Pages

காக்காயன், மாட்டுவாயன், செத்தாடு...

Sunday, March 21, 2010
இது எல்லாம் நண்பர்களின் பட்டப்பெயர்கள். பட்டப்பெயர்களைப்பற்றி நிறைய நண்பர்கள் எழுதி இருந்தாலும் இதன் சுவராரஸ்யமே தனி தான். கிராமம் ஆகட்டும் நகரம் ஆகட்டும் எங்கு வசிப்பவர்களும் பட்டப்பெயர்கள் சூட்டாமலும், அவர்களுக்கென பட்டப்பெயர்களும் நிச்சயம் இருக்கும். இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் மாறும்.

நான் வளர்ந்த, படித்த, வாழ்ந்த என அனைத்து இடங்களிலும் எனக்கு பட்டப்பெயர் உண்டு. நானும் நிறைய பேருக்கு பட்டப்பெயர் வைத்துள்ளேன். நான் சிறியவனாக இருக்கும் போது எனக்கு நண்பர்கள் வைத்த முதல் பட்டப்பெயர் குச்சி ரொம்ப எழும்பா இருப்பேன் இது கொஞ்ச நாள் தான் அப்புறம் சென்டர் கட், கருவாயன், பல்ராயன், முந்திரிக்கொட்டை, எழும்பன், சித்தாரான், கஞ்சி, புலவன் இப்ப கடைசியா குண்டண், கருங்குண்டன் இவ்வளவு தாங்க எனக்கு இருந்த இப்ப இருக்கற பட்டப்பெயர்கள்.

கணவன் மனைவி தங்களுக்குள் அழைத்துக்கொள்ளும் போது பேர் சொல்லி அழைக்காமல் புனைப்பெயர் வைத்து தான் அழைப்பார்கள் நான் நிறைய நண்பர்கள் வீட்டில் பார்த்து இருக்கேன். என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் தன் கணவனை பன்னி என்று தான் அழைப்பார் பட்டப்பெயர் வைத்து அழைக்காமல் இருப்பவர்கள் குறைவு தான். இப்படி பட்டப்பெயர் வைத்துக்கூறும் போது அன்பு அதிகமாகும்.(அப்படின்னு சொன்னாங்க)

நான் வைத்த பட்டப்பெயர் கணக்கில் இல்லாதது பள்ளியில் படிக்கும் போது மீன் பிடிக்கச்செல்வோம் அப்ப என் ஜீனியர் ஒருவன் குளித்துக்கொண்டு இருந்தான் அவனை பார்த்து ஏய் நைனாமலை என்றேன் அவன் பெயர் முத்துக்குமார் ஆனாலும் இன்று வரை அவனுக்கு ஊரில் பெயர் நைனா மலை தான். சைக்கிள் கடைக்காரர் பையனுக்கு ஒட்டை சைக்கிள், ஓட்டல் கடை வைத்திருக்கும் நண்பனுக்கு புழுத்த புரோட்டா, டீ கடை வைத்திருக்கும் நண்பனுக்கு தண்ணிப்பால், கருவாயன் இந்த்பெயர் வைத்தவன் தான் பாவம் அவன் மனைவியை அனைவரும் கருவாயன் பொண்டாட்டி எனவும் மகனை கருவாய பையன் என்றும் அழைக்கின்றனர்.

விஜி் என்ற நண்பனுக்கு மாட்டுவாயன் என்ற பெயர் இன்றளவும் இவனுக்கு இந்தப்பெயர் நிலைத்திருக்கிறது. நண்பன் கண்ணன் என்பவன் கண் சிவப்பாக இருக்கும் எப்பவுமே அவனை என்னடா கண் செத்த ஆடு போல் இருக்கிறது என கேட்க அது மருவி செத்தாட்டுக்கண்ணன் என்று மாறி விட்டது.

மொன்டி சத்தி, கூளை கோபால், கொத்து வசந்த், சின்ன புரடையன், பெரிய புரடையன், மொட்டையன், சொட்டை செந்தில், ஒய்யா செந்தில், பொட்டை மொகரையன், டவுசர் சரவணன், வல்லக்காலன், காமாளையன், குட்டை ராசு, நெட்டையன், பனங்காயன், சரக்கு சண்முகம், ஆஞ்சி, தூக்குச்சட்டி, லட்டு நாகராஜ்,வளந்து கெட்டவன், தண்ணி வண்டி, செங்காயன், பொல்லி, ஒல்டு, அழுக்கான் இப்படி நிறைய சொல்லிகிட்டேப் போகலாம்....

நிறைய பேர் சொல்லுவாங்க கிராமத்தில் தான் அதிகம் பட்டப்பெயர் இருக்கும் என நிச்சயமாக இல்லை மனிதர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் இப்பழக்கம் உண்டு. என் நண்பன் சென்னையில் ஒரு மிகப்பெரிய கம்பெனியில் பொட்டி தட்டும் வேலையில் இருக்கிறான் அவன் அவனது மேனேஜரை பட்டப்பெயர் வைத்து தான் பேசுகிறான். பட்டப்பெயர் என்பது நமது வாழ்வில் கலந்து விட்ட ஒன்று..
நண்பர்களே நீங்களும் உங்க பட்டபெயர் அனுபவத்தை பின்னூட்டமாகவோ முடிந்தால் ஒரு பதிவாகவே சொல்லாம்... சொல்லுங்க நானும் எதிர்பார்க்கிறேன்..

30 comments:

{ பிரபாகர் } at: March 21, 2010 at 7:13 PM said...

நண்பா,

உங்களின் இடுகைகள் யாவும் மிக வித்தியாசமாயும் படித்தவுடன் மனதை தொடுவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் அது சம்மந்தமாய் எழுத்ததூண்டுவதாயும் இருக்க்கின்றன. வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

{ ப்ரியமுடன் வசந்த் } at: March 21, 2010 at 7:54 PM said...

// சென்டர் கட், கருவாயன், பல்ராயன், முந்திரிக்கொட்டை, எழும்பன், சித்தாரான், கஞ்சி, புலவன் இப்ப கடைசியா குண்டண், கருங்குண்டன்//

:)))))

சுவாரஸ்யமான போஸ்ட் பாஸ்

எனக்கும் நிறைய பட்டப்பேர் இருக்கு அது நான் ஒரு போஸ்ட்டாவே போட்ருக்கேன்...!

{ Chitra } at: March 21, 2010 at 8:15 PM said...

இத்தனை பட்டப் பெயர்களா? பட்டப்பெயர் காரணம் சொல்லி இருக்கும் பெயர்களை இன்னும் அதிகம் ரசிக்க முடிகிறது.
அடுத்த முறை, யாருக்காவது பட்ட பெயர் வைக்க வேண்டியது வரும் போது: உபயம்: சங்கவி என்று சொல்லலாம் போல.
எனக்குள்ள பட்டப்பெயர்களை சொல்ல, தன்னடக்கம் தடுக்கிறது. அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். :-)

{ கண்ணகி } at: March 21, 2010 at 9:16 PM said...

பிரபாகர் சொன்ன மாதிரி நினைவலைகளை மீட்டுகிறது..

நகரங்களில் அவ்வளவாக இல்லை...

என் கணவர் ஊரில் நான் கேள்விப்பட்ட பெயர்கள்...தக்காளிப்பழத்தான், சோறாக்கி சுப்பணன், கோப்பக்காயா,..
இந்தப்பெயர்களைக்கேட்டு நான் சிரித்த சிரிப்பு,

அதேமாதிரி கிராமங்களில் பெயர் வைக்க அதிக சிரமப்பட மாட்டார்கள்.
முதல் பையன் பேர் மணி என்றால் அடுத்தவன் சின்னமணி..இத்மாதிரி பெரிய ராமாயாள், தங்கை சின்ன ராமாயாள், பெரிய ராசு, சின்னராசு, பெரிய பொன்னான், சின்னப்பொன்னான்..

{ சேட்டைக்காரன் } at: March 21, 2010 at 11:28 PM said...

அண்ணே! அசத்தல் பதிவு! ஒண்ணா ரெண்டா பின்னூட்டத்துலே சொல்ல...? :-)))) உங்க புண்ணியத்துலே அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சிருச்சில்லா? விடுவோமா...? கலக்கல்!!!!

{ பிரேமா மகள் } at: March 21, 2010 at 11:53 PM said...

//சென்டர் கட், கருவாயன், பல்ராயன், முந்திரிக்கொட்டை, எழும்பன், சித்தாரான், கஞ்சி, புலவன் இப்ப கடைசியா குண்டண், கருங்குண்டன்//


எப்படி பாஸ்.. நீங்க மட்டும் உண்மையை ஒத்துக்கறீங்க?

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: March 21, 2010 at 11:58 PM said...

குட்டி வேலை ஒன்று இருக்கு இதோ இப்ப முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்.

{ சத்ரியன் } at: March 22, 2010 at 12:56 AM said...

//கணவன் மனைவி தங்களுக்குள் அழைத்துக்கொள்ளும் போது பேர் சொல்லி அழைக்காமல் புனைப்பெயர் வைத்து தான் அழைப்பார்கள் //

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...! என்னத்தச் சொல்ல?

{ சத்ரியன் } at: March 22, 2010 at 12:57 AM said...

//நான் வைத்த பட்டப்பெயர் கணக்கில் இல்லாதது //

சங்கவி,

‘கணக்கை” தவிர்த்து,
மற்ற பாடங்களில் இருக்குமா?

{ ராஜன் } at: March 22, 2010 at 1:46 AM said...

நெறைய புதுசா இருக்குது மைண்ட்ல வெச்சுக்கறேன்

{ ஸ்ரீராம். } at: March 22, 2010 at 2:54 AM said...

சுவாரஸ்யம்தான்...

{ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ } at: March 22, 2010 at 4:47 AM said...

//////// கருவாயன் இந்த்பெயர் வைத்தவன் தான் பாவம் அவன் மனைவியை அனைவரும் கருவாயன் பொண்டாட்டி எனவும் மகனை கருவாய பையன் என்றும் அழைக்கின்றனர்.////////


ஏங்க இப்ப நீங்க அதே ஊருலதான் இருக்கீங்களா ???. எதற்கு கேக்கிறேன் என்றால் ஒருவேளை நீங்கள் இப்பொழுது அங்கு இல்லை என்றால் தப்பித் தவறிக்கூட அந்தப் பக்கம் போகிறாதீங்க ஆமா . எல்லோரும் கொலைவெறியுடன் இருப்பாங்க .

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: March 22, 2010 at 5:47 AM said...

நல்லா வச்சாங்க இப்படி பட்டப் பேரை அதுக்குனு சங்கவி உங்களுக்கே இவ்வளவு பேரா ஆச்சர்யமா இருக்கு

{ கனிமொழி } at: March 22, 2010 at 7:35 AM said...

கலக்கல் சங்கவி...
:-)

{ சங்கவி } at: March 22, 2010 at 8:18 AM said...

வாங்க சேட்டைக்காரன்...

உங்க சேட்டைய கொஞ்சம் ஆரம்பிங்க நண்பா...

{ சங்கவி } at: March 22, 2010 at 8:18 AM said...

வாங்க கண்ணகி...

//என் கணவர் ஊரில் நான் கேள்விப்பட்ட பெயர்கள்...தக்காளிப்பழத்தான், சோறாக்கி சுப்பணன், கோப்பக்காயா,..//

ஆஹா அருமை....

{ சங்கவி } at: March 22, 2010 at 8:18 AM said...

வாங்க சித்ரா...

உபயம் நானா...? பெரியவங்க நீங்க இருக்கும் போது நான் தான் தன்னடக்கமாக இருக்கவேண்டும்....

{ சங்கவி } at: March 22, 2010 at 8:18 AM said...

வாங்க வசந்த்...

உங்க போஸ்ட்ட படித்துவிட்டு சொல்கிறேன்...

{ சங்கவி } at: March 22, 2010 at 8:18 AM said...

வாங்க பிரபாகர்...

தங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி நண்பா.......

{ சங்கவி } at: March 22, 2010 at 8:19 AM said...

வாங்க ராஜன்...

வாங்க ஸ்ரீராம்...

வாங்க கனிமொழி...

வாங்க henammailakshmanan...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: March 22, 2010 at 8:19 AM said...

வாங்க சத்ரியன்..

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: March 22, 2010 at 8:19 AM said...

வாங்க பனித்துளி சங்கர்...

சீக்கிரம் உங்க பேரை சொல்லுங்க...

{ சங்கவி } at: March 22, 2010 at 8:19 AM said...

வாங்க பிரேமா மகள்...

உங்களைப்போல நண்பர்களிடம் உண்மையை ஒத்துக்குவதில் தவறு இல்லை...

{ ♥ RomeO ♥ } at: March 22, 2010 at 2:31 PM said...

""டேய் பொறுக்கி"" இது எனக்கு ""பொறுக்கி பையனே"" இது என் மகனுக்கு.. சொல்லுறது எங்க வீடு எஜமானி

{ ஸ்ரீ } at: March 22, 2010 at 10:58 PM said...

:-)))))))

{ வித்யா } at: March 23, 2010 at 12:21 AM said...

:))
பெரிய லிஸ்டே இருக்கே..

{ கண்மணி/kanmani } at: March 23, 2010 at 2:04 AM said...

நல்ல பதிவு.முடிந்தால் என் அனுபவமும் போடுகிறேன்

{ திருஞானசம்பத்.மா. } at: March 23, 2010 at 6:21 AM said...

பட்டப் பெயரா..??
என்னப் பார்த்து பாட்டே பாடுவானுக..

"வாஷிங் பவுடர் நிர்மா..
வாங்கிப் போடுறா கருமா.." என்று.. :-(

{ அநன்யா மஹாதேவன் } at: March 23, 2010 at 6:26 AM said...

எல்லாமே ரொம்ப சுவாரஸ்யமான பெயர்கள்! கலக்கிட்டீங்க!

Magudesh at: June 21, 2010 at 4:43 AM said...

சென்டர் கட், கருவாயன், பல்ராயன், முந்திரிக்கொட்டை, எழும்பன், சித்தாரான், கஞ்சி, புலவன் இப்ப கடைசியா குண்டண்.....Rose ..Roja ..lastly you had nig name at vellala hostel...

Post a Comment