Pages

உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்

Monday, April 26, 2010

நாம் தினமும் உண்ணும் பல பொருட்களில் வெந்தயம் இடம் பெற்றிருக்கும். வெந்தயத்தினால் நமது உடலுக்கு பல பயன்கள் உண்டு. கோடை காலங்களில் உடல் சூட்டைத்தணிக்க வெந்தயத்திற்கு முக்கிய இடம் உண்டு. வெந்தயத்தின் மருத்துவ குணங்களை நான் பல புத்தகங்கிளில் படிக்கும் போது ஒவ்வவொன்றிலும் பல நன்மைகள் பற்றி கூறி உள்ளது. நமக்கு வாழ்வில் தேவையான பயன்களை இப்பதிவில் தொகுத்தளித்துள்ளேன்.

வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.

உடல் சூடு, மலச்சிக்கலை போக்க

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

வயிற்றுக்கோளாறு நீங்க

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அழகுக்கு 

பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும். 

அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.

பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.  

தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.   

மேலும் பல பயன்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.

குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.
கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. 

வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.

பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
 

32 comments:

{ Kanchana Radhakrishnan } at: April 26, 2010 at 9:59 PM said...

Present sangkavi

{ ஈரோடு கதிர் } at: April 26, 2010 at 10:23 PM said...

கோடைக்கு ஏற்ற நல்ல தகவல்கள்

{ மங்குனி அமைச்சர் } at: April 26, 2010 at 10:38 PM said...

நடத்துங்க,நடத்துங்க,நடத்துங்க,

{ சுந்தரா } at: April 26, 2010 at 11:15 PM said...

வெயிலுக்கேத்த விஷயம்தான்...நன்றி!

{ வித்யா } at: April 26, 2010 at 11:15 PM said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

{ Starjan ( ஸ்டார்ஜன் ) } at: April 27, 2010 at 12:00 AM said...

வெந்தயத்துல இவ்வளோ விசயம் இருக்கா..?

{ தமிழரசி } at: April 27, 2010 at 12:19 AM said...

சங்கவியின் பதிவுகள் அனைத்தும் இயற்கை வைத்தியமுறைகள்..
கோடைக்கு உகந்த பதிவு...

{ சத்ரியன் } at: April 27, 2010 at 12:25 AM said...

//பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.//

அப்ப நான் முயற்சி பண்ணி பாத்துடலாம்னு முடிவு பண்ணியாச்சி.

நல்ல தகவல் சங்கவி.

{ பிரபாகர் } at: April 27, 2010 at 1:30 AM said...

அருமை பங்காளி... இதில் அனுபவப்பூர்வமாய் பின்பற்றி வரும் விஷயங்கள் பலவற்றை மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்...

உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதுபோல் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்...

பிரபாகர்...

{ பிரபாகர் } at: April 27, 2010 at 1:32 AM said...

//’மனவிழி’சத்ரியன் said...
//பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.//

அப்ப நான் முயற்சி பண்ணி பாத்துடலாம்னு முடிவு பண்ணியாச்சி.

நல்ல தகவல் சங்கவி.//

மிஸ்டர் சாரலின்பா ஃபாதர், எத்தனையோ விசயங்கள் இந்த இடுகையில் இருக்க இதுதான் ரொம்ப கவருதாடி! இருக்கட்டும் இருக்கட்டும்...! மொதல்ல சூட்ட தணிக்க தண்ணியில போட்டு சாப்பிடுங்க சாமி!

பிரபாகர்...

{ ஹேமா } at: April 27, 2010 at 1:48 AM said...

வெக்கைக்கு அடுத்த குளிர்மைப் பதிவு.நன்றி சங்கவி

//சத்ரியன்....அப்ப நான் முயற்சி பண்ணி பாத்துடலாம்னு முடிவு பண்ணியாச்சி//

சத்ரியனுக்கு ரொம்பவே ஆசை.பாவம் !

{ கனிமொழி } at: April 27, 2010 at 2:18 AM said...

கோடைக்கு உகந்த பதிவு...

:-)

{ கபீஷ் } at: April 27, 2010 at 2:44 AM said...

நல்ல பகிர்வு. நன்றி.

{ ஜெயந்தி } at: April 27, 2010 at 3:19 AM said...

அடிக்கிற வெயிலுக்கு தகுந்த மாதிரி போட்டிருக்கீங்க.

{ நேசமித்ரன் } at: April 27, 2010 at 3:52 AM said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

{ S.Menaga } at: April 27, 2010 at 4:13 AM said...

பயனுள்ள தகவல்கள்!!

{ சேட்டைக்காரன் } at: April 27, 2010 at 4:45 AM said...

அஜீரணமோ வயிற்றுக்கோளாறோ ஏற்பட்டால் அப்பத்தா வெந்தயமும் மோரும் தந்த காலம் நினைவுக்கு வந்தது. அருமையான பல தகவல்கள்; வெந்தயம் போலவே உபயோகமான தகவல்கள்! பாராட்டுக்கள்!!

{ Jo Amalan Rayen Fernando } at: April 27, 2010 at 5:10 AM said...

Good

{ Vidhoosh } at: April 27, 2010 at 5:14 AM said...

அருமையான தகவல்கள். :)

பகிர்வுக்கு நன்றி.

{ சங்கவி } at: April 27, 2010 at 6:52 AM said...

வாங்க பங்காளி...

அடுத்த பதிவில் இன்னும் பல பயன்கள் உள்ளதா போட்டு விடலாம்...

{ சங்கவி } at: April 27, 2010 at 6:52 AM said...

வாங்க கண்ணன்....

முயற்சி செய்யுங்க அதன் முடிவ மறக்காம சொல்லுங்க...

{ சங்கவி } at: April 27, 2010 at 6:52 AM said...

வாங்க தமிழ்....

இயற்கை வைத்துயமுறையில் தான் எந்த பக்கவிளைவும் இல்லிங்க தமிழரசி...

{ சங்கவி } at: April 27, 2010 at 6:52 AM said...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்..

வாங்க கதிர்....

வாங்க மங்குனி அமைச்சர்...

வாங்க சுந்தரா....

வாங்க வித்யா...

வாங்க ஸ்டார்ஜன்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: April 27, 2010 at 6:53 AM said...

வாங்க ஹேமா.....

வாங்க கனிமொழி...

வாங்க கபீஷ்...

வாங்க நேசமித்ரன்...

வாங்க Menagasathia...

வாங்க சேட்டை

வாங்க விதூஷ்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ அம்பிகா } at: April 27, 2010 at 7:39 AM said...

நல்ல பகிர்வு சங்கவி.

{ க.பாலாசி } at: April 27, 2010 at 10:21 AM said...

மிகத்தேவையான இடுகை... சூழ்நிலைக்கேற்ப பயன்படும் வகையில் சொல்லியுள்ளீர்கள்... மீண்டும் நன்றிகள்....

{ Chitra } at: April 27, 2010 at 10:40 AM said...

we use it a lot. Thank you for the useful info.

{ அப்பாவி தங்கமணி } at: April 27, 2010 at 12:25 PM said...

வெந்தயத்துல இவ்வளவு மேட்டர் இருக்கா... நெறைய தெரியாத (எனக்கு) விசயம் சொல்லி இருக்கீங்க... நன்றி

{ butterfly Surya } at: April 28, 2010 at 1:04 AM said...

அருமையான அவசியமான இடுகை.

பகிர்விற்கு நன்றி.

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: April 28, 2010 at 4:47 AM said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே . என் அம்மா கூட இந்தியாவில் இருந்து எனக்கு கடந்த வாரம் வெந்தயம் அனுப்பி இருக்காங்க . பகிர்வுக்கு நன்றி !

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: April 29, 2010 at 3:56 AM said...

வெந்தயம் போல நல்ல குளிர்ச்சி இந்த இடுகை சங்கவி

{ ராமலக்ஷ்மி } at: May 2, 2010 at 8:18 AM said...

பயனுள்ள பதிவு சங்கவி. நன்றி.

Post a Comment