Pages

நம்ம ஊரு கூட்டாஞ்சோறு...2

Friday, October 8, 2010

கூட்டாஞ்சோறு என்னைப்பொறுத்த வரை வயது ஆக ஆக மாறிக்கொண்டே இருக்குது சிறு வயதில் கூட்டு சாப்பாட்டை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நாங்கள் முதன் முதலில அசைவ கூட்டாஞ்சோறு சமைக்கத் தொடங்கியது படித்து முடிதது வேலைக்கு செல்லும் போது தான் ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் ஞாயிறு அன்று நிச்சயம் வீட்டில் அசைவம் தான். புரட்டாசி மாதத்தில் யார் வீட்டிலும் அசைவம் இருக்காது மாதம் மாதம் சாப்பிட்டு பழகியாச்சு என்ன செய்வது வீட்டில் செய்யமாட்டாங்க. எங்களுக்கு பக்தி எல்லாம் கிடையாது அனைவரும் வேலைக்குச் செல்வதால் கையில் பணம் இருக்கும். ஆளுக்கு 20 ரூபாய் போட்டு கறி எடுத்துக்கொள்வோம்.

ஊருக்கு ஒதுக்குப்புறம் எல்லாம் செல்ல மாட்டோம் ஊர் நடுவில் உள்ள பஞ்சாயத்து மோட்டர் அறை தான் எங்கள் சமையல் அறை வீட்டில் அசைவம் செய்தாலும் அப்ப அப்ப எங்க சமையல் நடைபெறும். கிராமங்களில் சேவல் வளர்க்கும் பழக்கம் உண்டு எங்கள் எல்லார் வீட்டிலும் வளர்ப்போம் எங்க பசங்க யாராவது வீட்ல இருக்குற சேவலை தூக்கீடடுப்போய் சமைத்து சாப்பிடடு விட்டு அப்புறம் அவங்க வீட்ல மாத்து வாங்குன கதை எல்லாம் நிறைய இருக்கு...


அசைய சமையலில் நாங்கள் அதிகம் சாப்பிடுவது கோச்சை தான் கோச்சை என்பது கட்டுச்சாவல் என்று சொல்வார்கள் இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கோழிச் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்று சண்டையில் இறக்கும் கோழியை கோச்சை என்பார்கள் இதன் சுவையே தனி... ஒரு கோச்சை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும்.

கோச்சையில் இருக்கும பொங்கை பிய்ச்து எடுத்து விட்டு துண்டு துண்டாக நறுக்கி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய்,வெங்காயம் போட்டு நன்கு வனக்கி நறுக்கிய துண்டுகளை உள்ளே போட்டு நன்கு எண்ணெய்யில் வனக்க வேண்டும் ஒரு பத்து நிமிடம் எண்ணெய்யில் வணக்கி கொத்தமல்லி தூள், மிளகாய்ப்பொடி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் பூ போல வேக வைப்போம் இன்னொரு அடுப்பில் ( அடுப்பு மூன்று கல்லை வைத்து அதற்கு மேல் பாத்திரம் இது தான் எங்கள் அடுப்பு) சாப்பாடு ரெடியாக இருக்கும் பக்கத்து தோட்டத்தில் தலை வாழை இலை கொண்டு வந்து நாங்கள் 10 பேர் மண் தரையில் தான் உட்காருவோம் ஆளுக்கு மூன்று கரண்டி கறித்துண்டும் குழம்பும் சாப்பாட்டோடு சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. இதுவரை நிறைய இடங்களில் சாப்பிட்டுவிட்டேன் ஆனால் இந்த சுவையும் சுகமும் கிடைக்கவில்லை.

அடுத்து ஆட்டுக்கறி எப்பவும் ஆட்டுக்கறி சமைப்பது என்று முடிவு செய்து விட்டால் கறி எடுக்க செல்வது தனி கலை. ஆடு முத்தி இருக்கக்கூடாது இளம் ஆடாகவும் செம்புளி ஆடாகவும் முன் தொடை கறியாகவும் பார்த்துதான் எடுக்க வேண்டும் அப்ப தான் சுவை அதிகமாக இருக்கும் ஆட்டுக்கறி சமைத்தால் கூட சாப்பிட எதாவது வேண்டும் (டாஸ்மார்க்) தான். எல்லாத்தையும் வாங்கிவிட்டு எங்கள் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்று கரைக்கு சென்று விடுவோம் யாரும் வராத இடமாக சென்று சமைத்து தண்ணீரில் குளித்துக்கொண்டே இருப்போம் ஒருவர் மாற்றி ஒருவர் சமையல் வேலைகளை பார்ப்போம் தண்ணீர் சாப்பிட்டுவிட்டு தண்ணீரில் குளிக்கும் சுகமே தனி தான்.. நன்றாக குளித்த பின் நல்ல பசி எடுக்கும் அப்ப மட்டன் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதெல்லாம் தண்ணீருக்குள்தான் இதன் சுகமும் சுவையும் தனிதான்...

இந்த மட்டன் வருவலும, கோச்சை கறியும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நண்பர்கள் நான் ஊருக்கு செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன் மற்ற அனுபவங்களுக்கு நேரமில்லை... ஆனால் இந்த கூட்டாஞ்சோறு கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடம் இன்றும் இருப்பது சந்தோசமான விசயமே...

27 comments:

{ கே.ஆர்.பி.செந்தில் } at: October 9, 2010 at 12:26 AM said...

நாங்கள் நண்பன் திருமணத்துக்கு சிவகங்கை போயிருந்தோம்.. அங்கு ஒரு முழு ஆட்டை அறுத்து, பாறையை கூட்டி சுத்தம் செய்து அதில் பெரிய கட்டைகளை போட்டு எரிய விட்டார்கள்... நன்கு தணல் வந்ததும் மீண்டும் சுத்தம் செய்து அறுத்த கறியை மிளகுதூள், உப்பு, காய்ந்த மிளகாய் இவைகளுடன் கலந்து சூடாக இருக்கும் பாறையில் போட்டதும் அது சூட்டில் நன்றாக வேகிறது.. அந்த கறியின் சுவை இன்றும் மறக்க முடியாதது...

{ Saravana kumar } at: October 9, 2010 at 12:35 AM said...

கொடுத்து வச்சவங்க

{ கோமாளி செல்வா } at: October 9, 2010 at 12:39 AM said...

//புரட்டாசி மாதத்தில் யார் வீட்டிலும் அசைவம் இருக்காது மாதம் மாதம் சாப்பிட்டு பழகியாச்சு என்ன செய்வது வீட்டில் செய்யமாட்டாங்க.//

எங்க ஊரிலும் தாங்க .. புரட்டாசி மாசம் சாப்பிட மாட்டோம் ..

{ கோமாளி செல்வா } at: October 9, 2010 at 12:42 AM said...

//இந்த மட்டன் வருவலும, கோச்சை கறியும் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் நண்பர்கள் நான் ஊருக்கு செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன் மற்ற அனுபவங்களுக்கு நேரமில்லை//

சரி சரி , நாளைக்கு வீட்டுக்குப் போனா போய் சாப்பிட்டு வாங்க ..

{ சங்கவி } at: October 9, 2010 at 1:13 AM said...

வாங்க செந்தில்...

இந்ந மாதிரியும் நான் சாப்பிட்டு இருக்கேன்.... இந்த சுவையும் மறக்க முடியாதது...

{ சங்கவி } at: October 9, 2010 at 1:15 AM said...

வாங்க செல்வகுமார்...

அடுத்த வாரம் போட்டுத் தாக்குவோம்....

{ சங்கவி } at: October 9, 2010 at 1:15 AM said...

வாங்க சரவணகுமார்..

தங்கள் வருகைக்கு நன்றி...

{ சி.பி.செந்தில்குமார் } at: October 9, 2010 at 1:38 AM said...

சாரி சங்கவி,நான் சைவம்,அதனால ஒன்லி அட்டெண்டன்ஸ் & ஓட்டு ,நோ கமெண்ட்டு (அப்போ இதுக்குப்பேரு என்ன?)

{ எஸ்.கே } at: October 9, 2010 at 1:40 AM said...

அருமையாக உள்ளது கட்டுரை! நன்றி நண்பரே!

{ நாஞ்சில் பிரதாப்™ } at: October 9, 2010 at 2:04 AM said...

செந்தில் ஜி சொன்னது நீங்க சொன்னது எல்லாமே புதுசா இருக்கு எனக்கு.

கோச்சை போன்ற வார்த்தைகளை இப்பத்தோன் கேள்விபடுகிறேன்..:)

{ Arul } at: October 9, 2010 at 2:43 AM said...

அடுத்த தடவை ஊருக்கு போகும் போது சொல்லுங்க சார் .. நானும் ஜாயின் பண்ணிக்கிறேன் :)

{ பிரவின்குமார் } at: October 9, 2010 at 3:56 AM said...

ஜமாய்ங்க சார்...!!!!

{ எம் அப்துல் காதர் } at: October 9, 2010 at 8:17 AM said...

ம்ம்ம் கூட்டஞ்சோறு அமர்க்கள படுது..!!

{ தமிழரசி } at: October 9, 2010 at 8:52 AM said...

எனக்கும் புரட்டாசி மாதம் எல்லாம் இல்லை..தெரியாமல் இந்த நேரம் படிக்கவந்தேன் பசிக்குது அதுவும் அசைவ உணவே வேணுமுன்னு இருக்கு...கூட்டாஞ்சோறு நினைவுகள் பின்னோக்கி,,,,

{ sakthi } at: October 9, 2010 at 8:57 AM said...

ஏனுங்க சங்கவி புரட்டாசி சனிக்கிழமை இப்படி கோழியையும் ஆட்டையும் கண்ணுல காட்டி மனசை ஒரு வழி பண்ணிப்போட்டீங்க போங்க!!!!

{ ஆரூரன் விசுவநாதன் } at: October 9, 2010 at 9:01 AM said...

ம்ம்ம்ம்ம்.....புரட்டாசி மாசமெழுதற பதிவா இது ??????

என்னமோ போங்க.....ப்ச்ச்ச்

யாதவன் at: October 9, 2010 at 10:45 AM said...

ஐயோ வாய் ஊருதுன்க்க

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: October 9, 2010 at 11:04 AM said...

ஆஹா தல இந்த பதிவை வாசிக்கும்பொழுது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட சொல்கிறது போங்க . அருமை பகிர்வுக்கு நன்றி

{ ம.தி.சுதா } at: October 9, 2010 at 12:34 PM said...

சகோதரா நீண்ட நாளின் பின் தங்கள் வீட்டுக்கு வந்தேன் நல்ல சாப்பாடு போட்டு அசத்திவிட்டீர்கள்...

{ தாரணி பிரியா } at: October 10, 2010 at 10:42 PM said...

ஆஹா நான் சைவமுங்க. ஆளை விடுங்க :)

{ goma } at: October 11, 2010 at 3:32 AM said...

நான் சுத்த சைவம்கோ.....

{ TERROR-PANDIYAN(VAS) } at: October 11, 2010 at 10:32 AM said...

கேக்கவே பொறாமையா இருக்கு.... அவ்வ்வ்வ்வ்

{ TERROR-PANDIYAN(VAS) } at: October 11, 2010 at 10:33 AM said...

@கே.ஆர்.வி

//அறுத்த கறியை மிளகுதூள், உப்பு, காய்ந்த மிளகாய் இவைகளுடன் கலந்து சூடாக இருக்கும் பாறையில் போட்டதும் அது சூட்டில் நன்றாக வேகிறது.. அந்த கறியின் சுவை இன்றும் மறக்க முடியாதது...//

சார்!!! ஏன் சார் நீங்க வேற இப்படி அழ விடறிங்க....

{ சீமான்கனி } at: October 11, 2010 at 6:33 PM said...

கூட்டாஞ்சோறு நல்ல ருசி வாழ்த்துகள் நண்பரே...

{ SENTHIL } at: October 12, 2010 at 2:05 AM said...

wow sama taste

{ கொங்கு நாடோடி } at: November 17, 2010 at 6:45 AM said...

கல்லூரி படிக்கும் காலத்தில், பொள்ளாச்சி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் அர்த்தனரிபாளயத்தில் இருந்து இரவு டயர் வெளிச்சத்தில் தாடகணாச்சி மலை ஏறி ஆடு மற்றும் கோழி சமைத்து சாப்பிட்டது, நடுநிசியில் மீண்டும் பசி எடுத்து மீதம் உள்ள கோழி கொழம்பு சாப்பிட்டது இன்னும் அந்த மணம் என்னக்கு நினைவில் இருக்கிறது. நல்ல பகிர்வு, என்னுடைய கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது.

{ கொங்கு நாடோடி } at: November 17, 2010 at 6:45 AM said...

கல்லூரி படிக்கும் காலத்தில், பொள்ளாச்சி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் அர்த்தனரிபாளயத்தில் இருந்து இரவு டயர் வெளிச்சத்தில் தாடகணாச்சி மலை ஏறி ஆடு மற்றும் கோழி சமைத்து சாப்பிட்டது, நடுநிசியில் மீண்டும் பசி எடுத்து மீதம் உள்ள கோழி கொழம்பு சாப்பிட்டது இன்னும் அந்த மணம் என்னக்கு நினைவில் இருக்கிறது. நல்ல பகிர்வு, என்னுடைய கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது.

Post a Comment