Pages

ஏர்செல்லும் நான் பட்ட அவஸ்தையும்

Tuesday, December 21, 2010
என்னுடைய மொபைல் எண்ணாக ஏர்செல்லை பயன்படுத்துகின்றறேன் கிட்டத்தட்ட 8 வருடமாக போஸ்ட்பெய்டு இணைப்பில் இதே எண்ணை பயன்படுத்தி வருகிறேன். அதிகமாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் வேலை எனக்கு இல்லை. கடந்த வாரம் திடீரென பெங்களுர் செல்ல வேண்டியதாகி விட்டது நாம் எங்கே சென்றாலும் முதல் கேட்கும் கேள்வியே அங்க போன ஏர்செல் எடுக்குமா? எடுக்கும் என்றார்கள் ஆனால் ரோமிங் ஆக்டிவ் செய்ய வேண்டும் என நண்பன் விளக்கினார்.

நான் ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். அவர்கள் பதிலுக்கு இல்ல சார் நீங்க எங்க மொபைல் வாங்குனீங்களோ அங்க போய் எழுதி கொடுங்க அப்ப தான் செயல்படுத்த முடியும் என்றார்கள் இல்லிங்க என்னால் செல்ல முடியாத அவசர கால உதவி செய்யுங்கள் என்றேன் ஒரு 3 நிமிடம் கழித்து சரி சார் நாங்க உங்க வேண்டுகோளை எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள் சரி என்றேன்.

அடுத்த நாள் காலை ஓசூர் தாண்டி கொஞ்ச நேரத்தில் ஏர்செல் டவர் அவுட் நண்பனிடம் சொல்லி வாடிக்கையாளர் சேவை மையத்தை கேட்க சொன்னால் சார் உங்க வேண்டுகோள் ஏற்கப்பட்டு இன்னும் 24 மணி நேரத்தில் சரி செய்யபடும் என்று கூறிஉள்ளனர்.

ஆனால் சரி செய்யப்படவில்லை. தினமும் 24 மணி நேரத்தில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அருகில் இருப்பது செல்போன் தான் தினமும் நிறைய போன்கள் பேசிக்கொண்டு இருந்த நான் அன்று ஒரு நாள் கையில் செல் இருந்தும்  எந்த அழைப்பும் அழைக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. அன்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் ஏர்செல்லால்.

இன்று காலை மறுபடியும் ஏர்செல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு கேக்கும் போது வந்த பதில் Sorry sir Technical Problem நீங்க கேட்ட எந்த தகவலும் தற்போது தர இயலாது சிரமம் பார்க்காமல் ஒரு 1 மணி நேரம் கழித்து பேசுங்க இது தான் வாடிக்கையாளர் சேவை மையம் கூறிய பதில்...

எனது கிரிடிட் லிமிட் 3500 நான் மாதம் கட்டும் கட்டணம் 700 என்ற போதிலும் எப்ப பிரச்சனை வந்தாலும் சாரி சார் டெக்னிக்கல் ப்ராப்ளம் இதே பதிலை சொல்கிறார்கள்.

சரி தவறு நம் மேல் தான் இத்தனை பிரச்சனைக்கு அப்புறம் நாம் ஏன் இங்கு இருக்கவேண்டும் இதே எண்ணை எப்படி மற்றொரு தொலை தொடர்புக்கு மாற்றுவது தமிழ்நாட்டில் இந்த வசதி நடைமுறைக்கு வந்து விட்டதா தெரிந்தால் சொல்லுங்க மக்களே...

31 comments:

{ Arun Prasath } at: December 21, 2010 at 1:49 AM said...

இதே எண்ணை எப்படி மற்றொரு தொலை தொடர்புக்கு மாற்றுவது தமிழ்நாட்டில் இந்த வசதி நடைமுறைக்கு வந்து விட்டதா தெரிந்தால் சொல்லுங்க மக்களே//


athu innum varala..... konjam time aagum

{ karthikkumar } at: December 21, 2010 at 1:49 AM said...

vadai

{ karthikkumar } at: December 21, 2010 at 1:55 AM said...

இதே எண்ணை எப்படி மற்றொரு தொலை தொடர்புக்கு மாற்றுவது தமிழ்நாட்டில் இந்த வசதி நடைமுறைக்கு வந்து விட்டதா தெரிந்தால் சொல்லுங்க மக்களே///
அது வரும்னு சொல்றாங்க இன்னும் வந்த மாதிரி தெரில சார்.

{ கோமாளி செல்வா } at: December 21, 2010 at 1:59 AM said...

நானும் கேள்விப்பட்டிருக்கேன் , என்னோட நண்பர் ஒருத்தர் AIRCEL வச்சிடிருந்து வேற ஊருக்குப் போய் பேச முடியல ..?!
இப்ப அவர் AIRTEL கு மாறிட்டார் .. ஆனா அது PREPAID .
POSTPAID பத்தி தெரியாது ..!!

{ சிட்டி பாபு } at: December 21, 2010 at 2:02 AM said...

ப்ரீ பெய்டா மாற்றுங்க எல்லா பிரச்சனயும் சரி ஆய்டும்

{ எல் கே } at: December 21, 2010 at 2:02 AM said...

சங்கவி நான் ஏழு வருடங்களாக ஏர்செல் உபயோகிக்கிறேன். இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்தவருடம் ஆந்திரா செல்ல நேர்ந்த பொழுது, ரோமிங் ஏக்டிவேட் செய்தேன். ஒரு மணி நேரத்தில் ரெடி ஆனது.

அந்த சேவை தமிழகத்தில் வர நாளாகும்

{ வெங்கட் நாகராஜ் } at: December 21, 2010 at 2:08 AM said...

தற்போதைக்கு ஹரியானா மாநிலத்தில் மட்டுமே இந்த வசதி ஆரம்பித்து இருக்கிறது. தில்லியில் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. தமிழ்நாடு பற்றி தெரியவில்லை நண்பரே. இந்த பிரச்சனை ஏர்செல் மட்டுமல்ல, தலைநகரில் கூட ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜி.எஸ்.எம். எண்கள் கிடைப்பதில்லை....


வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com
www.rasithapaadal.blogspot.com

{ பாரத்... பாரதி... } at: December 21, 2010 at 2:08 AM said...

ஏர் செல்லில் இந்த குழப்பம் இருப்பது தான் . கேரளா செல்லும் போது ஐடியா NET WORK
கிடைக்கும். ஆனால் பயன் இருக்காது.

N.Saravanan at: December 21, 2010 at 2:14 AM said...

I too using Aicel post paid nearly six years,my credit limit 6000, but if i want to activate roaming facility i need pay for deposit this is realy meaningless,my credit limit is 6000 then why they asking deposit, apart from this comparitively good and transparent billing.

N.Saravanan

{ asiya omar } at: December 21, 2010 at 2:22 AM said...

எனக்கும் ஏர்டெல் பற்றி தான் தெரியும்,அதுவும் ப்ரிபெய்ட்,ஊர் போகும் பொழுது உபயோகிக்க வைத்து இருக்கேன்,திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் சிம் மாற்றிய உடன் சூப்பராக பேசலாம்.என் அனுபவத்தில் இது வரை பிரச்சனை இல்லை.

{ சௌந்தர் } at: December 21, 2010 at 2:31 AM said...

நானும் ஏர்செல் தான் வைத்து இருக்கேன் அதை மாத்தணும்.....

{ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan } at: December 21, 2010 at 2:41 AM said...

அடடா.. எவ்வளவு அருமையான சந்தர்ப்பம்.. சுதந்திரமா இருக்கறதுக்கு.. ஹிஹிஹி..

செல்போன், இணையவசதி எல்லாம் இல்லாம இருந்து பாருங்க.. ஆனந்தமா இருக்கும்.

ஆனா பாவம் நீங்க ஏதோ முக்கியமான வேலையா போனா கஷ்டம் தான்.

{ dondu(#11168674346665545885) } at: December 21, 2010 at 2:48 AM said...

நான் வோடஃபோன் போஸ்ட்பெயிட் வச்சிருக்கேன். வாங்கியபோதே அகில இந்திய ரோமிங் கேட்டு வாங்கி விட்டேன். பிறகு பம்பாய் சென்ற போது ஒரு பிரச்சினையும் இல்லை.

முதலிலேயே வாங்குவதே நல்லது.

எனது மடிக்கணினிக்கான ரிலையன்ஸ் டேட்டா கார்டும் அகில இந்திய ரோமிங்கிற்கே ஏதுவானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

{ ரஹீம் கஸாலி } at: December 21, 2010 at 3:08 AM said...

ஒரே நாட்டுக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ரோமிங் செய்யவேண்டும் என்றால் எவ்வளவு பிரச்சினை. இந்தியா முழுவதும் ரோமிங் இல்லாமல் பேசும் வசதி செய்துவிட்டால் சுலபமாக இருக்கும்.மலேசியா போன்ற வெளிநாடுகளில் அந்த நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் ரோமிங் இல்லாமல் பேசலாம். அதேநேரம் பிடிக்கும் தொலை தொடர்புக்கு மாறுவதும் ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும். பழைய நெட்வொர்க்கில் எவ்வளவு பணம் இருந்ததோ அதே பணம் புது நெட் வொர்கிலும் அப்படியே இருக்கும். அதே போல நம்ம நாட்டிலும் வந்தால்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

{ இந்திரா } at: December 21, 2010 at 3:24 AM said...

நெட்வர்க் ப்ராப்ளம் பெரும் ப்ராப்ளமா இருக்கு

Anonymous at: December 21, 2010 at 3:35 AM said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

{ பிரியமுடன் ரமேஷ் } at: December 21, 2010 at 3:49 AM said...

இந்த மாதிரி அவஸ்தையை நானும் அனுபவிச்சிருக்கேன்.. அப்புறம்தான் இந்த போஸ்ட்பெயிட் கருமாந்திரத்துக்கு பிரிபெய்ட் ரொம்ப பெஸ்ட்டுன்னு அதுக்கு மாறிட்டேன்...
உண்மைலயே போஸ்ட்பெய்ட விட பிரிபெய்ட்தாங்க பெஸ்ட்...


//இதே எண்ணை எப்படி மற்றொரு தொலை தொடர்புக்கு மாற்றுவது தமிழ்நாட்டில் இந்த வசதி நடைமுறைக்கு வந்து விட்டதா//

இந்தியாவிலேயே இந்த வசதி இன்னும் எங்கும் வரலைங்க.. வரவும் விட மாட்டாங்க.. வந்தாலும் 100 யானை விலை சொல்வாங்க. கஸ்டமர் கேர்ல நீங்க பார்த்த இலட்சனத்துலதான் சப்போர்ட் இருக்கும்.. சோ.. நீங்க நம்பற விட மனசில்லாதவறா இருந்தா.. இந்தே நம்பருக்கு பிரிபெய்டுக்கு மைக்ரேட் ஆயிடுங்க...
பிரிபெய்டா இருந்தா... ரோமிங்க்லாம் பிரி ஆக்டிவேட்டட் அதனால உங்களுக்கு தொல்லை இருக்காது...

{ பிரவின்குமார் } at: December 21, 2010 at 4:19 AM said...

//இன்று காலை மறுபடியும் ஏர்செல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு கேக்கும் போது வந்த பதில் Sorry sir Technical Problem நீங்க கேட்ட எந்த தகவலும் தற்போது தர இயலாது சிரமம் பார்க்காமல் ஒரு 1 மணி நேரம் கழித்து பேசுங்க இது தான் வாடிக்கையாளர் சேவை மையம் கூறிய பதில்...//

எல்லா வாடிக்கையாளர் சேவை மையத்திலும்.. இந்த வசனம் மனப்பாடம் செய்யப்பட்டு நம்மிடம் ஒப்புவிக்கப்படுகிறது.
என்னத்த.. சொல்ல.. கெடுமையோ... கொடுமை..!
அது ஏனோ.. தெரியலலீங்க நம்ப சந்தேகம் கேட்கும்போதும்.. பிரச்சினைகளை கூறும் போதும்தான்... நெட்வொர்க் பிராப்ளம் ஏற்படுமோ...???!!

எழில் at: December 21, 2010 at 4:20 AM said...

@சங்கவி

//சரி தவறு நம் மேல் தான் இத்தனை பிரச்சனைக்கு அப்புறம் நாம் ஏன் இங்கு இருக்கவேண்டும்//

தமிழ்ல சரியான வார்த்தைகள் கிடைக்கல அதனால ஆங்கிலம். மன்னிக்கவும்!!

Aircel is upgrading its Devices and Softwares. Due to this you may faced this issue. Once the process is over you wil get very fast service.

//என்னுடைய மொபைல் எண்ணாக ஏர்செல்லை பயன்படுத்துகின்றறேன் கிட்டத்தட்ட 8 வருடமாக போஸ்ட்பெய்டு இணைப்பில் இதே எண்ணை பயன்படுத்தி வருகிறேன். //

சர்வீஸ் நல்லா இல்லைனா எட்டு வருஷம் பயன்படுத்தி இருக்க மாட்டிங்க இல்லை?

{ பார்வையாளன் } at: December 21, 2010 at 4:22 AM said...

நம்பரை மாத்துங்க நண்பரே

{ அரசன் } at: December 21, 2010 at 4:30 AM said...

சிரமம் தான் நண்பரே ... விரைவில் தமிழகத்துக்கு அந்த வசதி வருகிறது என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் ... ஐடியா நிறுவன விளம்பரங்களை ஒருமுறை பாருங்கள் ...

{ இரவு வானம் } at: December 21, 2010 at 5:06 AM said...

prepaidukku maaritunga

{ pushparaj } at: December 21, 2010 at 6:04 AM said...

Better keep yr. passport size photo and id proof xerox. you can purchase a local sim prepaid and use your out going call atleast.

{ சாதாரணமானவள் } at: December 21, 2010 at 7:15 AM said...

உண்மைய சொல்லுங்க... யார் தொல்லையும் இல்லாம இருக்க மொபைல ஆஃப் செஞ்சுட்டு மனைவியிடம் இருந்து தப்பிக்கத்தானே இப்படி எல்லாம் பில்ட்அப்பு...

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: December 21, 2010 at 7:42 AM said...

ம் ...

{ தமிழரசி } at: December 21, 2010 at 8:10 AM said...

பாருங்க இன்றைய நிலை ஒரு நாள் அலைப்பேசியில் அழைக்க இயலாவிட்டால் நேரும் அவதியை...

{ சி.பி.செந்தில்குமார் } at: December 21, 2010 at 5:54 PM said...

appadi poodu aruvaaLaiஅப்படி போடு அருவாளை

{ விஜி } at: December 21, 2010 at 7:23 PM said...

நல்ல அனுபவம்தான் :

ஏர்செல் மட்டும் அல்ல ஏர்டெல்கூட போஸ்ட் பெயிடில் ரோமிங் வேண்டுமென்றால் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ கஸ்டமர் கேரில் சொல்லித்தான் பெறவேண்டும். அதிலும் நீங்கள் ஜிசி எனப்படும் க்ரூம் கனெக்சனாக இருந்தால் இன்னும் நொந்து போயிருப்பீங்க.

அதற்கு பெஸ்ட் ஏர்டெல் ப்ரீபெய்ட், நிறைய ஆஃபர், ரோமிங் ஈஸி.. இப்பத்தான் 10 ரூபாய்க்கு ஒரு சிம் கிடைக்குதே. ஒண்னு வாங்கி வச்சுக்குங்க

அப்பறம் மொபைல் நம்பர் போர்ட்டபிளிடி சீக்கிரம் வரும். நம்பர் மாத்தாமல் விரும்பிய தொடர்பு நிறுவனத்துக்கு மாறிக்கலாம்..

இதைவிட பெஸ்ட் போன் இல்லங்க என்ற சேப் பதில் :))

Anonymous at: December 22, 2010 at 1:09 AM said...

எல்லாத்துக்கும் காரணம் ஏர்செல்லை அரசு நிறுவனம மாத்தினதுதான். அதை மீண்டும் தனியார் நிறுவனமா மாத்திட்டா பிரச்சினை தீர்ந்துடும்.

{ எல் கே } at: December 22, 2010 at 4:21 AM said...

@விஜி
ஒரு சிலக் காரணங்களால் போஸ்ட் பெய்ட் எங்களுக்கு வசதி . அலுவலகக் கால்களுக்கு அவங்ககிட்ட பில் போட்டுடலாம் :)

{ மோகன் குமார் } at: December 22, 2010 at 8:56 PM said...

Facility not yet come. But will come soon. Aircel is one of the cheapest service provider. But poor signal & service.

Post a Comment