Pages

தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் பாகற்காய்

Tuesday, October 19, 2010


ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.

இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும். முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். இதன் எல்லா பாகங்களுமே கசப்புதான். ஊறுகாய்க்குச் சிறந்தது. செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இதன் இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.
வாங்கும் போது கவனிக்கவேண்டியது 

பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

என்ன சமைக்கலாம்
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.என்ன சத்து இருக்கிறது

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.

புற்று நோயை தடுக்கும் பாகற்காய்

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. இவர்   “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரை குறைய

1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

காமாலை மறைய

2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்சனைக்கு

3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

பயன்கள்
 • பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க பாகற்காய் உதவுகிறது. 
 • அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.
 • பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.
 •  இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், மாலை ஆகிய கொடிய  நோய்களை எளிதில் போக்கும்.
 • பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
 • பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
 • பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
 • பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
 • ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
 • இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.
 • பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.
 • பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
 • பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
 • நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 • ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
 • பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.
 • மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
 • இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
 • பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.
 • சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
 • பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
 • அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.
 • பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
 • உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

23 comments:

{ தமிழரசி } at: October 19, 2010 at 10:49 PM said...

introvey அசத்தல்..இது மருத்துவ குணம் வாய்ந்ததுன்னு தெரியும் ஆனால் இவ்வளாவான்னு நினைக்கும் போது.... உங்க எல்லா பதிவும் நல்ல குறிப்புகளா இருப்பதால் ஒரு தொகுப்பாய் கொடுத்தால் அதாவது புத்தகமாய் வெளியிட்டால் பெரும்பாலோர் பயனடையலாம் சங்கவி..

{ ஜோதிஜி } at: October 19, 2010 at 11:21 PM said...

இது போல் தொடர்ந்து எழுதுங்க

{ கோமாளி செல்வா } at: October 20, 2010 at 12:23 AM said...

//100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.
///

பாகற்காய்ல இவ்ளோ நல்லது இருக்கா ..?

{ கோமாளி செல்வா } at: October 20, 2010 at 12:24 AM said...

// வயிற்றுப் புழு இவை நீங்கும்.//
எங்க ஊர்ல அடிக்கடி இத மட்டும் சொல்லுவாங்க அண்ணா ., ஆனா இவ்ளோ பயன்கள் இருக்கு அப்படின்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிகிட்டேன் .. எல்லோருக்கும் சொல்லுறேன் ..!!

{ ஜெரி ஈசானந்தன். } at: October 20, 2010 at 1:07 AM said...

பயனுள்ள பதிவு......எனக்கு வல்லிய இஷ்டமாயி.....ஈ..பாகற்காய்

{ S.Menaga } at: October 20, 2010 at 3:43 AM said...

useful post!!

{ வெறும்பய } at: October 20, 2010 at 4:18 AM said...

பாகற்காய்க்கு மருத்துவ குணங்கள் பல உண்டு என்பதறிவேன்... ஆனால் இத்தனை பலன்களா என்று பார்க்கும் பொது மலைப்பாக உள்ளது..

நல்ல பகிர்வு..

{ சி.பி.செந்தில்குமார் } at: October 20, 2010 at 6:35 AM said...

paccaiபச்சை இன்க்கில் பதிவை கலர் பண்ணீயது பக்கா

{ சி.பி.செந்தில்குமார் } at: October 20, 2010 at 6:36 AM said...

வெறும் மருத்துவ குணங்களை மட்டும் கூறாமல் ஓப்பனிங்க்கில் நீங்கள் குடுத்த அறிமுகம் நீங்கள் பக்கா வில்லேஜ் என்பதை பறைசாற்றி மண் சார்ந்த பதிவர் என்ற பெருமையையும் பெறுகிறீர்கள்

{ Kanchana Radhakrishnan } at: October 20, 2010 at 7:04 AM said...

பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி.

{ sakthi } at: October 20, 2010 at 7:12 AM said...

நல்ல பகிர்வு சங்கவி

{ Chitra } at: October 20, 2010 at 7:45 AM said...

பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

{ தோழி பிரஷா } at: October 20, 2010 at 7:54 AM said...

பயனுள்ள பதிவு.....

{ asiya omar } at: October 20, 2010 at 7:56 AM said...

பயனுள்ள இடுகை.பகிர்வுக்கு நன்றி.

{ வினோ } at: October 20, 2010 at 10:50 AM said...

நல்ல பதிவு சங்கவி...

{ சத்ரியன் } at: October 20, 2010 at 4:18 PM said...

மிகமிகமிக பயனுள்ள பகிர்வு சங்கவி.

{ தியாவின் பேனா } at: October 20, 2010 at 10:43 PM said...

நல்ல பயனுள்ள தகவல்...

நல்ல பதிவு

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: October 21, 2010 at 5:03 AM said...

முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆகவேண்டும் உங்களின் ஒவ்வொரு பதிவும் இயற்கை மருத்துவம் தொடர்புடையதாக உள்ளது அனைவருக்கும் பயன் தரும் வகையில் தெளிவான விளக்கங்களுடன் , தகுந்த புகைப்படங்களை இணைத்து பதிவிடும் விதம் ரசிக்க வைக்கிறது . தொடரட்டும் உங்களின் சேவை . பகிர்வுக்கு நன்றி

{ இளங்கோ } at: October 21, 2010 at 6:08 AM said...

பகிர்வுக்கு நன்றி.

{ இந்திரா } at: October 22, 2010 at 4:18 AM said...

தாய்மைக்கு உபயோகமாகும் பதிவு.

பகிர்வுக்கு நன்றி

{ மனோ சாமிநாதன் } at: October 22, 2010 at 10:53 AM said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு மிகுந்த நன்றி!!

{ வெங்கட் நாகராஜ் } at: October 24, 2010 at 9:28 PM said...

பயனுள்ள பகிர்வு. பாகற்காய் எனக்கும், என் மகளுக்கும் மிகவும் பிடித்த ஒரு காய். இத்தனை மருத்துவ குணங்கள் இக்காய்க்கு இருப்பது தெரிந்து மகிழ்ச்சி. தொடருங்கள்.

வெங்கட்.

{ Priya } at: October 25, 2010 at 4:49 AM said...

ஓ பாகற்காயில் இத்தனை விஷயங்களா.... பகிர்வுக்கு நன்றி!

Post a Comment