Pages

தாய்ப்பாசம்

Tuesday, August 3, 2010

இன்று கணவன் மனைவி ஏற்படும் பிரச்சனைகளால் நிறைய பிரிவுகள் ஏற்படுகின்றன தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்று. விவாகரத்து கேட்டு கியூவில் நிற்பவர்கள் ஏராளம் இதற்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் ஓர் முக்கியமான காரணம் தாய்ப்பாசம்...

மனைவிகள் சொல்லும் அதிக புகார் அம்மா பேச்சை கேட்கிறார். அம்மா பேச்சை கேட்டு என்னைத் திட்டுகிறார் இதனால் தனிக்குடித்தனம் போகலாம் என்றால் அம்மாவை விட்டு வர மறுக்கிறார் இது தான் அதிக குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றும் கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. கூட்டுக்குடும்பத்திற்கு முக்கிய காரணமே தாய்ப்பாசம்தான்.

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு. நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம் அப்போது நம் மகனை நம்மிடம் இருந்து பிரித்தால் இதை யோசித்தால் போதும் இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு உண்டு.

ஒரு பெண் திருமணம் ஆகி கணவனிடம் வருகிறாள் அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது. தனக்கு குழந்தை பிறந்த பின் அத்தாய் தன் மகனை தன் கண்ணுக்குள் வைத்து காக்கிறாள் கூடவே தனது அனைத்து அன்பையும் குழந்தையின் மீது காட்டுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வைத்து அவனுக்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறான் என அவனை பார்த்து பார்த்து வளர்க்கிறாள். மகனின் முதல் ரசிகையே தாய். மகனுக்கு முதலில் தெரிவது தாய் தான் பின்பு தான் மற்றவர்கள். மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து, எழுந்து நின்று மேதுவாக விழுந்து விழுந்து நடந்து ஒவ்வொன்றையும் முதலில் ரசிப்பவள் தாய் மட்டுமே..

குழந்தைப்பருவத்திலேயே அம்மா மீது அதிக அன்பு கொள்கிறான். தன்னிடம் யார் விளையாடினாலும் அவன் அம்மாவைப் பார்த்த உடன் சிரிக்கும் சிரிப்பு இப்படியே எனக்கு உசிரு போய்விட வேண்டும் என்று தான் தாய் கூறுவாள். மகனுக்கு விபரத் தெரியும் போது தான் தன் அம்மா அப்பாவின் மனைவி என்று அவனுக்கு தெரியவருகிறது. மகனுக்கும் தாய்க்கும் உள்ள பாசத்திற்கு ஈடு இணை இல்லை. மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும். திருமணம் முடிந்து வரும் மருமகள் தன் மகன் மீது பொழியும் அன்பை தாய் ஏற்றால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சியே... தாய்ப்பாசத்திற்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை..

33 comments:

{ வெறும்பய } at: August 3, 2010 at 9:43 PM said...

உண்மையிலேயே தாயின் பாசத்திற்கு ஈடு இணை கிடையாது..

நல்ல பதிவு..

{ Kousalya } at: August 3, 2010 at 9:46 PM said...

//அவள் கருவுற்றதற்கு முன் கணவன் மேல் இருக்கும் அன்பு கருவுற்றதற்கு அப்புறம் குறையத்துவங்குகிறது.//

அது அப்படியில்லை நண்பரே....

அவளது கவனம் குழந்தையின் மீது திரும்புகிறது....இது பெண்களின் இயல்பு....இயற்கை......கணவனின் மீது அன்பு குறைகிறது என்று அர்த்தம் இல்லை.

அதைவிட கருவுற்றபின் தான், தனக்கு இந்த அற்புத தாய்மையை கொடுத்த கணவனை மனதிற்குள் பூஜிக்க தொடங்குகிறாள்....பெரும்பாலும் இது வெளியில் தெரிவது இல்லை அவ்வளவே...

நான் சொல்வது சரிதானே....??!!

ஒரு ஆணாக தாய்மை உணர்வை நன்கு வெளிபடுத்தி இருப்பதற்கு என் பாராட்டுகள்.....

{ வெறும்பய } at: August 3, 2010 at 9:46 PM said...

பெற்றெடுத்து, வளர்த்து பெரியவனாக்கி திருமணத்திற்கு பின் தன் மகன் தூரமாகி போய்விடுவானோ என்று நினைக்கும் பொது தான் ஒரு தாய் மிகவும் கவலைபடுகிறாள்.. அதிலும் தன் மகன் நேற்று வந்த ஒருத்தியிடம் அதகம் பாசம் காட்டுவதாலும், அவளுக்காக தாயிடம் முறைத்து கொள்வதாலும் தான் அதிகமான வீடுகளில் பிரச்சனை ஏற்ப்படுகிறது..

இதனால் தான் பெரும்பாலான வீடுகளில் மாமியார் மருமகள் சண்டை நடக்கிறது..

இவை அனைத்தும் பாசத்தின் வெளிப்பாடு தான்..

{ அகல்விளக்கு } at: August 3, 2010 at 9:47 PM said...

நல்ல பகிர்வு நண்பரே....

{ மங்குனி அமைச்சர் } at: August 3, 2010 at 9:53 PM said...

இன்று மனைவி நாளை அம்மா நாளை மறுநாள் மாமியார் இதுதான் இன்றைய நிகழ்வு.////
ஆச்சரியமான ஒன்று சார், நாளைக்கு இவங்களும் இதே பிரச்சனைய பண்ணுவாங்க .

{ Chitra } at: August 3, 2010 at 10:13 PM said...

தாயன்புக்கு நிகர் ஏது? அருமையான பதிவுங்க.

{ Tamilparks } at: August 4, 2010 at 1:44 AM said...

நல்ல பகிர்வு நண்பரே....

{ VELU.G } at: August 4, 2010 at 1:44 AM said...

தாய் பாசம் எல்லாம் நல்லாதாங்க இருக்கு

தந்தையை டீல்ல உட்டறீங்களே

{ ஹேமா } at: August 4, 2010 at 1:53 AM said...

மிக மிக அருமையான உணர்வுபூர்மான விஷயங்கள்.நிச்சயம் மனதில் பதியப்படவேண்டிய பதிவு.

{ சங்கவி } at: August 4, 2010 at 2:37 AM said...

வாங்க கெளசல்யா...

நீங்க ஒரு பெண்ணாக தாய்மையைப்பற்றி அழகாக சொல்லி இருக்கறீங்க நன்றீங்க... நீங்க சொல்வது சரியே....

{ சங்கவி } at: August 4, 2010 at 2:37 AM said...

வாங்க வெறும்பய

அனைத்தும் பாசத்தின் வெளிப்பாடே.... சரிங்க...

{ சங்கவி } at: August 4, 2010 at 2:38 AM said...

வாங்க ஹேமா...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 2:38 AM said...

வாங்க Tamilperks...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 2:38 AM said...

வாங்க வேலு

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 2:38 AM said...

வாங்க சித்ரா வாங்க...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 2:38 AM said...

வாங்க மங்குனி அமைச்சர்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 2:38 AM said...

வாங்க அகல்விளக்கு...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ Abinaya } at: August 4, 2010 at 3:05 AM said...

Nice article abt mother's love.. Its unmeasurable towards the child.! her nature is peak of patience.

{ கோமாளி செல்வா } at: August 4, 2010 at 3:15 AM said...

உண்மையாவே தாய்ப்பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது அண்ணா ...
ஆனாலும் மாமியார் மருமகள் சண்டைக்கு பெரும்பாலும் தன்னோட கருத்துக்கள் தான் பெரிது என்னும் உணர்வே காரணமாக இருக்கிறது ...!!!

{ சுசி } at: August 4, 2010 at 4:12 AM said...

நல்ல பதிவு..

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: August 4, 2010 at 4:23 AM said...

மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது பெண் மகனுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தாய்க்கு நிச்சயம் பிடித்திருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பமாக இருக்கும்//
உண்மைதான் சங்கவி. அருமையா சொல்லி இருக்கீங்க..

{ நித்திலம்-சிப்பிக்குள் முத்து } at: August 4, 2010 at 5:16 AM said...

மனதைத் தொட்ட பதிவுங்க. நன்றி.

{ பிரபாகர் } at: August 4, 2010 at 7:03 AM said...

தாய்மை என்ற ஒரு சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழிலேயே இல்லை பங்காளி...

தாயிற்சிறந்தொரு கோவிலுமில்லை... சும்மாவா சொன்னார்கள்...?

பிரபாகர்...

{ கார்த்திகைப் பாண்டியன் } at: August 4, 2010 at 10:20 AM said...

நல்லா சொல்லி இருக்கீங்க நண்பா..:-)))

{ அமைதிச்சாரல் } at: August 4, 2010 at 7:41 PM said...

உண்மைதான்.. தாயின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது.

//நிறைய மனைவிகள் யோசிப்தில்லை நாளை நாமும் மாமியார் ஆகப்போகிறோம்//

இதுவும் உண்மைதான். இந்தக்கோணத்தில் யோசித்தால் வீடுகளில் நிறையப்பிரச்சினைகள் வருவதற்கான முகாந்திரமே இருக்காது. அதேசமயம், நிறைய மாமியார்களும் யோசிப்பதில்லை நேற்று நாமும் மருமகளாக இருந்தோம் என்று.. ஏன் சங்கவி????

{ சங்கவி } at: August 4, 2010 at 8:48 PM said...

வாங்க பங்காளி...

தாயிறட சிறந்தொரு கோவிலுமில்லை சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்...

{ சங்கவி } at: August 4, 2010 at 8:48 PM said...

வாங்க நித்திலம்-சிப்பிக்குள் முத்து...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 8:48 PM said...

வாங்க தேனம்மைலட்சுமணன்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 8:48 PM said...

வாங்க சுசி...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: August 4, 2010 at 8:48 PM said...

வாங்க ப.செல்வக்குமார்....

தன்னுடைய கருத்துதான் பெரியது என்று இருவரும் நினைக்கும் போது பிரச்சனை வழுக்கிறது...

{ சங்கவி } at: August 4, 2010 at 8:48 PM said...

வாங்க அபிநயா....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

Post a Comment