Pages

குஷ்பூவைப் பார்த்து குஷியா ஓட்டுப்போடலாம் வாங்க.....

Wednesday, June 9, 2010

முதலில் குஷ்பு காங்கிரசில் சேருகிறார் என்றதும் ஏன் இந்த முடிவு என்று நினைத்தேன். அங்கே ஏற்கனவே ஒரு தலைவருக்கு ஒரு கோஷ்டி என பல கோஷ்டிகள் உள்ளன இதில் இவர் என்ன செய்யப்போகிறார் என்று நினைக்கும் போது குஷ்பூ திமுகவில் இணைந்தாக திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் படங்கள் பள பளத்தது.

அதிமுகவில் இருந்து பல பெரும் தலைவர்கள் திமுகவிற்கு வந்த போது இல்லாத களை குஷ்பூ திமுகவில் சேர்ந்த அன்று அறிவாலயம் களை கட்டியது. இதில் அறிவாலயத்திற்கு தினமும் வருபவர்களில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து என்னய்ய இன்றைக்கு பவுடர் நிறைய பூசியிருப்ப போல என கிண்டல் அடித்ததாக ஒரு வார இதழில் தகவல். குஷ்பூவின் வருகை திமுக தொண்டர்களுக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது..


குஷ்பூவை நம் தமிழ் மக்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள் என்றால் அது மிகையாகாது. ஏன் எனில் குஷ்பூ தமிழ் திரை உலகிற்கு வந்து 20 வருடங்கள் ஆனாலும் நம் தமிழக ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் குஷ்பூவை ரொம்ப பிடிக்கும். இதனால் தான் நம்ம ஆளுங்க குஷ்பூ இட்லி, குஷ்பூ ஜாக்கெட், குஷ்பூ புடவை இதற்கு மேல் குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு சென்றவர்கள் தானே நம் மக்கள். குஷ்பூ தொகுத்தளித்த ஜாக்பட் நிகழ்ச்சி பல வருடங்களாக வெற்றி பெற்றதற்கு குஷ்பூவே காரணம்.

திமுகவைப் பொறுத்த வரை நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய இருந்தாலும் கலைஞரும், ஸ்டாலினும் தான் இதில் முக்கியமானவர்கள். கலைஞரின் உடல் நலம் இதற்கு முன் இவர் செய்த சுற்றுப்பயணம் போல் இம் முறை சுற்றுப்பயணம் செய்வதற்கு உடல் நலம் ஒத்துழைப்பது கடினமே. ஸ்டாலின் மட்டுமே சுற்றுப்பயணம் மேற்கொள்வார். இன்று இருக்கும் மக்களின் வேகத்திற்கு கட்சி கூட்டங்களுக்கு ஆட்கள் வருவது கடினம். கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வரும் கூட்டம் மற்ற பேச்சாளர்களுக்கு வருமா என்பது கேள்வியே. குஷ்புவிற்கு இருக்கும் மாஸ்ஸிற்கு நிச்சயம் கூட்டம் வரும்.

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் ஒரு புறமும், குஷ்பூ ஒரு புறமும் தேர்தல் பிரச்சாரம் செய்தால் நிச்சயம் மக்கள் மனதில் திமுகவின் ஓட்டம் இருக்கும் இதை சரியாக கணித்த கலைஞர் குஷ்பூவை கட்சிக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சியும் கொடுக்க துவங்கிவிட்டார்கள்.

கலைஞர் பிறந்த நாளன்னு குஷ்பூவின் கன்னிப்பேச்சு அரங்கேறியது இப்பேச்சிற்கு கலைஞர், கட்சிக்காரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முதல் இவர் எப்படி பேசுகிறார் என்று ஆவலுடன் இருந்தனர். குஷ்பூவின் கன்னிப்பேச்சு அனைவரும் எதிர்பார்த்ததை போல் எல்லோரும் பாராட்டும் வகையில் இருந்தது. அதுவும், கலைஞர், ஸ்டாலின், அழகிரி என அனைவரையும் பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். எழுதிக் கொடுத்து பேசியது தான் இருந்தாலும் எல்லோரும் ஏற்கும்படி இருந்தது.

கலைஞர் வைத்த முதல் தேர்வில் குஷ்பூ தேர்ச்சி பெற்று விட்டார். இனி தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக குஷ்பூவின் சுறாவளி சுற்றுப்பயணத்தை எதிர்பார்க்கலாம்..

28 comments:

{ பிரபாகர் } at: June 9, 2010 at 10:10 PM said...

பங்காளி,

இனி தமிழ்நாடு எல்லா வளங்களையும் பெற்றுவிடும்...

கலிகாலம்.... என்ன சொல்ல!

பிரபாகர்...

{ Chitra } at: June 9, 2010 at 10:41 PM said...

குஷ்பூவுக்கு அடிச்ச ஜாக்பாட்?????

{ கனிமொழி } at: June 9, 2010 at 10:46 PM said...

:-)

{ கனிமொழி } at: June 9, 2010 at 10:46 PM said...

:-)

{ கண்ணகி } at: June 9, 2010 at 10:46 PM said...

பார்க்கலாம்.பார்க்கலாம்..

{ க.பாலாசி } at: June 9, 2010 at 11:01 PM said...

என் ஓட்டு க்க்குஷ்ப்ப்ப்பூவுக்குத்தான்....

{ Starjan ( ஸ்டார்ஜன் ) } at: June 10, 2010 at 1:12 AM said...

குஷ்பூவுக்கு ஒரு ஜெ.

Anonymous at: June 10, 2010 at 2:32 AM said...

தலையில் அடிச்சுக்கத் தோணுது. வேறென்ன செய்ய....

கொஞ்சம் உள்குத்தோட ஒரு கேள்வி கேட்கலாமா?

சிங்கத்தை எப்படி குஷ்பூ சாய்ச்சாங்களாம்?

Anonymous at: June 10, 2010 at 2:44 AM said...

http://alturl.com/8zis

{ வால்பையன் } at: June 10, 2010 at 2:53 AM said...

தல ஏற்கனவே குஷ்பூவுக்கும், திருமாவுக்கும், வாய்க்கா தகராறு ரெண்டு பேரும் பிரச்சாரத்துக்கு போனா என்ன பேசுவாங்க!

{ Jey } at: June 10, 2010 at 3:01 AM said...

அரஇனி தமிழன், தலை நிமிர்ந்து நடக்கலாம். வாழ்க தமிழ், வளர்க தமிழக சியல், ஓங்குக குஷ்புவின் புகழ்.

{ சத்ரியன் } at: June 10, 2010 at 4:06 AM said...

சங்கவி,

பார்க்கலாம்.பார்க்கலாம்...!

ஆமா,

வாரத்துக்கு ஒரு அரசியல் கட்டுரைன்னு சொல்லிட்டு தெனமும் போட்டா எப்பிடி?

ஒருவேளை, ஒரு நாள் சேர்ந்தது ஒரு வாரம் -னு மாத்திட்டாய்ங்களோ?

{ karthikeyanp } at: June 10, 2010 at 4:10 AM said...

Will it affect Radhika status in DMK by குஷ்பூ arrives ?

{ திருஞானசம்பத்.மா. } at: June 10, 2010 at 5:34 AM said...

வாழ்க குஷ்பு வளர்க தமிழகம்..

{ சேட்டைக்காரன் } at: June 10, 2010 at 5:43 AM said...

குஷ்பூ சரளமாக ஆங்கிலம், ஹிந்தி பேசுகிறார்! அவரை எம்.பியாக்கி தில்லி அனுப்பலாம்! (யாராவது அடிக்க வர்றதுக்கு முன்னாடி எஸ் ஆயிடறேன்!)

{ சங்கவி } at: June 10, 2010 at 7:03 AM said...

வாங்க பிரபாகர்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:04 AM said...

வாங்க அனானிம்ஸ்....

எந்த கருத்தாக இருந்தாலும் இதை நான் தான் சொன்னேன் என பெயரைச் சொல்லி சொல்லுங்க...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:04 AM said...

வாங்க ஸ்டார்ஜன்...

ஜெ ஜெ....

{ சங்கவி } at: June 10, 2010 at 7:04 AM said...

வாங்க பாலாசி...

நம்ம ஓட்டு குஷ்புக்குத்தான்னு கூட சொல்லலாம்...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:04 AM said...

வாங்க கனிமொழி...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:04 AM said...

வாங்க கண்ணகி....

நிச்சயம் பார்க்கத்தானே போகிறோம்...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:04 AM said...

வாங்க சித்ரா வாங்க...

நிச்சயம் ஜாக்பாட் தான்....

{ சங்கவி } at: June 10, 2010 at 7:05 AM said...

வாங்க சேட்டைக்காரன்...

நிச்சயம் எம்பி ஆகவும் வாய்ப்பு இருக்கு அது தளபதி நினைத்தால் நடக்கும்...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:05 AM said...

வாங்க திருஞானசம்பத்...

குஷ்புவிற்கு கோயிலே கட்டியதும் தமிழகத்தில் தான் மறந்துவிடாதீங்க...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:05 AM said...

வாங்க கார்த்திகேயன்...

ராதிகா திமுகவில் இப்ப இல்லைங்க அவங்க சமக....

{ சங்கவி } at: June 10, 2010 at 7:05 AM said...

வாங்க சத்ரியன்...

வாரம் ஒரு முறைன்னு தான் சொன்னேன்... எழுதும் பதிவு அரசியலைப்பற்றி அல்லவா...
அதனால இதெல்லாம் சகஜமப்பா...

{ சங்கவி } at: June 10, 2010 at 7:05 AM said...

வாங்க ஜெய்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

{ சங்கவி } at: June 10, 2010 at 7:05 AM said...

வாங்க வால்பையன்...

ரெண்டு பேரும் பழசை எல்லாம் மறந்தசாச்சு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

Post a Comment