Pages

முருங்கைக்கீரையும் உடல்நலமும்..

Monday, November 22, 2010
முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ , முருங்கைக்கீரை இவை  அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள  சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.  

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். 
முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். 
 
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். 
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்: 


முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.


இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.  எனவேதான்,  இக்கீரைக்கு  'விந்து கட்டி'   என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.


முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.


முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.


முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம்
முருங்கைக் காய் கை கண்ட மருந்து.


முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. 


முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.


கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.


முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.


வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.


ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்...
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்...

26 comments:

{ Arun Prasath } at: November 22, 2010 at 11:54 PM said...

எப்டி இவ்ளோ தகவல் கெடச்சது? நல்ல தகவல் தல

{ தமிழ்த்தோட்டம் } at: November 22, 2010 at 11:57 PM said...

மிகவும் பயனுள்ள தகவல்

{ கவிநா... } at: November 22, 2010 at 11:59 PM said...

பயனுள்ள தகவல்கள்... பகிர்ந்ததற்கு நன்றி சகோ...

{ பிரபாகர் } at: November 22, 2010 at 11:59 PM said...

கிராமங்களில் மிக எளிதாய் கிடைக்கும் முருங்கைக்கீரை... சூடான கம்மஞ்சோறுக்கு முருங்கைக்கீரைக் குழம்பு... ஆஹா... நினைக்கும்போதே!...

நல்ல பகிர்வு பங்காளி, தேவையான தகவல்களுடன்.

பிரபாகர்...

{ அகல்விளக்கு } at: November 22, 2010 at 11:59 PM said...

ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணா...

தொடருங்கள்...

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: November 23, 2010 at 12:03 AM said...

முருங்கைக்காய் மேட்டர் தான் ஏற்கனவே பாக்யராஜ் சார் சொல்லிட்டாரே..

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: November 23, 2010 at 12:03 AM said...

முருங்கைக்காய் மேட்டர் தான் ஏற்கனவே பாக்யராஜ் சார் சொல்லிட்டாரே..

{ Ramesh Krishna } at: November 23, 2010 at 12:04 AM said...

மிக அருமை!!! நல்ல தகவல்கள் !!

{ தமிழ் அமுதன் } at: November 23, 2010 at 12:05 AM said...

நல்ல பதிவு நன்றி...!

மேல உள்ள படம் அகத்தி கீரையா..?

யாதவன் at: November 23, 2010 at 12:08 AM said...

அருமையான விளக்கம் நண்பரே தொடருங்கள் உங்கள் பணியை

{ வெங்கட் நாகராஜ் } at: November 23, 2010 at 1:37 AM said...

முருங்கை பற்றிய பயனுள்ள தகவல். நெய்வேலியில் இருந்தபோது எல்லா வாரமும் முருங்கை ஏதோ ஒரு வடிவில் சமையலில் இல்லாமல் இருந்ததில்லை. இப்போது தில்லியில் முருங்கைக் காய் மட்டும் கிடைக்கிறது - அதுவும் எப்போதாவது.

{ ஹேமா } at: November 23, 2010 at 2:02 AM said...

சங்கவி....நான் கண்டிருக்கிறேன் இத்தனையும் என் தாத்தா சொல்லி !

{ வினோ } at: November 23, 2010 at 2:13 AM said...

நிறைய விசயங்கள்... நன்றி நண்பரே...

{ வெறும்பய } at: November 23, 2010 at 3:06 AM said...

அப்பாடா இவ்வவளவு பயன் இருக்கா.. நல்ல பபயனுள்ள பதிவு..

{ நொந்தகுமாரன் } at: November 23, 2010 at 5:20 AM said...

செய்திகள் அருமை. இம்புட்டு செய்தி இருக்கா என ஆச்சரியமானேன். முருங்கை மர செய்திகளை சொல்லிவிட்டு, முதல்படம் அகத்தி கீரையை படம் போட்டிருக்கிறீர்களே! படம் கிடைக்கலைன்னா, ஏதாவது படத்தை போடாதீங்க!குழப்பம் ஆயிரும்.

{ asiya omar } at: November 23, 2010 at 5:33 AM said...

தொகுப்பு அருமை,ஆனால் கூடையில் முதல் படத்தில் இருப்பது அகத்திக்கீரை.

{ karthikkumar } at: November 23, 2010 at 5:33 AM said...

பயனுள்ள தகவல்

{ சி.பி.செந்தில்குமார் } at: November 23, 2010 at 5:36 AM said...

good post sir

{ சேட்டைக்காரன் } at: November 23, 2010 at 6:41 AM said...

கீரைக்காக முருங்கையை மாடியில் வளர்ப்பது குறித்து வின்சென்ட் எழுதிய இடுகையை இப்போதுதான் வாசித்து விட்டு வருகிறேன். இங்கே இன்னும் பற்பல தகவல்களோடு அருமையான இடுகை எழுதியிருக்கிறீர்கள். ஒரே நாளில் முருங்கை குறித்து நிறைய தகவல்கள் வாசித்த மகி்ழ்ச்சி!

{ r.v.saravanan } at: November 23, 2010 at 6:54 AM said...

பயனுள்ள பதிவு நன்றி நண்பரே...

please visit my blog kudandhaiyur.blogspot.com

{ மோகன் குமார் } at: November 23, 2010 at 7:45 AM said...

Nice. Pl. continue such useful posts.

{ Chitra } at: November 23, 2010 at 10:50 PM said...

பயனுள்ள குறிப்புகளுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க.

{ venkat } at: November 24, 2010 at 2:43 AM said...

நல்ல தகவல்

{ vasan } at: November 24, 2010 at 2:53 AM said...

"வ‌ம்ச‌ விருத்தி ம‌ர‌ம்" என்ற பெய‌ரே, உங்க‌ளின் விள‌க்க‌ங்க‌ளை எல்லாம் நியாய‌ப்ப‌டுத்திவிடும்.
விவ‌ர‌ங்க‌ளுக்காக அதிகமாக உழைத்திருக்கிறீர்க‌ள்.

{ Sriakila } at: November 24, 2010 at 8:16 PM said...

எனக்கு ரொம்பவும் பிடிச்சக் கீரை முருங்கைகீரைதான். நல்லா எழுதியிருக்கீங்க..
நன்றி!

{ tamillookweb } at: December 6, 2010 at 3:47 PM said...

அன்புள்ள சதீஷ்,

தங்கள் வலைப்பதிவிற்கு இன்று தற்செயலாக செல்லக் கிடைத்தது. ஆழகாக வடிவமைத்திருக்கிறீர்கள். பயனுள்ள தகவல்கள் பிரசுரித்திருக்கிறீர்கள். மழ்ச்சி.

Me and few of my friends are going to launch a website called www.tamillook.com on december 25th. I want to find out you will be happy if i republish some of your articals under the health section?. I will mention your name and give a link back to your blog as well.

Please let me know your thoughts

நன்றி
மூர்த்தி.

Post a Comment