Pages

2011 சட்டமன்ற தேர்தல் அறிக்கை

Monday, December 20, 2010
தமிழகத்திற்கு வரும் 2011ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக கூட்டணி பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். கூட்டணி மட்டுமின்றி எந்த தேர்தல் என்றாலம் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தான் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும்.

ஒவ்வொரு கட்சியியும் அவர்கள் கூட்டணிக்கு தரும் முக்கியத்துவம் போல் தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு மக்கள் மனதில் பதிக்வேண்டும் எனில் தேர்தல் அறிக்கை முக்கியம்.

தேர்தல் அறிக்கை ஓர் கட்சியின் கொள்கை விளக்கமாகவும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் தொலை நோக்கு திட்டமாகவும் இருக்கும். அக்கட்சியின் பொருளாதார கொள்கையை பட்டியலிட்டு இருக்கும். ஒவ்வொரு கட்சியும் கொள்கை ரீதியான அறிவிப்புகள் முன்னுரிமையாக இருக்கும்.

வங்கிகளைத் தேசியமயமாக்குவது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வரவேற்பது அல்லது தடுப்பது, மின் உற்பத்தியில் தன்னிறைவு, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு முன்னுரிமை போன்றவை கொள்கை அறிவிப்புகள்.

மக்களின் அன்றாட அல்லது அவ்வப்போதைய பிரச்னைகளையும் தங்கள் கட்சி கூர்ந்து கவனிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், ஒரு சில அறிவிப்புகளும் வாக்குறுதிகளும் இடம்பெறும். இப்படித்தான் தேர்தல் அறிக்கைகள் முன்பெல்லாம் இருக்கும்.

ஆனால் தற்போது தேர்தல் அறிக்கை என்றாலே இலவச அறிவிப்புகள் தான் இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும் மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை அனைவரது மனத்தையும் கவர்ந்தது வெற்றிக்கு உதவியது.மக்களுக்கு அரிசி 1 ரூபாய், இலவச கலர் டிவி போன்றவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை இந்தியாவில் பிற மாநிலத்தவரும் அவர்களது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு மக்களை கவருகின்றனர்.

அனைவரது நோக்கம் அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் அதற்கு மிகவும் மக்கள் எதிர்பார்ப்பது தேர்தல் அறிக்கை.

இந்த வருடம் வரும் தேர்தல் அறிக்கையில் கீழ் கொடுத்துள்ள எல்லாம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

1.ரேசன் அட்டை வைத்து இருந்து அந்த வீட்டில் பட்டதாரி இருந்தால் அவர்களுக்கு ஓர் இலவச லேப்டாப்.

2.ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் இலவச செல்போன்

3.அனைவருக்கும் அரசின் இலவச சிம்கார்டு மற்றும் மாதம் 100ரூபாய்க்கு இலவசமாக பேசும் வசதி.

4.இணையதள சேவை பயன்படுத்து பவர்களில் கிராமப்புரத்தில் இருப்பவருக்கு ஒரு மாதம் இலவசம் ஒரு மாதம் குறைந்த பட்ச கட்டணம் 1.

5. பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை இலவச விருந்து முட்டையுடன்.

6. கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி.


7.விவசாயிகளுக்கு இருக்கம் அனைத்து கடனும் தள்ளுபடி

8. மாணவர்களுக்கு இலவச பஸ், இரயில் பாஸ்

9. பள்ளிகளில் காலை இலவச உணவு

10. ஏழை ஆண்களுக்கு திருமண உதவி திட்டம்

போன்ற இலவச திட்டங்கள் நிறைய இருக்கும். நம்ம மக்களும் மாற மாட்டார்கள் இலவசத்தை அதிகம் எதிர்பார்ப்பது மக்கள் தானே. இந்த நிலைமை என்று மாறுமோ?

23 comments:

{ முனியாண்டி } at: December 20, 2010 at 10:21 PM said...

நிச்சயம் இருக்கும் எல்லாக்கட்சி அறிக்கையிலும்.

{ வைகை } at: December 20, 2010 at 10:26 PM said...

எதுக்கு மாறனும்? இலவசம் எங்களது பிறப்புரிமை!!

{ ம.தி.சுதா } at: December 20, 2010 at 10:31 PM said...

இதே அரசியல்வாதிகளுக்க அநாதை இல்ல முகவரிகள் தெரியாதோ...

எங்கே நம்ம ஓடைப்பக்கம் காணல..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

{ சேட்டைக்காரன் } at: December 20, 2010 at 10:32 PM said...

எல்லாம் சரி, தமிழக டாஸ்மாக் அபிமானிகளுக்கு ஒண்ணுமே சொல்லலீங்களே? ))

{ Arun Prasath } at: December 20, 2010 at 10:33 PM said...

ஏழை ஆண்களுக்கு திருமண உதவி திட்டம்//

ஹி ஹி... நடந்தாலும் நடக்கும்

{ மங்குனி அமைச்சர் } at: December 20, 2010 at 10:35 PM said...

சேட்டைக்காரன் said...

எல்லாம் சரி, தமிழக டாஸ்மாக் அபிமானிகளுக்கு ஒண்ணுமே சொல்லலீங்களே? ))///

சேட்ட.... கரக்ட்டா பையிட்ட புடிச்ச .....நானும் இதை வன்மையாக கண்டிக்கிறேன் ...... வரும் 26 மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும்

{ ரஹீம் கஸாலி } at: December 20, 2010 at 10:37 PM said...

சேட்டைக்காரன் said...

எல்லாம் சரி, தமிழக டாஸ்மாக் அபிமானிகளுக்கு ஒண்ணுமே சொல்லலீங்களே? ))///

அதெப்படி முடியும்? அங்கிருந்து சம்பாரிச்சு தானே நமக்கு கொடுக்கறாங்க?

{ இந்திரா } at: December 20, 2010 at 10:41 PM said...

இவை எதுவுமே தேவையில்லை..
குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பளித்தாலே எல்லாமே கிடைத்த மாதிரி தானே..

அதை ஏன் யாரும் செய்வதில்லை???
இலவசம் என்பதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் கொஞ்சம் இந்தக் கேள்வியிலும் காட்டலாம்.

{ மாணவன் } at: December 20, 2010 at 11:00 PM said...

//
போன்ற இலவச திட்டங்கள் நிறைய இருக்கும். நம்ம மக்களும் மாற மாட்டார்கள் இலவசத்தை அதிகம் எதிர்பார்ப்பது மக்கள் தானே. இந்த நிலைமை என்று மாறுமோ?//

எல்லோர் மனதிலும் இதுதான் கேள்விக்குறியாக உள்ளது சார்

நல்ல பகிர்வு

பகிர்வுக்கு நன்றி

{ சங்கவி } at: December 20, 2010 at 11:08 PM said...

வாங்க வைகை...

இப்படி இலவசத்தை எதிர்பார்ப்பதால்தான் கோடி கோடியாக ஊழல் செய்கிறார்கள்...

{ சங்கவி } at: December 20, 2010 at 11:09 PM said...

வாங்க சேட்டை

//எல்லாம் சரி, தமிழக டாஸ்மாக் அபிமானிகளுக்கு ஒண்ணுமே சொல்லலீங்களே?//

வாங்க மங்குனிஅமைச்சரே..

//எல்லாம் சரி, தமிழக டாஸ்மாக் அபிமானிகளுக்கு ஒண்ணுமே சொல்லலீங்களே? ))///

சேட்ட.... கரக்ட்டா பையிட்ட புடிச்ச .....நானும் இதை வன்மையாக கண்டிக்கிறேன் ...... வரும் 26 மாபெரும் ஆர்பாட்டம் நடைபெறும் //

சேட்டை மங்குனி அமைச்சரை டாஸ்மார்க்கிற்கு மந்திரியாக ஆக்கிடலாம்...

{ சங்கவி } at: December 20, 2010 at 11:11 PM said...

வாங்க ரஹீம் கஸாலி...

டாஸ்மார்க் அபிமானிகளுக்காக ஒரு குவாட்டர் வாங்கினால் டம்ளர் இலவசம். ஆப் வாங்கினால் மிக்ஸிங் வாட்டர் இலவசம்.. புல் வாங்கினால் கட்டிங் இலவசம்...

{ கே.ஆர்.பி.செந்தில் } at: December 20, 2010 at 11:30 PM said...

ஹி..ஹி...

{ karthikkumar } at: December 20, 2010 at 11:48 PM said...

பார்ப்போம் எனன் நடக்க போகுதோ...

{ சேலம் தேவா } at: December 20, 2010 at 11:56 PM said...

கேக்கும்போதே காதில தேன் பாயுது..!!
தமிழ்நாட்ட அசைச்சுக்க யாராலும் முடியாது.இந்தியாவுக்கே அரசியல் சொல்லித்தர்றவங்க நாங்கல்லாம்..!!ஹி.ஹி..ஹி...

{ எல் கே } at: December 21, 2010 at 12:19 AM said...

பதிவர்களுக்கு எதுவும் இல்லையா என்னக் கொடுமை இது..

{ sakthi } at: December 21, 2010 at 12:32 AM said...

என்ன சங்கவி சார் இலவச திட்டங்களுக்கு நீங்களே வழி காட்டி விட்டீர்கள் போலும்......
நம்ம அரசியல்வாதிகள் குடுத்தாலும் குடுப்பாங்க.....:))))
::(((((

{ பிரியமுடன் ரமேஷ் } at: December 21, 2010 at 1:20 AM said...

//6. கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி.

இது தவிர... மத்தது எல்லாம்.. அப்படியே நடக்க சான்ஸ் இருக்கு பாஸ்...

{ சாதாரணமானவள் } at: December 21, 2010 at 7:19 AM said...

சூப்பர். யார் இப்படி எல்லாம் அனௌன்ஸ் பண்ணறாங்களோ அவங்களுக்கு தான் என் வோட்டு. ஆனா பச்சை குழந்தைங்க வோட்டு செல்லாதாமே... உண்மையா?

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: December 21, 2010 at 7:41 AM said...

ம் ...

{ சி.பி.செந்தில்குமார் } at: December 21, 2010 at 5:55 PM said...

m m wadakkattumம் ம் நடக்கட்டும்

{ இக்பால் செல்வன் } at: December 21, 2010 at 9:01 PM said...

வேலைக்கு போகாமல் சம்பளக் கிடைக்கு அரசு வழிவகை செய்யணும்ங்க..............

{ உமாபதி } at: December 22, 2010 at 12:22 AM said...

Ilavasangalai vaithu ootu vangum varai intha jana-nayagam sethu sethu pilaikkirathu.

Nan kelvi pattathu ayalnadukalil un ottukku ithu tharukiren ena sonnalae avarkalin arasiyal valvu sithaithu sinna pinna makkappadun.

Athai therivikka solli radio, tv, news paper ena vilambara padutha padum

Ingu ilavasangal mediakkalal vilampara paduthapattu ottu vanga padukirathu

vaalka jana nayagam

Post a Comment