Pages

தர்பூசணி: இது நம்ம ஊர் வயாகரா

Friday, February 12, 2010

இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று தான் நானும் இருந்தேன் அதைப்பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் அதற்காக புதிய தகவல்களை நான் தேடும் போது ஒரு பழைய பத்திரிக்கையில் வந்த செய்தியை படிக்கும் போது ஆண்மை விருத்திக்கு தர்பூசணி மிகவும் உதவுகிறது சொல்லப்போனால் அது ஒரு வயகாரா என்று படித்தேன். இதை எப்படி பதிவு செய்வது நிறைய பெண் பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தலைப்பை பார்த்ததும் நம் பதிவிற்கு வந்து படிப்பவர்கள் படிப்பார்களா மாட்டர்களா என்று மனதில் உறுத்தல் ஆனால் தர்பூசணியில் இருக்கும் தகவல் மிகவும் முக்கியமான பயன்கள் வாழ்க்கைக்கு தேவையானதும் கூட, அதனால் இக்கட்டுரையை எழுதியே ஆகவேண்டும் என்று பதிகிறேன்.
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது.
அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.
இப்பதிவை படிக்கும் நண்பர்களே இப்பதிவை அனைவரும் அறிய தமிழ்மணத்திலும், தமிழிஸ்லியும் அப்படியே ஒரு குத்து குத்துங்க...

24 comments:

{ butterfly Surya } at: February 12, 2010 at 2:23 AM said...

அருமையான பதிவு சங்கவி.

இது எழுத என்னங்க தயக்கம்...?

வாழ்த்துகள்.

{ தமிழ் உதயம் } at: February 12, 2010 at 3:21 AM said...

தர்பூசணி குறித்து பயனுள்ள தகவல்கள்

{ அண்ணாமலையான் } at: February 12, 2010 at 6:45 AM said...

gud post .. thank u

{ மீன்துள்ளியான் } at: February 12, 2010 at 7:30 AM said...

அருமையான தகவல்கள் . நல்ல விடயம் சொல்லுறதுக்கு என்ன தயக்கம் வேண்டி கிடக்கு

{ Chitra } at: February 12, 2010 at 8:10 AM said...

cool!

{ வானம்பாடிகள் } at: February 12, 2010 at 8:37 AM said...

பயனுள்ள தகவல்தானே. ஆமாம் தமிழிசக்காணமே. எங்க குத்துறது.

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: February 12, 2010 at 11:06 AM said...

தர்பூசணி சீசன் வரட்டும்

ஆமாம் வானம்பாடி சொன்னதுதான் வோட் பாக்ஸே இல்லையே

agila at: February 12, 2010 at 1:46 PM said...

எங்கிருந்து புடிக்கிறீங்க உபயோகமான தகவல்களை. ஓட்டுப்போட்டாச்சு

{ சங்கவி } at: February 12, 2010 at 4:29 PM said...

வாங்க தமிழ்உதயம்...

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:29 PM said...

வாங்க சூர்யா...

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:33 PM said...

வாங்க அண்ணாமலையான்..

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:34 PM said...

வாங்க வானம்பாடிகள் சார்...

ஏதோ தப்பு நடந்துஇருக்கிறது என நினைக்கிறேன்...

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:34 PM said...

வாங்க சித்ரா வாங்க...

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:34 PM said...

வாங்க மீன்துள்ளியான்...

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:36 PM said...

வாங்க சின்னஅம்மிணி

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சங்கவி } at: February 12, 2010 at 4:36 PM said...

வாங்க thenammailakshmanan...

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

{ சேட்டைக்காரன் } at: February 13, 2010 at 1:45 AM said...

தர்பூசணி வயாகராவோ இல்லையோ, பதிவையும் படிச்சிட்டு படங்களையும் பார்த்ததும் நாக்குலே நயாகரா கொட்ட ஆரம்பிச்சிட்டுது! அசத்தல் பதிவுண்ணே!

{ T.V.ராதாகிருஷ்ணன் } at: February 13, 2010 at 2:31 AM said...

பயனுள்ள தகவல்தானே

{ ஹேமா } at: February 13, 2010 at 8:03 AM said...

பயனுள்ள பதிவு சங்கவி.எஙகளுக்கு இன்னும் குளிர் போகல.வெயில் காலத்தில இங்க நிறையவே இருக்கும்.

Anonymous at: February 13, 2010 at 10:13 AM said...

palamai pesi padivil yittathu....


udambu valaiyatha 8 maninera velai, atharkku mel oeru vinadi pani seithal atharkku yirandu madangu kooli, varathil nangu nattkal mattum velai, thangumidam martrum velaiyidathil midamana seyarkai thatpa veppam, gana nimida dhorathil cafe breakarea and Mc D'. vuyartara pathukappudan koodiya apartment or town house ll kudumbam marrum makkal. thodu dhoorathil bank, utility, online shopping, nanbarkal, movie, songs, games marrum pannattu tholaipesi through high speed internet yenum indiralogam. adivega rail, sogusana car, malivu vilaiyil petrol (gas), anaithu porutkalum nalla deal lil. ellavatrukkum mel sambadhikkum 1 dollarukku kurainthathu 45 rubai yindhiya madhippu (madam 8500 dollar sambalam padivulakukko ellai nanbarkalukko solla vendiya avasiyam ellai :-)).

piranthathu kongu Tamil nattin kukgiramam, tharpothu manaivi makkaludan vasippathu America yenum sorgapuri, Surplus nerathai selavida mattum TAMIL, TamilPadivu (Bothanai :-))

200 rubai erunthal nangu nattkal arai vayirrtudan kadanthuvida ninaikku Unmai Tamila (Truetamilans) un nilai enna? Dharapuratthan.. ethai kavanikka koodatho..


Nanum America thaan... sikako...

{ அன்புடன் மலிக்கா } at: February 13, 2010 at 8:32 PM said...

நல்ல தகவல் சங்கவி. தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை தொடர்ங்கள் தயக்கம் வேண்டாம்..

{ திவ்யாஹரி } at: February 14, 2010 at 12:14 PM said...

good one

{ malarvizhi } at: February 15, 2010 at 2:51 AM said...

நல்ல பதிவு. தகவல்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது ?சொல்லுங்களேன்,நண்பரே!

{ விக்னேஷ்வரி } at: February 16, 2010 at 3:26 AM said...

நல்ல புதிய தகவல்.

Post a Comment