Pages

16.12.2010 அஞ்சறைப்பெட்டி

Thursday, December 16, 2010

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மார்கழி மாதம் முதல் நாள்.. மார்கழி என்றாலே எழுத்தாளர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் உற்சாகம் தான். இம்மாதத்தில் தான் அனைத்து வீட்டிலும் கோலத்தை பார்க்க முடியும். கடும் குளிர் இருந்தாலும் இம்மாத நிகழ்வுகளால் குளிர் காணமல் போய்விடுகிறது. சென்னைவாசிகள் இப்போதே எந்த சபாவில் என்றைக்கு யார் இசைநிகழ்ச்சி என்று ஒவ்வொரு நாளும் எண்ணியபடி இருப்பர். அடுத்த முக்கிய நிகழ்வு புத்தகத் திருவிழா இந்த வருடமும் புத்தகத்திருவிழா களை கட்டும்.

-------------------------


இந்த வார விடுமுறையில் கோவையில் தான் இருந்தேன் சாய்பாபா காலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றுகிறார்கள் அதற்காக சாலையை அகலப்படுத்தி வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன இந்த சாலையில் ஒரு ஆறு முறை பயணம் செய்தேன். உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு போனேன் என்று கேள்விப்பட்டு இருக்கேன் ஆனால் அன்று தான் அனுபவித்தேன். சாலை புதுப்பிக்கிறார்கள் போக்குவரத்து பாதிப்பு சகஜம்  ஆனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து தனியார் பேருந்தும் ஓலிப்பானை அழுத்திக்கொண்டு வாகனதையும் வேகமாக இயக்குகிறார்கள். அவர்கள் செல்லும் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் செல்கிறார்கள்..


-------------------------

பதிவுலகின் பிரபல பதிவர் நண்பர் வால்பையன் அருண் அவர்கள் கோவை வடகோவை சிந்தாமணி அருகே வெங்கிடுசாமி சாலையில் ஓர் புதிய உணவகத்தை திறந்து உள்ளார் மனைவி சகிதமாக சென்று நண்பரை வாழ்த்த சென்றேன். அழகான இடத்தில் நிறைய வேலைப்பாடுகளுடன் துவங்கி இருந்தார். அருணின் எழுத்தைப்போலவே உணவகமும் ரசிக்கும் படி இருந்தது. கோவை வரும் பதிவர்கள் கை நனைக்க ஓர் நல்ல இடம் இருக்கிறது வந்தா மிஸ் பண்ணிடாதீங்க...


-------------------------

கடந்த திங்கட்கிழமை என் பதிவுலகில் மறக்க முடியாத நாள் ஓர் பதிவை போட்டு விட்டு பதில் கமெண்ட் போட்டுக்கொண்டு இருந்தேன் 6 மணி அளவில் என் சங்கவி வலைப்பூவைக் காணவில்லை மிகுந்த போரட்டங்களுக்கு பின் அடுத்த நாள் காலை கூகுள் ஆண்டவர் மீண்டும் என் சங்கவியை என்னிடம் ஓப்படைத்தார். இதற்கு பதிவுலகில் நண்பர்கள் எனக்கு செய்த உதவியை மறக்க இயலாது..

-------------------------

கோவையில் தினமும் சுங்கம் நிர்மலா கல்லூரி வழியாகத்தான் அலுவலகத்திற்கு  வருவேன். அவ்வழியில் தினமும் நிறைய இளைஞர்களும் பெற்றோர்களும் பெட்டியுடன் நிற்பார்கள். அவசரமாக வருவதால் என்ன என்று பார்க்க நேரம் இருக்காது. சமீபத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த என் தம்பி நின்று இருந்தான் அவனையும் அவன் அப்பாவையும் பெட்டியுடன் பார்த்தேன் உடனே இங்க என்ன பன்ற எப்படி இருக்கின்றாய் என்று விசாரிக்கும் போது அவன் சந்தோசமாக அண்ணா எனக்கு இந்திய இராணுவத்தில் வேலை கிடைச்சிருக்கு என்று சந்தோசமாக சொன்னான். எனக்கும் இன்ம் புரியா ஓர் மகிழ்ச்சி.தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு உயிரை துச்சம் என நினைத்து அவன் கண்களில் எந்த பயமும் இல்லாமல் அவன் மகிழ்ச்சியை மட்டும் பார்த்தேன். இன்று நம்நாட்டில் நிறைய வேலைகள் உள்ளன அனைத்துக்கும் நல்ல சம்பளம் கிடைக்கின்றது ஆனால் இந்த இளைஞனைப்போல் இரானுவத்தை தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு என் ராயல் சல்யூட்...
 
-------------------------


ரஷியா- இங்கிலாந்து இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷியா இங்கிலாந்தில் பெரிய அளவில் உளவு வேலைகளை பார்த்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபர்கள் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் ஆகியோரிடம் உளவு பார்க்கும் பணிகள் நடந்து உள்ளன.

இதற்காக 20 அழகிகளை பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் தொழில் அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் “செக்ஸ்” விருந்து படைத்து உளவு தகவல்களை சேகரித்து ரஷியாவுக்கு அனுப்பி உள்ளனர்.

தகவல் கிடைக்க எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க...
 
-------------------------

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் அரசு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் இலங்கை தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். மற்ற பகுதிகளில் சிங்களத்தில் பாடப்படும். ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த வழக்கத்தை அதிபர் ராஜபக்சே இப்போது ரத்து செய்து உள்ளார். இவருக்கு ஒத்துழைத்தவர்கள் எல்லாம் இன்று என்ன சொல்வார்கள் கண்டனம் தான் சொல்ல முடியும் வேறு ஒன்றும் செய்ய முடியாது.


மறுப்பு அறிக்கையாக வழக்கம் போல் இருமொழியிலும் தேசியகீதம் பாடப்படும் என்று கூறி உள்ளனர்.


-------------------------


அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாரன் வைஸ் ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டார். 2200 பேரிடம் இது நடத்தப்பட்டது. அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர்கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற பிரச்சினைகளில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

அதிக நேரம் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களின் விந்து சக்தி குறைகிறது. எனவே வாரத்துக்கு 5 மணி நேரத்துக்குள் மட்டுமே ஆண்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

------------------------- 

கடந்த வருடம் புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்தது அதற்கு இங்கு உள்ளவர்களும் ஆமாம் என்றனர். ஆனால் இன்றைய அனைத்து பத்திரிக்கைகளிலும் புலிகளால் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி எப்படி அழிந்தவர்களால் இவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்? யாருக்கு தெரியும்...

நாட்டு நடப்பு

2011 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இதில் அதிமுக தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்வது மட்டுமல்லாமல் பிரச்சார பீரங்கியாக நடிகர் விஜய்யை களம் இறக்கலாம் என தெரிகிறது. இந்த முறை தேர்தல் பணி ரேசில் அதிமுக தீவிரமாக உள்ளது.

இயக்குநர் சீமானின் விடுதலை வரவேற்கத்தக்க ஒன்று யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளலாம் என யாருக்கும் எண்ணம் இனி வராது நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்பளிக்கிறது. இனி தமிழனுக்காக ஒரு குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்..

இந்த ஆண்டு மட்டும் 8 முறை பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது கேட்டால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் அதனால் தான் என்று சப்பைகட்டு கட்டுகின்றனர். ஆனால் பக்கத்து நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை நம்மை விட குறைவு அவர்களும் இறக்குமதி செய்த எண்ணெய்களையே உபயோகப்படுத்துகின்றனர் ஏன் என்ற கேள்வி எனக்கு மட்டும்ல்ல 100 கோடி மக்களுக்கும் தான்.

தகவல்


மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.


மொக்கை ஜோக்


பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
 
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.


------------------------- 

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
-------------------------
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா. 

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
 
அறிமுக பதிவர்

வலைப்பதிவில் உள்ள பதிவர்களை எல்லாம் தங்களுக்குள்ளே தாங்களே கலாய்த்துக் கொள்வார்கள் இது மிக இயற்கையாகவும், சிந்திக்க வைக்கவும், சிரிக்க வைக்கும் இருக்கும் மாதிரி பதிவுகளை எழுத வேண்டும். இதைப் போல் நிறைய பதிவர்கள் எழுதுகிறார்கள் அனைத்தும் ரசிக்கக்கூடியது இதில் சமீபத்தில் வலைப்பதிவிற்கு வந்து சக வலைப்பதிவரைப்பற்றி அற்புதமாக சிரிக்கும் படி எழுதுவதில் வைகை எனப்படும் பதிவரை சொல்லலாம்.. இவர் நம் சக பதிவர்களை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி இருப்பார்... பார்த்து நீங்களும் சிரியுங்களேன்...

http://unmai-sudum.blogspot.com/

தத்துவம்
காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.
உயிர் பிரியும் முன் பலமுறை இறப்பார்கள் கோழைகள், வீரனுக்கு மரணம் ஒருமுறைதான்

இன் முகமே சிறந்த சிபாரிசுக்கடிதம்

குறுஞ்செய்தி

மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”

-----------------

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா ?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GRANTEE & NO WARRANTY.

31 comments:

{ Arun Prasath } at: December 16, 2010 at 12:55 AM said...

vadai vadai?

{ Samudra } at: December 16, 2010 at 12:58 AM said...

நன்றாக இருக்கிறது...

{ Arun Prasath } at: December 16, 2010 at 12:59 AM said...

தகவல் கிடைக்க எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க...//

ஹி ஹி இதெல்லாம் தாத்தா காலத்து ஐடியா அண்ணே

{ இந்திரா } at: December 16, 2010 at 1:03 AM said...

//கோவை வரும் பதிவர்கள் கை நனைக்க ஓர் நல்ல இடம் இருக்கிறது வந்தா மிஸ் பண்ணிடாதீங்க...//

ஓசி சாப்பாடு தான???
பில் எல்லாம் கேக்க மாட்டாரே..

{ இந்திரா } at: December 16, 2010 at 1:06 AM said...

//காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்//

செல்லாது செல்லாது..
இத நா ஒத்துக்க மாட்டேன்..

{ இந்திரா } at: December 16, 2010 at 1:06 AM said...

அந்த பெரியவர் பையன் மொக்கை ஜோக் இல்ல..
பழைய சோக்குங்க..

ஆனா அம்மா பையன் சோக்கு நல்லா இருந்துச்சு..

{ வைகை } at: December 16, 2010 at 1:08 AM said...

தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு உயிரை துச்சம் என நினைத்து அவன் கண்களில் எந்த பயமும் இல்லாமல் அவன் மகிழ்ச்சியை மட்டும் பார்த்தேன்/////////


எனக்கும் சின்ன வயதில் இந்த ஆசை இருந்தது சங்கவி! ஆனால் நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்று விடவில்லை! இன்றும் வருத்தந்தான்!

{ வைகை } at: December 16, 2010 at 1:10 AM said...

என்னை அறிமுகப்படுத்தியத்ர்க்கு நன்றி சங்கவி! இந்த ஊக்கம் என்னை மேலும் உற்சாகப்படுத்தும், இன்னும் தரமானவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன்!

{ ஸாதிகா } at: December 16, 2010 at 1:15 AM said...

கலக்கல் அஞ்சறைப்பெட்டி

{ பாரத்... பாரதி... } at: December 16, 2010 at 1:24 AM said...

//காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா ?.//

sms joke?

{ பாரத்... பாரதி... } at: December 16, 2010 at 1:24 AM said...

nice collections

{ பாரத்... பாரதி... } at: December 16, 2010 at 1:27 AM said...

//அருணின் எழுத்தைப்போலவே உணவகமும் ரசிக்கும் படி இருந்தது.//

congrats to vaall paiyan.

{ ரஹீம் கஸாலி } at: December 16, 2010 at 1:42 AM said...

உங்கள் அஞ்சரை பெட்டியை இன்று தான் முதன்முதலில் வாசிக்கிறேன். நன்றாக இருக்கிறது.

{ sakthi } at: December 16, 2010 at 1:42 AM said...

வால் கடைக்கு சீக்கிரம் போகனும் பா

நல்ல பதிவுங்க கலக்கல் தொடரட்டும்

{ Kousalya } at: December 16, 2010 at 1:50 AM said...

//சாலையில் ஓர் புதிய உணவகத்தை திறந்து உள்ளார்//

அவருக்கு என் வாழ்த்துக்கள்... ஹோட்டல் பேர் போட்டு இருக்கலாமே..

//காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்//

இது வித்தியாசம் தான்....! :))

அஞ்சரை பெட்டி இன்றும் வழக்கம் போல் கமகமக்கிறது

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: December 16, 2010 at 2:27 AM said...

நன்றாக இருக்கிறது..

{ மாணவன் } at: December 16, 2010 at 2:55 AM said...

//16.12.2010 அஞ்சறைப்பெட்டி//

புதுமையான தகவல்களை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்..

அஞ்சறைப்பெட்டி அசத்தல் சார்,

உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்...
மாணவன்

நன்றி

{ சேட்டைக்காரன் } at: December 16, 2010 at 2:57 AM said...

வழமைபோல மணக்கும் அஞ்சறைப்பெட்டிங்கோ! கலக்ஸ்! :-)

{ நண்டு @நொரண்டு -ஈரோடு } at: December 16, 2010 at 3:12 AM said...

ரைட் ... ரைட் ...

{ Jaleela Kamal } at: December 16, 2010 at 4:10 AM said...

அஞ்சறை பெட்டி தகவல்கள் அருமை.
http://samaiyalattakaasam.blogspot.com

{ Thangarajan } at: December 16, 2010 at 4:41 AM said...

தகவல்கள் நன்றாக உள்ளது.

{ வெறும்பய } at: December 16, 2010 at 4:59 AM said...

அஞ்சறைப்பெட்டி கலக்கல்

{ vanathy } at: December 16, 2010 at 5:54 AM said...

kalakkal pathivu!

{ Shafna } at: December 16, 2010 at 6:45 AM said...

அஞ்சறைப்பெட்டி...இன்றுதான் முதன்முதலில் பெட்டியைத் திறந்திருக்கிறேன்.அட அட அட என்ன அழகு,என்ன வாசனை... எல்லாப் பொருட்களும் ஒரே கடையில்..ஒரு சூப்பர் மார்க்கட் போல் இருக்கிறது..தொடரட்டும் பணி...

{ Chitra } at: December 16, 2010 at 6:52 AM said...

எல்லாமே கலக்கல்! வால்பையன் அருண் சாருக்கு வாழ்த்துக்கள்!

{ ஜெரி ஈசானந்தன். } at: December 16, 2010 at 7:28 AM said...

இந்த வார அஞ்சறைப்பெட்டி ..நல்ல காரம் ...மணமாய் இருக்கிறது.

{ ஜெரி ஈசானந்தன். } at: December 16, 2010 at 7:30 AM said...

// . “செக்ஸ்” விருந்து படைத்து உளவு தகவல்களை சேகரித்து ரஷியாவுக்கு அனுப்பி உள்ளனர்.//
அவுங்க...உளவாளி இல்லை.."உடலாளி."

{ சி.பி.செந்தில்குமார் } at: December 16, 2010 at 5:47 PM said...

செம கலக்கல் பதிவு,வால்பையன் ஹோட்டல் அறிமுகம்,வைகை பதிவு அறிமுகம் 2ம் கூடுதல் போனஸ்

{ க.பாலாசி } at: December 16, 2010 at 10:23 PM said...

கடைசியில வந்ததெல்லாம் நல்ல கலகலப்பு... நல்ல பகிர்வுடன் கூடிய இடுகை..

{ பிரவின்குமார் } at: December 17, 2010 at 12:10 AM said...

அடேங்கப்பா..! ஒரு பதிவில் இத்தனை தகவல்களா..!!?? என ஆச்சரியமூட்டியது நண்பரே..! தொகுத்து அளித்த விதம் சுவாரஸ்யம்..!

{ கோமாளி செல்வா } at: December 17, 2010 at 1:44 AM said...

வழக்கம் போலவே அஞ்சறைப்பெட்டி கலக்கல் அண்ணா ..
அருண் அண்ணா உணவகம் திறந்தது , அப்புறம் உங்க ப்ளாக் காணாம போய் வந்தது , ராணுவத்துல இளைங்கர்கர் சேந்தது இப்படி எல்லாமே கலக்கல் தகவல்கள் . அதுமட்டும் இல்லம் மின்மினிப்பூச்சி பத்து சொன்னதும் சூப்பர் ..!! தொடர்ந்து எழுதுங்க ..!!

Post a Comment