Pages

ஊரெல்லாம் மழை

Sunday, November 21, 2010
10 நாட்களுக்கு முன் பெய்த மழையால் ஊரில் உள்ள ஏரிகளெல்லாம் ஓரளவு நிறைந்து இருந்தான கடந்த இடண்டு நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில்  நல்ல மழை இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளம் அனைத்தும் நிரம்பி தண்ணீர் கடை போகின்றது.

ஏரி என்னும் பாசன திட்டம்

இந்த ஏரிக்கள் எல்லாம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் கட்டப்பெற்றது. அதற்குபின் அதிக ஏரிக்கள் உருவாக்கவில்லை. இந்த ஏரியை உருவாக்கம் போது குறிப்பிட்ட நீரை சேமித்து வைக்கும் ஏரிகள் இது அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலத்தடி நீரை அதிகாக்குவதுடன் விவசாயத்திற்கு மிகுந்த உபயோகமாகிறது. 

அந்த காலத்திலேயே ஏரி அமைத்த உடன் முன்னோர்கள் செய்த அற்புதமான காரியம் ஒரு ஏரியில் நீர் நிரம்பினார் குறிப்பிட்ட தூரத்திற்கு பள்ளம் அமைத்து ஏரியில் கடை போகும் நீரை அடுத்து ஒரு ஏரி உருவாக்கி அதில் நிரப்பி பாசனத்திற்கு நீரை பயன் படுத்தி உள்ளனர். அநேகமாக இந்த ஏரி அமைத்தவர்கள் எல்லாம் பட்டம் வாங்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். ஏரி என்னும் பாசன திட்டம் அற்புதமானது என்றால் அது மிகையாகது.

இன்று நாம் அநேகமாக படிக்கும் செய்திகளில் முக்கியமானது மழை நீர் ஊருக்குள் புகுந்தது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன இப்படித்தான் இதற்க காரணம் யார் என்று பார்த்தால் நாம் தான். 

மழை நீர் வரும் பள்ளத்தில் தண்ணீர் வருவதற்கு மட்டுமின்றி அதை சுற்றியும் குறிப்பிட்ட இடங்களை காலியாக விட்டு இருப்பார்கள் அது பார்ப்பதற்கு ஒரு சின்ன ஆறு போல் தோன்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக முன் பெய்த மழை இப்போது அதிகம் இல்லை இதனால் நம் மக்கள் செய்த வேலை என்ன வென்றால் ஏரி மற்றும் பள்ளத்தில் சில பகுதிகளை ஆக்கரமிப்பு செய்து இதை புறம்போக்கு நிலம் என்று குடிசைகள் அமைத்து விடுகின்றனர்.

மறுபடியும் பருவநிலை காரணமாக மழை பெய்ய ஆரம்பிக்கும் போது தண்ணீர் ஊருக்குள் புகுந்து ஊரை வெள்ளக்காடாக மாற்றுகிறது. இதனால் தண்ணீர் சேமிக்க வழி இன்றி தண்ணீர் ஆற்றில் கலந்து பின் கடலில் கலந்து உபயோகமில்லாமல் போகின்றது.

நேற்று எங்கள் ஊரில் தண்ணீர் கரைபுரண்டு சென்ற போது ஒரு பெரியவர் சொன்னார் பேசாம சினிமாவில் வர்ற மாதிரி இங்க இருந்த பள்ளத்தை காணவில்லை என்று கோர்ட்டுக்கு போக வேண்டியது தான் என்றார். இதைப்பற்றி இனி பேசி என்ன செய்வது. இனி மழை நீரை சேமிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைப்பற்றி பல நல்ல திட்டங்களை உருவாக்கினால் தண்ணீருக்காக அடுத்த மாநிலத்தை கேட்காமலே நம் வேண்டிய நீரை நாமே சேமிக்க முடியும்.

நேற்று எங்க ஊரில் தண்ணீரைப்பார்க்க ஊரே கூடியதில்லாமல் சுற்று வட்டாரத்தில் இருந்தும் மக்கள் ஒரு சுற்றலா போல் தண்ணீரைப் பார்த்து மகிழ்ந்தனர். பக்கத்திலேயே திடீர் கடைகள் முளைத்து நல்ல வியாபாரமும் இருந்ததை பார்க்க முடிந்தது...

 ஏரி நிறைந்து கடை போகம் நீர்...
திடீர் சுற்றுலா தளமாக மாறியதால் வியாபாரம் களை கட்டுகிறது
தண்ணீரில் நடப்பதே சுகம்...
இது மற்றொரு ஏரி இதுவும் நிரம்பி கடை போகிறது...

27 comments:

{ தமிழ்த்தோட்டம் } at: November 21, 2010 at 11:35 PM said...

மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்

{ அகல்விளக்கு } at: November 21, 2010 at 11:37 PM said...

முடிந்த அளவு இதுபோன்ற உபரி நீர்களை வீணாக்காமல் ஏதாவது செய்வோம் அண்ணா...

புகைப்படங்கள் அருமை...

{ Arun Prasath } at: November 21, 2010 at 11:41 PM said...

அந்த பொறம்போக்கு நெலத்துக்கு எல்லாம் பட்டா குடுத்தது யாரு தப்பு?

{ சங்கவி } at: November 21, 2010 at 11:44 PM said...

வாங்க தமிழ்தோட்டம்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: November 21, 2010 at 11:45 PM said...

அருண்...

பட்டா கொடுத்தவங்க தப்பு..

{ சங்கவி } at: November 21, 2010 at 11:45 PM said...

வாங்க அகல்விளக்கு ராஜா..

தண்ணீர் வீணாகம இருக்க தடுப்பணைகள் நிறைய கட்ட வேண்டும்...

யாதவன் at: November 21, 2010 at 11:55 PM said...

வழமைபோல் சுப்பர்

{ Arun Prasath } at: November 22, 2010 at 12:04 AM said...

//அருண்...

பட்டா கொடுத்தவங்க தப்பு..//

என்ன ஒரு சிந்தனை...

{ VELU.G } at: November 22, 2010 at 12:04 AM said...

அருமையான கட்டுரை

{ VELU.G } at: November 22, 2010 at 12:04 AM said...

அருமையான கட்டுரை

Anonymous at: November 22, 2010 at 12:52 AM said...

அந்த காலத்திலேயே ஏரி அமைத்த உடன் முன்னோர்கள் செய்த அற்புதமான காரியம் ஒரு ஏரியில் நீர் நிரம்பினார் குறிப்பிட்ட தூரத்திற்கு பள்ளம் அமைத்து ஏரியில் கடை போகும் நீரை அடுத்து ஒரு ஏரி உருவாக்கி அதில் நிரப்பி பாசனத்திற்கு நீரை பயன் படுத்தி உள்ளனர். அநேகமாக இந்த ஏரி அமைத்தவர்கள் எல்லாம் பட்டம் வாங்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். ஏரி என்னும் பாசன திட்டம் அற்புதமானது என்றால் அது மிகையாகது.


nalla solli irukeenga..yes...

{ ஸ்வர்ணரேக்கா } at: November 22, 2010 at 1:14 AM said...

//மழை நீரை சேமிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைப்பற்றி பல நல்ல திட்டங்களை உருவாக்கினால் தண்ணீருக்காக அடுத்த மாநிலத்தை கேட்காமலே நம் வேண்டிய நீரை நாமே சேமிக்க முடியும்.//

அதுக்கெல்லாம் எங்கங்க நேரம்... அவங்க குடும்பத்தை பார்க்கவே நேரம் போதலை..

{ sakthi } at: November 22, 2010 at 1:18 AM said...

ஏரிப்பாசனம் பற்றிய பகிர்வு அருமை

{ வெறும்பய } at: November 22, 2010 at 1:51 AM said...

நல்ல பதிவு.. படங்கள் அருமை..

{ இந்திரா } at: November 22, 2010 at 2:00 AM said...

//நேற்று எங்கள் ஊரில் தண்ணீர் கரைபுரண்டு சென்ற போது ஒரு பெரியவர் சொன்னார் பேசாம சினிமாவில் வர்ற மாதிரி இங்க இருந்த பள்ளத்தை காணவில்லை என்று கோர்ட்டுக்கு போக வேண்டியது தான் என்றார்.//

அட.. இது கூட நல்லாயிருக்கே..

{ வினோ } at: November 22, 2010 at 2:37 AM said...

பகிர்வு அருமை.. நீரை தேக்கினால் நல்லா தான் இருக்கும்... ஆனா?

{ ஆதவா } at: November 22, 2010 at 3:05 AM said...

கட்டுரையும் பிரமாதம்!! முன்பே அறிந்த விஷயம்... இன்னும் கொஞ்சம் தகவல்களை அதிகம் கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து!!

{ ஆதவா } at: November 22, 2010 at 3:05 AM said...

நண்பரே, உங்கள் ஊர் என்ன ஊர்?
சின்னஞ்சிறு அருவிகளும் பசுமையும் பிரமாதமாக இருக்கிறதே!

{ மாதேவி } at: November 22, 2010 at 3:48 AM said...

ஏரி நிறைந்து வழிவது படத்தில் பார்க்க நல்லாகத்தான் இருக்கிறது. ஆனால்:(

நீங்கள் கூறியது போல சேமிக்க திட்டங்கள் உருவாக்கவேண்டும்.

{ வெங்கட் நாகராஜ் } at: November 22, 2010 at 4:17 AM said...

நல்ல பகிர்வு நண்பரே. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

{ சத்ரியன் } at: November 22, 2010 at 5:18 AM said...

//இன்று நாம் அநேகமாக படிக்கும் செய்திகளில் முக்கியமானது மழை நீர் ஊருக்குள் புகுந்தது.//

சங்கமேஷ்,

ஏரி, குளத்துக்குள்ள எல்லாம் வீடு கட்டி ஊர்ராக்கிட்ட விசயத்த ஒத்துக்கிட மாட்டீங்களே!

{ சி.பி.செந்தில்குமார் } at: November 22, 2010 at 5:45 AM said...

நல்ல டைமிங்க் பதிவு,இப்போ உங்க ய்ய்ர்ல தான் இருக்கேன் ,சித்தார்ல செம மழை

{ கலாநேசன் } at: November 22, 2010 at 6:44 AM said...

பாசனப் பதிவு நன்று.

{ ஹேமா } at: November 22, 2010 at 10:06 AM said...

எப்பவும்போலவே பிரயோசனமான பதிவு !

{ அன்புடன் மலிக்கா } at: November 22, 2010 at 9:13 PM said...

படங்களும் கட்டுரையும் அருமை. நல்லதொரு பிரயோஜனமான விளக்கங்கள்..

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: November 22, 2010 at 11:10 PM said...

பல ஏரிகளை ரியல் எஸ்டேட் காரர்கள் மூடி விட்டார்களே என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: November 22, 2010 at 11:10 PM said...

பல ஏரிகளை ரியல் எஸ்டேட் காரர்கள் மூடி விட்டார்களே என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது

Post a Comment