Pages

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி

Thursday, August 19, 2010

இஞ்சி உணவின் ருசி கருதி உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு நறுமண பொருள். நறுமண பொருள் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நோய் நிவாரணி ஆகும். தமிழர்களின் உணவுகளில் இஞ்சிக்கு அதிக இடம் உண்டு. உலர்ந்த இஞ்சிக்கு சுக்கு என்று பெயர் சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று கிராமங்களில் கூறுவார்கள்.

முன்பு கிராமங்களில் வாரத்திற்கு ஒரு நாள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காலையில் எழுந்து பல் துலக்கி காபிக்கு பதில் இஞ்சிசாறுடன் பால் கலந்த இஞ்சி காபியை பருகுவர் இஞ்சியின் காரம் தவிர்க்க நாட்டுச்சக்கரை கலந்து பருகுவர். வெறும் வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொண்டு வர உதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்து இஞ்சிகாபி சாப்பிடுவது மிகவும் குறைந்து விட்டது. வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இஞ்சி காபி அருந்துவது அவசியம் இதை கடைபிடித்து பாருங்கள் உடல் பொலிவு பெறுவதுடன் சுறுசுறுப்பும் கிடைப்பதை உணரலாம்.

மாரடைப்பிற்கு அருமருந்து இஞ்சி: 

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். 

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இஞ்சியின் குணப்படுத்தும் மற்ற நோய்கள்
 • சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
 • இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி       
 • இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
 • மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 • செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
 • மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
 • தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
 • மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.
 • இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
 • இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. 
 • மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
 • பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
 • ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
 • பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
 • இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
 • இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
 • இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
 • இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
 • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இன்று பலருக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் சாப்பிடும் அளவிற்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாததால் இப்பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இது வெளியில் சொல்லதற்கும் நிறைய பேருக்கு கூச்சம் இருக்கும் இதனால் தான் படும் அவதியை மருத்துவரிடம் சொல்லி மருந்துக்காக செலவு செய்வதற்கு நம் வீட்டில் உள்ள இஞ்சியை தட்டிப்போட்டு வாரம் ஒரு முறை இஞ்சி சுக்கு காபியை அருந்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

23 comments:

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: August 20, 2010 at 12:18 AM said...

அன்பின் நண்பருக்கு வணக்கம் ,மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு . பல தகவல்களை திரட்டி தொகுத்து தந்திருக்கும் விதம் . பிரமிக்க வைக்கிறது . மருத்துவம் மனிதனின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது . அதற்கு தகுந்தாற்போல் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை . தொடர்ந்து இதுபோன்ற சிறந்தப் பதிவுகளை எதிர்பார்கிறேன் . பகிர்வுக்கு நன்றி

{ செ.சரவணக்குமார் } at: August 20, 2010 at 12:24 AM said...

மிக நல்ல பகிர்வு நண்பரே.

{ அமைதிச்சாரல் } at: August 20, 2010 at 12:47 AM said...

நல்லா சொல்லியிருக்கீங்க. இப்பல்லாம் இஞ்சி குடிக்கிற பழக்கமே இல்லாம போயிட்டது. முரட்டு வைத்தியம்தான்.. ஆனா, நல்ல பலனளிக்கக்கூடியது.

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: August 20, 2010 at 1:41 AM said...

நல்ல பகிர்வு

{ Balaji saravana } at: August 20, 2010 at 1:47 AM said...

பயனுள்ள பதிவு!

{ தமிழரசி } at: August 20, 2010 at 1:51 AM said...

அன்பின் நண்பருக்கு வணக்கம் ,மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு . பல தகவல்களை திரட்டி தொகுத்து தந்திருக்கும் விதம் . பிரமிக்க வைக்கிறது . மருத்துவம் மனிதனின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது . அதற்கு தகுந்தாற்போல் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை . தொடர்ந்து இதுபோன்ற சிறந்தப் பதிவுகளை எதிர்பார்கிறேன் . பகிர்வுக்கு நன்றி

ithu thaan en karuththum kooda....

{ Kousalya } at: August 20, 2010 at 2:26 AM said...

இஞ்சியை பற்றி மிக நல்ல தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி நண்பரே.

{ க.பாலாசி } at: August 20, 2010 at 3:03 AM said...

பல நாட்களாச்சுங்க...சுக்குக்காப்பில்லாம் சாப்பிட்டு... உணவுல இஞ்சி சேர்த்துக்கறதோட சரி... இனிமேலாவது கூடுதலா பயன்படுத்தனும்...

நல்ல பகிர்வுங்க...

{ ஹேமா } at: August 20, 2010 at 3:34 AM said...

எப்பவும்போல நல்ல மருத்துவக் குறிப்பு சங்கவி.நான் தினமும் ஏதோ ஒரு வகையில் இஞ்சி சேர்த்துக்கொள்வேன்.

{ மறத்தமிழன் } at: August 20, 2010 at 3:40 AM said...

நண்பரே,

பயணுள்ள பகிர்வு...

{ சத்ரியன் } at: August 20, 2010 at 3:52 AM said...

சிறந்த தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ளும் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.

agila at: August 20, 2010 at 4:27 AM said...

பயனுள்ள பகிர்வு

{ ஆதிமூலகிருஷ்ணன் } at: August 20, 2010 at 4:39 AM said...

ஆனா என் சிஸ்டர்தான் சொல்லுவா.. நீ சும்மாவே மங்கி மாதிரி இருப்பேன்னு.. :-))

{ ஆதிமூலகிருஷ்ணன் } at: August 20, 2010 at 4:39 AM said...

ஹைய்யா.. மாசம் ஒரு வாட்டி இஞ்சி சாறு குடிக்கும் வழக்கம் இருக்குது. அதான் என் இளமைக்கு(?) காரணம்னு நினைக்கிறேன்.

{ சேட்டைக்காரன் } at: August 20, 2010 at 8:10 AM said...

இஞ்சியில் இவ்வளவு சங்கதி இருக்கிறதா? அருமையான இடுகை; பாராட்டுக்கள் நண்பரே!

{ சுசி } at: August 20, 2010 at 8:48 AM said...

நல்ல தகவல்..

{ அம்பிகா } at: August 20, 2010 at 9:10 AM said...

இங்கே கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை இஞ்சி சாறு குடிக்கும் பழக்கம் உண்டு. நம்ம தான் நல்ல பழக்கத்தை எல்லாம் கடைபிடிக்க மாட்டோமே!

M.D.Jayabalan at: August 20, 2010 at 10:12 AM said...

இஞ்சியைக் கழுவிப் பயன் படுத்தும் முன் அதன் மேல் தோலைச் சீவி எடுத்துவிட வேண்டும்.மீண்டும் கழுவித்தான் பயன் படுத்தவேண்டும். ஏனெனில் அதில் ஆர்செனிக் என்னும் விஷம் உண்டு, அது உடலில் குடல்வாலில் சேர்ந்து கொண்டே வரும். பின்னர் அது ஆபத்தாய் முடியும். நம் நகத்திலும் ஆர்செனிச் உண்டு. அதனால் தான் நகத்தைக் கடிக்கக் கூடாது என்பர். Arsenic is a slow poison.

M.D.Jayabalan

{ Jaleela Kamal } at: August 20, 2010 at 11:18 AM said...

ரொம்ப நல்ல பதிவு நாங்கள் தினம் இஞ்சி டீ தான் குடிக்கிறோம் நல்ல சுறு சுறுப்பு.
சளி, இருமல் எல்லாத்துக்கும் நல்ல மருந்து.

இஞ்சி தோல் காயவைத்து அத்துடன் புதினா காம்பு சேர்த்து டீ போடலாமா?
என் பிளாக்கில் அது நஞ்சு என்று வாக்குவாதம் நடந்தது.

http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_26.html

{ Chitra } at: August 20, 2010 at 3:08 PM said...

I love the flavor of ginger. Good to know that it has so many medicinal values. Thank you.

{ தாராபுரத்தான் } at: August 21, 2010 at 6:09 PM said...

மிகவும் உபயோகமான பதிவுங்க..வணக்கம்.

{ மோகன் குமார் } at: September 16, 2010 at 8:18 PM said...

உங்களின் இந்த பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_17.html

{ மதுரை சரவணன் } at: September 17, 2010 at 10:11 AM said...

பயனுள்ளப்பதிவு. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Post a Comment