Pages

"சங்கவி" மிக மிக அடங்கவில்லை

Tuesday, September 28, 2010

மிக மிக அடங்கவில்லை இந்த வார்த்தை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு மட்டுமல்ல நம்மில் பல பேர் இந்த வார்த்தையை அனுபவித்து இருப்பார்கள்.

நான் முதன் முதலில் இவ்வரிகளை கேட்க ஆரம்பித்தது 6ம் வகுப்பு படிக்கும் போது. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வகுப்பு தலைவனை நியமித்து இருப்பார்கள் இவர்கள் நன்றாக படிக்கும மாணவனா இருப்பதால் இவர்களை கைக்குள் போடுவது கஷ்டம் நான் சிறுவயது முதல் கொஞ்சம் குறும்பு செய்யும் மாணவன் அதனால் மிக மிக அடங்கவில்லை எனும் இவ்வரிகள் இன்றும மறக்கவில்லை.
வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பேசினால் கரும்பலகையில் அடங்கவில்லை என்றும் இரண்டாவது முறை பேசினால் மிக அடங்கவில்லை ரொம்ப பேசினால் மிக மிக அடங்கவில்லை என்று எழுதிவைத்து விடுவார்கள் அடுத்த வகுப்பிற்கு வரும் ஆசிரியர் தரம் வாரியாக பிரித்து உதைப்பார்கள்..
ஒரு நாள் எங்கள் வகுப்பில் ஆசிரியர் வரவில்லை என்றதும் புத்தகத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தோம் அப்போது வகுப்புத் தலைவன் எங்களை கண்டுக்கமாட்டான் அவனுக்கு இடைவேளையில் ஐஸ் வாங்கிக் கொடுத்து எங்க ஆளாக மாற்றி இருந்தோம் (அப்பவே லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சாச்சு) அவன் சைட் அடித்த பெண்ணைப் பார்த்து நான் சிரித்து விட்டேன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் தலைமையாசிரியர் வருகிறார் என்றதும் எங்கள் பேரை எழுதிவிட்டான் மற்றவர்கள் பெயர் அடங்கவில்லை எனக்கு மட்டும் மிக மிக அடங்கவில்லை.

என்ன செய்வது என்று வேண்டாத சாமி எல்லாம் வேண்டினோம் தலைமையாசிரியர் கையில் கிடைத்தால் பின்னி பெடலெடுத்துருவார். அதுவும் என்னைப் பார்த்தால் இன்னும் அடிப்பார். ஏற்கனவே பள்ளியில் தேங்காய் திருடி சாப்பிட்டதால் எங்கப்பாவை வரச்சொன்னார்கள் அவர் வந்து முட்டிக்கு கீழே அடி பின்னிடுங்க நாங்கள் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதனால இன்னிக்கு நமக்கு உண்டு என எல்லா சாமியையும் வேண்டினேன். தலைமையாசிரியர் வந்தவர் எழுதிய பேர் எல்லாம் அப்படியே இருக்கட்டும் இதோ வருகிறேன் என பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அதே சமயம் எங்கள் வகுப்புத் தலைவனை அழைத்து அலுவலகம் சென்று பெரம்பு எடுத்து வா என்று கூறினார். அவன் சென்றதும் இன்றைக்கு நமக்கு பூஜை சிறப்பாக இருக்கும் என எங்களுக்குள் ஆளாளுக்கு பார்த்துக்கொண்டு இருந்தோம். தீடிரென யோசனை வந்து எழந்து சென்று என் பெயரை அடித்துவிட்டு வகுப்புத்தலைவன் பெயரை எழுதிவிட்டு வந்துவிட்டேன்.

அவன் வந்ததும் தலைமையாசிரியர் உள்ளே வந்தார் பிரம்புடன். வந்ததும் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு பின்னினார். 4 பேரை அடித்த உடன் அந்த வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்கான மணி ஒலித்தது. அப்ப நா கும்பிட்ட சாமி கைவிடல என நிம்மதியாக உட்கார்ந்து இருந்தேன். அவரும் புறப்பட முற்பட்டார் அதற்குள் வகுப்புத் தலைவன் ஐயா என் பேர் இதுல எப்படி வந்தது என தெரியல எனக்கூற வகுப்பில் ஒரே மயான அமைதி வகுப்பில் அனைவரையும் பார்த்த அவர் என்னைக்கூப்பிட்டு நீ எழுதினாய என்றார். நான் திரு திரு என முழிக்க நீ தான் எழுதியிருப்ப அடங்காதவன் என்று திட்டினார் அதற்குள் எனக்குப் பிடிக்காத ஒரு மாணவி ஆமாம் என தலையாட்ட அப்புறம் எல்லோரும் ஆமாம் போட என்னை அவர் கும்மி விட்டார்.

அதில் இருந்து எங்க பார்த்தாலும் அடங்காதவனே என்பார். என் சகாக்கள் எல்லாம் மிக மிக அடங்கவில்லை என்றால் என்னைப்பார்த்து நக்கல் சிரிப்பு சிரிப்பார்கள். நான் ரொம்ப அடங்காமல் போனதால் என்னை அடுத்த வருடமே விடுதியில் விட்டு விட்டார்கள்.

இதற்குப்பின் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் போது எங்கள் செய்தி ஆசிரியர் என்னப்பா செய்யறீங்க என்பார் நான் எழுந்து சார் ரகு அடங்கவில்லை, மோகன் மிக அடங்கவில்லை என்பேன் உடனே அவர் நீ மிக மிக அடங்கவில்லை என்று ஒரு தட்டு தட்டுவார் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வார்த்தை மிக மிக அடங்கவில்லை....

19 comments:

யாதவன் at: September 28, 2010 at 10:26 PM said...

உங்கள் படைப்பை வாசிக்கும் போது
சிரிப்பு
அடங்கவில்லை
இல்லை
மிக அடங்கவில்லை
இல்லை இல்லை
மிக மிக அடங்கவில்லை

{ பிரவின்குமார் } at: September 28, 2010 at 10:26 PM said...

தங்களது அனுபவ கட்டுரை பகிர்வும் மிக மிக அருமை சங்கவி சார்.

{ மங்குனி அமைச்சர் } at: September 28, 2010 at 10:28 PM said...

//எனக்குப் பிடிக்காத ஒரு மாணவி ஆமாம் என தலையாட்ட அப்புறம்///

மோதல் அப்புறம் காதல்ல போய் முடிஞ்சிருக்குமே ? அதை பத்தி ஒன்னும் எழுதல???

{ ஜெரி ஈசானந்தன். } at: September 28, 2010 at 10:38 PM said...

பால்ய நினைவுகள்.ரசித்தேன்..என்னையும் தான் சேட்டை பொறுக்கமுடியாமல் விடுதியில் தள்ளிவிட்டார்கள்..

{ Saravana kumar } at: September 28, 2010 at 10:39 PM said...

ஞாபகம் வருது ஞாபகம் வருது.!நானும் உங்கள மாதிரி தான். செம ஆடி வாங்கி இருக்கேன்.

{ என்னது நானு யாரா? } at: September 28, 2010 at 10:52 PM said...

நல்லா தமாஷாவே உங்க அனுபவத்தை கூச்சப்படாம சொல்லி இருக்கீங்க சதீஷ். வாழ்த்துக்கள்.

எப்படி இருக்கீங்கப்பு? நம்ப கடைக்கு நேரம் இருக்கும் போது வந்துப் போங்க!

{ இந்திரா } at: September 28, 2010 at 11:03 PM said...

சிரிப்பு மிக மிக அடங்கவில்லை..

அது சரி.. யார்ப்பா அந்த மாணவி??

::))

{ dheva } at: September 28, 2010 at 11:58 PM said...

அடங்கவில்லை வச்சு இம்புட்டு சொல்லிப்புட்டீக.. எங்களாலும் அடங்க முடியல பாஸ்!

{ திருஞானசம்பத்.மா. } at: September 28, 2010 at 11:58 PM said...

எங்கள் வகுப்பில் மிக மிக அடங்கவில்லை என்பதை M.M.A. என்று போடுவார்கள், என் பெயருக்கு பின்னால் உள்ள M.M.A.வை M.L.A.வாக திருத்தி எழுதி வைத்து விடுவேன். அப்புறமென்ன ஆசிரியர் பார்த்ததும் கும்மிதான்.. :-))

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: September 29, 2010 at 12:49 AM said...

கடந்த நினைவுகளை மீண்டும் கண் முன் நிறுத்தியது தங்களின் இந்த மிக அடங்கவில்லை என்றப் பதிவு . பள்ளிக் கால நினைவுகள் எல்லாம் இப்பொழுதும் பசுமையாக அவ்வப்பொழுது தோன்றி மறையும் ஏதேனும் ஒரு நிகழ்வின் பின்னே நின்று ரசித்துகொண்டிருக்கிறது . பகிர்வுக்கு நன்றி நண்பரே

{ தமிழரசி } at: September 29, 2010 at 4:22 AM said...

மிக மிக அடங்கவில்லை

மிகையுள் அடங்கியது பதிவு சங்கவி..

{ வெறும்பய } at: September 29, 2010 at 4:38 AM said...

இந்த பதிவை படிக்கும் போதே என் மனமும் பள்ளி நாட்க்களை எட்டி பார்த்து வந்தது.. இது போன்ற சிறு வயது நினைவுகளை எளிதில் மானது விட முடியாது....

நல்ல பகிர்வு...

{ ஆனந்தி.. } at: September 29, 2010 at 6:04 AM said...

நல்லா இருந்தது சதீஷ்..அடங்க வில்லை வச்சு..நேர்த்தியா பதிவு போட்ட உங்க திறமை பார்த்து எனக்கு ஆச்சர்யம் அடங்க வில்லை..

{ அன்பரசன் } at: September 29, 2010 at 8:51 AM said...

நல்ல பகிர்வு.

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: September 29, 2010 at 10:17 AM said...

மிக அருமை

{ வினோ } at: September 29, 2010 at 10:48 AM said...

சிரிப்பு மிக மிக அடங்கவில்லை..

நான் பள்ளியில் நல்ல புள்ளைங்கோ...

{ சீமான்கனி } at: September 29, 2010 at 5:35 PM said...

எனக்கு என் பள்ளிகால நினைவுகள் வந்து போனது நானும் நல்லா சிரித்துக் கொண்டேன்...நல்லா சுவையான எழுத்துகள்...வாழ்த்துகள்...

{ சி.பி.செந்தில்குமார் } at: September 29, 2010 at 8:17 PM said...

padhivulakilபதிவுலகில் ஒரு ஆட்டோகிராஃப்..வாழ்த்துக்கள்

{ "உழவன்" "Uzhavan" } at: September 30, 2010 at 3:59 AM said...

நல்ல அனுபவம்தான்.. நிறைய பேருக்கு இப்படி பல அனுபவம் இருக்கும் :-)

Post a Comment