Pages

ஏழை வீட்டு விருந்து

Thursday, October 28, 2010
கண்ணம்மா இன்று எங்க மாமவும், அக்காவும் வருகிறார்களாம் இப்ப தான் மாமா போன் செய்தார் உன் சமையல் இன்னிக்கு அசத்திரனும் உன்னுடைய கை பக்குவத்தில் அருமையா இருக்கும் நாட்டுக்கோழி குழம்பு வைச்சிடு, காடை வறுவல், இரத்தம் குடல் வறுத்து முட்டை தொக்கு வைச்சிறு மாலை 7 மணிக்கெல்லாம் ரெடி பண்ணிடு கண்ணம்மா என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகளை பார்க்ச்சென்றாள் வீட்டு எஜமானி

சரிம்மா...

கண்ணம்மா இன்று காலை வரும் போது தன் மகன் சுந்தர் சொன்னது ஞாபகம் வந்தது

அம்மா எங்க பள்ளியில் நடந்த மாவட்ட அளவிளான ஓட்டப்பந்தயத்தில் நான் தான் முதல்ல வந்தேன் எல்லோரும் என்னை பாராட்டி இந்த கோப்பைய கொடுத்தாங்கம்மா...

சரிப்பா படிப்பு விளையாட்டு இதுல எல்லாம் நீ எப்பவும் முதல்ல வரனும் இது தாம்ப இந்த அம்மா ஆசை...

சரிம்மா வந்துறன்.. இந்தாம்மா கோப்பை அம்மா இன்னிக்கு இராத்திரி சாப்பாட்டுல என்ன அசத்திடனும்மா

சரிப்பா... சாம்பார் வைக்க கூட காசில்ல எங்க நம்ம பையனுக்கு நல்ல சாப்பாடு போடறது நேத்து தான் ரேசன் கடையில அரிசி வாங்கின எப்ப சாம்பார் வைக்கறதுன்னு நினைச்சேன் இவ வேற விருந்து கேக்கிறானே...

கண்ணம்மா சந்தோசப்பட்டாள் அப்ப இன்னிக்கு இங்க சமையல முடிச்சு போகும் போது எப்படியும் மீதி இருக்கும் கொடுப்பாங்க பையன அசத்தி விடலாம் என்று மனமகிழ்ந்தல்.

சீக்கிரம் சமையலை முடித்தாள் எப்பவும் விட இன்றைக்கு நல்லா மனம் என்று வீட்டு எஜமானி அம்மா சொன்னாள் (இவள் மகனை நினைத்து செய்தேன் என்றால் மனதில்)

அனைவரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சூப்பர் என்று மகிழ்ந்து பாராட்டினார்கள் மாமவும் அக்காவும் நீ எங்க வீட்டுக்கும் வந்து சமைச்சு கொடும்மா என்றார்கள் இல்லைங்க என்று மறுத்து சிரித்தாள்..

அனைவரும் சாப்பிட்ட பின் கொல்லப்புறம் சென்று தன் குண்டாக்களை எடுத்து வந்து சாப்பாடு போட சமையறலைக்குள் நுழைந்தாள் பின்னாடியே நுழைந்த வீட்டு அம்மா கண்ணம்மா இன்று உன் சமையல் சூப்பர் அதனால அவர் நண்பர்கள் இரண்டு பேர் வருகிறார்களாம் சாப்பாட்ட வைச்சிடு இந்த உனக்கு 100 ரூபாய் நாளை காலை வாம்மா...

சரிம்மா... பையன் நல்ல சாப்பாடு கேட்டானே என்ன பன்றது கையில பணம் இருக்குது மணி 9 ஆச்சு இனிமேல் சமைக்கிறதுக்குள்ள தூங்கிடுவான் ஒரு நாளைக்கு நல்ல சாப்பாடு போடமுடியலியே என்று மனதிற்குள் நினைத்தாள்

என்னம்மா சாப்பாடு ரெடியா

வா சுந்தர் சாப்பிடலாம் என்று பழைய சாப்பாடு, தயிர், கூட சின்ன வெங்காயம் எடுத்துக்கப்பா..

அம்மா உன்கையால எனக்கு மிகவும் பிடிச்ச சோறு இந்த பழைய சோறுதாம்மா இத நீ கரைச்சி கொடுக்குற பக்குவம் இருக்கே இது தாம்மா எனக்கு பிடிச்சிருக்கு..

கண்ணம்மா நெகிழ்ந்து அவனை மார்போடு அணைத்தாள்...

18 comments:

{ எல் கே } at: October 28, 2010 at 5:32 AM said...

தாயின் கையால் செய்தால் எதுவும் விருந்துதான்

யாதவன் at: October 28, 2010 at 5:42 AM said...

நெஞ்சை தொட்ட கதை விறு விருப்பாக உள்ளது
நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

யாதவன் at: October 28, 2010 at 5:42 AM said...

நெஞ்சை தொட்ட கதை விறு விருப்பாக உள்ளது
நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

{ மங்குனி அமைச்சர் } at: October 28, 2010 at 5:45 AM said...

நல்லா இருக்கு சார்

{ தமிழரசி } at: October 28, 2010 at 5:52 AM said...

மனசை தொட்ட கதை..எத்தனை அம்மா பிள்ளைகள் இப்படி இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்

{ பிரவின்குமார் } at: October 28, 2010 at 6:19 AM said...

அன்புடன் அளிக்கப்படும் விருந்து அமிழ்தத்திற்கு ஈடானது என்பதை விளக்கும் ஏழைவீட்டு விருந்து கட்டுரை மிக யதார்த்தமாய்....!!

{ Chitra } at: October 28, 2010 at 7:23 AM said...

அம்மா உன்கையால எனக்கு மிகவும் பிடிச்ச சோறு இந்த பழைய சோறுதாம்மா இத நீ கரைச்சி கொடுக்குற பக்குவம் இருக்கே இது தாம்மா எனக்கு பிடிச்சிருக்கு..

....நெகிழ வைக்கும் வார்த்தைகள்.

{ ஈரோடு கதிர் } at: October 28, 2010 at 7:48 AM said...

:)

{ நிலாமதி } at: October 28, 2010 at 9:42 AM said...

அம்மா கையால்கொடுக்கும் கஞ்சி என்றாலும் அது அமுது தான். அவள் பாசம் இருக்கும் வரை

{ அப்பாதுரை } at: October 28, 2010 at 3:15 PM said...

எளிய உணர்வுபூர்வமான கதை.
எளிய உணர்வுபூர்வமான கதை.
அம்மா கையால் கொடுத்த பழைய சோறும் பச்சை மிளகாயும் (or சின்ன வெங்காயம்) சில சமயம் பெரிய விருந்தைக்கூடத் தோற்கடிக்கும்.

{ சி.பி.செந்தில்குமார் } at: October 28, 2010 at 4:57 PM said...

கண்ணீரை வரவைத்த வரிகள்>>.


அம்மா உன்கையால எனக்கு மிகவும் பிடிச்ச சோறு இந்த பழைய சோறுதாம்மா >>


அருமை சார்

{ Balaji saravana } at: October 28, 2010 at 5:53 PM said...

நைஸ் :)

{ வெறும்பய } at: October 28, 2010 at 9:13 PM said...

மனதை தொடுகிறது கதை..

Anonymous at: October 28, 2010 at 9:52 PM said...

ஆம்...தாய் வெறும் கூலைக்கொடுதாலும் அதற்க்கும் கொடுத்து வைக்கவேண்டும் அல்லவா..அதில் அவளின் அன்பும் பாசமும் அல்லவா கலந்திருக்கிறது..அதுவும் ஏழைத்தாய்களுக்கு இது கொஞ்சம் ஜாஸ்த்தி...நல்லா சொல்லி இருக்கிறீர்கள்.

{ ஆனந்தி.. } at: October 28, 2010 at 10:05 PM said...

நல்லா இருந்தது..

{ Saravana kumar } at: October 29, 2010 at 12:12 AM said...

ரொம்ப நல்லா இருந்தது இன்னைக்கு உங்க கதை. தொடருங்கள் சிறப்பாக

{ வெங்கட் நாகராஜ் } at: October 29, 2010 at 2:22 AM said...

அம்மா கையால் தண்ணீர் கொடுத்தால் கூட அது சுவையாகத்தான் தெரியும். அழகாய் ஒரு கதை படித்த திருப்தி. பகிர்வுக்கு நன்றி.

{ அமைதிச்சாரல் } at: October 30, 2010 at 4:40 AM said...

அமிர்தமாய் இனிக்குது விருந்து :-)

Post a Comment