Pages

இரத்த விருத்திக்கு பேரீச்சை

Wednesday, December 22, 2010

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.


ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
பேரீச்சையின் பயன்கள்
கண்பார்வை தெளிவடைய
 
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

31 comments:

{ ம.தி.சுதா } at: December 22, 2010 at 12:53 AM said...

வாறன்..

{ Arun Prasath } at: December 22, 2010 at 1:08 AM said...

ஒரு கிலோ பார்சல்

{ பிரியமுடன் ரமேஷ் } at: December 22, 2010 at 1:17 AM said...

எனக்கும் பேரிச்சம்பழம் ரொம்ப பிடிக்கும்... பயனுள்ள தகவல் நண்பரே... எப்படிங்க தினமும் ஒரு பதிவு எழுதறீங்க..

{ வைகை } at: December 22, 2010 at 1:21 AM said...

பயனுள்ள தகவல்கள்! நன்றி!

{ மாணவன் } at: December 22, 2010 at 1:26 AM said...

அருமை சார், பேரீச்சை பழத்தைப் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கீங்க நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்...

தகவல் பகிர்வுக்கு நன்றி சார்

{ சி.பி.செந்தில்குமார் } at: December 22, 2010 at 1:27 AM said...

useful post

{ சி.பி.செந்தில்குமார் } at: December 22, 2010 at 1:27 AM said...

from to day onwards u may b called as blog world k bagyaraj ha ha ha

{ அமைதிச்சாரல் } at: December 22, 2010 at 1:30 AM said...

மரத்துல ஃப்ரெஷ்ஷா இருக்கறது பார்க்க ரொம்ப அழகாருக்கு.

{ றமேஸ்-Ramesh } at: December 22, 2010 at 1:32 AM said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.
கடைசி பராவில் சில விடயங்கள் புதிது எனக்கு.

{ ரஹீம் கஸாலி } at: December 22, 2010 at 1:33 AM said...

ஆஹா....பயனுள்ள தகவல்

{ கோமாளி செல்வா } at: December 22, 2010 at 1:56 AM said...

//பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். //

அப்படின்னா நான் இன்னிக்கும் முயற்சித்து பார்க்கிறேன் ..
ஏன்னா எனக்கு இப்ப சளி ..!!

{ karthikkumar } at: December 22, 2010 at 1:56 AM said...

இவ்வளவு இருக்கா :)

{ க.பாலாசி } at: December 22, 2010 at 2:13 AM said...

நன்றிங்க சங்கவி.

{ சுபத்ரா } at: December 22, 2010 at 2:15 AM said...

தகவலுக்கு மிக்க நன்றி!!

{ goma } at: December 22, 2010 at 2:39 AM said...

”...ஈஈஈயம் பித்தாளைக்குப் பேரீஈஈஈச்சம்பழம் ...”
கூவலில் இத்தனை மகத்துவமா....?

{ Murugeswari Rajavel } at: December 22, 2010 at 3:02 AM said...

நல்ல பதிவு!

{ ஹேமா } at: December 22, 2010 at 3:02 AM said...

மிகவும் நல்ல பயனுள்ள தகவல்.கேள்விப்பட்டிருந்தாலும் மேலதிக தகவல்களாக நிறையச் சேர்த்திருக்கிறீர்கள்.

{ சத்ரியன் } at: December 22, 2010 at 3:09 AM said...

சங்கவி,

பதிவு மட்டும் அனுப்பினா எப்படி.

பேரீச்சம் பழம் பார்சலும் அனுப்பி வையுங்க சாமீ...

பயனுள்ள பதிவு நண்பா.

{ அரசன் } at: December 22, 2010 at 3:11 AM said...

அருமையான தகவல் தோழரே ...

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: December 22, 2010 at 3:38 AM said...

மிக நல்ல தகவல் .
பகிர்வுக்கு நன்றி .

{ வெங்கட் நாகராஜ் } at: December 22, 2010 at 4:42 AM said...

நல்லதொரு இடுகை. குளிர்காலங்களில் தில்லியில் பேரீச்சை நிறைய கிடைக்கும்.

{ Shafna } at: December 22, 2010 at 5:20 AM said...

நல்ல தகவல்.என்னைச் சுற்றியுள்ள என் சொந்தங்கள் பல பேர்க்கு ரொம்ப பிரயோசனமான ஒரு நிவாரணி என்று நினைக்கிறேன்.அன்றாடம் எப்படியும் ஒரு பழமேனும் உண்ணக்கிடைக்கிறது.முக்கியமாக நாங்கள் நோன்பு நோற்கும் காலங்களில் இந்த பேரீச்சம் பழம் கொண்டுதான் நோன்பு திறப்போம். வீட்டில் உள்ள வயதானவர்கள் தேநீர் அருந்தும்போது இனிப்புக்கு பதிலாக இந்தப் பழத்தையே பயன்படுத்துகிறார்கள். எப்படியும் தினமும் எங்கள் வீட்டில் பேரீச்சம்பழம் இருந்துகொண்டே இருக்கும்.சங்கவி குறிப்பிட்டது போல் அது மிகவும் பிரயோசனமானது.

{ Sathish Kumar } at: December 22, 2010 at 5:52 AM said...

பழம் ருசித்தது சங்கவி...!

{ கிருபாநந்தினி } at: December 22, 2010 at 6:34 AM said...

பேரீச்சம்பழம் எனக்கு இப்ப பிடிக்கும். சின்ன வயசுல பிடிக்காது. காரணம் என்னன்னா, அது பாக்குறதுக்கு அசப்புல கரப்பான் பூச்சி மாதிரியே இருக்கும். பாக்குறப்பவே உவ்வேக்னு உமட்டல் வந்துடும். அப்புறம், இன்னொரு காரணமும் உண்டு. அது என்னன்னா, பேரீச்சம்பழத்தை யானைக் கால்ல வெச்சுக் கட்டினா, கால் சரியாயிடுமாம். கடையில விக்கிற பேரீச்சம்பழமெல்லாம் அப்படி யார் கால்லயோ வெச்சுக் கட்டி எடுத்த பேரீச்சம்பழம்னு யாரோ சின்ன வயசுல ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு என்னைக் கதிகலங்க அடிச்சுட்டாங்க. அதனால, பேரீச்சம்பழம்னாலே அலர்ஜியாயிடுச்சு எனக்கு! மத்தபடி, யாரும் பேரீச்சம்பழம் சாப்பிடுறப்போ கரப்பான் பூச்சி, யானைக்கால் இதையெல்லாம் நினைச்சுக்காதீங்க, என்ன? :)

{ கிருபாநந்தினி } at: December 22, 2010 at 6:36 AM said...

என்னங்க... இப்ப நான் அடிச்ச நீளமான கமெண்ட்டு போஸ்ட் ஆயிடுச்சா இல்லியான்னு தெரியலியே?

{ எம் அப்துல் காதர் } at: December 22, 2010 at 8:43 AM said...

//மத்தபடி, யாரும் பேரீச்சம்பழம் சாப்பிடுறப்போ கரப்பான் பூச்சி, யானைக்கால் இதையெல்லாம் நினைச்சுக்காதீங்க, என்ன? :) //

போறபோக்கில் குண்டையும் தூக்கி போட்டுட்டு இப்படி வேறயா, ரொம்ப நல்லா இருக்குங்க நீங்க சொல்ற ஞாயம் :-)))

பதிவு அருமை!! பகிர்ந்தமைக்கு நன்றி!

{ ANKITHA VARMA } at: December 22, 2010 at 9:39 AM said...

பெரிய ஈச்சம் பழம் என்றால் வேண்டாம் என்று யார் தான் சொல்வார்கள். தகவல் அருமை...

{ middleclassmadhavi } at: December 22, 2010 at 3:33 PM said...

Thanks for the useful tips

{ தினேஷ்குமார் } at: December 22, 2010 at 9:45 PM said...

மிக நல்ல பகிர்வு நண்பரே கவலைபடாதிங்க ஊருக்கு வரும்போது பார்சல் வாங்கிட்டுவர்றேன்

{ VELU.G } at: December 23, 2010 at 12:17 AM said...

நல்ல பகிர்வு

இங்கே ஈரோட்டில் export பேரிச்சம்பழம் ரொம்ப அருமையாக கிடைக்கிறது

{ Jaleela Kamal } at: December 26, 2010 at 6:21 AM said...

அருமையான பகிர்வு,
http://samaiyalattakaasam.blogspot.com

Post a Comment