Pages

காதலும் கரண்ட்டும்

Tuesday, October 5, 2010
 

மேற்குத் தொடர்ச்சி மலை அருகே காவிரி ஆறு அழகாக ஓடுக்கொண்டும், மின்சாரம் தயாரிப்பதற்காக தேக்கியும் வைத்து இருப்பர். அடர்ந்த மலை அதன் அருகே சாலை அடுத்து காவிரி என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம் சிறியூர். 300 குடும்பங்களை கொண்ட அற்புதமான ஊர். விவசாயம், ஆடு மாடு மற்றும் கோழி வளர்பது தான் பிரதான தொழில்.

ஊரில் அன்பு என்னும் பெரும் பணக்கார இளைஞன் நன்கு படிப்பவன் அனைவரையும் மதிப்பவன் ஊரில் அவனுக்கு என நட்பு வட்டங்கள் உண்டு. அவர் அப்பா ஒரு மிராசுதார் கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலம் உள்ள ஒரு வசதியான விவசாயி எந்த வம்புக்கும் செல்லாதவர் தனது மகனையும் ஆதே போல் தான் வளர்த்தார். அன்பு கல்லூரி முடித்து மேல்படிப்பு படிக்காமல் விவசாயம் செய்து வந்தான். அவர்கள் பக்கத்து தோட்டத்து மணியின் பெண் சங்கீதா.

அன்புக்கு சங்கீதா மேல் ஒரு இனம் புரியாத அன்பு. இவனும் காதலை சொல்ல பல முறை முயற்சித்தும் சொல்ல முடியல. ஆனால் திருமணம் செய்தால் அது சங்கீதா தான் என்று மனிதில் எழுதி விட்டான். அடுத்து என்ன செய்வது என்று தனது அம்மாவிடம் சொல்கிறான் எனக்கு மனைவி என்றால் அவள் மட்டுமே நீதாம்ம பொண்ணு கேட்கனும் என ஐஸ் வைக்கிறான். அம்மாவிற்கு கோபம் ஆனால் காட்டிக்காமல் உங்க அப்பா வந்தால் பேசிப்பார்க்கலாம் என சொல்லி அனுப்புகிறாள்.

அவன் அப்பா வந்ததும் அம்மா காதில் போட அதுக்கென்ன போய் கேட்டுவிடலாம் என்று சொல்லி தனது தாய்மாமா சங்கரனுக்கு சொல்லி அனுப்புகிறார். அவர் வந்ததும் இது தான் விசயம் நாங்கள் மணி பெண்ணை கேட்கலாம் என இருக்கிறோம் நல்ல பொண்ணுதான் கேட்கலாம் என்று சங்கரன் மாமா சொல்லிவிட்டு மணி வீட்டுக்குச் செல்கிறார்.

மணி என் பெண்ணை நான் விவசாயம் பார்ப்பவருக்கு தரவில்லை அரசு வேலையில் இருக்கும மாப்பிள்ளைக்குத்தான் தருவேன் என்று சொல்லி மாமாவை திருப்பி அனுப்ப மாமாவும் அன்பு வீட்டில் வந்து சொல்லி விட்டார். அன்புக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கல்லூரி முடித்து 4 வருடம் ஆகிவிட்டது இனி எங்க அரசு வேலைக்குப் போக என எண்ண அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து இவனே மணியிடம் சென்று எனக்கு உங்க பொண்ண கல்யாணம் செய்யனும்னு ஆசைபடறேன் என்று சொல்ல யோசிக்கிறேன் அன்பு என்று சொல்லி அனுப்புகிறார்.

அவர் யோசிக்கிறேன் என்றதும் அன்பு சரி நமக்குத்தான் என்று சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கும் போது தான் வந்தது அதிர்ச்சி மாமா வடிவில் உனக்கு பக்க்தது ஊரில் சேகர் என்பவரின் பெண்ணைப் பார்த்து இருக்கிறோம் வரும் ஞாயிறு சாப்பிட போகிறோம். இல்ல எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல என்று கத்துகிறான் கட்டுனா அவளத்தான் கட்டுவேன் என கத்துகிறான்.
மகன் கத்துவதை கேட்டு திடுக்கிட்ட அவன் அம்மா ராணி அன்புவை தட்டி எழுப்புகிறாள் என்னடா மத்தியான நேரத்துல கனவா என தட்ட இவன் தூக்க்ம தெளிந்து அம்மாவை பார்க்கிறான். என்னடா பிரச்சனை யரோ ஒரு பொண்ணு பேரச் சொல்லி கத்துன யாருடா அது யாருனு சொல்லுடா கூட்டிட்டுகீது போயு குடும்ப மானத்த காத்துலவுட்டறாதே... கனவு கண்ணடது போதும் மத்தியான கரண்ட் வந்துருச்சாம போயி காட்டுக்கு தண்ணி கட்ற வேலையபாரு என்றாள்... ஆகா இவ்வளவு நேரம் நினைச்சது கனவா.......

17 comments:

{ எல் கே } at: October 5, 2010 at 12:56 AM said...

finala vacheenga paaru twist nalla irukku

{ அகல்விளக்கு } at: October 5, 2010 at 1:13 AM said...

ரைட்டு...

:-)

{ கோமாளி செல்வா } at: October 5, 2010 at 1:20 AM said...

அட அட , இப்படி கூட கனவு வருதா என்ன ...?
ஆனா உண்மை என்னன்னா நம்ம ஊருப் பக்கம் விவசாயம் செயுரவுங்களுக்கு பொண்ணு தருவதற்கு யோசிக்கிறாங்க .. இந்தப் பழக்கம் எப்ப மாறும்னுதான் தெரியல .. எங்க ஊர்ல கூட விவசாயம் செஞ்சுட்டு இருக்குற எங்க பக்கத்துக்கு வீட்டு அண்ணாவுக்கு 35 வயசு ஆகி கூட இன்னமும் கல்யாணமே நடக்கலை .. என்ன பண்ணுறதுனே தெரியாம இருக்காங்க .!!

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: October 5, 2010 at 1:20 AM said...

ஆகா இவ்வளவு நேரம் நினைச்சது கனவா.//
2இந்த முடிவுகள் சலிப்பை தருகின்றன..இருப்பினும் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

{ வினோ } at: October 5, 2010 at 1:41 AM said...

:)

{ Saravana kumar } at: October 5, 2010 at 2:34 AM said...

:)

{ ஹேமா } at: October 5, 2010 at 3:54 AM said...

கனவா...!

சங்கவி எங்கே ஆளையே காணோம் குழந்தைநிலாப்பக்கம் ?

{ நிலாமதி } at: October 5, 2010 at 4:05 AM said...

உங்கள் முயற்சிக்குபாராட்டுக்கள் .

{ சீமான்கனி } at: October 5, 2010 at 4:07 AM said...

கடைசி கனவு டிவிஸ்ட்டு சூப்பர்...
தொடர்ந்து கலக்குங்க...வாழ்த்துகள்....

{ ஆனந்தி.. } at: October 5, 2010 at 4:42 AM said...

நல்லா flow ல போயிட்டு இருந்தது..இன்னும் develop பண்ணி இருக்கலாம் சதீஷ்..ஆரம்ப விவரிப்பு எல்லாமே அசல் கிராமம்..வயக்காடு னு நல்லா இருந்தது....

{ சி.பி.செந்தில்குமார் } at: October 5, 2010 at 5:10 AM said...

சங்கவி,கதை ,கதையின் நடை 2ம் அருமை.மண் வாசனை மிக்க கதை.ஆனால் முடிவு கனவு என முடித்தது சிறுகதை உலகில் 1999 இல் வழக்கொழிந்த ஒன்று.இருப்பினும் சுவராஸ்யமான எழுத்துக்காக ஒரு ஓ போட்டு இண்ட்லியில்,தமிழ் 10 இல் ஒரு ஓட்டும் போடறேன்

{ என்னது நானு யாரா? } at: October 5, 2010 at 6:06 AM said...

காதல் கூட கனவா? இல்ல அது நினைவா?

{ ஜெரி ஈசானந்தன். } at: October 5, 2010 at 6:36 AM said...

cool fotos...

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: October 5, 2010 at 10:00 AM said...

முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

{ கே.ஆர்.பி.செந்தில் } at: October 6, 2010 at 12:07 AM said...

ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம் கதையை மாற்றி எழுதின மாதிரி இருக்கு ...

{ ஸ்ரீ } at: October 6, 2010 at 5:44 AM said...

நல்ல இடுகை.பாராட்டுகள்.

யாதவன் at: October 9, 2010 at 11:04 AM said...

சூப்பர இருக்குங்க வாழ்த்துக்கள்

Post a Comment