Pages

சங்கவியிடம் சண்டை போட்ட பெண் பதிவர்

Wednesday, December 8, 2010
பதிவர் சந்திப்பை பற்றிய பதிவை போட்டதும் எனக்கு ஒரு பெண் பதிவரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் மட்டும் பங்குகொண்டால் எப்படி? ஏன் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று சண்டை போட்டார். 
 
என்னடா இது வம்பா போச்சு என்று நானும் எங்கள் சந்திப்பு எதார்த்தமாக நடந்தது. எனவே முன்கூட்டி தெரிவிக்க முடியவில்லை என கூறினேன். அடுத்த சந்திப்பின்போது சொல்லுங்கள் என்றார். பேச்சின் முடிவில் பர்சனல் விவரங்களை லேசுபாசாக (எப்போதும் போல) கேட்டேன். அவரும் எங்கள் மாவட்டம் என்பதை தவிர எதுவும் சொல்லாமல் இருந்தார். 
 
ரொம்ப நேரம் கடலை போட்டு பின் 'என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டேன். அவர் புகைப்படதுறையில் இருப்பதாக கூறினார். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. நானும் சில வருடங்களுக்கு முன் அதே துறை. எனவே 'என் முதல் வேலையும் அதே துறை தான்' என்று கூறி நான் பணிபுரிந்த இடத்தை சொன்னேன். ஆச்சரியமாக அவரும் அதே இடத்தில் வேலை செய்திருக்கிறார். 
 
மேலும் ஆச்சரியம் தரும் தகவலை கூறினார், நான் வேலை செய்த அதே வருடத்தில் தான் அவரும் அங்கே இருந்திருக்கிறார். நான் என் முழு பெயரை கூற, அவருக்கு ஆனந்த அதிர்ச்சி. எனக்கும் அவரை தெரிந்து போய் விட்டது. அவரது ஒரிஜினல் பெயரில் அவரை அழைக்க... எங்கள் இருவருக்கும் செம சந்தோஷம் மகிழ்ச்சி... (போட்ட கடலை வேஸ்டா போச்சே...)

சில வருடத்திற்கு முன்..

இந்த பெண் பதிவர் தான் என் Photoshop  குரு. முதன் முதலில் வேலைக்கு சேர்ந்ததும் இவுங்க தான் எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க முதலில் அமைதியாக கற்றுக்கொண்டு ஒரு நான்கு மாதத்திற்கு அப்புறம் தான் என் லொள்ளை எல்லாம் ஆரம்பித்தேன். அப்புறம் எனது குருவே என் எதிரி ஆனார். நாங்கள் இருவரும் தினமும் சண்டைபோடுவோம். அவர்கள் எதாவது கேட்டால் திமிறாக பதில் சொல்வது பதிலுக்கு அவங்களும் திமிராக பதில் அளிப்பார்.

நாங்க உள்ள இருந்தாலே சண்டைதான். அவர்களுக்கு பிடித்த பாட்டை போடுவார்கள் நான் எனக்கு பிடித்த பாட்டை போடுவேன் அவுங்க பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும் என் பாடல் எனக்கு மட்டும் தான் பிடிக்கும் (குசி படத்தில் வந்த ஒரு பிரபல பாடல்) எல்லாரும் திட்டுவாங்க நான் அடங்குவனா உடனே சண்டை தான்.

தண்ணி குடிக்க சண்டை, வடை சாப்பிட சண்டை என தினமும் வம்பிலுத்தே இருப்பேன் அவுங்ககிட்ட மட்டுமல்ல எல்லா பொண்னுங்ககிட்டையும். வேலையை விட்டு செல்லும்போது திமிராக வரட்டா என்று சொல்லிட்டு வந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது..

சில வருடத்திற்கு முன் எந்த பெண்ணிடம் சண்டைபோட்டு  வந்தேனோ இன்று பதிவுலகம் மூலம் அவர் எனக்கு நட்பாக மலந்திருக்கிறார். இந்த நட்பு மீண்டும் கிடைத்தது பதிவுலகம் மூலம் பதிவுலகிற்கு என் நன்றி...

இப்ப யோசிக்கும் போது அவுங்ககிட்ட போட்ட சண்டை எல்லாம் இப்படி நடந்துகிட்டனா என்று யோசிக்க வைக்கிறது. இருந்தாலும் அடுத்த சந்தோசம் பதிவுலகில் ஆரோக்கியமான சண்டை போடுவதற்கு எனக்கு கிடைச்சுட்டாங்க ஒரு பதிவர்...

51 comments:

{ Arun Prasath } at: December 8, 2010 at 1:17 AM said...

ஐ சண்ட போடாம இந்த வடை எனக்கு...

{ Arun Prasath } at: December 8, 2010 at 1:17 AM said...

வடை சாப்பிட சண்டை//

செல்வா இருக்கும் போது வடைக்கு சண்டை இருக்க தான செய்யும்

{ Arun Prasath } at: December 8, 2010 at 1:18 AM said...

இருந்தாலும் அடுத்த சந்தோசம் பதிவுலகில் ஆரோக்கியமான சண்டை போடுவதற்கு எனக்கு கிடைச்சுட்டாங்க ஒரு பதிவர்...//

நடத்துங்க...

{ கோமாளி செல்வா } at: December 8, 2010 at 1:23 AM said...

//எங்கள் இருவருக்கும் செம சந்தோஷம் மகிழ்ச்சி... (போட்ட கடலை வேஸ்டா போச்சே...)
//

அதே மாதிரி எனக்கும் வடை போச்சே ..!!

{ பதிவுலகில் பாபு } at: December 8, 2010 at 1:25 AM said...

சூப்பர்.. வாழ்த்துக்கள்..

{ கோமாளி செல்வா } at: December 8, 2010 at 1:25 AM said...

//அடுத்த சந்தோசம் பதிவுலகில் ஆரோக்கியமான சண்டை போடுவதற்கு எனக்கு கிடைச்சுட்டாங்க ஒரு பதிவர்..//

ஹி ஹி ஹி ..

{ சுபத்ரா } at: December 8, 2010 at 1:26 AM said...

Very Interesting :) பதிவர் சந்திப்பு பற்றி போஸ்ட் போட்டாச்சா என்ன.

{ செல்வமுரளி } at: December 8, 2010 at 1:26 AM said...

ஹே சங்கு, நானும் உங்க கூடத்தானே இருந்தேன்... :( இது எப்ப?

{ எஸ்.கே } at: December 8, 2010 at 1:27 AM said...

மகிழ்ச்சி!

{ Balajisaravana } at: December 8, 2010 at 1:27 AM said...

ரைட்டு! கொஞ்ச நாள் அவங்க நிம்மதியா இருந்திருப்பாங்க. இப்போ மறுபடியும் மாட்டிக்கிட்டாங்க ;)

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: December 8, 2010 at 1:31 AM said...

ம் ...

{ சாதாரணமானவள் } at: December 8, 2010 at 1:32 AM said...

சினிமால காட்டற மாதிரியே சாட் பண்ணியிருக்கீங்க... யார் அந்த பதிவர்னு சொல்லவே இல்லையே..

ஆமா... முதல்ல வர்றவங்களுக்கு வடைங்கற கான்சப்ட ஆரம்பிச்சது யாரு?

{ TERROR-PANDIYAN(VAS) } at: December 8, 2010 at 1:32 AM said...

அட பாவிகளா!! ஒரு மொக்க மேட்டருக்கு இப்படி ஒரு தலைப்பா?? ஹிட்ஸ் ஏத்த எப்படி எல்லாம் சதி பண்றாங்கபா... :)))))

{ இந்திரா } at: December 8, 2010 at 1:34 AM said...

//(போட்ட கடலை வேஸ்டா போச்சே...)//

அடடே..
சரி சரி ஃபீல் பண்ணாதீங்க..
மீண்டும் முயற்சி பண்ணுங்க.
ஆல் த பெஸ்ட்

{ Kousalya } at: December 8, 2010 at 1:39 AM said...

வித்தியாசமான சந்திப்பு.....! பதிவுலகம் உங்கள் நட்பை மீண்டும் இணைத்திருப்பது நல்ல விஷயம்...வாழ்த்துக்கள்.

{ வெறும்பய } at: December 8, 2010 at 1:40 AM said...

எப்படியோ சண்டை போட ஒரு ஆள கிடசாச்சில்ல.. சந்தோசப்பட வேண்டியது தானே..

{ Sriakila } at: December 8, 2010 at 1:46 AM said...

சண்டை போட்டப் பதிவர் "சமாதானம்.. சமாதானம்.." சொல்லிட்டாங்களா?

{ க்ரிஷ் } at: December 8, 2010 at 1:58 AM said...

so u have one more girl friend ah... :-)

{ sakthi } at: December 8, 2010 at 2:02 AM said...

அப்போ நீங்க சண்டக்கோழியா ::((((

{ thamizhan } at: December 8, 2010 at 2:12 AM said...

பதிவருக்கு அடிப்படை தகுதியே அதானா?

{ இம்சைஅரசன் பாபு.. } at: December 8, 2010 at 2:16 AM said...

வாழ்த்துக்கள் ......எப்படி எல்லாம் தலைப்பு வைக்கிறாங்க ..................

{ சே.குமார் } at: December 8, 2010 at 2:19 AM said...

த்தியாசமான சந்திப்பு.....! பதிவுலகம் உங்கள் நட்பை மீண்டும் இணைத்திருப்பது நல்ல விஷயம்...வாழ்த்துக்கள்

{ Sathishkumar } at: December 8, 2010 at 2:25 AM said...

ஏங்க.. சொல்லியிருந்தா நாங்களும் சண்ட போட வந்துருபோம்ல

{ karthikkumar } at: December 8, 2010 at 2:29 AM said...

போட்ட கடலை வேஸ்டா போச்சே.//

சார் ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான். ஆனா கை விட்ருவான். நல்லவங்கள நெறைய சோதிப்பான். ஆனா கைவிடமாட்டான். நீங்க நல்லவர் போல அதான் எதிரி கூட நட்பாகிட்டாங்க.

{ goma } at: December 8, 2010 at 2:41 AM said...

சண்டைக்கோழிகள் மறுபடியும் கோதாவில் ...

நான் பெண்கோழிக்கு ஆதரவு

{ Chitra } at: December 8, 2010 at 2:47 AM said...

சில வருடத்திற்கு முன் எந்த பெண்ணிடம் சண்டைபோட்டு வந்தேனோ இன்று பதிவுலகம் மூலம் அவர் எனக்கு நட்பாக மலந்திருக்கிறார். இந்த நட்பு மீண்டும் கிடைத்தது பதிவுலகம் மூலம் பதிவுலகிற்கு என் நன்றி...

..... :-)

{ வினோ } at: December 8, 2010 at 3:12 AM said...

அட இப்படியும் நடக்குதா.. வாழ்த்துக்கள் நண்பரே...

{ மாதேவி } at: December 8, 2010 at 3:18 AM said...

நட்பு வாழ்க.:)

{ நித்திலம்-சிப்பிக்குள் முத்து } at: December 8, 2010 at 3:36 AM said...

ம்ம் அட கதைக் கரு கூட நன்றாக இருக்கிறதே.....ஒருநாள் வரும் கதையாக......

{ சி.பி.செந்தில்குமார் } at: December 8, 2010 at 3:40 AM said...

செம மேட்டர் ,சூப்பர் டைட்டில்

{ சி.பி.செந்தில்குமார் } at: December 8, 2010 at 3:43 AM said...

எனக்கு அறிமுகம்செய்யாமல் அல்வா குடுத்த்தை வன்மையாகக்கண்டித்ஜ்து ஒரு பதிவு தேத்த முடியுமான்னு பாக்கறேன்

{ பிரவின்குமார் } at: December 8, 2010 at 3:55 AM said...

ஹெ...ஹே.. சுவாரஸ்யமாலே இருக்கு..,!! சூப்பரு..,!

{ ஜெரி ஈசானந்தன். } at: December 8, 2010 at 4:17 AM said...

இதுக்கு தான் கடலையை ரொம்ப வறுக்க க்கூடாது.

{ vanathy } at: December 8, 2010 at 4:20 AM said...

ஒரு மார்க்கமா தான் இருந்திருக்கீங்க போல.

{ வைகை } at: December 8, 2010 at 4:30 AM said...

சண்ட போட உதவி வேணும்னா என்ன சேத்துக்கங்க!!!

{ சத்ரியன் } at: December 8, 2010 at 4:33 AM said...

//போட்ட கடலை வேஸ்டா போச்சே..//

சங்கமேஷ்,

என் தங்கச்சியோட போன் நெம்பரை எங்கியோ தவற விட்டுட்டேன். கொஞ்சம் குடுத்து உதவனீங்கன்னா... அவங்களுக்கும் தகவல் சொல்லிருவேன்.

வந்த வேலை முடிஞ்சிரும்..
(ங்..ய்யால என்னா பீலிங்கி....!)

{ அமைதிச்சாரல் } at: December 8, 2010 at 6:14 AM said...

//எங்கள் இருவருக்கும் செம சந்தோஷம் மகிழ்ச்சி... (போட்ட கடலை வேஸ்டா போச்சே...)//

ஆஹா!!.. 'இப்பவும் வடை போச்சே'தானா :-)))

{ Geetha6 } at: December 8, 2010 at 6:17 AM said...

வாழ்த்துக்கள்..

{ பாரத்... பாரதி... } at: December 8, 2010 at 7:01 AM said...

//அப்போ நீங்க சண்டக்கோழியா ::(((( //

ஞாயிற்றுக்கிழமைகளில் கவனமாக இருக்கவும்..
(பிரியாணி ஆயிடாதீங்க)

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: December 8, 2010 at 7:07 AM said...

யார் அது சங்கவி..

{ றமேஸ்-Ramesh } at: December 8, 2010 at 7:09 AM said...

நட்புக்கு வாழ்த்துக்கள்
ஆனாலும் இன்னும் கடலை தேவைதானா???
மாமு

யாதவன் at: December 8, 2010 at 8:05 AM said...

அருமை

{ அன்பரசன் } at: December 8, 2010 at 9:46 AM said...

//அடுத்த சந்தோசம் பதிவுலகில் ஆரோக்கியமான சண்டை போடுவதற்கு எனக்கு கிடைச்சுட்டாங்க ஒரு பதிவர்...//
:)

{ மாணவன் } at: December 8, 2010 at 4:46 PM said...

சண்டைகள் தொடரட்டும்... ஸாரி நட்பு தொடரட்டும்...

அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

{ வெட்டிப்பேச்சு } at: December 8, 2010 at 10:22 PM said...

உலகம் ரொம்ப சிறுசு அப்பு..

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: December 9, 2010 at 12:29 AM said...

ஒரு சண்டைய வெச்சு ஒரு பதிவா..ம்ம்ம்

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: December 9, 2010 at 12:29 AM said...

அவங்க மறுபடி சாட்ல வந்து சண்டை போட்ருப்பாங்களே

{ தமிழரசி } at: December 11, 2010 at 12:55 AM said...

அடடடடா சங்கவியா? நல்லபுள்ளன்னு நினைச்சா கடலையா போடறீங்க கடலை..ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க...இந்தா வரேன் உங்க வீட்டு அம்மா என் பிரண்டு தான்..

{ polurdhayanithi } at: December 14, 2010 at 3:05 AM said...

பாராட்டுகள் நண்பரே .
இதுக்குத்தான் எங்களைப்போல
சொந்த பெயரில் எழுத வேண்டும் என்பது

{ சிவாஜி } at: December 24, 2010 at 12:45 AM said...

:)

{ ஆதிரா } at: December 29, 2010 at 7:26 PM said...

சண்டை இனிமேல் பதிவுகளிலா? இல்ல பின்னூட்டத்திலா? எங்களுக்குக் கொண்டாட்டம்? ம்ம்ம்ம்ம் அசத்துங்க...

Post a Comment