Pages

தலை வாழை இலை

Tuesday, January 5, 2010

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்க இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டுகிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும்.தலை வாழை இலை போட்டு மரியாதை, பணிவு, சூடான சாப்பாடு அன்புடனும் கிராமத்து மண்வாசனையுடனும் கூடிய விருந்துக்கு ஏங்காதவர்கள் உண்டா...? இல்லை என்பது என் கருத்துநம்ம விருந்தாளிகளுக்கு வாழை இலையில் குறிப்பாக தலை வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது. எங்களது ஊரில் விருந்துக்கு சென்றால் அதுவும் சைவ விருந்து என்றால் முதலில் தலை வாழை இலையில் தண்ணீர் இட்டு பின்பு இலை நிறைய உணவுகளை வைப்பார்கள் அதில சாம்பார் சாப்பிடும் அதற்கு அடுத்து புளிக்குழம்போ அல்லது மோர்குழும்பு இருக்கும் இதன் சுவைகளை விட அடுத்து ரசத்தில் சாப்பிடும் சுவை எப்படிச் சொல்வது அவ்வளவு சுவையாக இருக்கும். நான் இலையில் ரசம் சாப்பிடுவதற்கு அடிமை என சந்தோசமாக கூறுவேன். அடுத்து தயிர் இதற்கு அப்புறம் பாயசத்தை இலையில் ஊற்றி குடிப்பதற்கு என எங்க ஏரியாவில் ஒரு கூட்டமே இருக்கு. என்னைப் போல் எங்க ஊர் நண்பர்களுக்கு இலையில் சாப்பிடுவது தான் பிடிக்கும்  ஏன் என்றால் அப்ப தான் நிறை சாப்பாடு வைப்பார்கள். அதுவும் அசைவ விருந்து என்றால் இலை நிறைய மட்டன், சிக்கன் ஆக இருக்கும். மீன் குழம்பை இலையில் சாப்பிடும் சவையே தனி.

வாழை இலையின் பயன்கள்:
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. என்ன நண்பர்களே வாழை இலையில் சாப்பிடக்கிளம்பிட்டிங்களா.......?

25 comments:

ராஜ நடராஜன் at: January 5, 2010 at 10:09 PM said...

அன்னக்கிளி இளையராஜா இசை நினைவு.தலை வாழை இலை போடுங்க!என்னை விருந்துக்கு வரச்சொல்லுங்க.இளையராஜாவை அடையாளம் காட்டிய உருமி மேளம்.

agila at: January 5, 2010 at 10:09 PM said...

வாழை இலைப்படங்கள் சூப்பர். வாழையிலை தினமும் சாப்பிட முடியுமா. விருந்துன்னா மட்டும்தான் சாப்பிடறது.

ராஜ நடராஜன் at: January 5, 2010 at 10:21 PM said...

வைத்தியத்தில் இதையும் சேர்த்துக்கங்க.வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி,வயிற்று வலி போன்றவை நீங்கும்.அனுபவ வைத்தியம்.

{ வித்யா } at: January 5, 2010 at 10:36 PM said...

நல்ல தகவல்கள்.

{ Chitra } at: January 5, 2010 at 10:57 PM said...

இங்கு mexicans வைத்திருக்கும் கடையில் வாழை இலை எப்போதாவது கிடைக்கும். அப்போ சுமார் ரெண்டு டாலர் ஒரு பவுண்டு (அரை கிலோ கணக்கு) கொடுத்து வாங்குவேன். இனி, விலையை பற்றி முணுமுணுக்காமல் வாங்குவேன். தகவல்களுக்கு நன்றி.

{ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ } at: January 5, 2010 at 11:06 PM said...

வீடு கட்டுபவர்கள் கொஞ்சம் இடம் ஒதுக்கி வாழை மரமும் நடலாம் .. போகிற போக்கில் ஒரு இலை 50 ரூபாய் வரும் நாள் மிக அருகாமைதான்:)) வாழை இலையில் பாயசம் ஆஹா அதை கையால் வழித்து சாப்பிடுவதே ஒரு கலை..::) நல்ல பகிர்வு சங்கவி வாழ்த்துக்கள். போட்டோஸ் சூப்பர்.

{ வானம்பாடிகள் } at: January 5, 2010 at 11:33 PM said...

ஹி ஹி. இந்த வாழையிலை படத்தை டெஸ்க்டாப் பேக்ரவுண்டா போட்டாலே கண்ணுக்கு குளிர்ச்சி. தகவலுக்கு நன்றி:))

{ ஜெனோவா } at: January 6, 2010 at 3:11 AM said...

Migavum payanulla thagavalkal sangavi..

nanri
Jenova

{ சத்ரியன் } at: January 6, 2010 at 3:56 AM said...

நண்பா,

விருந்துக்கு நான் தயாரா இருக்கேன்ப்பா. கோவைப் பக்கம் வந்தா சின்னதா தகவல் சொல்லிட்டு வரட்டுமா?
பெரியா தலைவாழை இலையாப் பாத்து தயார் பண்ணி வையுங்க..

தகவலுக்கு நன்றி நண்பா.

{ சத்ரியன் } at: January 6, 2010 at 3:58 AM said...

உங்களோட “கிராமத்துக்காரன்” வலைப்பத்துல பின்னூட்டம் போடுவதற்கு “சொல் சரி பார்ப்பை” நீக்கிடலாமே.

{ கண்ணகி } at: January 6, 2010 at 4:54 AM said...

இலையைபார்த்ததும் விருந்து நியாபகம் வந்திருச்சு.வாழை இலை சாபபாடு உண்மியில் ருசிதான்.

{ கனிமொழி } at: January 6, 2010 at 5:41 AM said...

நல்ல பகிர்வு சங்கவி ...
:-)

{ ஆரூரன் விசுவநாதன் } at: January 6, 2010 at 5:56 AM said...

நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா......

{ ஜெ.பாலா } at: January 6, 2010 at 9:03 AM said...

சில பெரிய ஹோட்டல்களில் இலையை தட்டுக்கு அளவாக வெட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுத்துப் போனதுண்டு பல சமயங்களில். ஆனா, பல ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர் போட்டும், பொதிந்தும் கொடுக்கிறத பார்த்த பின்னால முந்தினது தேவலாம்னு நினைச்சதுண்டு பல சமயங்களில்.. மிக நல்ல பதிவு நண்பா..

{ அம்பிகா } at: January 6, 2010 at 9:27 AM said...

நிறைய தகவல்கள், இத்துடன் வாழையிலை போடும் முறை, மூடும்
முறையையும் விளக்கியிருக்கலாமே!

{ வால்பையன் } at: January 6, 2010 at 9:29 AM said...

வாழைஇலையில் சாப்பிடுவது எனக்கு கவர்சியானது!

பச்சையா கும்முன்னு இருக்கும்!

குலோரோபில்ஸ் பத்தியெல்லாம் எதுவும் தெரியாதா தல!?

{ பூங்குன்றன்.வே } at: January 6, 2010 at 6:09 PM said...

பலகாலம் முன்பு வரை தமிழரின் விருந்தோம்பலே இந்த வாழை இலையில் தான் ஆரம்பிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.

தலை வாழை இலையில் சாப்ட்டு முடித்து பார்த்த ஒரு தனி திருப்திங்க இந்த கட்டுரையை படித்த பிறகு.

{ சங்கவி } at: January 7, 2010 at 12:53 AM said...

சின்ன அம்மிணி - விடுமுறை நாட்களில் சாப்பிட முயற்சி செய்யுங்க....

ராஜநடராஜன் - அன்னக்கிளி இளையராஜா இசையை மீண்டும் இன்று கேட்டேன்...

வாங்க வித்யா

வாங்க சித்ரா

பாலாபட்டறை - நல்ல ஜடியா...

வாங்க வானம்பாடிகள் சார்

வாங்க ஜெனோவா கொஞ்ச நாளா இந்தப்பக்கம் காணம் அடிக்கடி வாங்க...

வாங்க சத்ரியன் நிச்சயம் கோவை, பவானி, அந்தியூர், சத்தி இந்தப்பக்கம் வந்தா தகவல் சொல்லுங்க...

வாங்க கண்ணகி நீங்க கொங்கு மண்ணில் நிறைய விருந்து ருசிச்சுஇருப்பீங்கன்னு நினைக்கிறேன்

வாங்க தலைவரே (ஆருரன்)

வாங்க ஜெ.பாலா

வாங்க அம்பிகா இலை போடும், மூடும் முறையை அடுத்த பதிவில் போட்டரலாம்

வாங்க வாலு

வாங்க பூங்குன்றன்...

நண்பர்கள் கருத்துக்கும், வருகைக்கும் எனது நன்றி....

{ malarvizhi } at: January 7, 2010 at 12:55 AM said...

நல்ல பயனுள்ள பகிர்வு.

என்னை சுற்றி நிறைய வாழை மரங்கள் உண்டு என்பதால் அடிக்கடி அதில் தான் சாப்பாடு. அதில் சாப்பிடும் போது உணவின் ருசியே அலாதியாக தான் இருக்கும்.

{ ஹேமா } at: January 7, 2010 at 4:09 AM said...

வாழையிலையில இத்தனை சங்கதி இருக்கா?எனக்கும் பிடிக்கும் வாழை இலையில சாப்பிட.ஆனா ரொம்பக் காலமாச்சு.இங்கயும் இறக்குமதி வாழையிலை வாங்கலாம்.
விலை கேட்டீங்கன்னா வாழையிலை பிஸ்னஸ் பண்ணத் தொடங்கிடுவீங்க சங்கவி.

{ cheena (சீனா) } at: January 8, 2010 at 6:55 PM said...

ஆமா ஆமா சங்கவி - இப்பல்லாம் வாழை இலைல யாரு சாப்பிடுறாங்க - கல்யாணச் சாப்பாடுன்னாத்தான்

நல்ல தகவல்

நன்று

நல்வாழ்த்துகள்

{ தேனம்மை லெக்ஷ்மணன் } at: January 8, 2010 at 9:43 PM said...

அந்தியூர் பற்றியும் வாழையிலையில் உணவருந்துவது பற்றியும் அருமையாக கூறி இருக்கீங்க சங்கவி

{ Rajalakshmi Pakkirisamy } at: January 9, 2010 at 7:37 AM said...

நல்ல பகிர்வு!!!

{ சங்கவி } at: January 11, 2010 at 4:05 AM said...

//நல்ல பயனுள்ள பகிர்வு.

என்னை சுற்றி நிறைய வாழை மரங்கள் உண்டு என்பதால் அடிக்கடி அதில் தான் சாப்பாடு. அதில் சாப்பிடும் போது உணவின் ருசியே அலாதியாக தான் இருக்கும்.//

வாங்க மலர்விழி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

{ சங்கவி } at: January 11, 2010 at 4:06 AM said...

//வாழையிலையில இத்தனை சங்கதி இருக்கா?எனக்கும் பிடிக்கும் வாழை இலையில சாப்பிட.ஆனா ரொம்பக் காலமாச்சு.இங்கயும் இறக்குமதி வாழையிலை வாங்கலாம்.
விலை கேட்டீங்கன்னா வாழையிலை பிஸ்னஸ் பண்ணத் தொடங்கிடுவீங்க சங்கவி.//

சொல்லுங்க ஹேமா பிஸ்னஸ் ஸ்டர்ட் பன்னீட்டாப்போகுது....

வாங்க ஹேமா தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

Post a Comment