Pages

நாட்டுப்புறப்பாட்டு கும்மிப்பாட்டு

Thursday, July 29, 2010 37 comments
நாட்டுப்புறப்பாடல்களில் கும்மிப்பாட்டும் ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததுதான். நம் முன்னோர்கள் ஊர்த்திருவிழா என்றால் அதில் நிச்சயம் பெண்களின் கும்மிப்பாட்டு இடம் பெறும் ஆனால் இன்று கும்மிப்பாட்டு கிட்டத்தட் அழியும் நிலையில் உள்ளது ஒன்று என்று சொன்னால் அது மிகையாகது.

இன்று தமிழக குக்கிராமங்கிளில் எங்கோ ஒரு மூலையில் கும்மிப்பாட்டுக்கலை நிச்சயம் இருக்கும் நானும் குக்கிராம்தைச் சேர்ந்தவன் தான் ஆனால் எங்கள் பகுதியில் இப்போது இக்கலையே இல்லை. விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒரு அரைமணிநேர நிகழ்ச்சியாகத்தான் பார்க்க முடிகிறது. நாளைய சமுதாயத்திற்கு இது தான் கும்மிப்பாட்டு என்று தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைத்தாக் காண்பிக்க முடியும்.

சில கிராமங்களில் பெண்கள் நெல் அறுவடை முடிந்து அறுவடையில் கிடைக்கும் நெல்லை பங்கு போடுவார்கள் பங்கு பிரித்த பின் அனைவரும் கொஞ்சம் பணம் போட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து அன்று ஒரு மூன்று மணி நேரம் கும்மியடித்து பாடிக்கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டாடுவர். மற்றும் ஊரின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அந்த கிராமத்தின் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.

கும்மிப்பாட்டு பெண்களால் ஒரு குழுவாக வட்டமிட்டு நின்று கைகளால் கும்மியடித்து கீழே குனிந்து மீண்டும் திரும்பி வட்டமிட்டவாரே பாடிக்கொண்டு நளினமாக ஆடியும் வருவார்கள். ஆடும் போது நடுவில் குத்துவிளக்கு அல்லது பூக்கூடை வைத்து இருப்பார்கள்.

கும்மிப்பாடல்கள் நம் தமிழர்களின் தொன்று தொட்டு உண்டு சித்தர்கள் முதல் பாரதியார் மற்றும் இன்று வரை உள்ள கவிஞர்கள் கும்மிப்பாடல்களை எழதி உள்ளனர்.. இதில் இப்பாடல் ரொம்ப பிரபலம்....

கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

கும்மிப்பாட்டு திருவிழா காலங்களில் பாடும் போது நக்கலும் நையாண்டியுமாக கேட்பவரை இன்புறச்செய்யும்...

கும்மியடி பெண்ணே! கும்மியடி!
கொங்க குலுங்கவே கும்மியடி
நம்மப் பொங்களும் சேர்ந்து – அவர
நாடிக் கும்மி யடியுங்கடி – அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
நம்பிடக் காத்திட வந்தவண்டி – அவரை
நாடிக் கும்மி யடியுங்கடி - அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!

சித்திரைத் திருவிழாக்களில் இன்னும் எங்கள் ஊரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் சன்னதி முன்னால் வைத்து கும்மியடிப்பார்கள்..எல்லாரும் சுற்றி நின்று  பார்ப்பதுண்டு..


இப்படிதான் சரணம்...செல்கிறது..


தன்னன நாதினம்    தன்னன நாதினம்       தன்னன நாதினம்      தன்னானே..
பெண்ணைப் பெண்ணே கும்முதல்..
*கண்ணாடிக் கன்னத்தில் வேர்க்கு தடி - உந்தன்
கடைக்கண்ணு எங்கேயோ பார்க்கு தடி
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி!
பக்தியாக
**மாயன் அழகு மலை மேலே - என்றும்
மல்லிகைப் பூ வாசம் வீசுதடி
நாயன் அவன் புகழே பாடி - இள
நங்கை யரே கும்மி அடிங்கடி*
*
**நந்தன் மதலையைக் கும்பிடு வோம் - அந்த
நாரணன் தாளையே நம்பிடு வோம்
செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மி யடி
சாத்தின கதவு திறக் காமல் - என்றும்
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி 
இன்று இக்கலை அழிவை நோக்கி இருந்தாலும் இக்கும்மிப்பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாது என்றால் அது மிகையாகது....
Read more »

எனக்கும் அவள் மேல் காதல்

Friday, July 23, 2010 8 comments
அழகான கண்கள்
கொழு கொழு கன்னம்
முத்துப்போல் சிரிப்பு
நுனி நாக்கில் ஆங்கிலம்
நிமிர்ந்த நடை
அனைவரும் திரும்பி பார்க்கும் கூந்தல்

எனக்கும் அவள் மேல் காதல்

என் அக்கா பொண்ணு தான்
அவள் நான்காம் வகுப்பு படிக்கும் இளங்கனி....
Read more »

மீன் சாப்பிடுங்க நோயில்லாம இருங்க...

Tuesday, July 20, 2010 9 comments

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ உணவுகளை பல விதமாக சொல்லலாம். அதிகம் பேர் உண்ணுவது ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்களைத்தான் அதிகம் உண்ணுகின்றனர். ஆடு, மாடு, கோழிகள் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உண்டு. இன்று பலர் சர்க்கரை, இருதய, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். இதில் எந்த நோயால் தாக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீன் சாப்பிடலாம்.

மீன் இன்று நமது நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களில் மீனுக்கு தனி இடம் உண்டு. மீனை பல வகை உணவுகளாக சாப்பிடுகிறார்கள். ஆனல் அநேகம் பேர் முந்திய நாள் வைத்த மீன் குழம்பில் தான் அதிக சுவை என்பர். அசைவ உணவுகளில் மற்ற எந்ந உணவை விட மீனை மட்டுமே அடுத்த நாள் வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.
மீனில் பல வகைகள் உண்டு. ஆற்று மீன் கடல் மீன் என்று இன்று தனித்தனியாக மீனை பிரித்து ரகம் வாரியாக விற்பனை செய்கின்றனர். கடலோர மாவட்டங்களை தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஐஸ்ல் வைக்கப்பட்ட மீன்தான் கிடைக்கின்றது.


மீன் எல்லா வகையிலும் மனிதனுக்கு பயன் உள்ளதாகவே இருக்கின்றது மீன், கருவாடு, மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணை என்ற அனைத்தும் மனிதனின் உணவுப்பொருளாகவே இருக்கின்றது.

மீனைப்பற்றியான ஆராய்ச்சி முடிவுகள்:

மீன் உணவு உண்ணும் தாய்மார்களை மகிழ்விப்பதற்காகவே வந்திருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. அதாவது, தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.
இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.
  ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,
`15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். 


 மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: 

மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.

மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.

ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படுமங சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.
Read more »

ஆடி மாதமும்... திருவிழாவும்....

Monday, July 19, 2010 4 comments
ஆடி மாதம் பொறந்தாலே சந்தோசந்தான் எனக்கு. எங்கள் ஊரைச்சுற்றி உள்ள முனியப்பன் கோயிலில் எல்லாம் திருவிழா மையந்தான். சிறிய வயதில் இருந்தே ஆடி மாதம் என்றால் திருவிழாக்கள் தான் ஞாபகம் வரும்.

சிறுவயதில் ஆடி முதல் நாள் அன்று காலை காவிரிக்கரைக்குச் செல்லோம். எங்கள் வீட்டில் இருந்து காவிரிக்கரை 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆடி முதல் நாள் அன்று அப்பாவுடன் சென்று காவிரியில் நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள சொக்கநாச்சி அம்மனை வழிபட்டுத் திரும்புவோம். சிறுவயதில் ஆற்றுக்குப் போய் குளிப்பதே ஒரு தனி குஷி தான்.

ஆடி 18 அன்று பக்கத்து வீட்டில் இருந்து எல்லோரும் சேர்ந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காவிரி ஆற்றிற்குச் சென்று குளித்து விட்டு ஆட்டம் போடுவோம். குளிக்கும் போது தலையில் 10பைசா வைத்து மூன்று முறை முழுகி எழுவோம் மூன்றாம் முறை முழுகும் போது 10 பைசாவை ஆற்றில் விட்டுவிடுவோம். பின் அங்கேயே கொண்டு போன கட்டுச்சோறை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்று திரும்புவோம். நான் 11வது படிக்கும் போது இருந்து காவிரிக்குச் செல்வதில்லை வீட்டிலேயே குளித்து விட்டு மேட்டூர் சென்று விடுவோம் மேட்டூர் அணையை ஒட்டி இருக்கும் அணை முனியப்பன் கோயில் திருவிழா நடக்கும் அங்கு சென்று மேட்டூர் அணையை சுற்றிவிட்டு மீன் சாப்பிட்டு விட்டு வருவோம்.

வேலைக்குச் சென்ற பின் ஆடி 18 அன்று நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 407 வண்டி வாடகைக்கு எடுத்து அதில் வைக்கோல் பிள் போட்டு அதற்கு மேல் தார் பாய் போட்டு ஆட்டம் பாட்டத்துடன் ஒகேனக்கல் செல்வோம் ஆடி 18 என்றாலே அழகான சுற்றுலாவோடு தான் கழிப்போம்.

ஆடி 18க்கு அடுத்த நாள் எங்கள் ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மொன்டிபாளையம் என்னும் ஊரில் தன்னாசிமுனியப்பன் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும் இங்கு சென்று தூரி ஆடுவது தான் எங்கள் உற்சாகம்.

ஆடி கடைசியில் எங்கள் ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு 1 லட்சம் பேர்க்கு மேல் கூடுவார்கள். இதிதிருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஐதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. 

இப்பொழுது எல்லாம் அங்காங்கே பொருட்காட்சி நடத்தி ராட்டினம், பைக்ரேஸ் போன்றவை நடத்துகிறார்கள். சிறுவயதில் எங்க ஏரியா வாசிகளுக்கு ராட்டினம் என்றால் அந்தியூர் திருவிழா தான் ஞாபகத்திற்கு வரும் எனக்கு ஞாபகம் தெரிந்ததில் இருந்து இன்று வரை இத்திருவிழாவிற்கு நான் சென்று கொண்டு இருக்கிறேன். இந்த வருட திருவிழா ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நடைபெறும் என நினைக்கிறேன். இந்த வருடம் திருவிழா பற்றி நிறைய விசயங்கள் பதிவு செய்கிறேன் விரைவில்.
Read more »

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது.....

Friday, July 16, 2010 10 comments
சிவராமன் இன்ஜனீயரிங் படித்து விட்டு தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வருகிறான் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை முப்போகம் விளைச்சல் கண்டு வருகிறான். இந்த வருமானத்தை வைத்து 5 கறவை மாடுகள் வாங்கி பால் விக்கிறான். ஏண்டா படிச்சிட்டு வேலைக்கு செல்லாம் இல்ல இப்படி காட்டிலும் மேட்டிலும், வெய்யிலிலும் ஏன் இப்படி கிடக்கிற என்று யார் கூறினாலும் இதில் இருக்கும் சுகம் அங்கு இல்லை என்று கூறுவான்.

தனது படிப்பையும் அறிவையும் வைத்து குறுகிய காலத்தில் என்ன பயிர் செய்தால் இலாபம் என அறிந்து விவசாயம் செய்து வருகிறான். சிவராமனுக்கு இப்போது வயது 32 எங்கு பெண் பார்க்க சென்றாலும் பையன் பி.இ படித்து விட்டு விவசாயம் செய்கிறானா எப்படி இவனை நம்பி பெண் கொடுப்பது என இதுவரை 50 பேருக்கு மேல் சொல்லி இருப்பார்கள். அனைத்துக்கும் இவன் பதில் எனக்கு என ஒருத்தி எங்காவது பிறந்திருப்பாள்.

சிவராமனின் பெரியப்பா மகன் ராஜா பெங்களூரில் வேலையி இருக்கிறான் அவனுக்குத் திருமணம் அவன் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இவனே செய்தான் இதைப்பார்த்த ஒரு பெரியவா தரகரிடம் சொல்லி அந்தைப்பையன் ஜாதகம் வாங்கி வா என அனுப்பு தரகர் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு பையன் பி.இ படித்து விட்டு பெங்களூரில் வேலையில் இருந்திருக்கிறான் இப்ப அந்ந கம்பெனி சாத்திட்டாங்க இப்பத்துக்கு வீட்டில் விவசாயம் பார்க்கிறான் மீண்டும் வேலைகிடைத்தால் பெங்களூர் செல்வான் என ஒரு பிட்டைப்போட இவர்களும் நம்பி வேலைகிடைக்கட்டும் பார்க்கலாம் என்று இருந்தனர்.

பெரியர் மட்டும் புரோக்கரை அழைத்துக்கொண்டு சிவராமன் வீடு செல்ல பெரியவருக்கு சிவராமனின் விவசாயம் பிடித்துப்போக உனக்கே என் பேத்தியை திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி சென்று விட்டார். சிவராமனும் அவர் நண்பர்களும் சேர்ந்து புரோக்கரிடம் பணத்தை கொடுத்து பெண்ணின் பெயர் மற்றும் போன் நம்பரைக்கேட்க புரோக்கர் பேர் மட்டும் லாவண்யா மணிகாரன்பாளையம் என்று சொல்லி சென்று விட்டார்.

சிவராமன் நெல் அரைக்க மணியகாரன்பாளையம் சென்ற போது புரோக்கரிடம் பேசி லாவண்யாவை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் கடைசியாக அந்த ஊர் மளிகை கடையில் சந்திக்கிறான் ஆனால் பேச இயலவில்லை மீண்டும் தரகரிடம் பேசி லாவண்யா வீட்டு போன் நெம்பர் வாங்கி சில சிக்கல்களுக்கு அப்புறம் லாவண்யாவிடம் பெரியவர் அறிமுகப்படுத்த கைபேசி எண்ணை வாங்கி ஒரு 2 நாட்கள் பேச ஆரம்பித்தான்.

லாவன்யாவின் அப்பா விவசாயம் பார்க்கிற பையனுக்கெல்லாம் என் பெண்ணை தரமாட்டேன் கைநிறைய சம்பளம் வாங்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவருடன் தான் திருமணம் என கன்டிப்பாக கூறு லாவன்யா அப்பா பேச்சை எதிர்க்காமல் ஒரு வாரம் பேசிய சிவராமனை தவிர்த்தாள்.

ஒரு 6 மாதத்திற்குப் பின் சென்னையில் பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்யும் சத்யாவிற்கும் லாவன்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சத்யா சென்னையில் பன்னாட்டு கம்பெனியில் வேலை எனவும் 60 ஆயிரம் சம்பளம் எனவும் சொல்லிக்கொண்டனர். மணமக்கள் இருவரையும் வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. அனைத்தும் பேசி முடித்து திருமண பத்திரிக்கையும் அடித்து அனைவருக்கும் கொடுத்தனர். அனைவரும் திருமண நாளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் லாவன்யாவின் ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில் இருந்து போன் இந்தப் பையனைப் பற்றி விசாரித்தீர்களா இந்த பன்னாட்டு நிறுவனத்தில் தான் வேலை செய்கிறான என ஏன் என கேட்க இல்லை என் மகளும் அதே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறாள் பத்திரிக்கையில் போட்டு இருக்கும் பேரில் அங்கு யாரும் சாப்ட்வேர் இன்ஜினியர் இல்லை என சொல்ல என்ன சொல்றீங்க நாளை இரவு திருமணம் என சொல்ல சென்னை பன்னாட்டு நிறுவன போன் நெம்பர் வாங்கியும் அங்கிருந்த உறவினர்களை போய் பார்க்க அந்நிறுவனத்தில் இருப்பது சத்யாவின் நண்பனாம். சத்யா பி.இ முடிக்காமல் சென்னையில் செல்போன் கடை வைத்தி இருக்கிறார் என அப்போது தான் அவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது.

ஊரில் பஞ்சாயத்தை கூட்டி கேட்க சத்யா உண்மையை சொல்லிவிட்டான் செல்போன் கடை தான் வைத்திருக்கிறேன் ஆனால் மாதம் 60 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறேன் என சொல்ல பெண் வீட்டார் உடனே விசாரிக்க அதுவும் பொய் என தெரிந்து மாப்பிள்ளை வேண்டாம் என சொல்லி இதுவரை செலவு செய்த பணத்தை வாங்கி பஞ்சாயத்து முடித்தது. குறித்த நேரத்தில் வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையை பிடித்து அதே மனவறையில் என் மகளுக்கு திருமணம் என மாப்பிள்ளை தேட வீட்டு பெரியவர் சிவராமனைச் சொல்ல பெண் வீட்டாரும் சரி என அனைவரும் சனிக்கிழமை காலை சென்று நிலமையை விளக்கினார். சிவராமன் தரப்பும் சம்மதம் தெரிவிக்க உடனே மாப்பிள்ளைக்கு துணி எடுத்து அன்று மாலை திருமண வரவேற்பில் லாவண்யாவுடன் சிவராமன். அடுத்த நாள் காலை முகூர்த்தம் முடிந்தது. என்ன சிவராமன் அனைவரையும் அழைக்க முடியவில்லை.

இது என் நண்பனின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். வித்தியாசமான திருமணத்தில் இதுவும் ஒன்று என்பதால் இந்நிகழ்ச்சியை பதிவாக்கினேன். நான் இன்னும் சிவராமனை பார்க்கவில்லை அடுத்த வாரம் சந்திப்பேன் என நினைக்கறேன்.

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் என்று கவிஞரின் வாக்கு எனது நண்பன் விசயத்திலும் உண்மையானது.
Read more »

வந்திருச்சு "மெட்ராஸ்-ஐ"

Sunday, July 11, 2010 7 comments


தற்போது அனைத்துப்பகுதிகளிலும் மெட்ராஸ்-ஐ என்னும் கண் நோய் பொதுமக்களை தாக்கி வருகின்றது மற்றும் வேகமாக பரவி வருகிறது. 

மெட்ராஸ்-ஐ

கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக்கொள்ளும். இதனால், கண்கள் அதிகம் சிவப்பாக இருக்கும். கண்ணில் அதிகமாக அழுக்கு வரும் கண் எரிச்சல் உண்டாகும், வலிக்கும், தண்ணீர் சொட்டும், கண்கள் கூசும் இதைத்தான் மெட்ராஸ்-ஐ என்கின்றனர்.

எப்படி பரவுகிறது

இந்நோய் தானாக வர வாய்ப்பில்லை யாருக்கேனும் இருந்தால் அவர்கள் மூலம் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

அறிகுறிகள்

கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்டவை இந்நோய்க்கான அறிகுறிகள்.

என்ன செய்ய வேண்டும்

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாகவே மருந்துகள் வாங்கி போட்டுக்கொள்ளக் கூடாது கண் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
சொட்டு மருந்துகளை கண்ணில் போடும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும், முறையான சிகிச்சை பெற்றால் 5 நாட்களில் குணமாகிவிடும்.
கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறு, கோழி இரத்தம் போன்றவற்றை விடக்கூடாது.

பரவாமல் தடுக்க

இந்நோய் மற்றவர்களை தாக்கமல் இருக்க மூக்கு கண்ணாடிகளை பயன்படுத்தலாம்
Read more »

அழகான பெயர் வேண்டும்....

Saturday, July 10, 2010 13 comments
குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஓர் அழகான விசயம் வைக்க வேண்டியதும் கட்டாயம்.பெயர் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் பெற்றோர் மற்றும் வீட்டு பெரியவர்கள் சம்மத்துடன் வைப்பது முன்பு எல்லாம் தனது தாத்தா பாட்டி பெயரை பேரனுக்கு வைப்பார்கள். அப்புறம் சாமி பெயர் வைப்பார்கள் இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு கனவுடன் பெயரிடுவார்கள்.

ஒரு சிலர் கணவனும் மனைவியும் தங்கள் பெயரில் இருந்து சில எழுத்துக்களை எடுத்து ஒரு அழகான பெயரை வைப்பார்கள் இன்னும் சிலர் தங்களது முன்னால் காதலி அல்லது காதலன் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வார்கள். நம் தமிழ் மக்கள் சிலர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்கின்றனர்.

குழந்தையின் அப்பா அம்மா பார்த்து பெயர் வைத்துக் கொண்டு இருக்கும் போது இடையில் இப்போது நியூமராலஜி என்னும் பெயரில் இத்தனை எழுத்துக்கள் தான் வரவேண்டும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இதற்கு இந்த முதல் எழுத்து தான் இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பெயர் வைக்க வேண்டிய நிலைமையில் சிலர்.

எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் பெயர் வைக்கவில்லை. மூன்று மாதம் கழித்து தான் பெயர் வைக்க வேண்டுமாம் இது தான் சம்பிரதாயம் என எங்க வீட்டில் சொல்லிவிட்டனர். வைகாசியில் மகன் பிறந்தான் ஆனி முடிந்து ஆடியில் தான் வைக்க வேண்டும் என கூறிவிட்டனர். ஆடி ஆகாது ஐந்தாவது மாதத்தில் வைக்கலாம் என்றால் அது புரட்டாசி மாதம் அப்போது நல்ல மாதம் இல்லையாம் என்ன செய்வது என்று யோசித்து ஆடி மாதத்தில் எங்க ஊரில் மிகப்பிரபலமான திருவிழா வருகிறது அன்று வைக்கலாம் என்று ஒரு வழியாக முடிவு செய்து விட்டோம்.

மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் இங்கு தான் கருத்து யுத்தம் நடக்கிறது. நான் அழகான தமிழ் பெயர் வைக்கலாம் சொல்லிக்கொண்டு இருக்க அதெல்லாம் முடியாது என்ன நட்சத்திரம், இராசி பார்த்து தான் பெயர் என எங்க அம்மா ஆரம்பித்துவிட்டார் குடும்பத்தில் உள்ள 25 பேரும் என் மனைவி உட்பட எல்லாம் ஆமாம் என சொல்ல நான் அமைதியாகிவிட்டேன். ஜோதிடர் மகனுக்கு ப, பி என்ற முதல் எழுத்தில் தொடங்கும் பேர் வையுங்கள் கூட்டுத்தொகை 3 வர வேண்டும் என சொல்லிவிட்டார். நானும் தமிழ் பெயரை தேடி கூட்டுத்தொகை 3 வருமாறு பார்த்தால் ஒன்னும் சரிவரல. இப்ப வட மொழி எழுத்துடன் சேர்த்து கூட்டுத்தொகை 3 வருமாறு பெயரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

ப, பி என்னும் முதல் எழுத்தில் தொடங்கும் அழகான பெயரை நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பெயரை சொல்லுங்க....
Read more »

அழிந்து போன குதிரை வண்டி...

Friday, July 9, 2010 12 comments

20 வருடங்களுக்கு முன்னால் குதிரை வண்டியில் பயணம் செய்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள். ஆனால் இன்று குதிரை வண்டியை பார்ப்தே மிகவும் அபூர்வம்.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அப்போது ஆட்டோக்களை விட குதிரைவண்டிதான் அதிகமாக இருந்தது என என் பெரியப்பா கூற கேட்டு இருக்கிறேன். பெரியப்பா அரசியலில் இருந்ததால் அடிக்கடி சென்னை பயணம் மேற்கொள்வார் சென்னையில் எங்கு சென்றாலும் குதிரை வண்டியில்தான் செல்வேன் என கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் இன்று குதிரை வண்டி ஒரு காட்சிப்பொருளாக ஆகிவிட்டது குதிரை வண்டி ஓட்டும் தொழில் ஏறக்குறைய அழிந்து விட்டது என கூறலாம்..

நான் முதன் முதலில் குதிரை வண்டியில் சென்றது எங்கள் பக்கத்து ஊர் திருவிழாவிற்குத்தான் குதிரைவண்டிப்பயணம் ஒரு சுகமான அனுபவம். நிறைய முறை குதிரை வண்டியில் சென்று இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் குதிரை வண்டி ஓட்டுபவர் பக்கத்தில் அமர்ந்திருந்தால் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் இதனால் சண்டை போட்டு அங்கே சென்று உட்காருவேன். குதிரை ஓடும் வேகமும் ஓட்டுபவரின் சத்தம் சாட்டையில் குதிரையை அடிக்கும் விதம் என ரசித்து ரசித்து சென்றிருக்கிறேன்.

இன்று குதிரைவண்டி இல்லை என்றாலும் எகிறும் பெட்ரோல் விலைக்கு குதிரை வண்டி தான் சரியானது என்பேன். வீட்டில் இருந்து 50 முதல் 60 மைல் தூரத்திற்கு செல்ல வேண்டும் எனில் குதிரை வண்டியை பயன்படுத்தலாம். குதிரைக்கு 2 கிலோ கொள்ளு மற்றும் செல்லும் வழியில் புல்லைக் கொடுக்கலாம் இதற்கு ஆகும் மொத்த செலவு 30 ரூபாய் தான் ஆகும் ஆனால் சொகுசான பயணம் விபத்துக்கு அதிக வாய்ப்பு இல்லை, குதிரையை மெதுவாக ஓடவிட்டு படுத்துக்கொண்டும் செல்லாம் என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். என்ன இருட்டில் செல்ல முடியாது. சுகமான பயணமாக அமையும் என்பதில் மிகை இல்லை.

இப்பொழுது குதிரைவண்டி பயணம் என்பது நமக்கே எட்டாக்கனி இனி வரும் சந்ததியினர் என்ன குதிரை வண்டியில் போனீங்களா என்று சிரிக்கத்தான் செய்வார்கள். நம்மில் பலபேர் குதிரை வண்டி பயணத்தை நிச்சயம் அனுபவித்து இருப்பார்கள். சில பேர் அதை அனுபவிக்காமலம் இருக்கலாம். ஆனாலும் இது முற்றிலும் அழிந்த ஒரு தொழில் என்றாலும் நினைவுகள் அழிவதில்லை.

Read more »