Pages

எந்திரன் மெகா ஹிட்... முதல் தகவல் அறிக்கை!

Thursday, September 30, 2010

"சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை... எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்... குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!"

- எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை' இது என்றால் மிகையல்ல.

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர்.

படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்:

"சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார்.

ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

நன்றி http://thatstamil.oneindia.in/movies/specials/2010/09/rajini-enthiran-fir-tickets-mega-hit.html

13 comments:

{ எல் கே } at: September 30, 2010 at 2:27 AM said...

தலைவர்னாலே ஹிட் தான்

{ தமிழரசி } at: September 30, 2010 at 2:39 AM said...

சங்கவி இப்பவே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டறீங்களே...

{ வெறும்பய } at: September 30, 2010 at 2:55 AM said...

தலைவா... இன்னும் மூணு மணி நேரம் தான்.... பாத்திருவோமில்ல...

{ வினோ } at: September 30, 2010 at 2:59 AM said...

நான் பார்க்க அட்லீஸ்ட் இன்னும் முப்பது நாள் ஆகும்.. பகிர்வுக்கு நன்றி

Anonymous at: September 30, 2010 at 3:03 AM said...

Just an Average Movie. Rajini's performance is also average.

{ சே.குமார் } at: September 30, 2010 at 3:10 AM said...

hit illainalum rajinikkaaka parkkum koottam irukkilla... athu poga sun pictures hit akkida mattanga.

nanum kalaiyil velaikku varum podhu parththean abu dhabiyil 7.30 mani katchikku koodi iruntha koottaththai.

{ பாலகுமாரன், வத்திராயிருப்பு. } at: September 30, 2010 at 3:21 AM said...

"endhiran" 5 shows today here in kuwait. waiting for 3.45pm, & 10.45pm today www.kncc.com

யாதவன் at: September 30, 2010 at 3:38 AM said...

சுவாரசியமா சுட சுட எழுதி ஏனைய எங்கள டென்ஷன் படுத்திரியல் .
--

{ பிரவின்குமார் } at: September 30, 2010 at 6:23 AM said...

இன்னும் சில மணி நேரங்களில் நமது தமிழ் பதிவர்களின் பெரும்பாலன பதிவுகளின் தலைப்பு எந்திரன் திரைவிமர்சனம் என்பதாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. முதல் தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: September 30, 2010 at 7:00 AM said...

செம ஹிட் பதிவு நிங்க ளும் எழுதிட்டீங்களா

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: September 30, 2010 at 7:00 AM said...

சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை//
ஆனா பழைய ஸ்டில் போட்ருக்கீங்க

{ பின்னோக்கி } at: September 30, 2010 at 7:09 AM said...

வாவ் ஹிட்டா... பார்க்குறத்துக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்..

{ சேட்டைக்காரன் } at: September 30, 2010 at 8:06 AM said...

வயித்துலே பால்பாயாசத்தை வார்த்தீங்க தல...! வாழ்க பல்லாண்டு...!

Post a Comment