Pages

பொய் சொல்லப்போறேன்....பொய் சொல்லப்போறேன்....

Wednesday, June 2, 2010

பொய் இன்று மனிதன் வாழ்வில் பேசும் பேச்சில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இன்று பொய் சொல்லாத மனிதனை பார்ப்பது ஆபூர்வம். என்னக்கு ஞாபகம் தெரிந்ததில் ஏதாவது ஒரு விசயத்திற்கு நண்பர்கள் பொய் சொல்லச் சொல்வார்கள் நாம் சொல்லாமல் உண்மையை சொல்லி விட்டால் உடனே இவர் அரிச்சந்திரனக்கு பக்கத்து வீடு பொய் பேச மாட்டாரு என கிண்டல் செய்வார்கள். அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடு இந்ந வார்த்தை நம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

நாம் வாழ்வில் முன்னேற கல்வி, செல்வம் எந்தளவிற்கு முக்கியமோ இன்று அந்தளவிற்கு பொய்யும் முக்கியமாகி விட்டது. குழந்தையில் இருந்து பெரிய தொழில் அதிபர்கள், அரசியல் வாதிகள் என பொய் சொல்லமால் பேசியவர்கள் இருப்பது கடினம். எல்லோருக்கும் பொய் சரளமாக வரக்கூடியது.

பொய் ஏன் சொல்கிறார்கள் என்று பார்த்தால் பயம், தற்பெருமை, எனக்கு எல்லாம் தெரியும் என்று இருமாப்பு ஆகிய முக்கிய காரணங்களால் பொய் அதிகம் பேசப்படுகிறது. இன்று இந்தப் பொய்யிற்கு இன்னொரு பெயர் வியாபார தந்திரம். மக்கள் பொய் பேசுபவர்களைத்தான் நம்புகிறார்கள் உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள் என்பது உண்மையே.

முதலில் நாம் எப்பொழுது பொய் சொல்ல ஆரம்பிக்கிறோம் என்றால் குழந்தையாக இருக்கும் போது பயத்தில் பேசுகிறோம் நம்மை விட பெரியவர்கள் நாம் செய்த தவறை சொன்னால் அடித்து விடுவார்கள் என குழந்தைகள் அங்கு தான் பொய் சொல்ல முதலில் ஆரம்பிக்கின்றன. அந்தக் குழந்தைகள் எங்கே கத்துக்கிறார்கள் என்றால் அதுவும் பெரியவர்களிடமே. அங்கே ஆரம்பித்த பொய் வாழ்வில் இரக்கும் வரை தொடர்கிறது.

எனக்கு தெரிந்து நான் பேசிய முதல் பொய் 2ம் வகுப்பு படிக்கும் போது திருமணத்திற்கு சென்று பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை அன்று வீட்டில் சொல்லிக் கொடுத்தது தான் பாட்டி செத்துருச்சுன்னு சொல் இது தான் நான் ஆரம்பித்த பொய் இன்று வரை தொடர்கிறது. இப்படி அறியாத வயதில் சொல்லும் பொய் பயத்தால் சொல்வது.

தற்பெருமை இப்பொய் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஆரம்பித்து விடும். 10ம் வகுப்பில் 300 மதிப்பெண்தான் எடுத்து இருப்பான் கேட்டால் 350 என்பான். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கு சென்று சினிமா பார்த்து திரும்பி இருப்பான் கேட்டால் இல்ல புக் வாங்கி வந்தேன் என்பது.

நம் பெண்கள் தீபாவளிக்கு புடவை எடுப்பார்கள் எடுத்து வந்து பக்கத்து வீட்டில் பார்க்க கொடுக்கும் போது 500 மதிப்புள்ள புடவையை 900 என்று சொல்வார்கள் இதைப்பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் 400 மதிப்புள்ள தன் புடவையை 1000 என்பாள் இப்படி சொல்வது தற்பெருமைக்காக சொல்லப்படுவது.

பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கேள்வி கேட்பார் தெரிந்தவர்கள் எல்லாம் கை தூக்குங்கள் என்றால் எல்லாரும் தூக்குவார்கள் திடீர் என ஒருவனைக்கேள்வி கேட்டாள் பேந்த பேந்த முழிப்பான். அங்கு மட்டுமல்ல பணிபுரியும் இடத்திலும் இதே நிலைமைதான்.

1000 பேரிடம் சொல்லி ஒரு திருமணம் செய் என்று கூறுவார்கள் நம்மாட்கள் அதை 1000 பொய் சொல்லி ஒரு திருமணம் செய் என்று நமக்கு தகுந்தாற் போல் மாற்றிவிட்டார்கள். திருமணத்தின் போது பேசும் பொய் தான் கொஞ்சம் நிறையவே இருக்கும். மாப்பிள்ளை பொங்களூரில் வேலை மாத வருமானம் 40 ஆயிரம் என்பார்கள். அங்கு பார்த்தால் நம்ம ஆள் பெங்களூரில் டெலிபோன் பூத் வைத்து இருப்பான் இப்படி பொய் நம் வாழ்வில் அத்தியாவிசய தேவை ஆகிவிட்டது.

காதலன் காதலியிடம் பேசும் பொய் மிகவும் அற்புதமான பொய். காதன் காதலியிடம் கூறுகிறான் நீ ரொம்ப அழகா இருக்கிற என்று இந்தப் பொய் சொன்னதும் காதலிக்கு வெட்கம் கலந்த சிரிப்பு வரும் அதை ரசிப்பதற்காகவே இப்பொய்யை பல முறை சொல்லலாம். அதற்கு காதலி நீங்க பொய் சொல்றீங்க என சொல்ல இல்ல இது தான் உண்மை என ஒரு பொய் சொல்வான் அதில் தான் இருவருக்கும் சந்தோசம். காதலன் காதலியிடம் பொய் சொல்லாமல் இருந்தால் அந்தக் காதலில் சந்தோசம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.

நான் கூறிய மறக்க முடியாத பொய் எனக்கு கோவையில் வேலைக்கான தேர்வு அலுவலகத்தில் விடுமுறை அளிக்க மாட்டார்கள் என்ன செய்வது என்று யோசிக்கும் போது எனக்கு ஒரு போன் வந்தது ராஜாவின் தங்கை எஸ்கேப். காதல் திருமணம் செய்ய ஓடிவிட்டாள் என்று. எனக்கு திடீர் என ஐடியா தோன போனை எடுத்து அலுவலத்திற்கு போட்டு சார் நான் இன்றும் நாளையும் அலுவலகம் வரஇயலாது ஏன் எனில் என் தங்கை எஸ்கேப் என அனுமதி வாங்கினேன் (நண்பனின் தங்கை எனக்கும் தங்கை தான் என்ற அடிப்படையில்). கோவை அலுவலகத்தில் வேலைக்கான முதல் டெஸ்டில் பாஸ் இரண்டாவது டெஸ்ட் அடுத்த வாரம் திங்கள் அன்று என்று சொன்னார்கள் என்ன செய்வது என்று யோசிக்கும் போது ஓடிய தங்கைக்கு நாங்களே வரும் திங்கள் அன்று திருமணம் செய்து வைக்கின்றோம் என்று கூறி அடுத்த லீவையும் சக்கஸ் ஆக வாங்கிவிட்டேன்...

பொய்சொல்வதால் நிறைய நன்மையும் உண்டு. நிறைய தீமையும் உண்டு. மொத்தத்தில் வித விதமாக சொல்லுங்க, சுவாரஸ்யமாக சொல்லுங்க, பொய் சொல்லி மாட்டிக்காம அனுபவியுங்கள்.....

9 comments:

{ சத்ரியன் } at: June 3, 2010 at 12:03 AM said...

பொய் சொல்லுவதை வள்ளுவனுக்குப் பிறகு நீதான்யா ஆதரிச்சிருக்க. அதுக்கே உனக்கு வாழ்த்துச் சொல்லனும்.

{ உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) } at: June 3, 2010 at 12:03 AM said...

பதிவு அருமை

(இது பொய் இல்லை )

{ சங்கவி } at: June 3, 2010 at 12:18 AM said...

வாங்க உலவு....

உங்கள் வரவுக்கு நன்றி....

{ சங்கவி } at: June 3, 2010 at 12:18 AM said...

வாங்க கண்ணன்....

பொய் சொல்வதை நான் ஆதரிக்கவில்லை என்றாலும், பொய் சொல்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டம் நண்பா....

{ எல் கே } at: June 3, 2010 at 3:00 AM said...

இதெல்லாம் பொய்யா உண்மையா ???

நீங்க ரொம்ப நல்லவர் (இது பொய்யா உண்மையா கண்டுபிடிங்க )

{ சங்கவி } at: June 3, 2010 at 3:24 AM said...

வாங்க LK

இது உண்மைங்க இல்ல பொய்யிங்க.. அப்படின்ன நான் பொய் சொல்கின்றேன்....

{ தமிழ் உதயம் } at: June 3, 2010 at 10:31 AM said...

பொய்... தொடர் பதிவாக கூட எழுதலாமே.

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: June 4, 2010 at 4:47 AM said...

///////1000 பேரிடம் சொல்லி ஒரு திருமணம் செய் என்று கூறுவார்கள் நம்மாட்கள் அதை 1000 பொய் சொல்லி ஒரு திருமணம் செய் என்று நமக்கு தகுந்தாற் போல் மாற்றிவிட்டார்கள்./////


ஆஹா அப்படியா மேட்டரு இவளவு நாலா எனக்கு தெரியவே தெரியாது நண்பரே .
நல்ல எழுதி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி

{ மங்குனி அமைச்சர் } at: June 7, 2010 at 10:15 PM said...

///ராஜாவின் தங்கை எஸ்கேப். காதல் திருமணம் செய்ய ஓடிவிட்டாள் என்று. எனக்கு திடீர் என ஐடியா தோன போனை எடுத்து அலுவலத்திற்கு போட்டு சார் நான் இன்றும் நாளையும் அலுவலகம் வரஇயலாது ஏன் எனில் என் தங்கை எஸ்கேப் என அனுமதி வாங்கினேன் (நண்பனின் தங்கை எனக்கும் தங்கை தான் என்ற அடிப்படையில்). கோவை அலுவலகத்தில் வேலைக்கான முதல் டெஸ்டில் பாஸ் இரண்டாவது டெஸ்ட் அடுத்த வாரம் திங்கள் அன்று என்று சொன்னார்கள் என்ன செய்வது என்று யோசிக்கும் போது ஓடிய தங்கைக்கு நாங்களே வரும் திங்கள் அன்று திருமணம் செய்து வைக்கின்றோம் என்று கூறி அடுத்த லீவையும் சக்கஸ் ஆக வாங்கிவிட்டேன்...////


சார் இது உங்களுக்கே நியாயமா படுதா ?

Post a Comment