Pages

என்னப் பெத்த ராசாவே..........

Saturday, March 27, 2010 18 comments
இது நம் தமிழ் மண்ணில் நம் முன்னோர்களால் பாடப்பட்ட நாட்டுப்புறப்பாடலான ஒப்பாரி பாடலின் முதல் வரி ஆகும்.

ஒப்பாரி பாடல்கள் ஏறக்குறைய இன்றைய காலகட்டத்தில் 98 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம். கிராமங்களில் வயதான ஒருவர் இறந்து விட்டால் என்றால் அவரை ஒப்பாரி பாட்ல் பாடி அவரது சாதனைகள் வேதனகளைச்சொல்லிதான் அனுப்பிவைப்பார்கள்.

மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு;கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.

ஒப்பாரி பாடல் தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வோடும் பின்னிப்பினைந்த ஒன்று ஆனால் அது இன்றல்ல. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தான் தாலட்டும், ஒப்பாரி பாடல்களும். மனிதனின் தொடக்க காலத்தில் பாடுவது தாலட்டு, அவன் வாழ்க்கை முடிந்து போகையில் பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும். தாய், தந்தை, மகன், மகள், கணவன், உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகிறது.

நான் அறிந்தவரையில் எங்க ஊரில் பொன்னாத்தாள் என்ற ஒரு பாட்டி இருந்தார்கள் யாராவது வீட்டில் இறந்து விட்டார்கள் எனில் பொன்னாத்தாவை தான் கூப்பிடுவார்கள். வயதான வாழ்ந்து அனுபவித்த ஒருவர் இறந்து விட்டர் எனில் அங்கு ஒப்பாரி ரொம்ப பலமாக இருக்கும். அந்த வீடுகளில் ரேடியோ கட்டி ஒருநாள் முழுக்க பொன்னாத்தாள் மைக்பிடித்து ஒப்பாரி பாடல்களை பாட ஆரம்பிக்கும். அப்படி பாடும் போது அவரின் அருமை பெருமைகள் அனைத்தும் அப்பாடல்களில் வரும். ஆனால் இன்று கால வேகத்தில் ஒப்பாரி என்னும் கிராமியபாடல்களே அழிந்து விட்டது என்றே கூறலாம்.

நான் படித்த சில ஒப்பாரி பாடல்கள்....

இறந்தவர்களின் உறவு முறை அடிப்படையில் ஆரம்பிக்கும் முதல் வரி....

என்னை ஆளவந்த ராசாவே -மனைவி
என்னப் பெத்த சீதேவியே- மகள்
என்ர மகளே- தாய்
என்ர மகனே- தாய்
என்ர பிறவியரே- சகோதரி நான் பெறாமகனே-
பெரியதாய் அல்லது சிறியதாய்


இவ்வாறு அழைத்து இப்பாடல்களை ஒரு ஓசை ஒழுங்குடன் பாடுவர் கேட்பவருக்கு இந்த ஓசை துக்கத்தைக் கொடுக்கும் .

மனைவியின் ஒப்பாரி


பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ 

பெண் கணவனை இழந்தால் சமூகம் அவளை மதிப்பதில்லை என்பதற்கான பாடல்....

என்னை ஆளவந்த ராசாவே
தட்டிலே மைஇருக்க
தாய்கொடுத்த சீர்இருக்க
தாய் கொடுத்த சீரிழந்தேன்
தரும் தாலி தானிழந்தேன்
தனி இருந்து வேலையென்ன
புண்ணியரை முன்னை வி;ட்டு
நான் பெண்ணிருந்து வேலையென்ன
 
 **********************************

முத்துப்பதித்த முகம்
என்ர ராசா
முழுநிலவாய் நின்ற :முகம்
நினைப்பேன் திடுக்கிடுவென்
உன்ர நினைவு வந்த நேரமெல்லாம்
போகக்கால் ஏவினதோ
பொல்லாதாள் தன்னைவிட்டு
நாக்குப் படைச்சவையள்
இனி நாகரியம் பேசுவினம்
மூக்குப் படைச்சவையள்
இனி முழுவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி
இவள் மூதேவி என்பினமே

தந்தைக்கும், கணவனுக்கும் பொறுந்தக்கூடிய பாடல்....

ஐயா நீ வாற வழியிலையோ
என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா
நீமாண்ட இடத்திலையோ
மாமரமாய் நில்லனணை
வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா

தாய் இறந்த போது பாடிய பாடல் ஒன்று வருமாறு.


என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;
தோணி சுணங்கிவரும்
நீங்கள் போட்ட சுருள் ஓலை முன்ன வரும்
சுருள் ஓலை கண்டவுடன்
நான் சுறுக்காப் பயணமானேன்


மகன் இறந்து விட்டபோது தாய்பாடுவதாக அமைந்த பாடல்...

வாலைப்பராயமல்லோ
உனக்கு வயதுமிகச் சொற்பமல்லோ
தாலிக்கேர்ர நாட்பார்க்க
காவுக்கோர் நாளாச்சோ
கூறைக்கேர்ர் நாட்பார்க்க
கொள்ளிக்கோர் நாளாச்சோ
மஞ்சளால கோலமிட்டு உன்னை
மணவறைக்கு விடும் வேளையிலெ
கரியாலே கோலமிட்டு
உன்னை
கட்டைக்கோ அனுப்புகிறேன்....

இறந்தவர் வீட்டுக்கு இரண்டு நாள் கழித்து துக்கம் விசாரிக்க வருபவருக்கான பாடல்...
“ஊரோ இரண்டாச்சு
அதன் ஊடே கடலாச்சு
நாடோ ரெண்டாச்சு
அதன் நடுவே கடலாச்சு
ஓடுகிற தண்ணியில
ஓலை நீ விட்டிருந்தா
ஓடி வந்திருப்பன்” 

இப்படி பல வகையான பாடல்கள் நம் சமூகத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற ஒப்பாரி பாடல்கள் ஆகும். ஆனால் இன்று இவைகள் அழிந்துவிட்டன என்கிற போது வருத்தப்பட வேண்டி உள்ளது...
Read more »

கோடை காலத்தில் உடல் சூட்டைத்தணிக்கும் மோர்

Thursday, March 25, 2010 30 comments

இந்த வருடம் வெய்யிலின் உக்கரம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. வெப்பத்தை தனிக்க நாம் தேர்ந்தெடுக்கும் உணவு முறையே சரியானது ஆகும். நாம் உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் நமது உடல் வெப்பத்தை தாங்கும் சக்தி அதிகரிக்கும் இன்று எத்தனையோ பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானம் வந்தாலும் நம்ம ஊர் மோருக்கு ஈடுஆகாது.
மோர் நமது முன்னோர்களின் வாழ்க்கையில் கலந்த ஒன்று. அன்று விருந்தாளிகள் வீட்டினுள் வந்தால் அவர்களுக்கு பருகு தருவது மோர்தான் இன்றும் பல வீடுகளில் தருவது உண்டு. ஆனால் அனைத்து வீடுகளிலும் கிடைப்பதில்லை. நம்ம ஊர்த் திருவிழாக்காலங்களில் பொதுமக்களுக்கு ஊர் இளைஞர்கள் எல்லாம் இணைந்து நீர் மோர் வழங்கும் பழக்கம் இன்றும் உண்டு. எங்கள் கிராமத்து எல்லாம் வீட்டுக்கு நான் எப்ப சென்றாலும் இன்றும் ஒரு 2 கப் மோர் சாப்பிடுவது வழக்கம். மோர் பிடிக்காது என்று சொல்பவர்கள் அனேகமாக குறைவாகத்தான் இருக்கும்.
மோர்
1.தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

2. தண்ணீர் கலந்த மோரில் ஒரு இரண்டு வெள்ளரிப்பிஞ்சு, கருவேப்பில்லை, கொத்தமல்லி இதேல்லாம் கலந்தும் குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் போமு மோரின் சுவை இன்னும் அதிகரிக்கும்.

மோர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.  மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு களுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.

மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதை யில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட் கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது! அந்த மாதிரி சமயத்தில் 'ஸ்பெஷல் மோர்' குடிக்கலாம். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது!)

 த‌யிரு‌ம், மோரு‌ம் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் குழ‌ந்தைகளு‌க்கு கொடு‌ப்பதே இ‌ல்லை. ஆனா‌ல், குழ‌ந்தைகளு‌க்கு மோ‌ர் ‌மிகவு‌ம் ‌சிற‌ந்த உணவாக‌க் கருத‌ப்படு‌கிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. 
 
குடல் ஆரோக்கியத்திற்கு மோர் மிகவும் முக்கியமானது. மோரில் உள்ள அமிலம் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.
 
பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
 மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.
வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு 2 விதம். ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.

சாதாரண வ‌யி‌ற்று‌ப் போ‌க்‌கி‌ன் போது வா‌ந்‌தியு‌ம் சே‌‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம். இத‌ற்கு ந‌ல்ல மரு‌ந்து, ஜ‌வ்வ‌ரி‌சியை க‌ஞ்‌சி போல‌க் கா‌ய்‌ச்‌சி அதனுட‌‌ன் மோ‌ர் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து‌க் குழ‌ந்தைகளு‌க்கு‌க் கொடு‌த்து வரலா‌ம்.
மேலு‌ம் ‌கிரு‌‌மியா‌ல் ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்‌று‌ப் போ‌க்‌கி‌ன் போது மோ‌ர் அ‌ளி‌த்து வரலா‌ம்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

கிருமியால் விளைந்த வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, குழந்தைகள் படுத்தபடியே ஓய்வெடுக்க வேண்டும்.

பாலை ‌விட த‌யி‌ர் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரண‌ம் ஆ‌கி‌விடு‌ம். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி‌யிரு‌க்கு‌ம்.

எனவே இரவு நேர‌த்‌தி‌ல் பா‌ல் சாத‌த்தை ‌விட கொ‌தி‌க்க வை‌த்த மோ‌ர் சாத‌ம் ‌சிற‌ந்தது.

சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்

முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம்.

அதுபோ‌ல் சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.

சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.

தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

காமாலை நோயை சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.

Read more »

யமுனா.....ஒரு காதல் கதை...

Tuesday, March 23, 2010 24 comments
யமுனா அந்த கிராமத்து தேவதை அப்படின்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க ஆனா அவ அழகு இருக்கு என எப்பவும் யாரிடமும் சொல்லமாட்டாள். அவள் கண் எப்போதும் மீன் போல் துள்ளிக்கொண்டே இருக்கும் தன் நடை உடை பாவனையில் அவள் வீட்டில் மட்டுமல்ல அந்த ஊரிலும் அனைவரையும் கொள்ளை கொண்டவள். அவள் அப்பா ஒரு கட்டடி மேஸ்த்திரி அம்மா குடும்ப தலைவி. 11ம் வகுப்பு படிக்கும் இந்த இளமங்கைக்கு அந்த ஊர் மட்டமல்ல பக்கத்து ஊரில் இருந்தும் தூது வரும் ஆனால் எங்க அப்பாகிட்ட சொல்லிருவேன் என தூது வரும் ஆட்களை மிரட்டிவிடுவாள். பள்ளி, பள்ளி விட்டால் வீடு டியூசனுக்கெல்லாம் போகமாட்டாள். வெள்ளிக்கிழமை மாலை கோயிலுக்குச் செல்வாள் யமுனாவைப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமே.
யமுனா 11ம் வகுப்பு முடிந்து விடுமுறையில் வீடடில் இருக்கும் காலத்தில்தான் அவர்கள் ஊர் மாரியம்மன் திருவிழா நடக்கும் மே மாத விடுமுறையில் தான் வெளி ஊரில் தங்கிப்படிக்கும் பசங்க எல்லாம் திருவிழாவிற்கு வருவார்கள் அப்படி வந்தவர்களில் ராமமூர்த்தி அனைவராலும் ராமு என்று அழைக்கபடுபவன் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் படிக்கிறான் அவனுடன் சுந்தர், சதிஷ், ரமேஸ், பாலா என அவ்வூர் இளவட்டங்கள் எல்லாம் வந்து ஊரைச்சுற்றிக்கொண்டும் மட்டை விளையாடிக்கொண்டு சந்தோசமாக அக்கிராமத்து மண் வாசனையில் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
ஊர்த்திருவிழா தொடங்கிவிட்டதால் எல்லோரும் மாலை நேரங்களில் கோயில் வளாகத்தில் ஆட்டம் ஆடுவார்கள் அதை ஊர் மக்கள் எல்லாம் வேடிக்கைப்பார்ப்பார்கள் ஆட்டம் ஆடிய களைப்பில் தண்ணீர் குடிக்க கோயில் பின்பக்கம் ராமு சென்றான் மண்குடத்தில் மண்சொம்பில் தண்ணீர்குடித்துவிட்டு மீதை தண்ணீரை தலையில் ஊற்ற அப்போது மேஸ்த்திரி குடும்பத்தினர் சாமிகும்பிட்டு விட்டு அவ்வழியாக வர மேஸ்த்திரி மேல் தண்ணீர் பட்டுவிட்டது ராமு சார் மன்னிச்சுங்க தெரியாம பட்டுருச்சுன்னு சொல்ல அவர் சரிப்பா பரவாயில்லை விடுவிடு என சொல்லி சென்றுவிட்டார் செல்லும் போது யமுனாவை கூப்பிட ராமு அன்றைக்குத்தான் பக்கத்தில் யமுனாவைப்பார்க்க கானததை கண்ட மாதிரி பாத்துகிட்டே இருந்தான் அப்ப தண்ணிகுடிக்க வந்த பாலா என்னடா என்னாச்சு இல்லடா யமுனா யமுனான்னு சொல்லிட்டு ராமு கோயிலில் ஆட்டம் ஆடி சென்று ஆட ஆரம்பித்தான் ஆனால் இவன் கண் எல்லாம் யமுனா எங்கே எங்கே எனத் தேடிக்கொண்டு இருந்தான். கூட ஆடிய பாலா என்னடா சித்தாள் வேலைக்கு ரெடியா? என கேட்க போட என்று முதல் முதலாக வெட்கப்பட்டான்.
அன்றில் இருந்து ராமு யமுனா கோவிலுக்கு வரும் நேரம் முதல் எப்வெல்லாம் வீட்டை விட்டு வெளியே வருவாள் என அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் அவள் பார்க்கும் போதேல்லாம் அவள் முன் தோன்றினான் எப்படியும் இந்த மாத இறுதியில் மீண்டு கல்லூரிக்கு சென்று விடுவேன் அதற்குள் எப்படியும் சொல்லி விடுவேன் என மார்தட்டடிக்கொண்டு தூது அனுப்பலாமா இல்லை நாமே சொல்லலாமா எப்படி பேசுவது என மண்டை குழம்பினான் சரி முதன் முதலில் இன்று கை அசைக்கலாம் என முடிவு செய்து காத்திருந்து அவள் மொட்டை மாடியில் துணி காயவைக்கும் போது நண்பர்களுடன் உட்கார்ந்து டேய் நீங்க யாரும் இங்க பாக்காதீங்க நான் மட்டும் பார்க்கிறேன் என அவள் திரும்பும்போது தைரியம்தை வரவழித்து கை காட்டினான் அவள் கைகாட்டியதை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி இருக்கவே அவன் திரும்ப கைகாட்ட அவள் பார்த்துவிட்டு திரும்பி வேற துணியை காய வைத்து மீண்டும் திரும்பிப் பார்த்தாள் ராமு சந்தோசத்தில் குதிக்க ராமுவின் அப்பா அங்க வந்து வாட வீடடில் மாமா வந்திருக்கிறார் உன்னை எங்கெல்லாம் தேடுவது வா என அழைக்க ராமு முகம் சிவந்து வீடு கிளம்பினான்.

அன்று முதல் திருவிழா நடைபெறும் வரை தினமும் அவளைப்பார்க்க தவம் கிடந்து தினமும் அவள் இருக்கும் இடமெல்லாம் இருப்பான் திருவிழாவில் இரு முறை பேச முற்பட்டான் முடியாமல் சிரிப்புடன் வந்து விட்டான். அவளும் இவனை தினமும் ஒரு முறை மட்டுமே சிரிப்பாள் ராமு அதற்காகவே தவம் கிடந்தான் இன்னும் கல்லூரிக்கு செல்ல 15 நாட்கள் மட்டும் மீதமிறுந்த நிலையில் எப்படியும் சொல்லிவிடலாம் என நண்பனிடம் ஐடியா கேட்க பேசமுடியாது ஆனா கடிதம் கொடுக்கலாம் என சொல்ல இரண்டு நாட்களாக நண்பர்கள் அனைவரும் தீர யோசித்து வைரமுத்து வின் கவிதையை உல்டா செய்து ஒரு கடிதம் ஒரு வழியாக தயாரித்துவிட்டனர் எப்படி கொடுப்பது என யோசிக்க பாலாவின் தங்கை மூலம் கொடுக்க முடிவெடுத்து அவளுக்கு சாக்லெட் எல்லாம் வாங்கிக்கொடுத்து கொடுத்துவிட்டு வர சொல்ல யமுனா எதுவும் சொல்லால் வாங்கிக்கிட்டா ராமுவிற்கு சந்தோசம் தாங்காமல் அன்றைக்கு நண்பர்களுக்கு எல்லாம் தம் வாங்கிக்கொடுத்து கொண்டாடினான்.
கடிதம் கொடுத்து இரண்டு நாள் ஆச்சு அவளும் வீட்டை விட்டு வரவில்லை எந்த பதிலும் காணவில்லை ராமு மண்டை குழம்பி அடுத்த கடிதம் எழுதி மீண்டும் நண்பனின் தங்கை மூலம் தங்கைக்கு கொஞசம் செலவு செய்து அனுப்பிவிட்டான் மீண்டும் கடிதம் வாங்கிவிட்டு இரண்டு நாட்கள் பதில் இல்லை ராமு இன்னும் நான்கு நாட்களில் கல்லூரி செல்லவேண்டும் என்ன செய்வது என நண்பனின் தங்கையிடம் சொல்லி அனுப்பினார்கள். யமுனா அவளிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சரி நான் கடிதம் எழுதுகிறேன் ஆனால் இப்ப எழுதமுடியாது கடிதம் எழுதி போஸ்டலில் அனுப்புகிறேன் ராமுவின் விலாசம் என்ன என கேட்டாள்.
அதை தங்கை சொல்ல ராமு மீண்டும் நண்பர்களுக்கெல்லாம் விருந்து படைத்து காதல் ரசம் சொட்ட சொட்ட சொந்தமாக கடிதம் எழுதி விலாசத்தோடு கொடுத்து அனுப்பினான். வாங்கிய யமுனா திங்கட்கிழமை நான் அனுப்புகிறேன் என சொல்லி அனுப்பினாள்.
ராமு நண்பர்களிட்ட எல்லாம் விடைபெற்று அப்பாகிட்ட பொய் சொல்லி கொஞ்சம் பணம் சேர்த்து வாங்கி விட்டு யமுனாவை கடைசியாக பார்க்க அவள் கை அசைக்க இன்னும் சந்தோசம் அதிகமாகி கனவுகளுடன் கல்லூரி சென்றான் தூங்காமல் யமுனாவுடன் நான்கு நாட்களாக கனவில் மிதந்தான். இன்று திங்கட்கிழமை கண்டிப்பாக கடிதம் எழுதி இருப்பால் என நினைத்து சந்தோசத்துடன் இருந்தான்.
யமுனா இங்கு தோழிகளிடம் காண்பித்து அனைவரும் பதில் கடிதம் எழுதலாம் என முடிவெடுத்து பள்ளியில் மதிய இடைவேளையில் யமுனா எனக்கு கையெழுத்து அழகாக இருக்காது நீ எழுது என இவளும் வைரமுத்துவின் சில வரிகளை உல்டா செய்து அவள் தோழி கீதா எழுதினாள் அடுத்தநாள் மாலை தபால் பெட்டியில் அனுப்பினாள்.
ராமு தூங்காமல் கொள்ளாமல் புதன்கிழமை மதியம் தான் கடிதம் கிடைக்கும் என தவமிருந்தான் புதன்கிழமை மதியமட விடுதில் இவனுக்கு ஒரு கவர் இருக்க எடுத்து ஒழித்து வைத்து விடுதி அறையில் நண்பர்கள் எல்லாம் மதியம் கல்லூரிக்குச் செல்ல ராமு வயிற்று வழி என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு கடித்தை சாமி படம் முன் வைத்து கும்பிட்டு பிரித்தான் உள்ள நிறைய பேப்பர்கள் இருந்தது முதல் கடித்தை படித்தான்.. அன்பு ராமுவிற்கு நலமா? நீங்க இங்க இருந்த ஒரு மாதமும் எனக்கு நிறைய சந்தோசம் உங்க கோயில் ஆட்டம், சிரிப்பு, உங்க டிரசிங், நண்பர்களுடன் ஆட்டம், எல்லாரிடமும் சகஜமாக பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்கள் என்னை காதலிப்பீர்கள் என்று எனக்கு தெரியும் எனக்கும் பிடிக்கும் ஆனால் என்னைத் திருமணம் செய்வபவர்கள் பெரிய அதிகாரியாகவும், கை நிறைய சம்பளம் வாங்குபவராகவும் இருக்க வேண்டும் இருக்கவேண்டும் என நினைக்கிறேன் நீங்க இப்ப தான் படிக்கறீங்க எப்ப பெரிய அதிகாரியாக வரப்போறீங்க அப்ப சந்திப்போம் நீங்க கொடுத்த அனைத்து கடிதத்தையும் அனுப்பிவிட்டேன் இனி உங்க வேளையப்பாருங்க என உல்டா கவிதையுடன் முடிந்தது கடிதம்.....
ராமு குப்புறப்படுத்து அழுதான் கொஞ்ச நேரம் யோசித்தவனாய் இனி படித்து பெரிய ஆளாகி இவள் முன் வாழ்ந்து காட்டவேண்டும் என வெறியுடன் படிக்க வேண்டும் என படிக்க ஆரம்பித்தான்
யமுனா கொஞ்சம் சோகமாவே காணப்பட்டாள் கீதா ஏன் என விசாரிக்க இல்லடி அன்றைக்கு மாலை எங்க வீட்டுக்கு அவங்க அம்மா வந்து பணம் கடன் வாங்குனாங்க அப்ப எங்க இடம், நகை எல்லாம் வித்து மகனை படிக்க வைக்கிறேன் அவன் நால்லா படிச்சு பெரிய வேலைக்குப் போனாத்தாம்மா எங்களுக்கு சோறு என கூறினாள் அதைக்கேட்டு அந்தக் கடித்ததை கிழித்துவிட்டு நான் வேறு கடிதம் எழுதினேன் எப்படியும் அவன் பெரிய ஆளாக வருவான் என்ற நம்பிக்கையில்....
Read more »

காக்காயன், மாட்டுவாயன், செத்தாடு...

Sunday, March 21, 2010 30 comments
இது எல்லாம் நண்பர்களின் பட்டப்பெயர்கள். பட்டப்பெயர்களைப்பற்றி நிறைய நண்பர்கள் எழுதி இருந்தாலும் இதன் சுவராரஸ்யமே தனி தான். கிராமம் ஆகட்டும் நகரம் ஆகட்டும் எங்கு வசிப்பவர்களும் பட்டப்பெயர்கள் சூட்டாமலும், அவர்களுக்கென பட்டப்பெயர்களும் நிச்சயம் இருக்கும். இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் மாறும்.

நான் வளர்ந்த, படித்த, வாழ்ந்த என அனைத்து இடங்களிலும் எனக்கு பட்டப்பெயர் உண்டு. நானும் நிறைய பேருக்கு பட்டப்பெயர் வைத்துள்ளேன். நான் சிறியவனாக இருக்கும் போது எனக்கு நண்பர்கள் வைத்த முதல் பட்டப்பெயர் குச்சி ரொம்ப எழும்பா இருப்பேன் இது கொஞ்ச நாள் தான் அப்புறம் சென்டர் கட், கருவாயன், பல்ராயன், முந்திரிக்கொட்டை, எழும்பன், சித்தாரான், கஞ்சி, புலவன் இப்ப கடைசியா குண்டண், கருங்குண்டன் இவ்வளவு தாங்க எனக்கு இருந்த இப்ப இருக்கற பட்டப்பெயர்கள்.

கணவன் மனைவி தங்களுக்குள் அழைத்துக்கொள்ளும் போது பேர் சொல்லி அழைக்காமல் புனைப்பெயர் வைத்து தான் அழைப்பார்கள் நான் நிறைய நண்பர்கள் வீட்டில் பார்த்து இருக்கேன். என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் தன் கணவனை பன்னி என்று தான் அழைப்பார் பட்டப்பெயர் வைத்து அழைக்காமல் இருப்பவர்கள் குறைவு தான். இப்படி பட்டப்பெயர் வைத்துக்கூறும் போது அன்பு அதிகமாகும்.(அப்படின்னு சொன்னாங்க)

நான் வைத்த பட்டப்பெயர் கணக்கில் இல்லாதது பள்ளியில் படிக்கும் போது மீன் பிடிக்கச்செல்வோம் அப்ப என் ஜீனியர் ஒருவன் குளித்துக்கொண்டு இருந்தான் அவனை பார்த்து ஏய் நைனாமலை என்றேன் அவன் பெயர் முத்துக்குமார் ஆனாலும் இன்று வரை அவனுக்கு ஊரில் பெயர் நைனா மலை தான். சைக்கிள் கடைக்காரர் பையனுக்கு ஒட்டை சைக்கிள், ஓட்டல் கடை வைத்திருக்கும் நண்பனுக்கு புழுத்த புரோட்டா, டீ கடை வைத்திருக்கும் நண்பனுக்கு தண்ணிப்பால், கருவாயன் இந்த்பெயர் வைத்தவன் தான் பாவம் அவன் மனைவியை அனைவரும் கருவாயன் பொண்டாட்டி எனவும் மகனை கருவாய பையன் என்றும் அழைக்கின்றனர்.

விஜி் என்ற நண்பனுக்கு மாட்டுவாயன் என்ற பெயர் இன்றளவும் இவனுக்கு இந்தப்பெயர் நிலைத்திருக்கிறது. நண்பன் கண்ணன் என்பவன் கண் சிவப்பாக இருக்கும் எப்பவுமே அவனை என்னடா கண் செத்த ஆடு போல் இருக்கிறது என கேட்க அது மருவி செத்தாட்டுக்கண்ணன் என்று மாறி விட்டது.

மொன்டி சத்தி, கூளை கோபால், கொத்து வசந்த், சின்ன புரடையன், பெரிய புரடையன், மொட்டையன், சொட்டை செந்தில், ஒய்யா செந்தில், பொட்டை மொகரையன், டவுசர் சரவணன், வல்லக்காலன், காமாளையன், குட்டை ராசு, நெட்டையன், பனங்காயன், சரக்கு சண்முகம், ஆஞ்சி, தூக்குச்சட்டி, லட்டு நாகராஜ்,வளந்து கெட்டவன், தண்ணி வண்டி, செங்காயன், பொல்லி, ஒல்டு, அழுக்கான் இப்படி நிறைய சொல்லிகிட்டேப் போகலாம்....

நிறைய பேர் சொல்லுவாங்க கிராமத்தில் தான் அதிகம் பட்டப்பெயர் இருக்கும் என நிச்சயமாக இல்லை மனிதர்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் இப்பழக்கம் உண்டு. என் நண்பன் சென்னையில் ஒரு மிகப்பெரிய கம்பெனியில் பொட்டி தட்டும் வேலையில் இருக்கிறான் அவன் அவனது மேனேஜரை பட்டப்பெயர் வைத்து தான் பேசுகிறான். பட்டப்பெயர் என்பது நமது வாழ்வில் கலந்து விட்ட ஒன்று..
நண்பர்களே நீங்களும் உங்க பட்டபெயர் அனுபவத்தை பின்னூட்டமாகவோ முடிந்தால் ஒரு பதிவாகவே சொல்லாம்... சொல்லுங்க நானும் எதிர்பார்க்கிறேன்..
Read more »

பேருந்தில் காதல்..

Friday, March 19, 2010 62 comments
கல்லூரியில் படிக்கும் போது நிறைய நண்பர்களுக்கு காதலிகள் உண்டு அவர்கள் சந்திக்கும் இடமோ பேருந்துதான். இன்று காதலிக்கும் காதலர்களுக்கு உள்ள தைரியம் அன்று இல்லை சுமார் 15 வருடம் பின்னோக்கி பார்த்தால் அப்போது கல்லூரியில் காதல் என்பது குறைவுதான் எனக்குத் தெரிய பெண்ணிடம் பேசாமல் காதல் செய்து பயத்தால் சொல்லாமல் இருந்தவர்கள் தான் அதிகம்.

தினமும் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில்தான் வருவேன் இன்று ஊருக்கு செல்ல வேண்டி இருந்ததால் வண்டியை ஸ்டேன்டில் போட்டு விட்டு சொகுசு பேருந்தில் பயணம் செய்தேன். அதுவும் கோவை மாநகரத்தில் இப்ப நிறைய விட்டுட்டாங்க உண்மையிலேயே சொகுசாதான் இருந்தது. ஒரு பெண் டிக்கெட் வாங்குங்க என ஒருவனிடம் பணம் கொடுத்தால் அதை வாங்க நம்ம பசங்க அடிச்சிக்கறாங்க.. டேய் நான் வாங்கற நீ வாங்கற என்று. நாடு எவ்வளவுதான் வளர்ச்சிப்பாதையில் சென்றாலும் இன்டெர்நெட், மொபைல், பேஸ்புக், ஆர்குட் என எது வந்தாலும் இந்த பேருந்து காதல் சுகம் கொஞ்சம் சுகந்தான்.
பார்க்காத காதல், பழகிய காதல், நட்பு காதல் என பல வகை காதல் இருந்த போதிலும் இந்த பேருந்து காதல் நம் பதிவர்களில் பல பேருக்கு அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்.
நான் முதன் முதலில் 6ம் வகுப்பு அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் போது பஸ்ஸில் தான் செல்வேன் அப்போது எல்லாம் பின் படிக்கட்டில் தான் ஏறுவேன். அதனால சைட் அடிக்கவும் முடியல, லவ் பண்ணவும் முடியல. என் குறும்பு கொஞ்சம் அதிகமானதால் என்னை கோபியில் விடுதியில் சேர்த்துவிட்டனர். அப்புறம் கல்லூரி செல்லும் போது தான் பேருந்தில் தினமும் முன் படிக்கட்டில் தொங்கிக்கொண்டே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தொங்கினாலும் யாரும் என்னை லவ் பண்ணல என்ன பன்றது நா கொடுத்து வைத்தது அவ்வளவுதான். தினமும் பேருந்தில் செல்லும் போது என் நண்பன் ஒரு பொண்ண காதலிச்சான் (ஒன் சைடு தான்) நம்ம ஆளு அந்தப் பொண்ணு இவனப்பார்க்க மாமாவ (கண்டக்டர், டிரைவருக்கு பசங்க அன்பா இப்படித்தான் கூப்பிடுவாங்க) ஐஸ் வைச்சுக்குவான் அப்பதான் முன்னாடி படியில் ஏறமுடியும், டிக்கெட் கொடுக்கற சாக்கில் பேசமுடியும், தினமும் பேருந்தில் பாடும் அனைத்து பாட்டுக்கலும் காதல் பாட்டுக்கல் தான் இதுல ஒருத்தன் அவ ஆள் கூட சண்டைனா உடனே அடுத்த நாள் சோகப்பாடலாப் பாடும்.
இவனுக காதலிக்கரத விட செய்யற சேட்டைய நான் தினமும் ரசிப்பேன் (வேற என்ன செய்ய முடியும்), இந்த பேருந்து காதலைப் பொறுத்தமட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து தினமும் ஒரே பேருந்தில் இருவரும் வந்து காதல் பாடல்களாக பாடவிட்டு அந்தப் பொண்ணிடம் பேசும் போது ஒரு வருடம் முடிந்து விடும். அடுத்த வருடம் இதே கதை தான் அப்புறம் கொஞ்சநாள் கழித்த அந்த பெண் பேருந்தில் ரெகுலராக வருபவர்களிடம் அண்ணா இந்தாங்க என் கல்யாணப் பத்திரிக்கை நீங்க கண்டிப்ப வரணும் என கொடுப்பாள் நம்ம ஆள் சோகம் ஆகிவிடுவான். அடுத்த நாள் புதுசா ஒரு பொண்ணு வர ஆரம்பிச்சிட்டா மீண்டும் அதே கதைதான் அந்த கால கட்டத்தில் காதலை பேருந்தில் சொன்னவர்கள் அதிகமில்லை ஆனால் கல்லூரி போகும் போது காதலிப்பவர்கள் பேருந்து காதலராகத்தான் இருப்பார்கள்.(எங்க ஊர்ல இருபாலரும் படிக்கும் கல்லூரி அதிகம் இல்லை அப்ப பெண்கள் கல்லூயில் தான் கூட்டம் இருக்கும்).
தினமும் வரும் பெண்களிடம் பேசுவதற்காகவே நம்ம ஆளுக ஆரம்பித்தது தான் பேருந்து தினம் அன்றைக்கு யார் வேண்டுமானலும் யார்கிட்ட வேண்டுமானலும் பேசிக்கொள்ளலாம் நம்ம ஆளுங்க சைக்கிள் கேப்ல அன்னைக்கு லவ்வ சொல்லிடுவானுக அப்புறம் கொண்டாட்டம் தான்...
பேருந்தில் செல்லும் எல்லா நாளுமே ஒரு சுகமான நாட்கள் தான் ஆனால் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருந்திருக்கும் அதனால் இதை தொடர் பதிவாக நினைக்கிறேன்.
இத்தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என யோசித்து நம் நட்புக்கள்  ஒவ்வொருத்தருக்கும் நிச்சயமாக பேருந்தில் காதல் அனுபவம் இருக்கும் அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் ஒரு 10 பேரை இப்போது அழைக்கிறேன்.
பிரபாகர்
பலாபட்டறை ஷங்கர்
சித்ரா
திவ்யாஹரி
டி.வி.இராதாகிருஷ்ணன்
வீடு திரும்பல் மோகன்
வித்யா
பனித்துளி சங்கர்
கண்ணகி
தீபா
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்...
Read more »

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...

Tuesday, March 16, 2010 50 comments

இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. கோவையில் வெப்பத்தின் தாகம் இந்த வருடம் அதிகரித்து உள்ளது கோவையிலே இப்படி என்றால் சென்னையை கேட்கவேண்டியதே இல்லை. உடல் சூட்டைத் தணிக்க இன்று எத்தனையோ குளிர்பானங்களும் மருந்துகளும், மாத்திரைகளும் வந்து விட்டன ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இத்தனை பானங்கள் எல்லாம் இல்லை அவர்கள் சூட்டைத்தனிக்க குடித்தது கம்மங்கூழ் தான்.

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ் என்று சொல்வதில் பல பெருமைகள் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் கம்மஞ்சோறு இருந்திருக்கும். ஆனால் இன்று வீடுகளில் கம்மஞ்சோறு செய்வது மிகவும் குறைந்து விட்டது. இன்று விற்பனை பொருளாகிவிட்டது. இன்று நகர்புறமாகட்டும், கிராமப்புறமாகட்டடு ஒரு தள்ளு வண்டியில் இரண்டு பானைகளுடன் இருக்கும் அங்கு கம்மங்கூழ் விற்பனை தூள் பறக்கின்றது. கம்மங்கூழ்க்கு தொட்டுக்க மாங்காய், குடல், வத்தல், அன்னாசிப்பழம், மோர் மிளகாய் இன்னும் ஏரியாவிற்குத் தகுந்த மாதிரி நிறைய இருக்கும் இதை சாப்பிடும் போதே உடல் குளுமையாக இருக்கும்.

என் நினைவில் சிறு வயதில் வீட்டில் பாட்டி ஊருக்கு வந்தார்கள் எனில் கம்பு இடித்து கம்மஞ்சோறு செய்து அதை பானையில் வைத்து அடுத்த நாள் காலை கொஞ்சம் தயிர் சேர்த்து கரைத்துக் கடித்தால் அதன் சுகமே தனிதான். நிறைய பேர் இதை அனுபவித்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

 • கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்
 • குடல் நோய்களுக்கு வராமல் பாதுகாக்கும்
 • உடல் வலிமை சேர்க்கும்
கம்மஞ்சோறு

கம்மஞ்சோறு செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர் சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து குடிக்க வேண்டும்.

நண்பர்களே இப்போது கம்மங்கூழ் விற்கும் இடத்தில் சுகாதாரக்கேடு நிறைய இருக்கும் அதனால் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் இது உடல் நலத்திற்கான அருமையான உணவு என்பதில் மாற்று கருத்து இல்லை.
  இன்னும் பல நன்மைகள் இருக்கும் என நினைக்கிறேன். இக்கோடையில் கம்மங்கூழ் சாப்பிட்டு வெப்பத்தை தணியுங்கள்....
  Read more »

  முதலுதவி

  Tuesday, March 9, 2010 17 comments

  முதலுதவி ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து இருக்கவேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ஒரு பத்திரிக்கையில் படித்துக்கொண்டு இருக்கும் போது வெளிநாட்டில் பள்ளியிலேயே முதலுதவி பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறார்களாம். நம்ம ஊரிலும் சொல்லித் தருகிறார்கள் ஆனால் முறையாக அதை சொல்லித்தருவ தில்லை முதலுதவி ஒவ்வொரு விபத்திற்கும் வித்தியாசப்படும் தீக்காயத்திற்கு ஒரு மாதிரியும், பாம்பு கடித்தால் ஒரு மாதிரியும், வலிப்பு வந்தால் ஒரு மாதிரியும் வித்தியாசப்படும் எல்லாமே எல்லாருக்கும் நிச்சியம் தெரிய வாய்ப்பு குறைவு. முதலுதவியைப் பற்றி நான் படித்து அறிந்தவற்றை விட என் வீட்டு பெரியவர்களிடமும், பக்கத்து வீட்டு நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டது தான் அதிகம்.

  நாம் இருக்கும் இடத்தில் எந்த மாதிரியான நோய்கள் வரும் அவ்வாறு வந்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன் நாம் செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்று நாம் அறிந்திருந்தால் இழப்புகளை தவிர்க்கலாம். அதற்கு முன் நாம் செய்யும் முதலுதவி சரியா என்றும் அறிந்திருக்க வேண்டும்.

  நான் 7ம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம் நான் எனது நண்பர்களுடன் கில்லி விளையாடிக்கொண்டு இருக்கும் போது கில்லி என் தலையில் பட்டு நெத்தியில் ஆழமாக காயம் ஏற்பட்டது நான் அழுது கொண்டே வீட்டிற்கு வரும் போது பக்கத்து வீட்டு அக்கா காபித்தூளை கொண்டு வந்து என் நெற்றியில் அமுத்திவிட்டார் அப்போதைக்கு ரத்தம் நின்றது பின்பு மருத்துவரிடம் சென்றபோது இது தவறு இதனால் புண் பெரிதாகத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று காபித்தூளை சுத்தம் செய்து 3 தையல் போட்டு அனுப்பி வைத்தார். அப்போது இருந்து எங்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதை அப்படியே ஒரு ஈரத் துணி வைத்து கட்டினால் ரத்தம் நிற்கும் பின்பு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறவேண்டும் என இன்று வரை செய்து வருகிறேன்.

  வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

  1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
  2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
  4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

  சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

  1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
  2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
  மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி 

  பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

  தீக்காயங்களுக்கான முதலுதவி
  1. ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
  2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
  3. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
  4. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
  5. குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்
  மின்சாரபாதிப்புக்கான முதலுதவி
  1. ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
  2. குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

  மூச்சுத்திணறலுக்கான முதலுதவி
  1. பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.
  2. அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,
  3. பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு
  4. தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் உள்ள சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.
  5. பெரிய குழந்தைகளுக்கு
  6. உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.
  தண்ணீரில் முழ்கினால்...

  ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும் அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும் வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

  Read more »

  உயிர் காக்கும் 108

  Friday, March 5, 2010 23 comments

  தமிழக அரசு எத்தனையே இலவச திட்டங்கள் அறிவித்து இருக்கின்றது ஆனால் இலவச ஆம்புலன்ஸ் 108 திட்டம் மிக மிக வரவேற்க கூடிய திட்டம் . இத்திட்டம் கலைஞர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும் அறிவித்து இருக்கவேண்டும் இன்னும் நிறைய உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
  எனது அனுபவம்
  நான் 8 வருடங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது வாலஜா சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளானார். நானும் எனது நண்பனும் அவரை சென்ரல் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் அந்த நல்ல விசயத்தை செய்ததற்கு பின்பு தான் நான் மிகவும் வேதனைப்பட்டேன். அங்கு வந்த காவல்துறை நண்பர் எப்படி நடந்தது என்ன என்று விசாரித்து விட்டு சென்றுவிட்டார், அடிபட்டவர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் காப்பாற்றி இங்கு கொண்டு வந்தது நாங்கள் தான் என்று கூறினோம் சரி நன்றி என்று சொன்னவர் அவரது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுவிட்டு நான் இரண்டாயிரம் ரூபாய் வைத்து இருந்தேன் இப்போது ஐநூறு தான் இருக்கிறது என்று பிரச்சனையை கிளப்பி விட்டார். முன்பு விசாரித்த காவல் துறை நண்பர் வந்து இவர்கள் தான் உன்னை காப்பாற்றினார்கள் அப்படி எடுத்திருந்தால் முழுவதும் தானே எடுத்து இருப்பார்கள் என்று அவர் எடுத்துக்கூறியும் அடிபட்டவர் இல்லை இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் இவர்கள் மேல் கேஸ் போடுங்கள் என்றார் நன்றி உள்ள அடிபட்டவர் அப்புறம் எங்கள் அலுவலக மேனேஜர் வந்து அவர் சொந்த பணத்தை கொடுத்து எங்களை கூட்டிச்சென்றார் போகும் போது சொன்னார் இது கிராமம் இல்லை சென்னை இங்க இப்படித்தான் என்றார். அப்போது தான் தெரிந்து கொண்டேன் சென்னையில் யார் விபத்துக்குள்ளானாலும் அவர் அவர் அவர்களது வேலையைப்பார்த்துக் கொண்டு கண்டுக்காமல் செல்கிறார்கள் என்று இதற்குப் பெயர் தான் வேலியில் போறதை எடுத்து வேட்டியில் விட்டு குத்துதே குடையுதே என்று கூறுகிறோம்.

  கடந்த வாரம் நடந்த சம்பவம்
  கடந்த வாரம் நான் எனது மனைவி சகிதமாக ஊரிற்கு சென்று இருந்தேன். ஊரில் இருந்து பாவனி வரும் போது ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பெரிய குழியில் வண்டியை விட்டு நிலை தடுமாறி மரத்தில் மோதி கீழே விழுந்து இருந்தார் இது நடந்து மூன்றாவது நிமிடத்தில் நான் அந்த இடத்தில் காரை விட்டு இறங்கி பக்த்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார் அவரிடம் விசாரித்து விட்டு அவரை தூக்குங்க எனது காரில் மருத்துவமனை கொண்டு செல்லாம் என்றேன் வேண்டாம் சார் நான் 108க்கு சொல்லிட்டேன் அவர்கள் வந்து விடுவார்கள் என்றார் அவர்கள் எப்ப வர்றது ஒரு சிறு கூட்டம் சோந்துவிட்டது இல்ல சார் நாமே கொண்டு போகலாம் என்று அங்கு இருந்த பெரியவரிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது 108 வாகனம் சைரனுடன் போன் செய்த 7வது நிமிடத்தில் வந்து சேர்ந்தது, அவ்வாகனத்தில் முதல் உதவிக்கு என ஆட்கள் இருந்தனர். அவர்கள் இவர் யார் எந்த ஊர் என்று கேள்வி எல்லாம் கேட்கவில்லை வந்தார்கள் முதலுதவி செய்தார்கள் வாகனத்தில் ஏற்று மருத்துவமனை கொண்டு சென்றார்கள். நாங்களும் நிம்மதியாக கலைந்து சென்றோம்.
  ஒருவர் விபத்தில் அடிபட்டுக்கிடந்தால் இவ்வளவு நாள் நமக்கு ஏன் என்று இருப்பவர்கள் எல்லாம் 108க்கு போன் செய்து அடிபட்ட இடத்தை மட்டும் சரியாகச் சொன்னால் அவர்களை காப்பாற்ற 108 இருக்கிறது. இதுவரை இத்திட்டம் சரியாக செல்கிறது நான் விசாரித்தவரை யாரும் இத்திட்டத்தை குறை கூறவில்லை. அரசின் திட்டங்களுக்கு நிறையபேர் குறை கூறியிருந்தாலும் என்னைப்பொறுத்த வரை மிகவும் பாராட்டப்பட வேண்டிய திட்டம் இத்திட்டம்.
  எனது வேண்டுகோள்
  1. நண்பர்களே நீங்களும் வாகனத்தில் செல்லும் போது யரேனும் விபத்துக்குள்ளாகியிருந்தால் ஒரு போன் செய்தால் போதும் விபத்துக்குள்ளானவர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது..
  2. அரசு ஒரு தொகுதிக்கு 5 வாகனங்களை கொடுத்தால் இன்னும் நிறைய விபத்துக்குளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.
  Read more »

  மாரடைப்பை விரட்டும் "விரதம்"

  Tuesday, March 2, 2010 29 comments
  இந்த ஒரு வார காலமாக வேலை பளு காரணமாக பதிவையும் படிக்கவில்லை பின்னூட்டமும் இடவில்லை. இன்று பதிவிற்கு வந்து ஒவ்வொரு நண்பர்களையும் படித்த உடன் தான் மனது நிம்மதி அளிக்கிறது. கடந்த வாரம் இரவு நண்பர் பிரபாகர் சிங்கையில் இருந்து அழைத்தார்.அவருடன் நெடு நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது விரதத்தை பற்றி எழுதுங்கள் அதில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கின்றது என்றார் அதற்குப்பின் இதற்கான தகவல்களை சேகரித்து இப்பதிவை இடுகிறேன்.
  நம்ம ஊரில் பெண்கள் இன்று அதிகமாக விரதம் இருப்பதில்லை காரணம் அலுவல் பணிகாரணமாக விரதம் இருப்பதை தவிர்க்க முடியாமல் தவிர்க்கின்றனர். விரதம் இருந்தால் நல்லது என்ற காரணத்தினால் தான் அக்காலத்தில் நிறைய விரதங்கள் இருப்பதை பலர் இன்றும் பின்றபற்றுகின்றனர்.

  விரதம் இருப்பது எப்படி

  விரதம் ஒவ்வொருவ மதத்தினருக்கும் மாறுபடும் இந்துக்களில் விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த ஆகாரமும் சாப்பிடமாட்டார்கள் பால், பழம் மட்டும் சாப்பிடுவார்கள். ஆனால் முஸ்லீம் மதத்தினர் நோன்பு என்ற பெயரில் உண்ணா நோன்பை கடைபிடிக்கின்றனர். இவர்கள் காலையில் இருந்து மாலை வரை எச்சில் கூட முழுங்காமல் கடுமையான உண்ணாநோன்பை கடை பிடிக்கின்றனர். இதனால் உடல் நலத்தின் பயன் மிக அதிகம்.
  மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  மாதம் ஒருமுறை விரதம் இருந்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்பதுதான் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

  விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப் படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

  இங்கிலாந்தைச் சேர்ந்த சால்ட் லேக் சிட்டியில் உள்ள உடா பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இன்பர்மேட்டிக்ஸ் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் ஹார்ன் என்பவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, லேட்டர் டே இயேசு கிறிஸ்து துறவிகள் சபையைச் சேர்ந்தவர் களிடம் இந்த ஆய்வை நடத்தியது.

  இந்த சபையைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒரு முறை விரதம் இருப்பது வழக்கம்.இவர்கள் விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இதயம் சம்பந்தமான நோய்களும் இவர்களுக்குக் குறைவாகவே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
  உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால் 50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்கு இணையானது.நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்பு போதுமானது.
  உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல் சில நாட்கள் மிகக் கடுமையானவை.  இந்த நாட்களில் பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்து வாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல் இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

  உண்ணாவிரதம் இருக்க நினைத்தால்
  உண்ணா நோன்பு தொடரும்போது இந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும் அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும்.  இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும். 
  கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும்.இதற்குக் காரணம் இருக்கிறது. உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.  இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

  விரதம் இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
  ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.
  1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.
  2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது.  இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.
  3.  சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.
  4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.
  5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.  அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.
  6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது.  குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப் படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது மூளை.
  மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பது அந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள் இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.
  Read more »