Pages

மீன் சாப்பிடுங்க நோயில்லாம இருங்க...

Tuesday, July 20, 2010

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ உணவுகளை பல விதமாக சொல்லலாம். அதிகம் பேர் உண்ணுவது ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்களைத்தான் அதிகம் உண்ணுகின்றனர். ஆடு, மாடு, கோழிகள் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உண்டு. இன்று பலர் சர்க்கரை, இருதய, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். இதில் எந்த நோயால் தாக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீன் சாப்பிடலாம்.

மீன் இன்று நமது நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களில் மீனுக்கு தனி இடம் உண்டு. மீனை பல வகை உணவுகளாக சாப்பிடுகிறார்கள். ஆனல் அநேகம் பேர் முந்திய நாள் வைத்த மீன் குழம்பில் தான் அதிக சுவை என்பர். அசைவ உணவுகளில் மற்ற எந்ந உணவை விட மீனை மட்டுமே அடுத்த நாள் வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
மீனில் பல வகைகள் உண்டு. ஆற்று மீன் கடல் மீன் என்று இன்று தனித்தனியாக மீனை பிரித்து ரகம் வாரியாக விற்பனை செய்கின்றனர். கடலோர மாவட்டங்களை தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஐஸ்ல் வைக்கப்பட்ட மீன்தான் கிடைக்கின்றது.


மீன் எல்லா வகையிலும் மனிதனுக்கு பயன் உள்ளதாகவே இருக்கின்றது மீன், கருவாடு, மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணை என்ற அனைத்தும் மனிதனின் உணவுப்பொருளாகவே இருக்கின்றது.

மீனைப்பற்றியான ஆராய்ச்சி முடிவுகள்:

மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
  ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,
`15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். 


 மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: 

மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.

மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படுமங சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.

9 comments:

{ திவ்யாஹரி } at: July 20, 2010 at 6:47 AM said...

மீனில் இவ்ளோ நன்மைகளா? எடுத்துரைத்ததற்கு நன்றி சங்கவி..

{ றமேஸ்-Ramesh } at: July 20, 2010 at 8:33 AM said...

வழமைபோல் அருமை நண்பா.
முதல் மீன் கறி படம் உங்க விட்டிலா?? (சும்மா கேட்டன்)

{ தாராபுரத்தான் } at: July 20, 2010 at 5:27 PM said...

அருமை..ருசி..

{ மோகன் குமார் } at: July 20, 2010 at 10:03 PM said...

வறுவல் சாப்பிட்டால் எண்ணை அதிகம் சேரும்; எனவே குழம்பு மீன் சாப்பிடுவது தான் நல்லது; இல்லையா நண்பா?

{ Kousalya } at: July 21, 2010 at 3:40 AM said...

எனக்கு மிகவும் பிடித்த உணவு... உங்கள் தகவல்கள் அருமை.. thanks

{ ஹேமா } at: July 21, 2010 at 9:04 AM said...

இறைச்சி சாப்பிடுவதை விட மரக்கறிகள் ,மீன் வகைகளையே நான் சாப்பிடுகிறேன்.இன்றும் கருவாடும் கத்தரிக்காயும்
கலந்த குழம்பு !

{ AbuSalaam } at: July 25, 2010 at 1:18 PM said...

நான் மீனை மிகவும் விரும்பி சாப்பிடுகிறேன்...அது குறித்து விரிவாக எழுதியதுக்கு மிக்க நன்றி நண்பரே..!!!!!

{ கொங்கு நாடோடி } at: November 17, 2010 at 7:45 AM said...

கர்ப்பகாலத்தில் எல்லா வகை மீன்களையும் சாப்பிடகூடாது, முக்கியமாக வஞ்சிரம், உழுவை, இவற்றில் பாதரசம் அதிக அளவில் உள்ளதாக ஆராய்ச்சிகள் காட்டுகிறது. திலேப்பிய சாப்பிடுவது பாதுகாப்பானது. நினைவில் கொள்ளவேண்டியது.. சிறிய, ஆற்று அல்லது dam மீன்களை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்லது. மெர்குரி(பாதரசம்) விசத்தன்மை உடையது, இது உடம்பில் சேராமல் பார்த்துகொள்வது நல்லது.

{ கொங்கு நாடோடி } at: November 17, 2010 at 7:45 AM said...

கர்ப்பகாலத்தில் எல்லா வகை மீன்களையும் சாப்பிடகூடாது, முக்கியமாக வஞ்சிரம், உழுவை, இவற்றில் பாதரசம் அதிக அளவில் உள்ளதாக ஆராய்ச்சிகள் காட்டுகிறது. திலேப்பிய சாப்பிடுவது பாதுகாப்பானது. நினைவில் கொள்ளவேண்டியது.. சிறிய, ஆற்று அல்லது dam மீன்களை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்லது. மெர்குரி(பாதரசம்) விசத்தன்மை உடையது, இது உடம்பில் சேராமல் பார்த்துகொள்வது நல்லது.

Post a Comment