Pages

நோய்களை விரட்டும் மஞ்சள்

Monday, May 24, 2010

மஞ்சள் என்றாலே மங்களகரம் என்று தான் நாம் எப்போதும் நினைக்கிறோம். அந்த அளவிற்கு மஞ்சள் நம் மக்களோடு ஒன்றி விட்டது. நம் வீட்டில் எந்த ஒரு சுபகாரியங்களிலும் மஞ்சளுக்கு நிச்சயம் இடம் உண்டு.  தொன்று தொட்டு நம் மக்களின் வாழ்வில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு.

மஞ்சள் என்றால்  உடனே ஞாபகம் வரவேண்டிய ஊர் ஈரோடு. ஆசியாவின் மிகப்பெரிய மஞ்சள் மார்க்கெட் இங்கு தான் உள்ளது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புலங்குகிறது மஞ்சளில். எங்கள் கிராமத்தில் மஞ்சள் பயிரிட்டு அதை விற்பனைக்கு மூட்டைகளில் அடுக்கி கொண்டு செல்வார்கள் முதலில் மஞ்சளைப்பற்றி எனக்கு தெரிந்தது இதுதான்.

நமது கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு.


பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பார்கள், மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. கிராமங்களில் பூரான் கடித்து விட்டால் கொஞ்சம் மஞ்சள் குடி விஷம் இறங்கி விடும் என்பார்கள். இப்படித்தான் மஞ்சளைப்பற்றி நான் அறிந்தது. ஆனால் மஞ்சளைப்பற்றியும் அதன் மருத்துவ குணமும் கணக்கில் அடங்காது. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மஞ்சளில் உள்ளது. 

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.
நமக்கு மஞ்சள் மட்டுமே தெரியும் ஆனால் மஞ்சளில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் பல பயன்கள் உண்டு.

மஞ்சளின் வகைகள் :
 • முட்டா மஞ்சள்
 • கஸ்தூரி மஞ்சள்
 • விரலி மஞ்சள்
 • கரிமஞ்சள்
 • நாக மஞ்சள்
 • காஞ்சிரத்தின மஞ்சள்
 • குரங்கு மஞ்சள்
 • குடமஞ்சள்
 • காட்டு மஞ்சள்
 • பலா மஞ்சள்
 • மர மஞ்சள்
 • ஆலப்புழை மஞ்சள்
முட்டா மஞ்சள்

இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

கஸ்தூரி மஞ்சள்

இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள்

இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள். விரலி மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள்.
இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்:

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் பயன்கள்:
 •  சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
 • பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
 • சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
 • உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
 • பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
 • வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
 • இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
  மருத்துவ குணங்கள் :

  வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.
  மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும். 

  வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும். 

  மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும். 

  மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள். 

  அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம். 

  மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது. 

  மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு. 

  மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். 

  மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

  குறிப்பு: கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள். 

  21 comments:

  { ஹேமா } at: May 24, 2010 at 2:53 AM said...

  சங்கவி...மீண்டும் மீண்டும் வாழ்வுக்குத் தேவையானவைகளையே தருகிறீர்கள்.நன்றி.இங்கு வெளிநாட்டுக் காரர்கூட மஞ்சள் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள்.
  சிலநேரங்களில் பாவிக்கிறார்கள்.

  { ஜெஸ்வந்தி - Jeswanthy } at: May 24, 2010 at 3:02 AM said...

  //வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

  மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.//

  இது மட்டும் தான் இதுவரை அறிந்திருந்தேன். மிகுதி அத்தனையும் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி

  { சேட்டைக்காரன் } at: May 24, 2010 at 3:09 AM said...

  அடேயப்பா, எவ்வளவு தகவல்! மஞ்சளின் மகிமை இப்போதல்லவா புரிகிறது! நன்றி!

  { க.பாலாசி } at: May 24, 2010 at 3:45 AM said...

  மஞ்சளின் இத்தனை வகைகளை இன்றுதான் அறிகிறேன்.

  அதற்கான மருத்துவ குணங்களையும் தொகுத்தளித்தமை சிறப்பு..

  நன்றிகள்....

  { GEETHA ACHAL } at: May 24, 2010 at 5:03 AM said...

  மஞ்சளின் மகிமை தெரியும்..ஆனால் இவ்வளவு அழகாக தெளிவாக எழுதி திரும்பவும் ..அறியாத பல விசயங்களை தெரியபடுத்தியதற்கு நன்றிகள்...

  { சத்ரியன் } at: May 24, 2010 at 6:31 AM said...

  சங்கவி,

  மஞ்சளின் மகிமை இயற்கை கொடுத்த வரம்!

  அதன் பயன்களைத் தொகுத்து பதிவிட்டதற்கு நன்றி.

  { Chitra } at: May 24, 2010 at 9:42 AM said...

  மங்களகரமான தகவல்கள்.

  { மனோ சாமிநாதன் } at: May 24, 2010 at 10:55 AM said...

  மஞ்சளின் மகிமைகளை இத்தனை விபரமாகத் தொகுத்து எழுதியதற்கு பாராட்டுக்கள். மிகவும் உபயோகமான பதிவு!

  { Starjan ( ஸ்டார்ஜன் ) } at: May 24, 2010 at 12:21 PM said...

  நல்ல தகவல்கள் சங்கவி.

  { sudhakar } at: May 24, 2010 at 12:33 PM said...

  "மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு" - I think thats the reason why Pudhan (one of the navagragam for education) is given with Yellow colour

  { சங்கவி } at: May 24, 2010 at 9:13 PM said...

  வாங்க ஹேமா....

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  { சங்கவி } at: May 24, 2010 at 9:14 PM said...

  வாங்க பாலாசி...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:14 PM said...

  வாங்க சேட்டைக்காரன்...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:14 PM said...

  வாங்க ஜெஸ்வந்தி...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:15 PM said...

  வாங்க சுதாகர்....

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:15 PM said...

  வாங்க ஸ்டார்ஜன்...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:15 PM said...

  வாங்க மனோ சாமிநாதன்...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:15 PM said...

  வாங்க சித்ரா வாங்க...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:15 PM said...

  வாங்க சத்ரியன்...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { சங்கவி } at: May 24, 2010 at 9:15 PM said...

  வாங்க கீதா...

  தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

  { கொங்கு நாடோடி } at: November 17, 2010 at 8:06 AM said...

  நான் ஜப்பானில் Ph.D படித்த பொது(அட உண்மைதாங்க), ஜப்பானியர் ஒருவர் இந்திய உணவுகளை பற்றி பாராட்டினர், முக்கியமாக மஞ்சளின் Antioxident பார்டி நிறைய பேசினார். Free radicals உடலில் செல் இழப்பிற்கு காரணிகள், இவையே புற்று நோயிக்கும் காரணம். மஞ்சளில் உள்ள Antioxidents, free radicals உடம்பில் குறைபதற்கு மிகவும் உதவுகின்றன.

  அருமையான பதிவு.

  மிளகு, சீரகம், கொத்துமல்லி, கருவேர்பில்லை, வாழைத்தண்டு, பூண்டு பற்றி எழுத வேண்டுகிறேன்.

  Post a Comment