Pages

கதை... விடுகதை...

Monday, September 6, 2010

விடுகதை சொல்வதும் அதற்கு பதில் சொல்வதும் ஒரு சுவரஸ்யமான விசயம். சிறுவயதில் குழந்தைகளுக்கு கதை சொல்வது விடுகதை சொல்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும். விடுகதை சொல்வதால் அக்குழந்தைகளுக்கு யோசிக்கும் திறுனும் அதன் பதில் தெரிந்ததும் இந்த பொருளை இப்படியும் கூறலாமா என நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். விடுகதை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ரொம்ப யோசிக்க வைக்கும்.

விடுகதைகளை பல இடங்களில் பயன்படுத்தலாம் எனக்குத் தெரிந்த நான் படித்த நான் சொன்ன விடுகதைகள் சிலவற்றை கொடுக்கிறேன்... சரியான பதில் சொல்பவர்களுக்கு குருவி ரொட்டி, குச்சி முட்டாய், இலந்த வடை, இலந்த தூள், இஞ்சி மரப்பான் பரிசாக அனுப்பப்படும்..

1. கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?

2. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? 
3. ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்?

4. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்?

5.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம், அது என்ன ?

6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?

7. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

8. ஓடுப்பான்! பிச்சை, ஒரு நாளும் கண்டறியான்!காடுறைவான்! தீர்த்தக்கரை சேர்வான்! - தேட நடக்குங்கால் நாலுண்டு!நல்தலை ஒன்றுண்டு! -அது என்ன? 

9.  ஆயிரம் பேர் பார்க்க ஆத்தங்கரை ஓரத்திலே கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல் கன்னத்தைக் கடிக்கிறாள்  கள்ளியவள்-அது என்ன?

10.சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

11. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன?
 
12. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?

13. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?

14. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

15. நீந்தத் தெரியும் மீனில்லை; நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை; இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா? 

இந்த விடுகதை எல்லாம் கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கும்... உங்களின்  பதிலை எதிர்பார்க்கிறேன்...

13 comments:

{ எல் கே } at: September 6, 2010 at 10:11 PM said...

15. penguin

{ ரஹீம் கஸாலி } at: September 6, 2010 at 10:40 PM said...

1) குயில்
2 ) அடுப்பு
3 ) குடை
4 ) தொலை பேசி அல்லது கடிதம்
5 ) தேன்கூடு
7) சூரியன்
10 ) தீக்குச்சி
12 ) தொலைபேசி
13 ) நட்சத்திரம்
14) கானல்நீர்
15) கோழி
ஏதோ என்னால முடிஞ்சது.

{ Saravana kumar } at: September 6, 2010 at 10:47 PM said...

10.தீக்குச்சி

{ Balaji saravana } at: September 6, 2010 at 11:05 PM said...

ஹி ஹி எப்போ விடை சொல்லுவீங்க பாஸ்?

{ Deepa } at: September 6, 2010 at 11:05 PM said...

1. குயில்
2. அடுப்பு, பாய்லர்?
3.
4. தபால்
5. தேன்கூடு
6.
7. வான‌ம்
8.
9.
10. தீக்குச்சி
11.
12. அலார‌ம்
13. ந‌ட்ச‌த்திர‌ம்
14. க‌ண்ணீர்
15. வாத்து

{ sakthi } at: September 7, 2010 at 1:09 AM said...

எங்கே இருந்து இப்படியெல்லாம் யோசிக்கறீங்க, நடத்துங்க நடத்துங்க பாஸ்

{ வெறும்பய } at: September 7, 2010 at 3:00 AM said...

அடடா கொஞ்சம் லேட்டா வந்திட்டனே... எல்லாத்தியும் சொல்லிட்டாங்களே..

{ தமிழரசி } at: September 7, 2010 at 3:16 AM said...

முதல் விடை தான் தெரியும் அதனால் தான் சமார்த்தியமா அடிக்கடி வந்து விடையை மட்டும் பார்த்துட்டு போறேன்..

{ சத்ரியன் } at: September 7, 2010 at 4:05 AM said...

சங்கவி,

வீட்டுல பாட்டி இன்னுமா இருக்காங்க?

{ என்னது நானு யாரா? } at: September 7, 2010 at 4:28 AM said...

என்ன இது சின்ன புள்ள தனமா விடுகதை எல்லாம் போட்டுகிட்டு? உங்களுக்கு வெக்கமா இல்லை?

(கேள்விக்கு எல்லாம் விடை தெரியாதுன்னு நேரடியா எப்படி சொல்றது? அதனால தான் உங்களையே கலாய்த்தது)

{ சேட்டைக்காரன் } at: September 7, 2010 at 5:21 AM said...

அண்ணே, இது நியாயமா, அடுக்குமா? தர்மமா? நானே மொக்கை போட்டுப் பொழைப்பை நடத்திட்டிருக்கேன். இது மாதிரி அறிவு சம்பந்தப்பட்ட கேள்வியெல்லாம் கேட்டா எப்படி? நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணறேன்?

{ கோமாளி செல்வா } at: September 7, 2010 at 6:08 AM said...

ஹா ஹா .. நேரம் கழிச்சு வந்தது நல்லதா போச்சு ..
விடை கீழேயே இருக்கு ..!!

{ சங்கவி } at: September 8, 2010 at 1:25 AM said...

விடுகதைக்கு முயற்சி எடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நிறைய பதில்கள் சரியாக சொல்லி இருக்கறீங்க ஆனா எல்லா விடுகதைக்கும் யாரும் சொல்லல நானே சொல்றேன்...

1. கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ? (குயில்)


2. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? (தபால் பெட்டி)


3. ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்? (குடை)


4. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்? (தந்தி)


5.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம், அது என்ன ?
(தேன்கூடு)

6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?(சோடா)


7. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? (கடல் அலை)


8. ஓடுடுப்பான்! பிச்சை, ஒரு நாளும் கண்டறியான்!காடுறைவான்! தீர்த்தக்கரை சேர்வான்! - தேட நடக்குங்கால் நாலுண்டு!நல்தலை ஒன்றுண்டு! -அது என்ன? (ஆமை)


9. ஆயிரம் பேர் பார்க்க ஆத்தங்கரை ஓரத்திலே கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல் கன்னத்தைக் கடிக்கிறாள் கள்ளியவள்-அது என்ன? (திரைப்படம்)


10.சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? (தீக்குச்சி)


11. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன? (ஊசி நூல்)12. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன? (சங்கு)


13. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன? (கோலம்)


14. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? (கண்ணீர்)


15. நீந்தத் தெரியும் மீனில்லை; நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை; இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா? (வாத்து)

Post a Comment