Pages

எந்திரன் மெகா ஹிட்... முதல் தகவல் அறிக்கை!

Thursday, September 30, 2010 13 comments

"சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை... எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்... குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!"

- எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை' இது என்றால் மிகையல்ல.

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர்.

படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்:

"சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார்.

ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

நன்றி http://thatstamil.oneindia.in/movies/specials/2010/09/rajini-enthiran-fir-tickets-mega-hit.html
Read more »

"சங்கவி" மிக மிக அடங்கவில்லை

Tuesday, September 28, 2010 19 comments

மிக மிக அடங்கவில்லை இந்த வார்த்தை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு மட்டுமல்ல நம்மில் பல பேர் இந்த வார்த்தையை அனுபவித்து இருப்பார்கள்.

நான் முதன் முதலில் இவ்வரிகளை கேட்க ஆரம்பித்தது 6ம் வகுப்பு படிக்கும் போது. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வகுப்பு தலைவனை நியமித்து இருப்பார்கள் இவர்கள் நன்றாக படிக்கும மாணவனா இருப்பதால் இவர்களை கைக்குள் போடுவது கஷ்டம் நான் சிறுவயது முதல் கொஞ்சம் குறும்பு செய்யும் மாணவன் அதனால் மிக மிக அடங்கவில்லை எனும் இவ்வரிகள் இன்றும மறக்கவில்லை.
வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பேசினால் கரும்பலகையில் அடங்கவில்லை என்றும் இரண்டாவது முறை பேசினால் மிக அடங்கவில்லை ரொம்ப பேசினால் மிக மிக அடங்கவில்லை என்று எழுதிவைத்து விடுவார்கள் அடுத்த வகுப்பிற்கு வரும் ஆசிரியர் தரம் வாரியாக பிரித்து உதைப்பார்கள்..
ஒரு நாள் எங்கள் வகுப்பில் ஆசிரியர் வரவில்லை என்றதும் புத்தகத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தோம் அப்போது வகுப்புத் தலைவன் எங்களை கண்டுக்கமாட்டான் அவனுக்கு இடைவேளையில் ஐஸ் வாங்கிக் கொடுத்து எங்க ஆளாக மாற்றி இருந்தோம் (அப்பவே லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சாச்சு) அவன் சைட் அடித்த பெண்ணைப் பார்த்து நான் சிரித்து விட்டேன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் தலைமையாசிரியர் வருகிறார் என்றதும் எங்கள் பேரை எழுதிவிட்டான் மற்றவர்கள் பெயர் அடங்கவில்லை எனக்கு மட்டும் மிக மிக அடங்கவில்லை.

என்ன செய்வது என்று வேண்டாத சாமி எல்லாம் வேண்டினோம் தலைமையாசிரியர் கையில் கிடைத்தால் பின்னி பெடலெடுத்துருவார். அதுவும் என்னைப் பார்த்தால் இன்னும் அடிப்பார். ஏற்கனவே பள்ளியில் தேங்காய் திருடி சாப்பிட்டதால் எங்கப்பாவை வரச்சொன்னார்கள் அவர் வந்து முட்டிக்கு கீழே அடி பின்னிடுங்க நாங்கள் கேட்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதனால இன்னிக்கு நமக்கு உண்டு என எல்லா சாமியையும் வேண்டினேன். தலைமையாசிரியர் வந்தவர் எழுதிய பேர் எல்லாம் அப்படியே இருக்கட்டும் இதோ வருகிறேன் என பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அதே சமயம் எங்கள் வகுப்புத் தலைவனை அழைத்து அலுவலகம் சென்று பெரம்பு எடுத்து வா என்று கூறினார். அவன் சென்றதும் இன்றைக்கு நமக்கு பூஜை சிறப்பாக இருக்கும் என எங்களுக்குள் ஆளாளுக்கு பார்த்துக்கொண்டு இருந்தோம். தீடிரென யோசனை வந்து எழந்து சென்று என் பெயரை அடித்துவிட்டு வகுப்புத்தலைவன் பெயரை எழுதிவிட்டு வந்துவிட்டேன்.

அவன் வந்ததும் தலைமையாசிரியர் உள்ளே வந்தார் பிரம்புடன். வந்ததும் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு பின்னினார். 4 பேரை அடித்த உடன் அந்த வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்கான மணி ஒலித்தது. அப்ப நா கும்பிட்ட சாமி கைவிடல என நிம்மதியாக உட்கார்ந்து இருந்தேன். அவரும் புறப்பட முற்பட்டார் அதற்குள் வகுப்புத் தலைவன் ஐயா என் பேர் இதுல எப்படி வந்தது என தெரியல எனக்கூற வகுப்பில் ஒரே மயான அமைதி வகுப்பில் அனைவரையும் பார்த்த அவர் என்னைக்கூப்பிட்டு நீ எழுதினாய என்றார். நான் திரு திரு என முழிக்க நீ தான் எழுதியிருப்ப அடங்காதவன் என்று திட்டினார் அதற்குள் எனக்குப் பிடிக்காத ஒரு மாணவி ஆமாம் என தலையாட்ட அப்புறம் எல்லோரும் ஆமாம் போட என்னை அவர் கும்மி விட்டார்.

அதில் இருந்து எங்க பார்த்தாலும் அடங்காதவனே என்பார். என் சகாக்கள் எல்லாம் மிக மிக அடங்கவில்லை என்றால் என்னைப்பார்த்து நக்கல் சிரிப்பு சிரிப்பார்கள். நான் ரொம்ப அடங்காமல் போனதால் என்னை அடுத்த வருடமே விடுதியில் விட்டு விட்டார்கள்.

இதற்குப்பின் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் போது எங்கள் செய்தி ஆசிரியர் என்னப்பா செய்யறீங்க என்பார் நான் எழுந்து சார் ரகு அடங்கவில்லை, மோகன் மிக அடங்கவில்லை என்பேன் உடனே அவர் நீ மிக மிக அடங்கவில்லை என்று ஒரு தட்டு தட்டுவார் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வார்த்தை மிக மிக அடங்கவில்லை....
Read more »

சளியை விரட்டும் கற்பூரவல்லி

Monday, September 27, 2010 22 comments

கற்பூரவல்லி இது ஓர் அற்புதமான மூலிகை செடி இது ந்ம ஊர்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனுக்கு சளி தொல்லை அதிகமாக இருந்தது அப்போது வீட்டு பெிாயவர்கள் சொன்ன ஓர் அற்புதமான மருந்து செடி தான் இது. இதன் பயன்களை கேட்க கேட்க ஆச்சர்யப்பட வைத்தது. இச்செடியின் தாயகம் இந்தியாதான். இது அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நம் வீட்டிலும் வளர்த்தலாம்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.பயன்கள்
 • கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. 
 • வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
 • இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.
 • இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
 • இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
 • இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
 • இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
 • கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
 • தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும். 
 • மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். 
 • சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
Read more »

மாணவர்களுக்கு தேவை உடற்கல்வி

Tuesday, September 21, 2010 23 comments
இன்று நம் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்று அனைத்து பெற்றோர்களும் எவ்வளவு செலவானலும் பரவாயில்லை என் மகன் படிக்க வேண்டும் என்று பணத்தை கொட்டி தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கின்றனர். குழந்கைகளுக்கு எந்த அளவிற்கு கல்வி முக்கியமோ அந்த அளவிற்கு உடற்கல்வியும் முக்கியம்.
இன்று நம் நாட்டில் உள்ள பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை அதுவும் தனியார் பள்ளியில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் குறைவு. உடற்கல்வியில் விளையாட்டு மட்டுமின்றி சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு யோகசனம், மூச்சுப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகளை பள்ளியில் இருந்தே சொல்லித் தருவதன் மூலம் அவர்களது உடல் நலமும் நலமாக இருக்கும்.

நம் நாட்டு கல்வி முறையில் உடற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை இது இன்று மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் இருந்து இதுதான் நடைமுறை. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் உடற்கல்விக்கென இரண்டு மணி நேரம் ஒதுக்குகிறார்கள் இது மிகவும் குறைவு. ஆனால் தனியார் பள்ளிகளில் உடற்கல்விக்கு என நேரம் ஒதுக்கும் பள்ளிகள் குறைவுதான்.

இன்றைய வேகமான காலநிலையில் ஒரு மாணவன் காலை முதல் இரவு தூங்கும் வரை விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அவனுக்கு படிப்பு படிப்பு தான். படிப்பு முக்கியம் தான் அந்த அளவிற்கு அவனது உடல் நிலையும் முக்கியம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஒரு மாணவனுக்கு சிறுவயது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உடற்கல்வியை சொல்லித் தருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் அவனது அரோக்கியம் என்ற கல்வி அவனுக்கு போதிக்கப்படுகிறது. நம் கல்வி முறையில் உடல் கல்விக்கு முக்கியத்துவம் இல்லாததால் நிறைய விளையாட்டு வீரர்களை நாம் இழந்து இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் விளையாட்டின் போதும் நம் 100 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் வளரும் நாடுகளில் மிகமுக்கியமான நாடு நம் நாடு எத்தனை பதக்கங்கள் வாங்குகிறோம் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை ஒரு வெங்கல பதக்கம் வாங்கினவே அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நிலைதான் இங்கு உள்ளது.


ஒருவன் விளையாட்டு வீரன் ஆக உருவாக்குவது அவன் கல்வி முறையில் தான் உள்ளது. நல்ல பயிற்சி கொடுத்தால் 100 கோடியில் 100 உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரனை உருவாக்கலாம் இதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. எங்கு இருந்து பயிற்சி தொடங்க வேண்டும் என்றால் நிச்சயம் பள்ளியில் இருந்து தான் தொடங்க வேண்டும். இன்றைய நிலையில் அரசு பள்ளியில் மட்டுமே விளையாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தருகிறார்கள் அதாவது வாரத்தில் இரண்டு மணிநேரம் ஒதுக்குகிறார்கள் ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்பது தான் நிலை.


விளையாட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் தருவதற்கு அரசு தனது சட்ட திட்டங்களை கடுமையாக ஆக்கினால் அனைத்து பள்ளிகளிலும் நிச்சயம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தராளம். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகலுக்கு அங்கீகாரம் இல்லை என்றால் அனைவரும் மைதானங்களை உருவாக்கி உடற் கல்விக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

ஒரு மாணவனுக்கு சமூதாயத்தில் உயர்ந்து நிற்பதற்கு கல்வி அவசியம். அதே போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற் கல்வி அவசியம்.
Read more »

எளிமையான கருத்தடை சாதனம் துளசி

Friday, September 17, 2010 30 comments
 
துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.


பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.


 சாலைஓரங்களில் சும்மா கிடைக்கும் துளசியின் பயன்களை பாரீர்...
 
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம்த்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. 

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். 

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. 

எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

துளசி நம் உடலில் உ‌ள்ள கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம், உடலை தூ‌ய்மை‌ப்படு‌‌த்து‌ம் பொருளாகவு‌‌ம் அது செய‌ல்படு‌கிறது. ச‌ளி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு‌ம் துள‌சி மரு‌ந்தாக அமையு‌ம்.

துளசி‌ச் செடி‌யி‌ன் இலைகளை அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் எந்த நோயும் நம்மை அணுகாது.

கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம்.

துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உட‌லி‌ன் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி‌க்கு உதவு‌ம்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல் – 5 கிராம்
கீழாநெல்லி – 10 கிராம்
ஓமம் -5 கிராம்
மிளகு – 3
எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

குணமாகும் வியாதிகள்

1.உண்ட விஷத்தை முறிக்க.
2.விஷஜுரம்குணமாக.
3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5.காது குத்துவலி குணமாக.
6.காது வலி குணமாக.
7.தலைசுற்றுகுணமாக.
8.பிரசவ வலி குறைய.
9.அம்மை அதிகரிக்காதிருக்க.
10.மூத்திரத் துவாரவலி குணமாக.
11.வண்டுகடி குணமாக.
12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13.எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16.அஜீரணம் குணமாக.
17.கெட்டரத்தம் சுத்தமாக.
18.குஷ்ட நோய் குணமாக.
19.குளிர் காச்சல் குணமாக.
20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23.காக்காய்வலிப்புக் குணமாக.
24.ஜலதோசம் குணமாக.
25.ஜீரண சக்தி உண்டாக. 
26.தாதுவைக் கட்ட. 
27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக. 
28.இடிதாங்கியாகப் பயன்பட 
29.தேள் கொட்டு குணமாக. 
30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக. 
31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற. 
32.வாதரோகம் குணமாக. 
33.காச்சலின் போது தாகம் தணிய. 
34.பித்தம் குணமாக. 
35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த. 
36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த. 
37.சகல விதமான வாய்வுகளும் குணமாக. 
38.மாலைக்கண் குணமாக. 
39.எலிக்கடி விஷம் நீங்க. 
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். 
41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த. 
42.வாந்தியை நிறுத்த. 
43.தனுர்வாதம் கணமாக. 
44.வாதவீக்கம் குணமாக. 
45.மலேரியாக் காய்ச்சல் குணமாக. 
46.வாய்வுப் பிடிப்பு குணமாக. 
47.இருமல் குணமாக. 
48.இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக. 
49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த. 
50.இளைப்பு குணமாக. 
51.பற்று, படர்தாமரை குணமாக. 
52.சிரங்கு குணமாக. 
53.கோழை, கபக்கட்டு நீங்க.
Read more »

கல்விக் கொள்ளை என்ன தான் தீர்வு

Thursday, September 16, 2010 19 comments

தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கல்விக்கொள்ளைக்கு இனி தடை இல்லை  நீதிபதி கோவிந்தராசன் தலைமையில் ஆய்வு செய்த குழு அரசுக்கு அவர்களின் கருத்தை தெரிவித்ததோடு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுருத்தியது இதை அரசும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. தனியார் பள்ளியின் அமைப்புகள் நீதிமன்றத்தில் முறையிட்டு இன்று இடைக்கால தடை பெற்று விட்டனர். தடை பெற்றது இப்போது தான் ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னரே எல்லா தனியார் பள்ளியிலும்  ஒரு தொகையை வசூலித்துவிட்டு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்து வெற்றிகரமாக பள்ளியை நடத்திக்கொண்டு இருக்கின்றனர் இது தான் இன்றைய நடைமுறை.

முதலில் தனியார்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் தனது குழந்தைகளுக்கு பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர் இது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் ஆனால் எத்தனை பெற்றோர் இப்பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என்று புகார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நிச்சயம் விரல் விட்டு எண்ணினாலும் யாரும் இல்லை. பெற்றோர்களின் எண்ணம் இந்த பள்ளியில் என் குழந்தைக்கு படிக்க சீட் கிடைத்தால் போதும் பணம் எவ்வளவு வேண்டுமானலும் கட்ட நான் தயார் என்று சொல்லது தான் தனியார் பள்ளியின் பலம். இப்படி பல பெற்றோர் இருக்கையில் இவர்கள் கட்டணத்தை அதிகரித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

இன்று நம் மாநிலத்தில் கட்டணம் அதிகம் வாங்கியதால் இப்பள்ளி தடை செய்யப்பட்டுள்ளது என்று எதாவது ஒரு கல்விக்கூடம் இருக்கிறதா என்றால் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். எல்லா கல்விக்கூடத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்வார்கள் அதைக் கட்டிய பெற்றோருக்குத்தான் தெரியும் எவ்வளவு வர்ஙகினார்கள் என்று அப்பெற்றோர்கள் கொடுத்த தொகையை சொல்ல முன்வருவார்களா என்றால் நிச்சயம் தயங்குவார்கள்.

இன்று நடுத்தர மக்களுக்கு இருக்கிற ஒரே தீர்வு நீதிமன்றம் தான் தனியார் பள்ளிகள் இங்கு இடைக்கால தடை பெற்று விட்டனர் நீதிமன்றம் நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இடைக்கால தடை வழங்கியாச்சு. மீண்டும் எத்தனை கோவிந்தராசர் கமிட்டி வந்தாலும் தடை வாங்குவது தொடரும். கட்டணம் வசூலிப்பதும் தொடரும் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.

இதற்கு தீர்வு என்று பார்த்தால் நிறைய இருக்கு அது நடக்குமா என்பது சந்தேகமே...
Read more »

சாப்ட்வேர் இன்ஜினியரின் தொலைந்த வாழ்க்கை

Wednesday, September 8, 2010 15 comments
சாப்ட்வேர் இன்ஜினியர்களின் புலம்பல்கள் பற்றி இப்ப நிறைய மின்னஞ்சல்கள் எனக்கு வருகின்றன.. இதற்கு முன் ஒரு இன்ஜினியரின் புலம்பல் இடுக்கை அதை பார்த்த நண்பர்கள் மட்டும் ஏராளம் அந்த புலம்பல அனைவரையும் கொண்டு சேர்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதே போல் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற கவிதையை படித்து ரசியுங்கள்... இதை நான் எழுதுலீங்கோ...
 
சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!!
இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!!

அரை அடி இடைவெளியில்
ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
அந்நியப்பட்டவர்கள் போல்
திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!

விருப்பங்களுக்கேற்ற நீராகாரம்
விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்!
விடிய விடிய வேலை
விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்!

அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்!
இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்!

இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்!

உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை!

மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்!

முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.

விடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்
ஈடுகட்டும் வாடகை தாய்!!!

பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
கதகதகப்பில் உறங்கும்

எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

கை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது!

நெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது
மடிந்துதான் போகின்றன!!


கண்களில் தோன்றிய  கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன!

நித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன!

அன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்!

இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
தொலைத்து விட்டேன்!!!
 
நன்றி http://ananyasrinivasan.spaces.live.com/blog/cns!1A5F7FB277BF9159!139.entry
Read more »

கதை... விடுகதை...

Monday, September 6, 2010 13 comments

விடுகதை சொல்வதும் அதற்கு பதில் சொல்வதும் ஒரு சுவரஸ்யமான விசயம். சிறுவயதில் குழந்தைகளுக்கு கதை சொல்வது விடுகதை சொல்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும். விடுகதை சொல்வதால் அக்குழந்தைகளுக்கு யோசிக்கும் திறுனும் அதன் பதில் தெரிந்ததும் இந்த பொருளை இப்படியும் கூறலாமா என நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். விடுகதை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ரொம்ப யோசிக்க வைக்கும்.

விடுகதைகளை பல இடங்களில் பயன்படுத்தலாம் எனக்குத் தெரிந்த நான் படித்த நான் சொன்ன விடுகதைகள் சிலவற்றை கொடுக்கிறேன்... சரியான பதில் சொல்பவர்களுக்கு குருவி ரொட்டி, குச்சி முட்டாய், இலந்த வடை, இலந்த தூள், இஞ்சி மரப்பான் பரிசாக அனுப்பப்படும்..

1. கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?

2. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? 
3. ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்?

4. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்?

5.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம், அது என்ன ?

6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?

7. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

8. ஓடுப்பான்! பிச்சை, ஒரு நாளும் கண்டறியான்!காடுறைவான்! தீர்த்தக்கரை சேர்வான்! - தேட நடக்குங்கால் நாலுண்டு!நல்தலை ஒன்றுண்டு! -அது என்ன? 

9.  ஆயிரம் பேர் பார்க்க ஆத்தங்கரை ஓரத்திலே கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல் கன்னத்தைக் கடிக்கிறாள்  கள்ளியவள்-அது என்ன?

10.சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

11. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன?
 
12. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?

13. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?

14. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

15. நீந்தத் தெரியும் மீனில்லை; நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை; இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா? 

இந்த விடுகதை எல்லாம் கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கும்... உங்களின்  பதிலை எதிர்பார்க்கிறேன்...
Read more »

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் கடுகு

Sunday, September 5, 2010 13 comments

நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.

உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள். 

இந்த அஞ்சறை பெட்டியில் உள்ள அற்புதமான அரு மருந்து மற்றும் உணவுப் பொருட்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது கடுகு. கடுகை மூன்று வகைகளாக கூறுவர். நாய்கடுகு, மலைக்கடுகு, சிறு கடுகு என்று.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. கடுகு அந்தளவிற்கு முன்னோர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இதன் பயன்களும் ஏராளம்.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த... 

கடுகு, ஆவாரை ‌விதை, மரம‌ஞ்ச‌ள், கருவேல‌ம் ‌பி‌சி‌ன் ஆ‌கியவ‌ற்றை எடு‌த்து சு‌த்த‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
வீ‌‌ட்டி‌ல் அ‌ம்‌‌மி இரு‌ந்தா‌ல் அ‌தி‌ல் இவ‌ற்றை வை‌த்து இடி‌த்து பொடியா‌க்க வே‌ண்டு‌ம்.
இதனை ‌நீ‌ர்‌வி‌ட்டு ‌‌பிசை‌ந்து சூரணமா‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
நீ‌‌ரி‌ழிவு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ந்த ‌சூரண‌த்தை 1-2 ‌கிரா‌ம் உ‌ள்ளு‌க்கு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் க‌ட்டு‌ப்படு‌ம்.

சிறுநீர் பெருக்கி

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

விக்கல் நீங்க

வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

மேலும் பல பயன்கள்

விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்... 

தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாக்கும்.

கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணப்படுத்தும்

கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்

கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக விரைப்பு சீராகும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்... 
Read more »

ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் புலம்பல்....

Thursday, September 2, 2010 43 comments
இது எனக்கு என் நண்பன் மூலமா மெயிலில் வந்த தகவல் எனக்கு ரொம்ப புடித்திருந்தது உங்களுடன் பகிர்கிறேன்....

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது. 


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்காங்க......
Read more »