Pages

சாப்ட்வேர் இன்ஜினியரின் தொலைந்த வாழ்க்கை

Wednesday, September 8, 2010
சாப்ட்வேர் இன்ஜினியர்களின் புலம்பல்கள் பற்றி இப்ப நிறைய மின்னஞ்சல்கள் எனக்கு வருகின்றன.. இதற்கு முன் ஒரு இன்ஜினியரின் புலம்பல் இடுக்கை அதை பார்த்த நண்பர்கள் மட்டும் ஏராளம் அந்த புலம்பல அனைவரையும் கொண்டு சேர்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதே போல் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற கவிதையை படித்து ரசியுங்கள்... இதை நான் எழுதுலீங்கோ...
 
சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!!
இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!!

அரை அடி இடைவெளியில்
ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
அந்நியப்பட்டவர்கள் போல்
திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!

விருப்பங்களுக்கேற்ற நீராகாரம்
விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்!
விடிய விடிய வேலை
விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்!

அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்!
இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்!

இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்!

உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை!

மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்!

முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.

விடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்
ஈடுகட்டும் வாடகை தாய்!!!

பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
கதகதகப்பில் உறங்கும்

எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

கை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது!

நெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது
மடிந்துதான் போகின்றன!!


கண்களில் தோன்றிய  கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன!

நித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன!

அன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்!

இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
தொலைத்து விட்டேன்!!!
 
நன்றி http://ananyasrinivasan.spaces.live.com/blog/cns!1A5F7FB277BF9159!139.entry

15 comments:

{ Saravana kumar } at: September 8, 2010 at 1:50 AM said...

மீ தி first

pinkyrose at: September 8, 2010 at 2:21 AM said...

அரை அடி இடைவெளியில்
ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
அந்நியப்பட்டவர்கள் போல்
திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!
//

நிஜமான நிஜம்

{ கோமாளி செல்வா } at: September 8, 2010 at 2:46 AM said...

//இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
தொலைத்து விட்டேன்!!///
இது உண்மைதாங்க..!!
சாப்ட்வேர் இன்ஜினியரின் வாழ்கையை படம்பிடிச்சு காட்டிடாங்க..

{ பின்னோக்கி } at: September 8, 2010 at 2:57 AM said...

:(

{ வெறும்பய } at: September 8, 2010 at 3:21 AM said...

பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
கதகதகப்பில் உறங்கும்

எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

//

வேதனையின் உச்சம்... பல குழந்தைகளின் நிலை இது தான்...

யாதவன் at: September 8, 2010 at 3:30 AM said...

முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.
உண்மை தான் நண்பா

{ angel } at: September 8, 2010 at 3:55 AM said...

nice

{ சேட்டைக்காரன் } at: September 8, 2010 at 4:18 AM said...

கவிதை நன்றாகவே இருக்கிறது! சந்தேகமில்லை! ஆனால், ஏதோ மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறவர்களுக்கு மட்டும்தான் இவ்வளவு பிரச்சினை என்பது போல எழுதப்பட்டிருப்பது நெருடல்!

{ என்னது நானு யாரா? } at: September 8, 2010 at 4:18 AM said...

பொருளாதார பேய் துரத்தும் போது ஓடித்தானே ஆகவேண்டி உள்ளது.

இன்பத்தை தொலைத்து பல லட்சங்களை சம்பாதித்து யாருக்கு என்ன பயன். அவை எல்லாம் வெறும் காகித குப்பை தான் என்று, தெரிய வருகிறதோ, அப்போது அந்த துன்பத்தில் இருந்து விலகி விடும் பக்குவம் வந்துவிடும்.

இது ஏதோ, சாஃப்ட்வேர் பணியாளர்களுக்கு மட்டும் தான் இந்த நெறுக்கடி அல்ல. அனைவருக்கும இதே கதை தான்.

மாற்றங்கள் சாத்தியமே! இயற்கை வாழ்வியலுக்கு நாம் திரும்பினால்.

அதை தான் நானும் எழுதிகொண்டிருக்கின்றேன் என் வலைபக்கத்தில். விருப்பம் இருப்பவர்களை என் எழுத்தை படிக்க அழைக்கின்றேன்.

http://uravukaaran.blogspot.com/

நன்றி நண்பர்களே! மாற்றத்தை கொண்டு வருவோம்!

{ Selvaraj } at: September 8, 2010 at 4:54 AM said...

இதற்கு தீர்வு காண ஒரு மென் பொருளை சீக்கிரம் இந்த பொறியாளர்கள் கண்டுபிடிப்பார்களாக!

{ தமிழரசி } at: September 8, 2010 at 10:44 PM said...

என்னங்க சங்கவி நல்லா சம்பாதிக்கிறாங்க செலவு செய்றாங்க வாழ்க்கையை நல்லா அனுபவிக்கிறாங்கன்னு நினைச்சா இப்படி சொல்றீங்க...

{ சாமக்கோடங்கி } at: September 10, 2010 at 6:18 AM said...

பல மென்பொறியாளர்களின் வாழ்க்கையை பிரதிபளித்ததைப் போல் இருக்கிறது.. பெங்களூரில் இருக்கும் எங்கள் நிறுவனத்தின் மற்றொரு அலுவலகத்திற்குள் செல்லும்போது இதை உணர்ந்தேன்.. சிறிது கூட சத்தம் இல்லை.. அனைவரும் காதுக்குள் கருவியைப் பொருத்திக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டருக்குள் மூழ்கி இருந்தனர்.. எனக்கு அது கொடுமையாகத் தெரிந்தது.. ஆனால் நான் இருக்கும் இடம் அப்படி இல்லை.. ஜாலியாக பேசிக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு, கலாய்த்துக் கொண்டு, அப்புறம் சத்தம் போட்டு ஜாலியாகத் திட்டிக் கொண்டு... படு ஜாலியாக இருக்கும்.. ஒருவனை ஒருவன் தள்ளிக் கொண்டு வளர்ச்சியைத் தடுத்து முன்னேற வேண்டும் என்ற உள்மன ஆசை கொண்டவர்கள் இருக்கும் இடம் மயானம் போலத் தான் இருக்கும்.. எங்களுக்குள் அப்படி ஒரு மனப்பான்மை குறைவாக இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.. அதனால் சந்தோஷமாக இருக்கிறோம்.. யாரும் இந்தச் சூழ்நிலையை மாற்றாமல் இருக்க வேண்டும்..வாழ்க்கை என்பது சந்தோஷம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்..

நன்றி..

{ Pradeep T R } at: September 10, 2010 at 7:35 AM said...

அருமை!

{ முனியாண்டி } at: September 10, 2010 at 7:55 PM said...

It's very good one. I can relate myself

{ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan } at: September 18, 2010 at 12:22 PM said...

//சேட்டைக்காரன் said...
கவிதை நன்றாகவே இருக்கிறது! சந்தேகமில்லை! ஆனால், ஏதோ மென்பொருள் துறையில் வேலை பார்க்கிறவர்களுக்கு மட்டும்தான் இவ்வளவு பிரச்சினை என்பது போல எழுதப்பட்டிருப்பது நெருடல்!
September 8, 2010 4:18 AM//

Repeat..

சங்கவி,

அனைவரும் இது போல் வாழ்வதில்லை என்பதும்.. மற்ற துறைகளில் இதை விட மோசமான வேலை நேரம் உள்ளது என்பதும்.. உண்மை.

ஆனால்... மென்பொருள் துறையினர் கஷ்டப்படுவதாகக் கூறும் பொழுது நமக்கு ஒரு வித மகிழ்ச்சி (பொறாமையால்) ஏற்படுவது தான் உண்மை.

Post a Comment