleclassmadhavi } at: December 24, 2010 at 12:57 AM said...

Hats off! 100 varusham vazhga! (nichayam balikkum - hi hi)

{ karthikkumar } at: December 24, 2010 at 1:32 AM said...

:)

{ மாணவன் } at: December 24, 2010 at 1:45 AM said...

//புகை உடல்நலத்துக்கு கேடு என்று அறிந்தும் தம் அடித்தோம் அந்த சுவையை அறிதோம் இப்ப 40 நாள் குடிக்காம இருந்ததால் எந்த இழப்பும் இல்லை இனி ஏன் குடிக்க வேண்டும் சகலமும் கற்று மற என்ற பழமொழிக்கு ஏற்ப புகையை கற்று மறந்தாச்சு என்று அன்றில் இருந்து இன்று வரை புகை பிடிப்பதில்லை அந்த நாள் 25.12.2003 கிட்டத்தட்ட 7 வருடம் ஆகிறது புகையை பிடித்து. அன்றில் இருந்து இன்று வரை தம் அடிப்பதில்லை யாருக்கும் தம் வாங்கித் தருவதில்லை என்று நான் எடுத்த முடிவை இன்று வரை கடைபிடிக்கிறேன்...//

உங்களமாதிரியே தம்மடிக்கிற நண்பர்கள் புகைப் பழக்கத்தை விட்டால் நல்லாருக்கும் சில நண்பர்கள் புகை உடலுக்கு கேடு எனத் தெரிந்தும் தொடர்ந்து புகைப் பிடிக்கிறார்கள்...ம்ம்ம்.. என்னாத்த சொல்ல...

{ சத்ரியன் } at: December 24, 2010 at 2:21 AM said...

//சகலமும் கற்று மற என்ற பழமொழிக்கு ஏற்ப..//

’களவும் கற்று மற’ன்னு தானே பழமொழி இருக்குது!

என்னமோ இன்னும் நெறைய மேட்டரு இருக்குது போல. அதான் “சகலமும்னு “ மாத்தி வெச்சிருக்கிற...

{ சத்ரியன் } at: December 24, 2010 at 2:23 AM said...

//இன்று வரை தம் அடிப்பதில்லை யாருக்கும் தம் வாங்கித் தருவதில்லை என்று நான் எடுத்த முடிவை இன்று வரை கடைபிடிக்கிறேன்...//

வாழ்த்துக்கள் சங்கவி.

{ சத்ரியன் } at: December 24, 2010 at 2:23 AM said...

//நான் தம் அடிச்சி சைட் அடிக்கும் போது ஒரு பிகரு ரூட் விட்ட கதை எல்லாம் இருக்குது. (அது விரைவில் பதியப்படும்)//

புத்தாண்டு வெளியீடா...?

{ பிரியமுடன் ரமேஷ் } at: December 24, 2010 at 2:51 AM said...

//சத்தியமாக நான் நல்லவன் நல்லவன்... நம்புங்க மக்களே....//

நம்பிட்டோம்.. சரி அதை விடுங்க.. அப்ப தம் அடிக்கற பசங்க எல்லாரையும் கெட்டவங்கன்னு சொல்றீங்களா.. தம் அடிக்கறவங்கல்லாம்.. வந்து என்னன்னு கேக்க மாட்டீங்களா?

{ Sathishkumar } at: December 24, 2010 at 3:03 AM said...

அடிச்சதே திருட்டு தம்மு.. இதுல இத்தனை போராட்டமா? இருந்தாலும் கடைசில விட்டது நல்லது தான். ஏன்னா..விஷம் சாப்பிட்ட பின்பு தான் அமிர்தத்தின் தன்மை தெரியும்... இன்னும் முக்கியமா, அதுவும் உங்களுக்கு சொல்லனும்ன பல்வலியும் பிடுங்கலும் வந்த தான் தெரியும்.. இத அடுத்தவங்களுக்கும் சொல்லி திருத்த பாக்குறீங்க.. நல்லது தலைவரே...வாழ்த்துக்கள்... மத்தவங்க மாதிரி, அதுவும் ஒரு சில பிரபல பதிவர்னு சொல்லி பிட்டு பட விமர்சனம் (சத்தியமா செந்தில் இல்ல) எழுதாம, உங்கள் வாழ்கையில் நீங்க கேட்டது, படிததுன்னு எழுதறது நல்ல விஷயம்... தொடருங்கள் சகோதர... வாழ்த்துக்கள் ..

{ எம் அப்துல் காதர் } at: December 24, 2010 at 3:24 AM said...

தல இதுவரை Rs.50,400/- மிச்சப் படுத்தி இருக்கீங்க அத என்னா செஞ்சீங்க?? :-)))

{ இரவு வானம் } at: December 24, 2010 at 3:35 AM said...

நம்பிட்டோம், ந்மபிட்டோம்.

{ இந்திரா } at: December 24, 2010 at 4:41 AM said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்
தவறாமல் எழுதவும்

{ வினோ } at: December 24, 2010 at 4:46 AM said...

நானும் உங்களை போல தான்.. சுவை தெரியும்... பழக்கம் இல்லை...

{ Shafna } at: December 24, 2010 at 4:56 AM said...

ஆக பல் வலி வந்ததாலதான் தம் தடைப்பட்டது இல்லையா? இல்லேன்னா? ஒவ்வொருத்தரும் தம்ம விடனும்னா பல் வலி வரனும் இல்லேன்னா தம் தொடரும் அப்டிதானே?

{ goma } at: December 24, 2010 at 4:59 AM said...

நல்ல விழிப்புணர்ச்சி பதிவு

{ வெறும்பய } at: December 24, 2010 at 5:01 AM said...

சத்தியமாக நான் நல்லவன் நல்லவன்... நம்புங்க மக்களே....

//

நம்பிட்டோம் ..

{ கல்பனா } at: December 24, 2010 at 5:06 AM said...

:)

{ சி.பி.செந்தில்குமார் } at: December 24, 2010 at 5:18 AM said...

25

{ சி.பி.செந்தில்குமார் } at: December 24, 2010 at 5:18 AM said...

ungka punai peyar rameeshaqa? உங்க புனை பெயர் ரமேஷா?

{ ஆனந்தி.. } at: December 24, 2010 at 7:40 AM said...

very very good!!:))

{ ஆனந்தி.. } at: December 24, 2010 at 7:40 AM said...

very very good!!:))

{ பதிவுலகில் பாபு } at: December 24, 2010 at 9:13 AM said...

பரவாயில்ல.. பல்வலி வந்து ஒரு கெட்டப் பழக்கமே போயிடுச்சு.. நல்ல விசயம்தான்..

{ சி. கருணாகரசு } at: December 24, 2010 at 10:23 AM said...

புகைப்பதை நிறுத்திய உமக்கு என் வாழ்த்துகள் சங்கவி.

{ சி. கருணாகரசு } at: December 24, 2010 at 10:24 AM said...

நீர் என் ”இனம்” நானும் நிறுத்திட்டேன்..... நல்ல பகிர்வு.

{ தினேஷ்குமார் } at: December 24, 2010 at 11:12 AM said...

எனக்கு எப்போ பல்வலி வரும்

{ தாராபுரத்தான் } at: December 24, 2010 at 4:46 PM said...

ஏழுவருடமா..பரவாயில்லையே.

{ தாமோதர் சந்துரு } at: December 24, 2010 at 5:38 PM said...

நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்றோம் தம்ம விட முடியல. எங்களுக்கும் பல் வலி வந்து வாயத் தொறக்க முடியிலினா உட்ருவமுன்னு நினக்கிறேன்.(சும்மா தமாசு)

புகையை விட்டதற்கு வாழ்த்துகள்.

{ Meena } at: December 24, 2010 at 8:33 PM said...

என்னங்க சிகரெட்டுக்கு நல்ல விளம்பரம் ஆயிற்று உங்கள் கதை

{ R.Gopi } at: December 24, 2010 at 10:24 PM said...

தல...

நெம்ப டேங்ஸ்பா...

காலைல இருந்து தம் அடிக்காம இருந்தேன்... நீங்க இங்க தம் பத்தி விலாவாரியா எழுதி இருந்தீங்களா? படிச்சு டயர்ட் ஆகி, ஒரு தம் போட்டுட்டு வந்தேன்...

நீங்க நல்லவர் ஆயிட்டீங்க... அப்ப நானு?

{ Sathish Kumar } at: December 24, 2010 at 11:29 PM said...

அய்யே.....!
பிஞ்சிலே பயித்த கேசும்மே இது....!

நல்லா இருந்தது...!

{ சாதாரணமானவள் } at: December 25, 2010 at 1:09 AM said...

நல்ல பதிவு. ஆனா ஒரு சந்தேகம், இந்த பல் வலி கல்யாணத்துக்கு முன்னாடி வந்துச்சா? பின்னாடி வந்துச்சா? எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. 'சிகரெட் பிடிப்பியா சிகரெட் பிடிப்பியா'னு கவி அடிச்ச அடில பல் வலி வந்து சிகரெட் பழக்கம் போய் இருக்கும்னு தான் தோணுது. ரைட்டா?

{ ரஹீம் கஸாலி } at: December 25, 2010 at 9:30 PM said...

தமிழ்மணத்தில் 7-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

{ சர்பத் } at: December 26, 2010 at 1:23 AM said...

அப்போ தம் அடிகரவங்கெல்லாம் கெட்டவங்களா பாஸ்?

{ Jaleela Kamal } at: December 26, 2010 at 6:25 AM said...

very good

{ siva } at: December 27, 2010 at 1:24 AM said...

:)GD

Post a Comment