Pages

உடலுக்கு அழகு சேர்க்கும் மருதாணி

Sunday, October 3, 2010


இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதா‌ணி இலையவெறு‌மஅழகு‌க்காபெ‌ண்க‌ளகைகக‌ளி‌லவை‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றகரு‌தினா‌லஅது ‌மிக‌‌ப்பெ‌ரிதவறாகு‌ம். மருதா‌ணி இலையகைக‌ளி‌லவை‌ப்பதா‌லப‌ல்வேறபய‌ன்களபெ‌ண்க‌ளபெறு‌கிறா‌ர்க‌ள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர். மருதாணியின் பயன்கள் 

மருதா‌ணி இலையஅரை‌த்தகைககளு‌க்கவை‌த்தர, உட‌லவெ‌ப்ப‌மத‌ணியு‌ம்.

கைகளு‌க்கஅடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டமனநோ‌யஏ‌ற்படுவதகுறையு‌ம்.

சிலரு‌க்கமருதா‌ணி இ‌ட்டு‌ககொ‌ண்டா‌லச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கமருதா‌ணி இலைகளஅரை‌‌க்கு‌மபோதகூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளசே‌ர்‌த்தஅரை‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

மருதா‌ணி இ‌ட்டு‌ககொ‌ள்வதா‌லநக‌ங்களு‌க்கஎ‌ந்நோயு‌மவராம‌லபாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌லஇ‌ந்பய‌ன்க‌ளஎ‌ல்லா‌மத‌ற்போதகடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌மமருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்வா‌ய்‌ப்பஇ‌ல்லஎ‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்க.

சிலரு‌க்ககழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌மகரு‌ந்தேம‌லகாண‌ப்படு‌ம். இத‌ற்கந‌ல்மரு‌த்துவ‌மஉ‌ள்ளது.

மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌லசோ‌ப்பை‌சசே‌ர்‌த்தஅரை‌த்தபூ‌சி ர ‌விரை‌வி‌லகரு‌ந்தேம‌லமறையு‌ம்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.


மேகநோய்

பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.


தோல் நோய்

மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்


ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர 

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை 


தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம் 

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும். 

கரப்பான் புரகண் 

பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும். 

கால் ஆணி 

உ‌ள்ள‌ங்கா‌லி‌லஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌லமருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிதவச‌ம்பு, ம‌ஞ்ச‌ளக‌ற்பூர‌மசே‌ர்‌த்தஅரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்இட‌த்‌தி‌லதொட‌ர்‌ந்தக‌ட்டி ஒரவார‌த்‌தி‌லகுணமாகு‌ம். 

படைகள் 

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். 

இளநரையை போக்கும் மருதாணி   

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
 
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

13 comments:

யாதவன் at: October 3, 2010 at 11:44 PM said...

உண்மையா இவ்வளவு பயன்களா நன்றி நன்றி உங்க தகவலுக்கு

{ Kousalya } at: October 4, 2010 at 12:03 AM said...

//மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். //

இப்போதைக்கு தேவையான ஒரு நல்ல தகவல் நன்றி

{ பிரபா } at: October 4, 2010 at 12:12 AM said...

மருதாணிக்கு இவ்வளவு நல்ல பண்புகள் இருக்குறதா?.
உங்கள் அனுமதியோடு இந்த தகவல்களை எனது வானொலி நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளலாமா/

{ ராமலக்ஷ்மி } at: October 4, 2010 at 12:52 AM said...

நல்ல தகவல்கள்.

{ எஸ்.கே } at: October 4, 2010 at 2:00 AM said...

மருதாணி வெறும் அழகுக்காக இடப்படுவது மட்டுமல்ல, இவ்வளவு பலன்கலும் உடையது என தெரிந்துகொண்டோம். நன்றி நண்பரே!

{ கே.ஆர்.பி.செந்தில் } at: October 4, 2010 at 2:55 AM said...

நான் மருதாணியை பயன்படுத்தியது இல்லை ... உங்கள் தகவல்கள் மிக உபயோகமாக இருக்கிறது ..

{ வெறும்பய } at: October 4, 2010 at 3:13 AM said...

ஆஹா. இந்த மருதாணியில இவ்வளவு விஷயம் இருக்கா...

{ சைவகொத்துப்பரோட்டா } at: October 4, 2010 at 5:34 AM said...

மைதான், நான் மருதாணி இலையை பயன்படுத்தி இருக்கிறேன். தகவலுக்கு நன்றி.

{ ஜோதிஜி } at: October 4, 2010 at 5:45 AM said...

வீட்டில் ரசித்து படித்தார்கள்.

{ பிரபாகர் } at: October 4, 2010 at 5:47 AM said...

தெளிவான தகவல்கள் பங்காளி... தெரிந்த ஒரு விஷயத்தையும் பல புதிய தகவல்களால் பயனுள்ளதாய் ஆக்கிவிடுகிறீர்கள், நன்றி.

பிரபாகர்...

{ சி.பி.செந்தில்குமார் } at: October 4, 2010 at 6:55 AM said...

செமயான மேட்டரா இருக்கே,குமுதம் ஹெல்த்துக்கு அனுப்புங்க,ரூ 300 பரிசு கிடைக்கும்.


அட்ரஸ்

குமுதம்ஹெல்த்
த பெ எண் 2592

சென்னை 31

வாழ்த்துக்கள்,

{ சி.பி.செந்தில்குமார் } at: October 4, 2010 at 6:58 AM said...

பாஸ்,இண்ட்லியிலும்,தமிழ் 10 லயும் ஓட்டு போட்டுட்டேன்,தமிழ்மணம் ஒட்டு பதிவாகலி,நைட் பாக்கறேன்,மறுபடி

{ Kanchana Radhakrishnan } at: October 4, 2010 at 2:45 PM said...

நல்ல தகவல்கள்.

Post a Comment