Pages

காதலும் கனியும்....

Tuesday, April 20, 2010
பன்னிரன்டாம் வகுப்பு கடைசித் தேர்வு நடந்து முடிந்து பள்ளியில் மாணவ மாணவிகள் அனைவரும் மீண்டும் எப்ப சந்திப்போம் எங்கு சந்திப்போம் என மகிழ்வுடனும், சோகத்துடனும் பேசிக்கொண்டு இருக்கும் போது கடந்த இரண்டு வருடமாக ஒரு தலையாக இளங்கனியை காதலித்த கண்ணன் அன்று தான் தனது காதலை சொல்ல கனியும் இதைச் சொல்ல இவ்வளவு நாளா? நானும் ஆறு மாதமாக காத்திருக்கிறேன் இன்று தான் சொல்கிறாய் என் மறக்க முடியாத நாள் என அவள் அழக கண்ணனும் அழுது நான் திருமணம் ஒன்று செய்தால் அது உன்னுடன் தான் என இருவரும் சத்தியம் செய்து பிரிந்து சென்று விட்டனர்.
கண்ணனும், இளங்கனியும் ஒரே ஊர் தான். கண்ணன் சாதாரண தேநீர் கடை வைத்திருக்கும் சொக்கம்மாளின் மகன் இளங்கனி அந்த ஊரில் வசதி படைத்தவரான வீராச்சாமியின் மகள். வீராச்சாமி நன்கு படித்தும் விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் விவசாயியாக வலம் வருபவர். சொக்கம்மாளின் தேநீர் கடைக்கு பால் வீராச்சாமி தான் ஊற்றுகிறார்.
தேர்வு முடிவுகள் வந்த உடன் இருவரும் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆகிவிட்டனர். இருவரும் ஒரே கல்லூரியில் சேரலாம் என முடிவு செய்து பல கல்லூரிக்கு விண்ணப்பிக்க இருவருக்கும் அருகில் உள்ள நகரத்தில் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது இருவரும் அங்கே சேர்வது என முடிவெடுக்க முதலில் கண்ணன் அங்கு சேர்ந்தான். கனியின் அப்பா வீராச்சாமி என நீ இன்ஜினியரிங் எல்லாம் படிக்க வேண்டாம் பி.எஸ்.சி படிதால் போதும் என பக்கத்தில் உள்ள மாநகரத்தில் மிகப்பிரபலமான கிறித்துவ மகளிர் கல்லூரியில் சேர்த்ததார். அந்த கல்லூரி பருவம் முழுவதும் இருவரும் கடித்தில் காதலித்தனர். இவள் ஒரு வருடம் முன்பே படிப்பு முடித்து வர இவளுக்கு வரன் பாக்க ஆரம்பித்தனர். கண்ணன் இன்னும் ஒரு வருடம் மட்டும் பொறு எனக்கு கேம்பஸ்ஸில் மும்பையில் வேலை கிடைத்துள்ளது. முடித்ததும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இவளுக்கு வந்த வரக்களை எல்லாம் தானாகவே ஜாதகம் சரியில்லை என தள்ளிப்போனது. கண்ணனும் கல்லூரி முடிந்து மும்பையில் வேலைக்கு நல்ல சம்பளத்தில் சேர்ந்தான். இருவரும் 5 மாதம் கழித்து திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து காத்திருந்தனர்.

வீராச்சாமி ஏரியாவில் கொஞ்சம் பெரிய ஆள் அவரை எதிர்த்தி திருமணம் செய்வது கொஞ்சம் கஷ்டந்தான் என உணாந்த கண்ணன் மும்பையில் ஒரு வீடு பார்த்து விட்டு அவன் ஊரில் இருந்து மும்பைக்கு ரிட்டன் டிக்கெட் ரெடி செய்து விட்டு ஐந்து நண்பர்களுக்கு மட்டும் முன்னே சொல்லி ஊர் வந்து சேர்ந்தான். அரியர் பரிச்சை இருக்கு என கனியை வரவழைத்து திருமணத்தை நண்பர்கள் முன்னிலையில் பதிவு செய்து விட்டு இருவரும் வீடு திரும்பினர்.

கண்ணனின் பக்கத்து நகரத்தில் இருந்து காலை 5.30க்கு மும்பைக்கு ரயில் ஞாயிறு காலை டிக்கெட் புக்செய்து இருந்தான் சனிக்கிழமை இரவு அவளிடம் பேசும் போது நீ காலை 4 மணிக்கு உன் வீட்டில் இருந்து வாழைத் தோப்பு வழியாக மெயின் ரோட்டுக்கு வந்து விடு நான் அங்கு காத்திருக்கிறேன் என சொல்லிவிட்டான். கனி இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் அவளுக்கென்று இருந்த நகையை எதுவும் எடுக்காமல் அவளின் சேமிப்பான 50 ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பின் வாசல் வழியாக புறப்பட்டு மெயின் ரோடடை அடைந்தாள் அங்கு கண்ணன் இல்லை தேடிப்பார்க்கும் போது அருகில் இருந்த புதிரில் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தான் கார் வாடைக்கு எடுத்தால் தெரிந்து விடும் வண்டிய ஸ்டேன்டில் போட்டு விட்டால் நண்பன் எடுத்துக்கொள்வான். என கூறி இருவரும் ஊரில் யார் கண்ணிலும் படாமல் இரயில் நிலையத்தை நோக்கி வந்து வாகனத்தை ஸ்டேன்டில் விட்டு விட்டு வெளியே வந்தனர்.
வீட்டில் பொண்ணைக்காணவில்லை என்று தெரிந்து வீராசாமியும் மனைவியும் வீடு, தோட்டம் எல்லாம் தேடி சொந்த பந்தங்களுக்கு சொல்லி அனுப்பிவிட்டனர். அனைவரும் தேடும் படலம் ஆரம்பித்தனர். எங்கு சென்றாள் யாருடன் சென்றாள் என அவர்களுக்குத் தெரியவில்லை யாரை காதலிக்கிறாள் எனவும் தெரியவில்லை.
ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருக்கும் போது யாரும் பாக்கமல் இருக்கு ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தனர் இன்னும் 15 நிமிடத்தில் சென்று விடலாம் என கனவுடன் இருக்க அப்போது வரும் மும்பை எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதம் என அறிந்த உடன் என்ன செய்வது என்று யோசித்து பஸ் ஏறி அடுத்த ஊருக்குச்சென்று விடலாம் என்று அடுத்த ஊருக்கு சென்றனர்.
இவர்கள் இருவரையும் அந்ந ஊரில் இருந்து மார்க்கெட் வந்தவர்கள் பார்த்து கண்ணனும். இளங்கனியும் தான் போகின்றனர் என ஊறுதி செய்து வீராசாமியிடம் தகவல் தெரிவித்தனர். கண்ணனின் நண்பனையும் அவன் தாய் தகப்பனிடம் வீராசாமியின் உறவினர்கள் விசாரிக்க நண்பன் ஒருவன் உண்மையைச் சொல்லிவிட்டான். இவர்கள் ரயில் நிலையத்திற்கு தேட வர ரயில் இன்னும் போகவில்லை என தெரிந்ததும் நகர் முழுக்க தேட மார்க்கெட்டில் பார்த்தவர்கள் இந்த ஊர் பஸ்ல போரான் என கூறிவிட்டனர்.
பக்கத்து ஊர் பஸ்நிலையத்தில் இறங்கி கண்ணனும், கனியும் டீ குடித்து கொண்டு இருக்கும் போது இவர்களைத் தேடி வாகனம் வருவதைக்கண்டு கண்ணன் அங்கு இருந்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்த ஊரில் இருக்கும் ஒரு நண்பன் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினான். அந்ந ரயில் நிலையத்தில் மட்டுமல்ல எல்லா ரயில்நிலையத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு அங்கு இருந்து வேறு நண்பன் வீடு என நான்கு நாட்களாக மாறி மாறி செல்ல கடைசியில் 5 வது நண்பன் அந்த பொண்ணுக்கு ஒரு வகையில் சொந்தமாகிவிட காட்டிக்கொடுத்து விட்டான். வீராச்சாமியும் அவரது ஆட்களும், கண்ணனின் மாமாவும் வந்து கண்ணணையும், கனியையும் பிரித்து கூட்டிச்சென்றனர்.
6 வருடமாக காதலித்த கண்ணன் இளங்கனியை மறக்க முடியாமல் அவன் ரிஜிஸ்டர் திருமணம் செய்ததை வைத்து அந்த மாவட்ட கோர்ட்டில் ஆட்கொனர்வு மனு தாக்கல் செய்தான். வீராச்சாமி அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கை வைத்து பெண்ணை கடத்தியதாக கண்ணன் மற்றும் அவர்களது நண்பர்கள் மேல் வழக்கு பதிவு செய்து இரு வழக்காக விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணணையில் இளங்கனி கோர்ட்டில் தனது அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து அவருக்கு சாதகமாக பதில் அளிக்க கண்ணன் கடத்தியதாக நிருபிக்கப்பட்டு கண்ணனுக்கு 5 வருடமும், நண்பர்களுக்கு 3 வருடமும் சிறை தண்டணை கிடைத்தது.
கண்ணன் மேல் முறையீடு செய்தான் ஆனாலும் சிறையில் அடைத்தனர். 2 வருடம் சிறையில் நண்பர்களுடன் இருந்தான் இவர்களது நன்னடத்தை காரணமாக அண்ணா பிறந்த நாளன்று விடுதலை ஆனார்கள்.
இந்த 2 வருமும் இளங்கனி பைத்தியம் பிடித்தது போல் ஆகி வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வீராச்சாமி பொண்ணை நெருங்கிய உறவினர் வீட்டு தோட்டத்திற்கு அனுப்பி சிகிச்சை அளித்து அவள் சரியாகியதும் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். இந்நிலையில் கனிக்கு கண்ணன் சிறையில் இருந்து வந்து ஊரில் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் துணையாக இருக்கிறான் எனத் தெரியவந்தது.
இளங்கனிக்கு அவர்களின் சொந்த்தில் இருந்து ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். திருமண நாள் அன்று மணப்பெண் அலங்காரம் முடித்து கோவிலுக்கு காரில் அழைத்து சென்றனர் காரில் செல்லும் பொழுது கண்ணன் வீட்டை பார்த்துக்கொண்டே சென்றாள். கோவிலில் அனைவரும் இறங்கி அம்மனை தரிசித்து விட்டு கோவிலை சுற்றி வந்து உட்காருங்க என்று கூறியதும் கோயிலைச்சுற்றிய இளங்கனி கோவிலில் இருந்து அவனது கடையை நோக்கி ஒடினாள் கோவிலுக்கும் கடைக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அவள் பின்னால் அனைவரும் ஓடி வர அவள் கண்ணனின் வீட்டுக்குச் சென்று கண்ணனைக் கட்டி அணைத்து இனி நான் இங்கு தான் இருப்பேன் என அழத் தொடங்கினாள்.
பின்னால் வந்த வீராச்சாமியும் குடும்பத்தினரும் என்ன செய்வது என்று வீட்டு வாசலில் நிற்க ஊரே வேடிக்கை பார்த்தது கண்ணன் வீட்டின் முன் வந்து இப்பவும் நான் சொல்கிறேன் உங்கள் பொண்ணுதான் என் மனைவி இவள் இல்லை எனில் எனக்குத் திருமணம் இல்லை. ஆனால் உங்க இளங்கனி அவள் உங்களுடன் வந்தால் நீங்கள் தாரளமாக கூட்டடிட்டுப்போங்க என கூற. இளங்கனி அவனைவிட்டு வரமாட்டாள் எனத் தெரிந்த வீராசாமி அவள் வாழ்க்கையை அவள் தேடிகிட்டாள் என வீறு நடை போட்டு பின்னோக்கி சென்றார்.

14 comments:

{ S.Menaga } at: April 20, 2010 at 5:15 AM said...

கதை நல்லாயிருக்கு...

{ ஹேமா } at: April 20, 2010 at 5:19 AM said...

ஒரு சினிமா பார்த்த உணர்வு சங்கவி !

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: April 20, 2010 at 5:22 AM said...

///////பன்னிரன்டாம் வகுப்பு கடைசித் தேர்வு நடந்து முடிந்து பள்ளியில் மாணவ மாணவிகள் அனைவரும் மீண்டும் எப்ப சந்திப்போம் எங்கு சந்திப்போம் என மகிழ்வுடனும், சோகத்துடனும் பேசிக்கொண்டு இருக்கும் போது கடந்த இரண்டு வருடமாக ஒரு தலையாக இளங்கனியை காதலித்த கண்ணன் அன்று தான் தனது காதலை சொல்ல கனியும் இதைச் சொல்ல இவ்வளவு நாளா? நானும் ஆறு மாதமாக காத்திருக்கிறேன் இன்று தான் சொல்கிறாய் என் மறக்க முடியாத நாள் என அவள் அழக கண்ணனும் அழுது நான் திருமணம் ஒன்று செய்தால் அது உன்னுடன் தான் என இருவரும் சத்தியம் செய்து பிரிந்து சென்று விட்டனர்.///////////


கடந்த நினைவுகளை மீண்டும் என் கண் முன்னால் நிறுத்திவிட்டது உங்களின் பதிவு . அருமை . ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இன்னும் நினைவுகளின் நிசபதத்தில் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது . இதுபோன்ற பதிவுகளை வாசிக்கும் வரை .

மீண்டும் வருவேன்

{ கண்ணகி } at: April 20, 2010 at 6:01 AM said...

கடைசியில்தான் கொஞசம் சினிமாத்தன்மாக இருக்கிறது..இரண்டுவருடம் சிறையிருந்த கண்ணன் பாவம்...

{ சிநேகிதன் அக்பர் } at: April 20, 2010 at 6:58 AM said...

ரொம்ப நல்லாயிருக்க்கு சார்

{ சேட்டைக்காரன் } at: April 20, 2010 at 9:01 AM said...

கதை அருமை! பாராட்டுக்கள்!!

{ றமேஸ்-Ramesh } at: April 20, 2010 at 9:31 AM said...

நல்லா இருக்கு காதலே ஜெயம்...

{ Chitra } at: April 20, 2010 at 9:59 AM said...

கிராமிய காதல் கதை கொண்ட தமிழ் படம் பார்த்த மாதிரி.......

{ கனிமொழி } at: April 20, 2010 at 10:01 AM said...

:-) good sangavi....

{ செ.சரவணக்குமார் } at: April 20, 2010 at 11:48 AM said...

நல்ல நடையில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் சார்.

{ அப்பாவி தங்கமணி } at: April 20, 2010 at 5:59 PM said...

வாவ்... டயலாக் இல்லாம கூட இப்படி ஒரு கதை சுவாரஸ்யமா எழுத முடியும்னு இன்னிக்கி தான் தெரிஞ்சுகிட்டேன்.... சூப்பர்.... கலக்கல்

{ தமிழரசி } at: April 20, 2010 at 9:01 PM said...

மீண்டும் ஒரு காதல் கதை....

{ வித்யா } at: April 20, 2010 at 11:28 PM said...

நல்லாருக்கு..

{ வானம்பாடிகள் } at: April 20, 2010 at 11:35 PM said...

நல்லாருக்கு சங்கவி.:)

Post a Comment