Pages

அஞ்சறைப்பெட்டி 25.11.2010

Thursday, November 25, 2010
 உள்ளுரில் இருந்து உலகம் வரை........

இந்த வாரம் தமிழகம் முழுவதும் பலத்த மழை. அநேகமாக எல்லா ஏரி குளங்களும் நிரம்பி அங்காங்கே ரோட்டில் சென்றவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது. நம்ம ஊரில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் மாற்ற வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது குறையும். அடுத்த முறை மழைக்காலத்திற்கு முன் தடுப்பனைகளை அதிகம் ஏற்படுத்தினால் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும்...

..............................
.................................................................

உத்திரபிரதேசத்தில் முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர். மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று அந்த ஊர் பிரமுகர்கள் கூறி உள்ளனர். பெண்கள் காதல் திருமணம் செய்யக்கூடாது என்பது இங்கு முக்கியமல்ல சாதி தான் இங்கு பிரச்சனை இன்னும் நம் நாட்டில் கீழ் சாதி மேல் சாதி பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இந்த சட்டம் இயற்றிய அந்த ஊர் பிரமுகர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

..............................
..........................................................................

"ஈரானில் பெண்கள் 16 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும் திருமணம் முடித்து கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் முகமது அகமதி நிஜாத் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1979ல், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பின் மக்கள் தொகை அதிகரித்தது. அதையடுத்து அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990ல் இருந்து அங்கு மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.


ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்பது பாவமான செயல். மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டம்' என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர், "நம் நாட்டில் பெண்கள் 16 அல்லது 17 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தற்போது ஆண்கள் 26 வயதிலும், பெண்கள் 24 வயதிலும் மணம் செய்து கொள்கின்றனர். இவ்வளவு தாமதமாக மணம் செய்து கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை' என்று கூறி உள்ளார்.
..........................................................................................................
மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். இக்கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி வருகிற ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. அதில், அதிசக்தி வாய்ந்த ஜெட் என்ஜின் மற்றும் ராக்கெட் பொருத்தப்படுகிறது. மேலும், இதன் பாகங்கள் மிக மெலிதான உலோக கலவையினால் அமைக்கப்பட உள்ளது. மேலும் 4 அலுமினிய சக்கரங்களும் பொருத்தப்பட உள்ளன.
 இக்கார் வருகிற 2012-ம் ஆண்டு பயன்பாட்டில் வரும். அப்போது அதிவேகமாக இயங்கி உலக சாதனை படைக்கும் என விஞ்ஞானி ரிச்சர்ட் நோபல் தெரிவித்துள்ளார்.

நம்ம ஊர் சாலைக்கு 100கிலோ மீட்டர் வேகத்தில் போனாலே கார் சாலைல போக மாட்டங்குது...

................................................................................................

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் மிக தீவிரமா இருக்குது. போக்குவரத்து பனிமனை முன்பு எங்க பார்த்தாலும் ப்ளக்ஸ் போர்டு மயம்... யாரு செயிப்பாங்களோ... எல்லா ஓட்டுநரும் நடத்துனரும் ஓட்டு போட போயிட்டா தேர்தல் அன்னிக்கு பஸ் ஓடுமா...

நாட்டு நடப்பு
இந்த வாரம் ஊழல் புகாரில் சிக்கியவர் கர்நாடக முதல்வர்.  இவரும் அனைத்து பேட்டியிலும் நான் குற்றமற்றவன் சட்டப்படி சந்திக்கிறேன் என்கிறார். ஊழல் புகாரில் மாட்டியவர்கள் எல்லாரும் சொல்லும் பேட்டியே இது தான்... யாரும் மனசாட்சி படி பேசுவதில்லை...

பாரளுமன்றம் 12வது நாளாக ஒத்திவைப்பு. ஆக மொத்தம் பாரளுமன்றத்தை கூட்டாம எந்த எம்பிக்கும் சம்பளத்தை கொடுக்காம எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பீட்ட பிரச்சனை இல்லை...

பீகாரில் நடந்த தேர்தலில் நிதீஸ் மீண்டும் வெற்றி... வாழ்த்துக்கள்...


ஒருவர் 5 வருடம் ஆட்சி நடத்தி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி நடத்துவது சாதாரண விசயமல்ல.. இவர் கடந்த 5 வருட ஆட்சி மக்களுக்கு பிடித்து இருந்ததாலேயே வெற்றி பெற்று இருக்கிறார். லாலுவுக்கு மீண்டும் ஆப்பு... காங்கிரசுக்கு பெரிய ஆப்பு...


ராகுலின் பிரச்சாரம் பீகாரில் எடுபடவில்லை இதே மாதிரி தான் தமிழ்நாடும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் தான் முதல்வர் என ராகுல் அறிவித்தாலும் தனித்து நின்றால் பீகார் போல தான் தமிழ்நாடும்.. இங்கு திராவிட கட்சிகளின் முதுகில் ஏறினால் மட்டுமே வெற்றி பெறமுடியும். இது அவர்களுக்கு இப்ப நன்றாக புரிந்து இருக்கும்...

தகவல்
ஜப்பான்காரர்களுக்கு விருப்பமான விளையாட்டுதான் சுமோ மல்யுத்தம். முற்காலத்திலெல்லாம், தோற்றால் மரணம் என்பது சாதாரண நிகழ்வாக இருந்தது. ஜப்பானில் இன்று ஏறத்தாழ 800 சுமோ மல்யுத்த வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில், மல்யுத்தத்தை நிரந்தரத் தொழிலாகச் செய்பவர்களை ரிகிஷி என்று அழைப்பார்கள். சாம்பியன்கள் யொக்கொஸýனா என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு சுமோ மல்யுத்த வீரனைப் பொறுத்தவரை மிகவும் உடல் பருமனுடன் இருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. காரணம், ஒரு சுமோ மல்யுத்த வீரனைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், அவனைத் தரையில் வீழ்த்த வேண்டும். அல்லது கோதாவைவிட்டு வெளியே தூக்கி எறிய வேண்டும். மிக அதிக பருமனுடன் இருப்பவனை இப்படிச் செய்வது சிரமம்தானே! சில சுமோ வீரர்கள் 135 கிலோ கிராம் எடை இருப்பார்கள். கோணிஷிகி எனும் சுமோ வீரர் 252 கிலோ கிராம் எடையுடன் இருந்தார். அது ஒரு சாதனை.

பருமன் அதிகரிப்பதற்கான வழி சாப்பிடுவதுதான். சுமோ வீரர்கள் தினமும் மிக அதிகமாக, அவித்த உணவுகளைச் சாப்பிடுவார்கள். குறிப்பாக, இவற்றில் புரோட்டீன்களும், வைட்டமின்களும் நிறையச் சேர்ந்திருக்கும். வயிற்றையும் தொடைகளையும் பெருக்க வைப்பதற்கான உணவு இது. பெரிய இடையும், மரம்போன்ற கால்களும் சுமோ வீரனுக்கேற்ற உடல் அமைப்பாகும். இப்படிப்பட்ட உடல் அமைப்புடன் இருக்கும்போது வீழ்த்துவதோ தூக்கி எறிவதோ சிரமமாக இருக்கும்.
மொக்கை ஜோக்

மொக்கை   ஒருநாள் மிருக வைத்தியசாலைக்கு சென்றார்.. ஒரு கிராமத்து ஆளிடம் கேட்டார்.. ஏன் இந்த மாட்டுக்கு கொம்பு இல்லே..?

கிராமத்து ஆள் சொன்னார்..
" சில மாடுகளுக்கு கொம்பை அறுத்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு தீய்த்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு கொம்பு தானாவே ஒடஞ்சு போயிடும்.. சில மாடுகளுக்கு கொம்பு வளராது.. ஆனா இதுக்கு ஏன் கொம்பு இல்லேன்னா... இது குதிரை... மாடு இல்லே...!!!

..............................
..

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

அறிமுக பதிவர்
சுற்றுலா பற்றியும், காதல் பற்றியும் தனது அனுபவங்களை நிறைய மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார் அருண் பிரசாத். சமீபத்தில் தான் பதிவுலகற்கு வந்தாலும் இவரது எழுத்துக்கள் நம் வாழ்வில் நடந்தன போல் இருக்கின்றது. நாம் கல்லூரி காலத்தில் எப்படி சுற்றுலா செல்வோமோ அது போல் இவரது பதிவை படித்த உடன் நமக்கு நிச்சயம் நம் சுற்றுலா அசைபோட வைக்கும்...

http://sutrulavirumbi.blogspot.com/

தத்துவம்
ஏன் காதலை வித்தியாசமாப் பாக்கிறீனம்..அது ஒரு ஒழுக்கமுள்ள உணர்வு..! 

ஒழுக்கம் தப்பினால் அது காதலில்லை..!
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்…
மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!

                               கண்ணதாசன்...

குறுஞ்செய்தி
பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

என்னோட அட்ரஸ் வேனும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க.. இதோ இது தாங்க... 
ஜே. நெப்போலியன், 
சன் ஆப் மார்க்கோபோலோ, 
எம்.சி. இல்லம், மானிட்டர் நகர், 
ஓல்டு மங்க் முதல் கட்டிங், கிங் பிசர் ஏரியா, 
விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட், பின்கோடு 6000 5000.
என்னோடு அவள் இருந்திருந்தாள் இளவரசியாக இருந்திருப்பாள் பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்...

49 comments:

{ ம.தி.சுதா } at: November 25, 2010 at 12:08 AM said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா.

{ R.Gopi } at: November 25, 2010 at 12:14 AM said...

ஹலோ....

ஒருத்தரு சுடுசோறு, சுடுசோறுன்னு சொல்லிட்டு போறாரே... அவர் அப்புறமா வந்து கமெண்ட் போடறாரா? சும்மா ஒரு டவுட்டுக்கு தான் கேட்டேன்...

அஞ்சறைப்பெட்டி செய்திகள் அசத்தல் ரகம்...

ஈரான் 16 வயதில் பெண்களுக்கு திருமணம்... இது டெர்ரர் நியூஸ்...

{ karthikkumar } at: November 25, 2010 at 12:21 AM said...

தகவல்கள் அருமை நம்ம பங்காளி அருணோட லிங்க் கொடுத்ததற்கு நன்றி

யாதவன் at: November 25, 2010 at 12:29 AM said...

அருமை வாழ்த்துகள்

{ வைகை } at: November 25, 2010 at 12:31 AM said...

செய்தி மலர் படிச்ச மாதிரி இருக்கு. அறிமுக பதிவர் மூலமாக எங்களைப்போல் புதிய பதிவர்களை ஊக்கப்படுதுவதர்க்கு நன்றி !!

{ ம.தி.சுதா } at: November 25, 2010 at 12:31 AM said...

இம்முறையும் கலக்கல் தான்... ஈரான், சுமோ, கார், தத்துவம் , ஜோக் என ஒரு பெரிய ரவுண்டே அடித்துள்ளீர்கள்...

{ வைகை } at: November 25, 2010 at 12:33 AM said...

செய்தி மலர் படிச்ச மாதிரி இருக்கு. அறிமுக பதிவர் மூலமாக எங்களைப்போல் புதிய பதிவர்களை ஊக்கப்படுதுவதர்க்கு நன்றி !!

{ Balaji saravana } at: November 25, 2010 at 12:35 AM said...

//1600 கி.மீட்டர் வேகத்தில்//

ஆ ஆ...

//மாட்டு ஜோக்//
ஹா ஹா சூப்பர்

சுமோ பற்றி தகவல் அருமை..

{ Arun Prasath } at: November 25, 2010 at 12:36 AM said...

சளரமான நடை சங்கவி சார்... என்னை அறிமுகபடுதியதர்க்கு நன்றி

{ இந்திரா } at: November 25, 2010 at 12:39 AM said...

//என்னோடு அவள் இருந்திருந்தாள் இளவரசியாக இருந்திருப்பாள் பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்...//

அட.. இது நல்லா இருக்கே..

{ சி.பி.செந்தில்குமார் } at: November 25, 2010 at 12:44 AM said...

மாடு - குதிரை ஜோக் சூப்பர்

{ சி.பி.செந்தில்குமார் } at: November 25, 2010 at 12:44 AM said...

அப்போ எனக்கு பழைய சோறா?

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 12:55 AM said...

நம் நாட்டில் கீழ் சாதி மேல் சாதி பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.///

அங்க சர்வ சாதாரணமா நடக்கும் சார்

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 12:55 AM said...

எவ.................ளோ பெரிய பதிவு ????

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 12:57 AM said...

மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்///

என்னாத்துக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டு புடிக்கணும் , அப்புறம் அத ஓட்ட ரோடு வேற கண்டுபுடிக்கணும் , பேசாம பிளைட்லே போயிடலாமே .....

{ சங்கவி } at: November 25, 2010 at 12:59 AM said...

வாங்க கோபி...

அவருக்கு இப்ப சுடு சோறு... அப்புறம் தான் படையல் எல்லாம்...

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 12:59 AM said...

ஆனா இதுக்கு ஏன் கொம்பு இல்லேன்னா... இது குதிரை... மாடு இல்லே...!!!///

ஓ ..... அப்படின்னா குதிரைக்கு எல்லாம் கொம்பு இருக்காதா சார்

{ சங்கவி } at: November 25, 2010 at 12:59 AM said...

வாங்க மகி...

உங்களுக்குத்தான் இன்னிக்கு சுட சுட சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:00 AM said...

வாங்க யாதவன்...

வருகைக்கு நன்றி...

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 1:00 AM said...

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.////

இது சூப்பரு

{ சங்கவி } at: November 25, 2010 at 1:00 AM said...

வாங்க கார்த்திக்குமார்...

நமக்கு பிடிச்ச பதிவர்களை புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் சந்தோசம்...

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 1:00 AM said...

மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார் அருண் பிரசாத். ///

நல்ல அறிமுகம் சார்

{ சங்கவி } at: November 25, 2010 at 1:01 AM said...

வாங்க பாலாஜி...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:01 AM said...

வாங்க வைகை...

நிச்சயம் உங்களைப்போல் புதியவர்களை அறிமுகப்படுத்தும் போது தான் நட்பு வட்டம் பெருகும்...

{ மங்குனி அமைச்சர் } at: November 25, 2010 at 1:01 AM said...

சன் ஆப் மார்க்கோபோலோ, ///

அட சார் நீங்களும் அங்கதான் இருக்கிங்களா , நானும் அந்த வீட்டு மொட்டை மாடில தான் தங்கி இருக்கேன்

{ சங்கவி } at: November 25, 2010 at 1:03 AM said...

வாங்க மங்குனி...

அங்க சாதிக்காக இன்னும் கொலைகள் நிறைய நடக்குதாம்...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:03 AM said...

வாங்க சிபி...

பழைய சோறுலதான் சுவை அதிகம்...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:03 AM said...

வாங்க அருண்...

இதுக்கு எதுக்கு நன்றி... இதெல்லாம் கடமை...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:23 AM said...

//ஓ ..... அப்படின்னா குதிரைக்கு எல்லாம் கொம்பு இருக்காதா சார்//

இருக்கும் ஆனா இருக்காது...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:24 AM said...

,,,அட சார் நீங்களும் அங்கதான் இருக்கிங்களா , நானும் அந்த வீட்டு மொட்டை மாடில தான் தங்கி இருக்கேன்,,

அப்ப இன்னிக்கு நைட் ரவுண்டடித்துவிடுவோம்...

{ சங்கவி } at: November 25, 2010 at 1:24 AM said...

,,என்னாத்துக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டு புடிக்கணும் , அப்புறம் அத ஓட்ட ரோடு வேற கண்டுபுடிக்கணும் , பேசாம பிளைட்லே போயிடலாமே .....,,

அவுங்க ஊர்ல நிறைய பேருக்கு வேலை இல்லையாம் அதனால ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம்

{ நித்திலம்-சிப்பிக்குள் முத்து } at: November 25, 2010 at 1:54 AM said...

மொக்கை ஜோக் சூப்பருங்க.....செய்தி மடல் அருமை.....

{ Saravana kumar } at: November 25, 2010 at 1:57 AM said...

உண்மையா செய்தித்தாள் படிச்ச மாதிரி இருக்கு. இரண்டு சிறுகதை, நடிகரோட பேட்டி இதெல்லாம் இருந்தா ஆனந்த விகடம் மாதிரி இருக்கும்.

{ ம.தி.சுதா } at: November 25, 2010 at 2:51 AM said...

R.Gopi said...

ஃஃஃஃஃஃஃஃஃஹலோ....

ஒருத்தரு சுடுசோறு, சுடுசோறுன்னு சொல்லிட்டு போறாரே... அவர் அப்புறமா வந்து கமெண்ட் போடறாரா? சும்மா ஒரு டவுட்டுக்கு தான் கேட்டேன்...ஃஃஃஃஃஃ

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்களா...????

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

{ ம.தி.சுதா } at: November 25, 2010 at 2:52 AM said...

சி.பி.செந்தில்குமார் said...
ஃஃஃஃஃஃஅப்போ எனக்கு பழைய சோறா?ஃஃஃஃ
மாப்பிள யாழ்ப்பாணத்து குத்தரிசி தான் லெசில் பழுதாகது வாங்க ஒண்ணாவே சாப்பிடுவோம்...

{ வெறும்பய } at: November 25, 2010 at 3:23 AM said...

தகவல்கள் அருமை..

{ THOPPITHOPPI } at: November 25, 2010 at 3:34 AM said...

நிறைய தகவல்கள். அருமை

{ sakthi } at: November 25, 2010 at 3:41 AM said...

கலக்கல் பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்!!!!

{ sakthi } at: November 25, 2010 at 3:41 AM said...

சங்கவி ஈரான் அதிபருக்கு மக்கள் மேல் என்ன கரிசனம்!!!

{ sakthi } at: November 25, 2010 at 3:43 AM said...

சுமோ வீரர்கள் தினமும் மிக அதிகமாக, அவித்த உணவுகளைச் சாப்பிடுவார்கள். குறிப்பாக, இவற்றில் புரோட்டீன்களும், வைட்டமின்களும் நிறையச் சேர்ந்திருக்கும். வயிற்றையும் தொடைகளையும் பெருக்க வைப்பதற்கான உணவு இது. பெரிய இடையும், மரம்போன்ற கால்களும் சுமோ வீரனுக்கேற்ற உடல் அமைப்பாகும். இப்படிப்பட்ட உடல் அமைப்புடன் இருக்கும்போது வீழ்த்துவதோ தூக்கி எறிவதோ சிரமமாக இருக்கும்.

கஷ்டம் தான்!!!!

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: November 25, 2010 at 4:05 AM said...

அருமை

{ இம்சைஅரசன் பாபு.. } at: November 25, 2010 at 4:05 AM said...

தகவல்கள் அருமையாக உள்ளது ..........நன்றி மக்கா

{ கே.ஆர்.பி.செந்தில் } at: November 25, 2010 at 5:13 AM said...

உங்க முகவரிக்கு ஒரு டசன் ஓல்டு மங் அனுபியிருக்கிறேன்...

{ தமிழ்மலர் } at: November 25, 2010 at 5:24 AM said...

திரு. சங்கவி....
இயன்றால் உடனடியாக எனது தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள். உங்கள்
தொலைபேசி எண் தற்போது என்னிடம் இல்லை.

{ வினோ } at: November 25, 2010 at 5:41 AM said...

பதிவு அருமை தலைவரே... ஜோக் சூப்பர்...

{ Deepa } at: November 25, 2010 at 5:48 AM said...

Very nice. Enjoyed reading!

{ Chitra } at: November 25, 2010 at 2:39 PM said...

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி….. காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?


....ha,ha,ha,ha.... super!

{ anu } at: November 25, 2010 at 10:46 PM said...

Very nice flow.Good articleVery nice flow.Good article

{ middleclassmadhavi } at: November 26, 2010 at 8:17 PM said...

Super!! Keep it up

Post a Comment