Pages

எனக்குப் பிடித்த சினிமாக்கள்-கல்லூரிக்கு முன் (தொடர் பதிவு)

Monday, April 12, 2010

எனக்கு பிடித்த சினிமாக்கள் - கல்லூரிக்கு முன் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த பிரபாகருக்கு நன்றி... எனக்குப்பிடித்த படங்கள் என்றால் எதை சொல்ல சொல்லிக்கொண்டே இருக்கலாம் இதில் ஒரு சின்ன சந்தோசம் கல்லூரிக்கு முன் என்பதில் தான் பள்ளிகளில் படிக்கும் போது நிறைய படங்கள் பார்த்து இருக்கிறறோம் பழைய நினைவுகளை நினைத்து ஒரு பதிவு....

விதிகள்:

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)

முதல் மரியாதை:

இப்படம் என் வாழ்வில் மறக்க முடியாத படம் இப்படத்தை எங்கள் ஊர் திறந்தவெளி திரையரங்கமான ஸ்ரீவெங்கடேஸ்வரா தியேட்டரில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக முழுவதும் பார்த்த படம். இதற்கு முன் நிறைய படங்களுக்கு பார்த்து இருந்தாலும் முழுவதும் பார்த்த படம் இதுதான். இப்படத்தில் வரும் பாடல்களை அப்போது முனு முனுத்தபடி இருப்பேன். அடி ஆத்தாடி என்ற பாடல் காலத்தலர் அழியாத பாடல்களில் ஒன்று என கூறலாம் இன்றும் என் அழைபேசியின் ரிங் டோன் இப்பாடல் தான். இதில் வரும் ஏக்குருவி, சிட்டுக்குருவி, அடியே எவடி, ஏய் எவடிய அவ என்ற பாடல் நான் என் பக்கத்து வீட்டு சிறுசுகளை எல்லாம் அப்போதே கிண்டல் அடிக்க பயன்படுத்திய பாடல்.

16 வயதினிலே:

நானும் ரஜினி ரசிகன் தான் இப்படம் என்று பார்த்தேனே அன்றில் இருந்து இன்று வரை நானும் தலைவரின் ரசிகனே. இந்த படம் எங்க ஊர் திருவிழாவின் போது திரைகட்டி ஒளிபரப்பிய போது முழுவதும் ரசித்து ரசித்து பார்த்த படம். இப்படம் பார்த்த பின் ஊரில் நண்பர்களிடம் ரகளை செய்து இது எப்படி இருக்கு என்று ஒவ்வொருவரிடமும் சொல்லிக்காட்டுவேன். நாங்கள் ஊரில் விடுமுறை நாட்களில் கிணற்றில் குளிக்ச் செல்வோம் அப்போது உயரத்தில் இருந்து தான் அனைவரும் கிணற்றில் குதிப்போம் அப்ப என் நண்பன் சிவா குதிக்கலாமா வேண்டாமா என யோசிக்கும் போது நான் தள்ளிவிட்டு இது எப்படி இருக்கு என சொல்லி எல்லாரும் சிரித்துக்கொண்டு இருக்கும் போது கிணற்றில் இருந்து கூக்குரல் உள்ளே எட்டிப்பார்த்தால் சிவா கீழே விழுகும் போது பயத்தில் காலை நீட்ட அது பம்ப் செட் பைப்பில் பட்டு திரும்பி விழ இவனுக்கு மூக்கு நெற்றி எல்லாம் ரத்த காயம் இதை அவன் அவங்க வீட்டில் சொல்ல அங்கே இருந்து எங்க வீட்டுக்கு சண்டைக்கு வர ஊர்ப்பஞ்சாயத்தில் போய் முடிந்தது இப்பிரச்சனை இது எப்படி இருக்கு.


ஊமை விழிகள்:

இப்படத்தை குமாராபாளையத்தில் உள்ள கெளரி திரையரங்கில் பார்த்த ஞாபகம். இது ஒரு திகில் படமாக அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமும் கூட இப்படத்தில் வரும் அந்த திகில் பாட்டியைக்கண்டால் கண்ணை கைகளால் மூடி அந்த ஓட்டையில் பயந்து பயந்து படம் பார்ப்பேன். இதில் வரும் பாடல்களும் சிறப்பாக இருக்கும் படம் பார்க்க பார்க்க பயம் இருந்து கொண்டே இருக்கும்.

அஞ்சலி:

இப்படத்தில் வரும் குழந்தைகள் அனைத்திம் பக்கத்து வீட்டு குழந்தைகள் போலவே இருக்கும். இப்படம் பார்த்த பின் பக்கத்து வீட்டு குழந்தைகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு அடித்த லூட்டிகள் சொல்லி மாளாது. இதில் அஞ்சலியாக வரும் குழந்தையின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கும், ரகுவரன் ரேவதி இருவரின் நடிப்பு எதாதர்தமாகவும் அழககாவிம் இருக்கும் மணிரத்தினத்தின் முத்திரை பதித்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

தளபதி:

நட்பை சிறப்பாக கூறிய படங்களில் இதுவும் ஒன்று. ரஜினி ரொம்ப பிடிக்கும் அதிலும் இப்படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு என்ற பாடல் இன்று கேட்டாலும் ஆடத்தோனும். எனது பள்ளிப்பருவத்தில் நான் அதிக முறை பார்த்த படம் இது தான். கிட்டத்தட்ட 15 முறை பார்த்து இருப்பேன். ரஜினி, மம்முட்டி, ஷோபனா, அரவிந்சாமி ஆகியோர் நடிப்புடன் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யாவும் சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.


வருசம் 16:

குடும்பத்திற்குள் நடக்கும் காதலை அற்புதமாக சொல்லிய படம் கண்ணன் என்ற பாத்திரத்தில் கார்த்திக் நன்றாக செய்து இருப்பார். கார்த்திக் குஷ்புவை கலாய்க்கும் இடங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் வரும் காதலை பலர் ஆதரிக்க சிலர் எதிர்க்க அற்புதமாக கதையை நகர்த்தி இருப்பார் பாசில். இதில் வரும் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.

நாயகன்:

கமல் நடிப்பில் முத்திரை பதித்த படங்களில் இதுவும் ஒன்று. கமலின் அற்புதமான நடிப்பும் மணிரத்தினத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் அருமையகா இருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அழகு. க்ளைமேக்ஸ் காட்சியில் கமல் ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்து இருப்பார். கமலின் இளமைத்தோற்றத்தை அற்புதமாக காட்டப்பட படங்களில் இதுவும் ஒன்று.

வீடு:

பாலு மகேந்திராவின் அற்புதமான படம் நான் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் போது விசிடியில் இப்படம் பார்த்த ஞாபகம் பாலு மகேந்திராவின் அற்புதமான படம். ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியம் கண்டிப்பாக இருக்கும் அப்படி இருக்கும் மனிதன் வீடு கட்ட வேண்டும் என்று என்னி எவ்வாறு ஒரு வீட்டை கட்டுகிறான் என்பது தான் இப்படம். ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் அவன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்றும் வீடு கட்டும் போது எத்தனை தடைகளை தாண்ட வேண்டி இருக்கும் என்பதை அற்புதமாக விளக்கும் படம்.

அபூர்வ சகோதரர்கள்

இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப்பிறகே இப்படத்ததை நான் பார்த்தேன் அதற்கு முன் இப்படத்தின் கதை வசனத்தை டேப்ரிக்காடர் கிழியும் வரை கேட்டதாக ஞாபகம். இப்படத்தை பார்த்து ரசித்த போது ஒவ்வொரு காட்சிக்கான வசனங்களும் எனக்கு அத்துப்பிடி. இதில் எனக்கு மிகவும் பிடித்த குள்ளக் கமலை இன்றும் தொலைக்காட்சியில் ரசித்து வருகிறேன். இப்படத்தில் வரும் பாடல்களும், குள்ள கமல் வரும் ஒவ்வொரு ப்ரேமும் எனக்கு அத்துப்புடி. இப்படத்திற்கு அப்புறம் கமலின் படங்களை இது வரை நான் மிஸ் பன்னியது இல்லை. அவரின் நடிப்பிற்கும் இப்படமும் ஒர் உதாரணம்.

பாட்ஷா

தலைவர் நடித்த சூப்பர் வெற்றிப்படம் இப்படம் நான் 11ம் வகுப்பு படிக்கும் போது ரீலீஸ் ஆனது. இப்படத்ததை கோபி ஸ்ரீவள்ளி தியேட்டரில் படம் ரீலீஸ் ஆன அன்று பள்ளிக்கு கட் அடித்து விட்டு பள்ளி சீருடையிலேயே என் நண்பர்கள் 25 பேருடன் பார்த்த படம். இப்படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்பது இன்றும் கணக்கில் கொள்ளாது. 25 நாள், 50 ம் நாள், 100 ம் நாளும் இப்படத்தை பார்த்தேன். ரஜினி அவர்கள் மானிக்பாட்ஷாவாக மாறும் இடம் தியேட்டரில் எங்கள் ஆட்டம் களை கட்டும். இப்படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எனக்கு தெரியும், பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும். ரஜினிக்கு திரையுலகில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது மிகையாகது.

இப்படங்கள் எல்லாம் நான் கல்லூரிக்கு வரும் முன் பார்த்து மனதால் மீண்டும்  மீண்டும் இப்படத்தை பார்க்க தூண்டும் படங்கள். நான் கல்லூரி முடித்து இன்று வரை எனக்குப்பிடித்த படங்கள் இரண்டு பதிவுகள் போடலாம் இப்போது தான் படம் பார்க்கும் ரசனை மிக அதிகமாகி உள்ளது. அதைப்பற்றியான பதிவிற்கு தயாராகி வருகிறேன்.

இப்பதிவு ஒரு தொடர் பதிவு தொடர் பதிவிற்கு யாரை அழைக்காலம் என யோசிக்கும் போது இப்ப எல்லாம் நம் பதிவர்கள் தொடர் பதிவென்றால் தலை தெறிக்க ஒடுகின்றார்கள். என் பதிவை எழுதுவதற்கே நேரம் இல்லை இதில் எங்க நண்பா தொடரை அழைப்பது என்கிறார்கள். இதனால் சக நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் யார் யாருக்கு பதிவு எழுத தலைப்பை யோசித்துக்கொண்டு இருக்கறீர்களோ நீங்கள் உங்களுக்கு பிடித்த சினிமாவைப்பற்றி எழுதுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

17 comments:

{ தமிழரசி } at: April 12, 2010 at 2:47 AM said...

நல்லபடங்களாகத் தான் உங்களுக்கு பிடித்திருக்கு.கடைசி பத்தி அருமை நண்பா...புத்திசாலி நீ என்பதற்கு இதைவிட வேறென்ன உம் வேண்டும்

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: April 12, 2010 at 2:47 AM said...

நான்தான் ஒன்னாவது . மீண்டும் வருவேன் .

{ சத்ரியன் } at: April 12, 2010 at 3:04 AM said...

சங்கமித்ரன்,

பட்டையக் கிளப்புங்க...!

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: April 12, 2010 at 3:08 AM said...

உங்களின் சிறந்த படங்களின் தேர்வுகளும் , ஒவ்வொரு படத்தையும் பற்றி தாங்கள் தந்திருக்கும் குறிப்புகளும் மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் .மீண்டும் வருவேன்

{ கண்ணகி } at: April 12, 2010 at 5:50 AM said...

இது நல்லா இருக்கு....

{ Chitra } at: April 12, 2010 at 6:28 AM said...

பிடித்த படங்கள் மட்டும் குறிப்பிடாமல், எங்கு பார்த்தீர்கள், எப்படி ரசித்தீர்கள் என்ற விவரங்களுடன் எழுதப்பட்ட நல்ல பதிவு.

{ அப்பாவி தங்கமணி } at: April 12, 2010 at 6:47 AM said...

இதில் பல என்னுடைய பிடித்த படங்களும் கூட. விமர்சனம் அழகு. பழைய நாட்களை நினைவூட்டியது முக்கியமாக அஞ்சலி படம் பற்றி எழுதியது

{ சேட்டைக்காரன் } at: April 12, 2010 at 7:07 AM said...

நீங்கள் தேர்ந்தெடுத்த படங்களிலிருந்து உங்களது உயரிய, மாறுபட்ட ரசனை புரிகிறது. பாராட்டுக்கள்.

{ சேட்டைக்காரன் } at: April 12, 2010 at 7:07 AM said...

நீங்கள் தேர்ந்தெடுத்த படங்களிலிருந்து உங்களது உயரிய, மாறுபட்ட ரசனை புரிகிறது. பாராட்டுக்கள்.

{ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan } at: April 12, 2010 at 8:14 AM said...

நல்ல பட்டியல்.. பல படங்கள் என் பட்டியலிலும்.. :)

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: April 12, 2010 at 8:43 AM said...

பகிர்வுக்கு நன்றி

{ Starjan ( ஸ்டார்ஜன் ) } at: April 12, 2010 at 9:21 AM said...

தல ரொம்ப இன்ரஸ்டிங்கான படங்களை சொல்லிருக்கீங்க..

///இப்படம் நான் 11ம் வகுப்பு படிக்கும் போது ரீலீஸ் ஆனது.///

சேம்பிளட் தல.. நான் 10ம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன்.

{ வானம்பாடிகள் } at: April 12, 2010 at 9:51 PM said...

நல்ல தொகுப்பு:)

{ மங்குனி அமைச்சர் } at: April 13, 2010 at 4:03 AM said...

இதில் ஊமைவிழிகள் , தளபதி தவிர மற்ற படங்கள் இன்றும் ரசித்து பார்க்கலாம் , நல்ல ரசனை

{ புதுகைத் தென்றல் } at: April 13, 2010 at 5:27 AM said...

நல்லா இருக்குங்க. முடிஞ்சா தொடரப்பாக்கறேன்.

{ பின்னோக்கி } at: April 13, 2010 at 6:13 AM said...

பூ விழி வாசலிலே ??

{ ஸ்ரீராம். } at: April 13, 2010 at 7:21 AM said...

எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்...

Post a Comment