Pages

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்

Tuesday, January 12, 2010

தமிழனின் பாரம்பரியமிக்க திருவிழா தான் பொங்கல் திருவிழா. இத் திருவிழா சங்க காலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி கடைசி நாளன்று போகிப்பண்டிகையாகவும், தை முதல் நாள் தான் தமிழனின் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள், அடுத்த நாள் உழவர் திருநாள், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று கொண்டாடுவர்.
பொங்கல் :
முன் காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் எவ்வாறு வைப்பது :
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மாட்டுப்பொங்கல்:
தைப் பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி  குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

காணும் பொங்கல் :
என்பது  பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
இப்பொங்கல் திருநாளை கொண்டாட நான் எனது கிராமத்திற்குச் செல்கிறேன் மீண்டும் உங்களை எல்லாம் 18ம் தேதி சந்திக்கிறேன்..
எனது  சகோதர, சகோதரிகளாகிய உங்களுக்கும் 
உங்கள் குடும்பத்தாருக்கும் 
என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!

25 comments:

{ வானம்பாடிகள் } at: January 12, 2010 at 10:28 PM said...

கிராமத்து வழமுறைகளே அலாதி. பகிர்ந்தமைக்கு நன்றி

{ சங்கவி } at: January 12, 2010 at 10:39 PM said...

வாங்க வானம்பாடி சார்....

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

{ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ } at: January 12, 2010 at 10:47 PM said...

கிராமத்துக்கு போய் பொங்கல் கொண்டாடி அசத்தலான படங்களுடன் அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்...::)) \

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..::))

{ Chitra } at: January 12, 2010 at 10:53 PM said...

பொங்கலை சிறப்பாக கொண்டாட கிராமத்தை விட்டால் வேறு இடம் ஏது? இனிய பொங்கல் சிறப்பு நல் வாழ்த்துக்கள்.

{ சங்கவி } at: January 12, 2010 at 10:59 PM said...

//கிராமத்துக்கு போய் பொங்கல் கொண்டாடி அசத்தலான படங்களுடன் அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்...::))//

நிச்சயமாக பாலா கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களுடன் மீண்டும் சந்திப்போம்...

{ மயில் } at: January 12, 2010 at 10:59 PM said...

ஜல்லிக்கட்டுல கலந்துக்கிட்டு ஒரு காளையாவது அடக்கி நம்ம பதிவுலக வீரத்த(?!) காட்டவும்.

இல்லன “பேச்சி பேச்சி பாடி பயமுறுத்திட்டாவது வாங்க :)

மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ..

{ சங்கவி } at: January 12, 2010 at 11:00 PM said...

வாங்க சித்ரா வாங்க....

//பொங்கலை சிறப்பாக கொண்டாட கிராமத்தை விட்டால் வேறு இடம் ஏது? இனிய பொங்கல் சிறப்பு நல் வாழ்த்துக்கள்.//


சரியாச் சொன்னீங்க....

{ வி.பாலகுமார் } at: January 12, 2010 at 11:02 PM said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கிராமத்தில், பொங்கலை நல்லா கொண்டாடுங்க.

{ சங்கவி } at: January 12, 2010 at 11:06 PM said...

//இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கிராமத்தில், பொங்கலை நல்லா கொண்டாடுங்க.//

வாங்க பாலகுமார்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

{ சங்கவி } at: January 12, 2010 at 11:06 PM said...

வாங்க மயில்...

//ஜல்லிக்கட்டுல கலந்துக்கிட்டு ஒரு காளையாவது அடக்கி நம்ம பதிவுலக வீரத்த(?!) காட்டவும்.//

ஏங்க நான் முழுசா மறுபடியும் வருவது உங்களுக்குப் பிடிக்கலையா?

//இல்லன “பேச்சி பேச்சி பாடி பயமுறுத்திட்டாவது வாங்க :)//

எங்க பாடறது நான் பாடினா காளை குத்தாது குடலை உருவிடும்....

//மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ..//

உங்களுக்கும் என் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

{ அகல்விளக்கு } at: January 12, 2010 at 11:17 PM said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா...

{ சங்கவி } at: January 13, 2010 at 12:01 AM said...

வாங்க அகல்விளக்கு

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

{ ஆரூரன் விசுவநாதன் } at: January 13, 2010 at 12:10 AM said...

vaazhthukkal

{ சுந்தரா } at: January 13, 2010 at 12:15 AM said...

மூணு பொங்கலுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சங்க் கவி!

எல்லாப் பொங்கலும் இன்பத்தையே கொண்டு வரட்டும்!

{ கலையரசன் } at: January 13, 2010 at 12:21 AM said...

இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

{ சங்கவி } at: January 13, 2010 at 2:09 AM said...

வாங்க சுந்தரா...

//மூணு பொங்கலுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சங்க் கவி!

எல்லாப் பொங்கலும் இன்பத்தையே கொண்டு வரட்டும்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: January 13, 2010 at 2:09 AM said...

வாங்க ஆரூரன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

{ சங்கவி } at: January 13, 2010 at 2:11 AM said...

//இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)//

இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு பொங்கல கொண்டாடியிரலாம் தலைவரே

{ திகழ் } at: January 13, 2010 at 3:10 AM said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

{ ஸ்ரீ } at: January 13, 2010 at 5:00 AM said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

{ பிரபாகர் } at: January 13, 2010 at 8:16 AM said...

ம்... கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. எங்க ஊரில பண்றத நாளைக்கு படிச்சுப்பாருங்க...

பொங்கல் வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

{ அம்பிகா } at: January 14, 2010 at 12:34 AM said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

{ ஜெ.பாலா } at: January 16, 2010 at 1:31 PM said...

மிக நல்ல பதிவு நண்பா.
நகர வாழ்வில் நசுங்கிக் கொண்டிருக்கும் கலை மற்றும் கலாச்சாரங்களை மீட்டெடுக்க நம்மால் ஆனவற்றை செய்வோம். (பதிவுலயாவது ஆறுதல் பட்டுக்குவோமே).
கிராமத்து மண்வாசனை அனுபவிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

{ கிருபாநந்தினி } at: January 17, 2010 at 1:13 AM said...

பொங்கல் பத்தி விலாவாரியா எழுதி ரொம்பப் பொங்க வெச்சுட்டீங்களே மனச! :)

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: January 17, 2010 at 8:51 AM said...

கிராமத்துப் பொங்கலைப்பற்றி மிக அருமையா சொல்லி இருக்கீங்க சங்கவி

Post a Comment