Pages

அஞ்சறைப்பெட்டி 18.11.2010

Thursday, November 18, 2010எனது கடந்த வாரம் எனது அஞ்சறைப்பெட்டிக்கு ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 டில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து 65 பேர் பலியாம். ஆனால் பலி எண்ணிக்கை நிச்யம் அதிகமாகத்தான் இருக்கும். நம் நாடு முழுவதும் இன்று அடுக்குமாடி குடியிருப்பு அதிகரித்து வரும் நேரத்தில் இனி அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களும் புதிதாக வாங்குபவர்களும் நிச்சயம் யோசனை செய்ய வேண்டி இருக்கும். டெல்லியில் மட்டுமல்ல அனைத்து நகரங்களிலும் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்ய வேண்டும். நகர மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் விழிப்புடன் ஆய்வு செய்ய வேண்டும் இவர்கள் விழிப்புடன் ஆய்வு செய்தால் இனி இந்த மாதிரி விபத்துக்கள் குறையும்... 
அடுக்குமாடி குடியிருப்பு என்னைப்பொறுத்த வரை ஆகாயமும் சொந்தமில்லைபூமியும் சொந்தமில்லை.... 
*************************************************

இந்த முறை ஊருக்கு சென்ற போது கோபி, அத்தாணி வழியாக அந்தியூர் சென்றேன். கோபி அத்தாணி சாலை நான் சிறுவயதில் இருந்து மிகவும் ரசித்த சாலை ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இப்பதான் பகலில் அந்த சாலையில் பயணித்தேன்.. 

வலைந்து நெளிந்து செல்லும் சாலையில் இருபுறமும் வயல் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என நெற்பயிர்கள் கண்னுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு அமைதியாகவும் கிட்டத்தட்ட 25 நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை ரசித்துக்கொண்டே 1 மணி நேரமாக கடந்தேன். 

சாலையில் இருபுறமும் இரும்பு வேலி போட்டு சாலையை அகலப்படுத்தி இருந்தார்கள்.. இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடம் அது என்றால் மிகையாகாது.
கோபி பக்கம் போனீங்கன்னா ஒரு 20 நிமிடம் அப்படியே கோபி அத்தாணி சாலையில் பயணியுங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருக்கும்...

*************************************************
 ஈக்களுக்கு பயந்து 5 கிராம மக்கள் ஊரை காலி செய்கிறோம் என்று கூறி உள்ளனர் இது வேறு எங்கும் இல்லிங்க நம்ம ஊர்ல தான் மேட்டூர் மேச்சேரி பக்கத்தில் உள்ள சந்திரமாகடை, பொதியாம்பட்டி, இருசாக்கவுண்டனூர், சொரையனூர், புட்டாரெட்டியூர் என்ற கிராமங்கள் தான். இங்கு பக்கத்தில் கோழிப்பண்ணை நிறைய இருப்பதால் ஈக்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதாம் சாப்பாடு சாப்பிடும் போது சாப்பாட்டுத் தட்டில் ஒரு 100 ஈக்கள் மொய்க்கின்றனவாம்...

ஈக்கள் அதிகம் இருந்தாலே சுகாதாரக் கேடு அதிகமாக இருக்கும். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்தினான் என்று கேள்வி பட்டு இருக்கிறோம் இனி ஈக்கு பயந்து ஊரைக் காலி பன்னின கதையை சொல்வோம்...

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இன்னும் பத்து நாட்களில் ஈக்களை அழிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளாராம் இன்னும் 10 நாள் கழித்து தெரியும் ஈ என்ன ஆச்சுன்னு..

*************************************************
 அமெரிக்காவில் பப்போலோ விங்க் கோழி உற்பத்தி நிறுவனம் வருடந்தோதும் சிக்கன் சாப்பிடும் போட்டியினை நடத்துகிறதாம் இதில் சோன்யா தோமஸ் (Sonya Thomas 43) எனும் பெண் 12 நிமிடங்களில் 181 சிக்கன் இறக்கை பாகங்களை (மொத்தம் 2.2. கிகி எடை) தின்று உலகசாதனை படைத்துள்ளார்.

இவர் அளித்த பேட்டியில் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும் அப்படித்தான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்று கூறிஉள்ளார்.. அடிப்பாவி மக்கா இந்த மாதிரி நம்ம ஊர்ல எந்த கோழிப்பண்ணைக்காரரும் நடத்த மாட்டிங்கறாங்களே.. 
 நம்ம ஊர்ல மட்டும் நடந்துச்சுன்னா சாப்பாட்டு ராஜா, ராணி பட்டம் நமக்குத்தான்...
 
ஒலிம்பிக்கில் இந்த போட்டிய சேர்க்கச் சொல்லனும்.... அப்பத்தான் நமக்கு எப்பவும் ஒரு தங்கம் உறுதி..... 
*************************************************

இந்த வாரம் விகடனில் சாருவின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது சிங்கப்பூரைப்பற்றியும், அங்குள்ள உணவுகளைப்பற்றியும் அற்புதமாக கூறியிருந்தார். அந்த ஊர் விலையை விட  நம்ம ஊர் உணவகங்களில் விலை அதிகம் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.. டாஸ்மார்க்கில் தான் அரசுக்கு அதிக வருமானம் ஆனால் அவர்கள் நடத்தும் சாக்கனாக்கடை (பார்) பற்றி நச்சுன்னு சொல்லி இருந்தார். ரொம்ப ரசித்தேன் சாருவின் வரிகளை...

*************************************************

106 வயது பாட்டி ஒருவர் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடாத காரணத்தால் உடல் ஆரோக்கியமுடன் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் இசா பிளித் (Isa Blyth). இவர் சனிக்கிழமை 106வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுவரை செக்சில் ஈடுபட்டதே இல்லை என தெரிவித்துள்ளார். முத்தத்தைக்கூட பரிமாறியதில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

செக்சில் ஈடுபடாததால் நான் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா என்பது தெரியாது. எனது வாழ்நாளில், காதலிக்க வேண்டும் என்ற எண்ணமோ, செக்சில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ வந்ததே இல்லை என இசா தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண்ணைப்பற்றி கேட்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. 
************************************************ 
கடந்த வார விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் ஊரில் பயங்கர மழை பெய்து பக்கத்தில் உள்ள அணையான வரட்டுப்பள்ளம் அணையில் ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி இரண்டும் நிரம்பிவிட்டன என்று சொன்னார்கள்..
 குடும்ப சகிதமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு சென்றோம் நாங்க சென்ற நேரத்தில் மழை பிடித்தது அணையில் நிரம்பிய தண்ணீரை மட்டும் சில நிமிடங்கள் பார்த்து விட்டு வரும் வழியில் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றோம். அந்தி மாலை பொழுதில் சிறு தூரலுடன் தண்ணீர் முழுவதும நிரம்பிய ஏரியை மிக ரசித்தேன் அங்கே ரசித்த இடத்தின் புகைப்படம் கீழே... 
 இன்று காலை தான் ஊரில் இருந்து அலைபேசியில் சொன்னார்கள் ஊரில் உள்ள ஏரி எல்லாம் நிறைந்து கடை போகிறது என்று (தண்ணீர் நிரம்பி வழிவதை கடை என்று சொல்வோம்) எங்கள் வீட்டு அருகே தண்ணீர் நிற்கிறதாம் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இந்த வருடம் தண்ணீர் பிரச்சனை இருக்காது அனைத்து ஏரிகளும் நிரம்பியதால் விவசாயம் செழிப்பாக இருக்கும்.  
நாட்டு நடப்பு

இந்தியாவில் உள்ள சாமனியன்கள் முதல் உலக புகழ் பெற்ற கோடிசுவரன்கள் முதல் அனைவரும் இவ்வாரம் உச்சரித்த பெயர் ஸ்பெக்ட்ரம் ராசா. இவர் பதவி பறிப்பால் 2011 சட்டசபைத் தேர்தலுக்குள் பல மாற்றங்கள் வருமா வராதா இது தான் அரசியல் நிபுணர்களின் முதல் பேச்சு..

கடந்த வாரம் நீயா நானாவில் லஞ்சத்தை பற்றிய விவாதம் நன்றாக இருந்தது. லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். லஞ்சம் கொடுப்பது முதல் குற்றம். ஏன் கொடுக்கிறார்கள் நமக்கு சீக்கிரம் வேலை முடியனும் தினமும் அலுவலத்திற்கு விடுமுறை போட்டு விட்டு நம்ம காரியத்திற்கு நடக்க முடியாது இதனால் லஞ்சம் கொடுக்க முன் வருகிறோம். லஞ்சத்தை சுத்தமாக ஒழிக்க முடியாது அதைக்கட்டுப்படுத்த அரசு அனைத்து துறைகளிலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழி செய்ய வேண்டும். அதற்கு பல வழிமுறைகளை உருவாக்கினால் குறைக்க முடியும் என்பது என் நம்பிக்கை.
 தகவல்

பொதுவாக உலகில் பெண்களை விட ஆண்கள் விரைவில் மரணம் அடைந்து விடுவது வழக்கம், பெண்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மை தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனுக்கு முதுமை வருவது ஏன் என்பது குறித்து ஆய்ந்த ஐரோப்பிய நிபுணர்கள் டிஸ்போசபிள் சோமா என்ற கோட்பாட்டை உருவாக்கினர். 

மனித உடல் நிலையற்றது. ஆனால், அதனுள்ளிருக்கும் மரபணுக்கள் நிலையானவை. ஆம். ஒரு மனிதனின் மரபணுக்கள் அவன் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதன் மூலம் அவனது மரபணுக்கள் என்றும் நீடித்து இருக்கின்றன எனக் கொள்ளலாம். மனித உடல் என்பது ஒரு கார் போல. அதில் உள்ள மரபணுக்களை சந்ததிகளுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் அதன் வேலை. வாழ்நாள் ஓட்டத்தில் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் உடல் ஒரு காலகட்டத்தில் வலுவிழந்து அழிகிறது. இது எல்லா உயிரினங்களிலும் உள்ளது தான். ஆனால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவற்றின் பெண்கள் மட்டும் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மைதான் காரணம் என பேராசிரியர் டாம் கிர்க்வுட் கூறுகிறார்.
 மொக்கை ஜோக்

ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..
பீரோ சாவி என்ன????!!!!.. எதை வேணும்ன்னாலும் எடுத்துக்கோ..
 

ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணிடாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது..!

*************************************************
கையில ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது...
உங்களுக்கு தெரியுமா
குத்துனது யாருன்னு பார்க்கத்தான் இரத்தம் வருதாம்...


அறிமுக பதிவர்

வலையப்பன் என்ற பெயரில் தேர்தல் ஸ்பெசல்... 2011 சட்டசபைத் தேர்தலுக்காக என்று ஒரு வலைப்பதிவை தொடங்கி அதில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியைப்பற்றி எழுதிவருகிறார். இவ்வலைப்பூவில் சட்டமன்றத் தொகுதியில் எத்தனை வாக்களர்கள், இதற்கு முன் போட்டியிட்டவர்கள், தற்போதைய உறுப்பினர், தொகுதி மறுசீரமைப்பு, தொகுதியின் எல்லை, இது வரை வெற்றி பெற்றவர்கள், மற்றும் தொகுதி பற்றியான குறிப்புகள் என ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் எழுதிவருகிறார்.

2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இவ்வலைப்பதிவு பரபரப்பாக இருக்கும்...
http://electionvalaiyappan.blogspot.com/

தத்துவம்

பணத்தைக் கொண்டு நாயை வாங்கிடலாம் ஆனால்
அன்பைக்கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்...

உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்;
ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.

குறுஞ்செய்தி

பிரபல நடிகர்களின் அடுத்த படங்கள் என்னும் தலைப்பில் எனக்கு வந்த குறுஞ்செய்தி..

சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம்...

மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா.....

தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன்....

ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால்....

விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ...

சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா...

மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு...

37 comments:

{ ப்ரியமுடன் வசந்த் } at: November 18, 2010 at 1:00 AM said...

நல்லதொரு பகிர்வு முயற்ச்சி..

//சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா...//

செம செம...

{ Arun Prasath } at: November 18, 2010 at 1:03 AM said...

//ஈக்களுக்கு பயந்து 5 கிராம மக்கள் ஊரை காலி செய்கிறோம் என்று கூறி உள்ளனர//

இது நான் ஒரு 3 ,4 வருஷம் முன்னாடி, ஜூ. வி ல படிச்சிருக்கேன். இன்னும் சரி ஆகலனா 10 நாள் ல சரி ஆகவா போகுது?

{ Vijay Anand } at: November 18, 2010 at 1:07 AM said...

Hi,
http://electionvalaiyappan.blogspot.com/
This link goes to this link :
http://sutrulavirumbi.blogspot.com/2010/11/blog-post_15.html

Pls correct it.

{ Balaji saravana } at: November 18, 2010 at 1:16 AM said...

அஞ்சறைப் பெட்டி வாசம் இந்தவாரமும் அருமை.
அந்த ஏரி படம் மிக அழகு..
//ஈக்கு பயந்து //
:)
நீங்க கொடுத்திருக்கிற லிங்க க்ளிக் பண்ணுனா அருண் பிரசாத் வலைபதிவுக்கு ( http://sutrulavirumbi.blogspot.com/2010/11/blog-post_15.html )இட்டுச் செல்கிறது.. கொஞ்சம் பாருங்க நண்பா!

{ தமிழ் அமுதன் } at: November 18, 2010 at 1:22 AM said...

நீங்க ரசிச்சு எடுத்த படம்தான் இப்போ
என் டெஸ்க்டாப்ல...!;;) அருமை..!

Anonymous at: November 18, 2010 at 1:38 AM said...

முத்தத்தைக்கூட பரிமாறியதில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது...

காத‌லே தோண‌வில்லைஎன்றால் முத்த‌ம் எங்கிறுந்து வ‌ருமாம்..

இந்த‌ ஒரு த‌ன்மைய‌ நான் பெற்றிருந்தால்...ம‌ஹாண்க‌ளில் வ‌ரிசையில் அல்ல‌வா இட‌ம் பெற்றிருப்பேன்...

கிராமபுரமும், அதன் வயல்,ஏரிக்குளங்களும், அதற்க்கே உறித்தான செடிகொடி மரங்களுடன் அளிக்கும் காட்ச்சிக்கு ஈடு உண்டா...அமைதி...அமைதி...

குத்துனது யாருன்னு பார்க்கத்தான் இரத்தம் வருதாம்
யாரது....சதிஸ் எங்கேப்பா....

பிரபல நடிகர்களின் அடுத்த படங்கள் என்னும் தலைப்பில் எனக்கு வந்த குறுஞ்செய்தி.......நைஸ்...ரிய‌லி...நைஸ்..

{ வெறும்பய } at: November 18, 2010 at 2:05 AM said...

அஞ்சறைப்பெட்டியில் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்ட அனைத்தும் அருமை...

{ சேட்டைக்காரன் } at: November 18, 2010 at 2:26 AM said...

பெயருக்கேற்றா மாதிரியே கம கம கம.....! :-)

{ karthikkumar } at: November 18, 2010 at 2:36 AM said...

ரெண்டு பதிவ போடலாம் போல.நல்லா இருக்கு நீங்க கொங்கு மண்டலமா

{ மோகன் குமார் } at: November 18, 2010 at 3:01 AM said...

Nice. Photoes are good.

{ எஸ்.கே } at: November 18, 2010 at 3:26 AM said...

This post is also very good

{ க்ரிஷ் } at: November 18, 2010 at 3:50 AM said...

உங்கள் தொகுப்பு நன்றாகவே உள்ளது... :-)

{ அகல்விளக்கு } at: November 18, 2010 at 3:57 AM said...

எல்லாமே சூப்பர்....

{ நிலாமதி } at: November 18, 2010 at 4:03 AM said...

அஞ்சறைப்பெட்டியில் உள்ளவை அத்தனயும் அருமை

{ அருண் பிரசாத் } at: November 18, 2010 at 4:07 AM said...

பொட்டி புதுசா நல்லாவே இருக்கு....

ஈ மேட்டர் - அச்சோ பாவம் மக்கள்

{ வித்யா } at: November 18, 2010 at 4:17 AM said...

படங்கள் மிக அழகு.

{ சத்ரியன் } at: November 18, 2010 at 4:23 AM said...

சங்கவி ,

ஏரி படம் சூப்பருப்பு!

{ கே.ஆர்.பி.செந்தில் } at: November 18, 2010 at 4:27 AM said...

சுவாரசியம் குறையாத பெட்டி...

{ திருஞானசம்பத்.மா. } at: November 18, 2010 at 4:54 AM said...

தலைவா.. என்னோட ப்ளாக்ல இருக்குற படம் கோபி - அந்தியூர் சாலையில் எடுத்ததுதான்.. :-))

ப்ரோபைல் போட்டோ கூட.. :-))))

{ சி.பி.செந்தில்குமார் } at: November 18, 2010 at 4:54 AM said...

super post, சூப்பர் பதிவு 3 பதிவா போட்டிருக்கலாம்.மிஸ் பண்ணீட்டீங்க.ஃபோட்டோ கலக்கல் .கடைசில வந்த சினிமா டைட்டில் மேட்டர் செம காமெடி

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: November 18, 2010 at 6:33 AM said...

அத்தனயும் அருமை

{ சே.குமார் } at: November 18, 2010 at 7:15 AM said...

அஞ்சறைப்பெட்டி அருமை..!

{ வெங்கட் நாகராஜ் } at: November 18, 2010 at 7:17 AM said...

அத்தனையும் அருமை. நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க சகோ. நன்றி.

{ Arun } at: November 18, 2010 at 9:33 AM said...

புகைப்படம் அருமை !! குறுஞ்செய்தி நல்ல நகைச்சுவை

{ ஹேமா } at: November 18, 2010 at 10:02 AM said...

நிறம் நிறமாய் அழகுப் பெட்டி !

{ அலைகள் பாலா } at: November 18, 2010 at 3:48 PM said...

//சூப்பர் பதிவு 3 பதிவா போட்டிருக்கலாம்//

c.p.s sectret leaks... ha ha ha

good post. petti manakkuthu

{ ம.தி.சுதா } at: November 18, 2010 at 9:03 PM said...

அஞ்சறைப் பெட்டி நெஞ்சறையை தொட்டப் போகிறது... அதிலும் பாட்டி தகவல் இன்னும் வித்தியாசம்... நகைச்சுவையும் அருமை வாழ்த்துக்கள்...

{ இந்திரா } at: November 18, 2010 at 10:40 PM said...

தகவல்கள் அனைத்துமே ஒன்றையொன்று மிஞ்சிவிடுகின்றன. அனைத்துமே புதிதான விபரங்கள்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

{ லதானந்த் } at: November 18, 2010 at 11:41 PM said...

இடுகைகள் நன்கு உள்ளன. பத்திரிக்கைகளுக்கு எழுதுங்களேன்

{ கோமாளி செல்வா } at: November 19, 2010 at 12:25 AM said...

அஞ்சறைப் பேட்டி உண்மைலேயே கலக்கலா இருக்கு அண்ணா .,
எல்லா தகவல்களும் அருமை .. அதே மாதிரி அந்த அடுக்குமாடி குடியிருப்பு விசயங்கள் சோதனை செய்வது நல்லது ..

{ சுந்தரா } at: November 19, 2010 at 7:26 AM said...

காரம், மணம், குணம்னு எல்லாமே இருக்கு அஞ்சறைப்பெட்டியில்.

அருமை.

{ Saravana kumar } at: November 19, 2010 at 8:43 PM said...

ரொம்ப நல்லா இருந்தது. பிரபல பதிவர் ஆகிடீங்க தல. கலக்குங்க

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: November 19, 2010 at 9:18 PM said...

ஹாஹாஹா சங்கவி.. இது அஞ்சரைப் பெட்டி இல்லை.. சூப்பர் மால்..:))

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: November 20, 2010 at 1:25 AM said...

கலக்குங்க சூப்பர்

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: November 20, 2010 at 1:25 AM said...

அவ்வளவும் அருமையான வாசனை

{ r.v.saravanan } at: November 20, 2010 at 5:05 AM said...

அஞ்சறைப்பெட்டியில் அனைத்தும் அருமை.

{ பஞ்சவர்ணசோலை } at: November 21, 2010 at 10:40 PM said...

அஞ்சறைப்பெட்டி கலக்கல்

தகவல்கள் அருமை

Post a Comment