Pages

அழிந்து போன குதிரை வண்டி...

Friday, July 9, 2010

20 வருடங்களுக்கு முன்னால் குதிரை வண்டியில் பயணம் செய்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள். ஆனால் இன்று குதிரை வண்டியை பார்ப்தே மிகவும் அபூர்வம்.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அப்போது ஆட்டோக்களை விட குதிரைவண்டிதான் அதிகமாக இருந்தது என என் பெரியப்பா கூற கேட்டு இருக்கிறேன். பெரியப்பா அரசியலில் இருந்ததால் அடிக்கடி சென்னை பயணம் மேற்கொள்வார் சென்னையில் எங்கு சென்றாலும் குதிரை வண்டியில்தான் செல்வேன் என கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் இன்று குதிரை வண்டி ஒரு காட்சிப்பொருளாக ஆகிவிட்டது குதிரை வண்டி ஓட்டும் தொழில் ஏறக்குறைய அழிந்து விட்டது என கூறலாம்..

நான் முதன் முதலில் குதிரை வண்டியில் சென்றது எங்கள் பக்கத்து ஊர் திருவிழாவிற்குத்தான் குதிரைவண்டிப்பயணம் ஒரு சுகமான அனுபவம். நிறைய முறை குதிரை வண்டியில் சென்று இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் குதிரை வண்டி ஓட்டுபவர் பக்கத்தில் அமர்ந்திருந்தால் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் இதனால் சண்டை போட்டு அங்கே சென்று உட்காருவேன். குதிரை ஓடும் வேகமும் ஓட்டுபவரின் சத்தம் சாட்டையில் குதிரையை அடிக்கும் விதம் என ரசித்து ரசித்து சென்றிருக்கிறேன்.

இன்று குதிரைவண்டி இல்லை என்றாலும் எகிறும் பெட்ரோல் விலைக்கு குதிரை வண்டி தான் சரியானது என்பேன். வீட்டில் இருந்து 50 முதல் 60 மைல் தூரத்திற்கு செல்ல வேண்டும் எனில் குதிரை வண்டியை பயன்படுத்தலாம். குதிரைக்கு 2 கிலோ கொள்ளு மற்றும் செல்லும் வழியில் புல்லைக் கொடுக்கலாம் இதற்கு ஆகும் மொத்த செலவு 30 ரூபாய் தான் ஆகும் ஆனால் சொகுசான பயணம் விபத்துக்கு அதிக வாய்ப்பு இல்லை, குதிரையை மெதுவாக ஓடவிட்டு படுத்துக்கொண்டும் செல்லாம் என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். என்ன இருட்டில் செல்ல முடியாது. சுகமான பயணமாக அமையும் என்பதில் மிகை இல்லை.

இப்பொழுது குதிரைவண்டி பயணம் என்பது நமக்கே எட்டாக்கனி இனி வரும் சந்ததியினர் என்ன குதிரை வண்டியில் போனீங்களா என்று சிரிக்கத்தான் செய்வார்கள். நம்மில் பலபேர் குதிரை வண்டி பயணத்தை நிச்சயம் அனுபவித்து இருப்பார்கள். சில பேர் அதை அனுபவிக்காமலம் இருக்கலாம். ஆனாலும் இது முற்றிலும் அழிந்த ஒரு தொழில் என்றாலும் நினைவுகள் அழிவதில்லை.

12 comments:

{ எல் கே } at: July 9, 2010 at 4:55 AM said...

உங்க பதிவு திறக்க மிக தாமதம் ஆகிறது சங்கவி . குதிரை வண்டில போகணும்னு ஆசை இருந்த பழனி போங்க. பஸ் நிலையம் எதிரே குதிரை வண்டிகள் உள்ளன

{ soundr } at: July 9, 2010 at 4:57 AM said...

பழனி, பெரியகுளம் இங்கெல்லாம் இன்னும் குதிர வண்டி ஓடுது.
வாய்ப்பு கிடச்சா வந்து போங்க.


http://vaarththai.wordpress.com

{ எல் கே } at: July 9, 2010 at 5:24 AM said...

how is junior??

{ பின்னோக்கி } at: July 9, 2010 at 5:31 AM said...

இன்னும் சில ஊர்களில், சில வண்டிகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. கடந்த காலத்தைப் பற்றிய அழகான பதிவு.

{ நேசமித்ரன் } at: July 9, 2010 at 5:39 AM said...

நல்ல இடுகை சங்கவி

நினைவுகளை கிளறுகிறது ...

{ தமிழ் உதயம் } at: July 9, 2010 at 5:50 AM said...

தேடி பிடித்து, மீட்டு தந்தீர்கள் - ஒர் பழைய ஞாபகத்தினை.

{ அமைதிச்சாரல் } at: July 9, 2010 at 9:06 AM said...

இருவது வருஷத்துக்கு முன்னால திருச்செந்தூர்ல குதிரைவண்டி சவாரி போனேன். அந்த ஞாபகம் வந்தது... இப்ப இருக்கான்னு தெரியலை.

{ அம்பிகா } at: July 9, 2010 at 9:26 AM said...

எனக்கும் குதிரைவண்டியில் பயணித்த அனுபவம் இருக்கிறது.
நல்ல பகிர்வு சங்கவி.

{ மனோ சாமிநாதன் } at: July 9, 2010 at 11:32 AM said...

சின்ன வயது குதிரை வண்டி பயணங்களின் நினைவலைகளை உங்கள் பதிவு திரும்பக் கொண்டு வந்து விட்டன! நல்ல பதிவு!

{ Deepak Kumar Vasudevan } at: July 12, 2010 at 6:52 AM said...

பழனி அடிவாரம். இங்கு குதிரை வண்டிகளை காணலாம்.

{ shanuk2305 } at: July 13, 2010 at 1:45 AM said...

திண்டுக்கல் வந்தால் குதிரை வண்டி சவாரி செய்யலாம்

{ Jayadev Das } at: August 28, 2010 at 12:17 AM said...

கவலைப் படாதீங்க, இந்த பெட்ரோல் ரொம்ப நாளைக்கு வராது, மீண்டும் மாட்டு வண்டி, குதிரை வண்டி தான் நம்பகமாக இருக்கப் போகுது. ஆனா அந்த நாள் வரும் போது பூமி மேல மரம், காடுகள் எதுவும் இருக்குமா? மனுஷன் பண்ணிவரும் அட்டூழியத்தால், [முக்கியமாக அதிகமாக பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனகளைப் பயன்படுத்துதல், காடுகள் அழிப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரக் கொள்ளை] நாம எல்லோரும் கூண்டோட கைலாசம் போகப் போறோம்னு சொல்றாங்க. மேற்சொன்ன நாசவேலைகளை நிறுத்திவிட்டு, காடுகள், அதில் வாழும் உயிரனங்களை காத்தால் தான் உண்டு.

Post a Comment