Pages

கோடை காலத்தில் உடல் சூட்டைத்தணிக்கும் மோர்

Thursday, March 25, 2010

இந்த வருடம் வெய்யிலின் உக்கரம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. வெப்பத்தை தனிக்க நாம் தேர்ந்தெடுக்கும் உணவு முறையே சரியானது ஆகும். நாம் உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் நமது உடல் வெப்பத்தை தாங்கும் சக்தி அதிகரிக்கும் இன்று எத்தனையோ பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானம் வந்தாலும் நம்ம ஊர் மோருக்கு ஈடுஆகாது.
மோர் நமது முன்னோர்களின் வாழ்க்கையில் கலந்த ஒன்று. அன்று விருந்தாளிகள் வீட்டினுள் வந்தால் அவர்களுக்கு பருகு தருவது மோர்தான் இன்றும் பல வீடுகளில் தருவது உண்டு. ஆனால் அனைத்து வீடுகளிலும் கிடைப்பதில்லை. நம்ம ஊர்த் திருவிழாக்காலங்களில் பொதுமக்களுக்கு ஊர் இளைஞர்கள் எல்லாம் இணைந்து நீர் மோர் வழங்கும் பழக்கம் இன்றும் உண்டு. எங்கள் கிராமத்து எல்லாம் வீட்டுக்கு நான் எப்ப சென்றாலும் இன்றும் ஒரு 2 கப் மோர் சாப்பிடுவது வழக்கம். மோர் பிடிக்காது என்று சொல்பவர்கள் அனேகமாக குறைவாகத்தான் இருக்கும்.
மோர்
1.தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

2. தண்ணீர் கலந்த மோரில் ஒரு இரண்டு வெள்ளரிப்பிஞ்சு, கருவேப்பில்லை, கொத்தமல்லி இதேல்லாம் கலந்தும் குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் போமு மோரின் சுவை இன்னும் அதிகரிக்கும்.

மோர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.  மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு களுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.

மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதை யில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட் கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது! அந்த மாதிரி சமயத்தில் 'ஸ்பெஷல் மோர்' குடிக்கலாம். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது!)

 த‌யிரு‌ம், மோரு‌ம் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் குழ‌ந்தைகளு‌க்கு கொடு‌ப்பதே இ‌ல்லை. ஆனா‌ல், குழ‌ந்தைகளு‌க்கு மோ‌ர் ‌மிகவு‌ம் ‌சிற‌ந்த உணவாக‌க் கருத‌ப்படு‌கிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. 
 
குடல் ஆரோக்கியத்திற்கு மோர் மிகவும் முக்கியமானது. மோரில் உள்ள அமிலம் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.
 
பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
 மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.
வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு 2 விதம். ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.

சாதாரண வ‌யி‌ற்று‌ப் போ‌க்‌கி‌ன் போது வா‌ந்‌தியு‌ம் சே‌‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம். இத‌ற்கு ந‌ல்ல மரு‌ந்து, ஜ‌வ்வ‌ரி‌சியை க‌ஞ்‌சி போல‌க் கா‌ய்‌ச்‌சி அதனுட‌‌ன் மோ‌ர் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து‌க் குழ‌ந்தைகளு‌க்கு‌க் கொடு‌த்து வரலா‌ம்.
மேலு‌ம் ‌கிரு‌‌மியா‌ல் ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்‌று‌ப் போ‌க்‌கி‌ன் போது மோ‌ர் அ‌ளி‌த்து வரலா‌ம்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

கிருமியால் விளைந்த வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, குழந்தைகள் படுத்தபடியே ஓய்வெடுக்க வேண்டும்.

பாலை ‌விட த‌யி‌ர் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரண‌ம் ஆ‌கி‌விடு‌ம். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி‌யிரு‌க்கு‌ம்.

எனவே இரவு நேர‌த்‌தி‌ல் பா‌ல் சாத‌த்தை ‌விட கொ‌தி‌க்க வை‌த்த மோ‌ர் சாத‌ம் ‌சிற‌ந்தது.

சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்

முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம்.

அதுபோ‌ல் சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.

சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.

தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

காமாலை நோயை சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.

30 comments:

{ சைவகொத்துப்பரோட்டா } at: March 25, 2010 at 7:31 PM said...

குளிர்ச்சியான தகவல்களுக்கு நன்றி.

{ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ } at: March 25, 2010 at 7:50 PM said...

எனக்கு மிகவும் பிடித்த பானம். :)
தயிரை விட மோர் மிகவும் நல்லது.

வெயில் காலம் முச்சூடும் குளிச்சியான பதிவுகளா போடுங்க சங்கவி..:)

{ சேட்டைக்காரன் } at: March 25, 2010 at 9:14 PM said...

யே தில் மாங்கே "மோர்"! :-)))

{ ஜீவன்சிவம் } at: March 25, 2010 at 9:59 PM said...

நீரை சுருக்கி குடி
மோரை பெருக்கி குடி
என்பது எங்க ஊர் பழமொழி. அதனால் மோரை எவ்வளவு தண்ணீரை கலந்து குடித்தாலும் நல்லது தான்.

{ வானம்பாடிகள் } at: March 25, 2010 at 10:12 PM said...

இதுலயும் நம்மாளுங்க ஐஸ் போட்டு நாசம் பண்ணிதான் குடிக்கிறது. நல்லாருக்கு மோர்.

{ Chitra } at: March 25, 2010 at 10:19 PM said...

மோர் பற்றிய சங்கதிகள் - "ஒன்ஸ் மோர்" கேக்குற மாதிரி இருந்தது.

{ விஜய் மகேந்திரன் } at: March 25, 2010 at 11:19 PM said...

கோடை காலத்திற்கு ஏற்ற பதிவு.உடல் நலம் குறித்த உங்கள் பதிவுகளை மருத்துவ துறை சார்தவன் என்ற முறையில் வரவேற்கிறேன்

{ பிரபாகர் } at: March 26, 2010 at 12:28 AM said...

Give me more....

இதுபோல் பயனுள்ள இடுகைகள் நிறைய தாருன்கள் நண்பா!

நிறைய தகவல்களுடன் ரொம்ப நல்லாருக்கு...

பிரபாகர்...

{ மங்குனி அமைச்சர் } at: March 26, 2010 at 12:28 AM said...

தல நீங்க விஞ்ஞானியா பொறக்க வேண்டிய ஆளு , நம்ம வீட்ட்ல டெய்லி மோர் உண்டு (சார் இப்போ வெண்ணை எடுத்திட்டு தான் பாலே தர்ரானுக )

{ றமேஸ்-Ramesh } at: March 26, 2010 at 1:37 AM said...

இது குளிர்ச்சிப்பதிவு...... அருமை தொடருங்கள்

{ க.பாலாசி } at: March 26, 2010 at 2:52 AM said...

படிக்கும்போதே குளுகுளுன்னு இருக்குங்க...

{ ஸ்ரீராம். } at: March 26, 2010 at 3:02 AM said...

தயிர் அஜீரணம் பண்ணும். மோர் ஜீரணத்துக்கு நல்லது. சூடு படுத்தப் படும் மோரை கொழுமோர் என்று சொல்வார்கள். புளி வெல்லம் சுக்கு கலந்த பானகம் கூட நீர்க்கடுப்புக்காக, நீர்ச்சுருக்குக்கு கொடுக்கப் படுவதே...தகவல்களுக்கு நன்றி

{ திருஞானசம்பத்.மா. } at: March 26, 2010 at 4:02 AM said...

தேவையான பகிர்வுங்க..

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: March 26, 2010 at 5:00 AM said...

தகவல்களுக்கு நன்றி.

{ ♥ RomeO ♥ } at: March 26, 2010 at 6:36 AM said...

தகவல்களுக்கு நன்றி தல .. இந்த நேரத்துக்கு ஏற்ற பதிவு .

{ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ } at: March 26, 2010 at 7:16 AM said...

பேரூந்து காதல்
தொடர் பதிவு போட்டாச்சு சங்கவி :)

http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_2321.html

{ ஜெரி ஈசானந்தன். } at: March 26, 2010 at 9:07 AM said...

its my favorite drink,especially in hot summer.

{ விஜய் மகேந்திரன் } at: March 27, 2010 at 12:43 AM said...

i give a link in facebook also.check vijaymahindran.

{ சங்கவி } at: March 27, 2010 at 7:14 PM said...

வாங்க ஜீவன்சிவம்...

அழகான பழமொழி சொன்னதுக்கு மிக்க நன்றி...

{ சங்கவி } at: March 27, 2010 at 7:14 PM said...

வாங்க சேட்டை....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: March 27, 2010 at 7:14 PM said...

வாங்க ஷங்கர்....

வெயில் காலம் முச்சூடும் குளிர்ச்சியான பதிவா போட்டுட்டா போச்சு....

{ சங்கவி } at: March 27, 2010 at 7:14 PM said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: March 27, 2010 at 7:15 PM said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க ரோமியோ...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க ஜெரி ஈசானந்தன்....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: March 27, 2010 at 7:15 PM said...

வாங்க றமேஷ்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க பாலாசி...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க ஸ்ரீராம்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க திருஞானசம்பத்....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க ராதாகிருஷ்ணன் சார்...

{ சங்கவி } at: March 27, 2010 at 7:15 PM said...

வாங்க விஜய்மகேந்திரன்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க பிராபாகர்.....

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

வாங்க மங்குனி...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: March 27, 2010 at 7:15 PM said...

வாங்க சித்ரா வாங்க...

உங்களுக்காக ஒன்ஸ்மோர் போட்டா போச்சு...

{ சங்கவி } at: March 27, 2010 at 7:15 PM said...

வாங்க வானம்பாடி சார்....

சரியாச்சொன்னீங்க சார்....

{ ராமலக்ஷ்மி } at: March 28, 2010 at 8:07 AM said...

மோர் பிடிக்காதவர் இருக்க முடியாது. ஆனாலும் அதன் அவசியத்தை சரியான சீசனில் வலியுறுத்தியுள்ளீர்கள். நன்றி.

{ cheena (சீனா) } at: March 29, 2010 at 8:23 AM said...

அன்பின் சங்கவி

குளிர்ந்த மோர் குடித்த உடன் உங்கள் இடுகைக்குவந்தேன் - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள்

{ S.Menaga } at: April 1, 2010 at 9:39 AM said...

அருமையான தகவல்!!

Post a Comment