Pages

2011 நீ வருக வருக...

Thursday, December 30, 2010 43 comments
2010 முடிந்து 2011 தொடங்க இருக்கிறது. 2010 என்ன செய்தோம் என்று அசைபோட்டு பார்க்கும் தருணம் இது இந்த வருடம் நிறைய தவறுகள் நிறைய வெற்றிகள் என மாறி மாறி பெற்று இருப்போம். 2011 ம்ஆண்டு அனைவருக்கும் அனைத்து சுகங்களும் பெற வேண்டிய வாழ்த்துக்கள்...


2011 ம் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்
சங்கமேஸ் (சங்கவி)
Read more »

அஞ்சறைப்பெட்டி 30.12.2010

Wednesday, December 29, 2010 59 comments

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இந்த வருடத்தில் நான் நிறைய மகிழ்ச்சியை பெற்றுள்ளேன் பதிவுலகில் எனக்கு என்று தனி அடையாளமாக குறிப்பிட்ட அளவு நண்பர்களைப் பெற்று உள்ளேன். இந்த வருட கடைசியில் தான் நண்பர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற அஞ்சறைப்பெட்டி எழுத ஆரம்பித்தேன். அடுத்து மறக்க முடியாதது எனக்கு மகன் பிறந்தது.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

&&&&&&&&&&&&&&


மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என ஆசிரியர்கள் நாமக்கல்லில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர் இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அந்த அளவிற்கு ஊதியம் கேட்கும் இவர்கள் வாங்கும் ஊதியத்திற்கு பாடம் நடத்துகிறார்களா என்றால் கேள்விக்குறிதான். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றி வெற்றி பெற்றால் மட்டுமே இவர்களுக்கொல்லாம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இல்லை எனில் படித்து வேலை இல்லாத புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.


&&&&&&&&&&&&&

தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் வேலையில் விலைவாசியும் கிடு கிடு என்று உயர்ந்து கொண்டு இருக்கிறது வெங்காய விலை மீண்டும் 80தைத் தொட்டுள்ளது. கட்டுமானப்பொருட்களின் விலையும் விர் என்று உயர்ந்து இருக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்தினால் தான் ஓட்டு கேக்கும் போது பதில் சொல்ல முடியும் இல்லை என்றால் எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான். இறக்குமதியை அதிகப்படுத்தி விளைபெருட்களின் விலையை குறைக்க வேண்டும்.

&&&&&&&&&&&&&


சமீபத்தில் பவானியில் இருந்து மேட்டூர் சென்றேன் அழகான இடம் ஆனால் பேருந்தில் தான் செல்ல முடியவில்லை அந்த அளவிற்கு சாலைகள் மோசமடைந்து உள்ளன. பேருந்தில் ஒரு 20 நிமிடம் பயணம் செய்தாலே உட்காரும் இடம் அதிர்ந்து உடல் வழியை அதிகப்படுத்துகிறது. ஏற்கனவே சாலைகள் தரம் இல்லாமல் இருந்தது இப்போழுது மழையால் முற்றிலும் தரம் குறைந்து இருக்கிறது. விரைவில் தேர்தல் வருவதால் சாலைகளை கவனித்தால் ஓட்டுகள் கவனிக்கப்படும்...

&&&&&&&&&&&&&


நான் இடும் இடுகைகளை எல்லாம் நான் ஒரு இரண்டு முறை வாசிப்பேன் எனக்கு திருப்தி என்றவுடன் போஸ்ட் செய்வேன் சமீபத்தில் நண்பர் ஒருவர் எனது பதிவுகளை ஒரு 20 முறை படித்து அதில் உள்ள எழுத்துப்பிழைகளை மேற்கோள் காட்டி அனானிம்ஸ் ஆக கமெண்ட் போட்டு இருந்தார். தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை நண்பரே உங்கள் சொந்த பெயரிலேயே கமெண்ட் போடுங்கள். என்னை சந்தித்துள்ளேன் என்று கூறி உள்ளீர்கள் நிச்சயம் நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது நிச்சயம் ஒரு புல் உண்டு.


&&&&&&&&&&&&&


தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
 
&&&&&&&&&&&&&


திரைப்படங்களில் நாட்டாமையாக நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமாரின் பல தனிப்பட்ட விசயங்கள் சந்தி சிரிக்கின்றது. தந்தைக்கும், மகளுக்கும் உள்ள பிரச்சனையால் உலகமே சிரிக்கிறது. இவருக்கு இங்க தான் பிரச்சனை என்றால் இவர் நடிக்கும் சீரியலிலும் மகளால் இவருக்கு பிரச்சனை... நல்ல ஒற்றுமை...


நாட்டு நடப்பு

குளிர்கால கூட்த் தொடர் ஒரு நாள் கூட கூடாத நிலையில் அடுத்து வரும் பட்ஜெட் கூட்டம் நன்றாக நடக்க வேண்டும் என காங்கிரசார் இப்போது இருந்தே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப் பொறுத்த வரை எதிர் கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றினால் நன்றாக நடக்கும் இல்லை எனில் வரும் தொடரும் தினமும் கூச்சலாகத்தான் இருக்கும்.

டீசல் விலை மீண்டும் உயர வாய்ப்பிருக்கிறது நாளை கூடும் மந்திரி சபையில் இதற்கான கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இப்படியே விலையே ஏத்திகிட்டே போன எப்பதான் குறைக்கிறது. அரசு பெட்ரோல் டீசலில் கடைபிடிக்கும் நடை முறையை மாற்ற வேண்டும் அப்போது தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும்..


தகவல்கங்காரு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றன. பாக்கி வளர்ச்சியெல்லாம் கங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை, செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும். குட்டியின் உடற்பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்துகொள்ளும்.


மொக்கை ஜோக்


ராஜா: ஏன் அவனை அடிக்கிறீங்க?
வீரன்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லீட்டான்.

ராஜா: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

வீரன்: அதைத்தான் சொல்லீட்டான்...!

--------------------
ஒரு வழுக்கைத் தலை ஆள்:
"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"
"
அப்புறம் என்ன ஆச்சு?"
"
வழுக்கி விழுந்துட்டாங்க!"

------------------------------
 
ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?
இது கூட தெரியலையா?
left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.
இப்படித்தான் அறிவு ஜீவியா இருக்கணும்.
வரட்டா.,…….
அறிமுக பதிவர்

குடந்தையூர் என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வருகிறார் இவரது பெயர் ஆர்.வி. சரவணன்.இவரது சிறுகதைகள் நன்றாக இருக்கின்றன. சமீபத்தில் தான் படித்தேன் இவரது பெற்றோர் என்னும் சிறுகதை மிக அருமையாக உள்ளது நீங்களும் பாருங்களேன்...

http://kudanthaiyur.blogspot.com/2010/12/blog-post_18.html

தத்துவம்

என்னதான் நமக்கு இரண்டு காது இருந்தாலும்
1 என்று சொன்னால் 1 என்று தான் கேக்கும்...

எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது

செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லனா,
பேலன்ஸ் பண்ண முடியாது


குறுஞ்செய்தி

மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”


நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?


வீட்ல இருக்கறவனை ஒயின்சாப்புக்கு போகை வைப்பது காதல், ஒயின்சாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிட்டு வருவது நட்பு...
Read more »

அறியாப் பருவத்திலே

Tuesday, December 28, 2010 29 comments
அறியாப் பருவத்தில் அனைவரும் குறும்புகள் செய்வது வழக்கம் நானும் நிறைய குறும்புகள் செய்துள்ளேன் அதை எல்லாம் இப்போது நினைத்தால் ஒரு பசுமை மாறா நினைவுகளாக இருக்கின்றது ஏற்கனவே எனது குறும்புகளை பற்றி பதிவுகள் எழுதி உள்ளேன் இது அதற்கும் அடுத்த நிலை... நீங்களும் நிறைய குறும்புகள் செய்து இருப்பீர்கள் நிறைய பேர் என்னுடன் ஒத்துப்போவார்கள் என நினைக்கிறேன்.. எனது குறும்பை படித்து உங்கள் குறும்புகளை அசைபோடுங்கள்...
நான் பத்தாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தேன் அப்போது எல்லாம் கொஞ்சம் குறும்பு அதிகமாக செய்வேன். எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் இந்த வயதில் தான் நடந்தது எனது விடுதி அறை எண் 22. நாங்கள் 5 பேர் இருந்தோம் அனைவரும் 10ம் வகுப்பு படித்து வந்தோம் அங்கு நான் மற்றும் நண்பர்கள் செய்த குரும்பும் மறக்க முடியாத சம்பவமும்.

சம்பவம் 1


காலண்டுத் தேர்வு முடிந்ததும் மதிப்பெண் எல்லாம் கொடுத்தார்கள் நான் படிப்பில் கொஞ்சம் சுமார் தான். நமது மதிப்பெண்களை எல்லாம் ஒரு தபாலில் எழுதி அதை விடுதி காப்பாளரிடம் கொடுக்க வேண்டும். அப்போது 40 மதிப்பெண்ணிற்கு கீழ் எடுத்து இருந்தால் அதை குறித்துக் கொள்வார்கள். எல்லா தபாலையும் போஸ்ட் செய்து விட்டு அன்று இரவு விடுதியில் இருக்கும் காப்பாளர்கள் எல்லாம் ஒவ்வொரு அறையாக சென்று மதிப்பெண் குறைந்தவர்களை எல்லாம் பின்னு பின்னு என்று பின்னுவார்கள்.

அப்படி வரும் போது எங்கள் அறையில் நானும் எனது நண்பன் லட்டு நாகராஜ் மட்டும் 2 பாடத்தில் பெயில் எங்களுக்கு மட்டும் அடி உண்டு என மற்றவர்கள் கிண்டல் அடித்தனர். காப்பாளர்கள் எங்கள் அறைக்கு வந்தனர் வந்து மதிப்பெண்ணை பார்த்துவிட்டு என்னையும் லட்டுவையும் 3 பேரும் கொஞ்சம் அதிகமாக விளாசினர். அடித்து முடித்து அவர்கள் வெளியே கிளம்பினர் அவர்கள் போய்விட்டார்கள் என நானும் லட்டுவும் ஒரு குத்தாட்டம் போட்டோம் இதை அடுத்த அறையில் இருந்து திடீர் என வெளியே வந்த எங்க காப்பாளர்  பார்த்து விட்டார் அப்புறம் என்ன மீண்டும் மூன்று பேரும் சேர்ந்து எங்களை போட்டு காரமடை பெரம்பில் பின்னி எடுத்தனர் எங்களை அடிக்கும் போது நான் வேகமாக ஐயோ என எழுந்து கத்தும் போது என் கை பட்டு எங்க காப்பாளர் கீழே விழந்தார் விழும் போது பெரம்பும் அவரது கையும் அறையில் இருந்த இரும்பு பெட்டி மேல் விழந்து சாருக்கு கை முட்டி விழகியது.

சம்பவம் 2

விடுதியில் வெள்ளிக்கிழமை அன்று காலை எப்போதும் இட்லி போடுவார்கள் இட்லிக்கு செதாட்டுக்க கொஞ்சம் சுடுதண்ணி (சாம்பார்) பச்சத் தண்ணீர் (சட்னி) கொடுப்பார்கள். இட்லி கிரிக்கெட் பந்து போல இருக்கும். 10ம் வகுப்பில் மட்டும் விடுதியல் நாங்க 40 பேர் இருந்தோம் வரிசையாக 7 அறையில் நாங்க மட்டுமே. நாங்கள் 22ம் அறைக்கும் 21ம் அறைக்கும் சாப்பாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை காலையில்தான் வைத்துக் கொள்வோம் இந்த அறையைச் சார்ந்தவர்கள் ஒரு வரிசையாகவும் மற்றொரு அறையைச் சார்ந்தவர்கள் எதிர்வரிசையில் உட்கார்ந்து போட்டியை ஆரம்பிப்போம் ஆளுக்கு 12 முதல் 15 இட்லி சாப்பிட்டு போட்டியை முடிப்போம் இது போக போக 10 வகுப்பு படித்த நாங்கள் எல்லாரும் தனித்தனியாக போட்டி என முடிவு செய்து 40 பேரில் யார் அதிகம் சாப்பிடுகின்றனர் என போட்டி வைத்து சாப்பிட ஆரம்பி்ப்போம் நாங்கள் ஆரம்பித்த நாள் முதல் 11 மற்றும் 12 வகுப்பு அண்ணன்களுக்கு இட்லி கிடைப்து இல்லை.

ஒரு நான்கு ஐந்து வாரம் அவர்களுக்கு எல்லாம் இட்லிக்கு பதில் கோதுமை உப்பு மாவே கிடைக்கும், அதுவும் வெள்ளிக்கிழமை காலை முதல் பெல் அடித்ததும் நாங்கள் எல்லோரும் தட்டை தட்டிக்கொண்டு வரிசையாக செல்வோம் இதைப்பார்த்து எல்லோரும் ஆகா போக ஆரம்பிச்சுட்டானுக் இனி நமக்கு உப்புமாதான் என்று புலம்புவார்கள்.

இச்சம்வத்தை தலைமை வார்டன் ஒரு நாள் மாலை அசம்பளியில் இந்த வருட 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ நன்றாக இட்லிசாப்பிடுகிறார்கள் இவர்கள் இட்லி சாப்பிடுவதை தடுக்க இனி 11, 12ம் வகுப்பினர் சாப்பிட்ட பின்தான் இவர்கள் சாப்பிட வேண்டும் என ஒரு குண்டை போட்டார். ஆனாலும் எங்களுக்கு இட்லி கிடைத்தது.

அந்த வருடம் நடந்த சாப்பாட்டு போட்டியில் எங்கள் 10வகுப்பைச் சார்ந்த நண்பர் கோடீஸ் 28 இட்லி சாப்பிட்டு முதல் இடத்தையும் மற்றும் 3 பரிசுகளையும் எங்கள் அணியே வென்றது நான் 21 இட்லி சாப்பிட்டு டெபாசிட் வாங்கினேன். 10 வகுப்பு மாணவர்கள் மட்டும் 25 பேர் கலந்து கொண்டோம்.

சம்பவம் 3

விடுமுறை முடிந்து விடுதிக்கு வராமல் பள்ளிக்கும் விடுமுறை போட்டு விட்டு ஈரோடு ராயல் தியேட்டரில் ஜென்டில்மேன் படம் பார்த்து விட்டு நான் மற்றும் என் நண்பன் தியாகராஜன், கே.சி.பி.கார்த்தி 3 பேரும் நண்பன் வீட்டுக்குச்சென்று விட்டு அடுத்தநாள் காலை விடுதிக்கும், பள்ளிக்கும் சென்றோம். தினமும் இரவு பதிவேடு எடுத்து வந்து கணக்கு பார்ப்பார் காப்பாளர் செவ்வாய்கிழமை இரவு எதுவும் சொல்லாமல் விட்டு விட்டார்.

புதன் இரவு வரும்பொழுது உள்ளே வந்து பதிவெடுத்தி மீண்டும் திரும்பி ஏண்டா சங்கமேஸ்வரா வருவதற்கும் போவதற்கும் இது என்ன மாமியார் வீடா என என்னை போட்டுத் தாக்கு தாக்கு என தாக்கினார். சார் சார் இனி மேல் செய்யல சார் என சொல்லிவிட்டு அடி வாங்கி வந்து நின்றேன் என்ன செய்வது இவரை பழிவாங்க என திட்டம் தீட்டினேன். அடுத்த நாள் மாலை கிரிக்கெட் மைதானத்திற்கு எப்படியும் வருவார் இன்று போட்டுத் தாக்கி விடலாம் என முடிவு செய்து காத்திருந்தேன். நாங்கள் எல்லோரும் வரிசையாக பந்து வீசுவோம் காப்பாளர் மட்டையைப் பிடித்து அடிப்பார்.

இன்று  வீசும் பந்தெல்லாம் எம்பி எழும் வகையில் போட்டு பல்லை உடைக்கலாம் என திட்டம் தீட்டி வைத்திருந்தேன். வழக்கும் போல் அவர் வந்தார் அன்று மட்டையை பிடிக்காமல் என்னையை பிடிக்கச் சொல்லிவிட்டு பந்து வீச ஆரம்பித்தார் தலை தப்பிரான் புன்னியம் என்று தப்புவதற்குள் எனக்கு போதும் போதும் என ஆகிவிட்டது. மூன்று நாட்கள் கழித்து வசமாக சிக்கினார் ஒரு பத்து பவுன்சர் பந்து வீசி 10வது பந்தில் மூக்கை உடைத்தேன்....

இப்படி பல குறும்புகளும் சேட்டைகளும் செய்து விடுதியில் படிக்கும் போது அடிவாங்கியும் மற்றவர்களை அடித்தும் விடுதி பீஸ் கேரியரை பிடுங்கி கரண்ட் இல்லாமல் செய்வது பீடி குடித்து ரோட்டில் போகிறவர்கள் மேல் வீசுவது. காப்பாளர் குளிக்க தண்ணீர் காய வைததிருந்தால் அதை கீழே ஊற்றிவிட்டு பச்சத்தண்ணீர் கலந்து விடுவது, பாத்ருமில் படம் வரைவது, டிவி அறையில் ஆண்டனா ஒயரை புடுங்குவது. அசம்பளியில் வேண்டும் என்றே தும்புவது, தேங்காய் திருடி திண்பது, விடுதி மதில் சுவர் ஏறி பக்கத்து வீட்டு பண்ணையில் சென்று கொய்யாக்கா, மாங்காய் திருடுவது இதை பார்த்த அவர்கள் நாய் குழைக்கும் போது மதில் மேல் நின்று நாயை கல்லால் அடித்து கீழே இறங்கி வாய்க்காலில் படுத்து தூங்குவது, இரவு சினிமாவிற்கு சென்று விட்டு பைப்பை பிடித்து எனது அறைக்கு செல்வது, வயிறு வலிக்குது என்று பொய் சொல்லி மருத்துவமனைக்கு சென்று விட்டு வரும் பாதையில் பான்பராக் ஒன்று 2ருபாய்க்கு வாங்கி வந்து இங்கு 5 ரூபாய்க்கு விற்பது என பல சேட்டைகள் இதை இன்று நினைத்தால் இப்படி எல்லாம் 10வது படிக்கும் போது செய்தாமா என நினைக்க நினைக்க கூச்சமாகவும், அது ஒரு சந்தோசமான தருனம் மீண்டும் நிச்சயம் கிடைக்க வாய்ப்பில்லை..
Read more »

ஈரோடு சங்கமம் புகைபடங்கள்

Monday, December 27, 2010 23 comments
ஞாயிறு அன்று நடந்த ஈரோடு சங்கமம் விழாவில் நான் எடுத்த புகைபடங்கள். நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்ததால் அதிகமாக புகைபடங்கள் நான் எடுக்கவில்லை. நான் எடுத்த சில புகைபடங்கள் உங்களுக்காக...

என்ன யாரையும் காணவில்லை என்று பாக்கறீங்களா 
இது காலை 9 மணிக்கு எடுத்தது.

தமிழ் வணக்கம் சிங்கை பிரபாகர்


வரவேற்பு அண்ணன் தாமோதர் சந்துரு

துவக்க உரை ஆரூரன்

எழுத்தாளர் பெருமாள் முருகன்
 
எழுத்தாளர் பாமரன்

தமிழ்ஸ்டுடியோ - அருண்

வழக்கறிஞர் - சிதம்பரன்.கி.

ஓசை செல்லா

 கூழாங்கற்கள்

 ஈரோடு குழும உறுப்பினர்கள்

பிரபாகர்,சங்கவி, கோபி, செல்வம், முரளி, முஸ்தபா, ஜாக்கி, வால், ராமன், செந்தில், சாமிநாதன்

என் அன்பு பங்காளிகள் பிரபாகர், ஜாக்கியுடன் நான்....

நண்பர்களே இன்னும் நிறைய படம் என் பங்காளி பிரபாகரிடம் இருக்கிறது அதில் நிறைய சுவாரஸ்யமும் இருக்குது விரைவில் உங்களுக்காக... 
Read more »

ஈரோடு சங்கமத்தில் முட்டை பூரி... (உணவுக்கான சிறப்பு பதிவு)

44 comments

ஈரோடு மாவட்டம் எப்பவும் விருந்தினர்களை கவனிப்பதிலும், வரவேற்பதிலும் காலம் காலமாக பேர் பெற்றது. வரும் விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அசத்தி அனுப்புவதில் ஈரோட்டு மக்களுக்கு நிகர் தேடித்தான் பிடிக்கனும்.

கடந்த முறை சங்கமத்தில் வந்திருந்த விருந்தினர்களை இரவு உணவில் அசத்தியிருந்தார்கள். இதைப்பற்றி கடந்த முறை வந்திருந்த அனைத்து பதிவர்களும் அவர்களது பதிவில் குறிப்பிட்டு இருந்தனர். இம்முறை அதை விட அசத்த வேண்டும் என முடிவு செய்தோம். ஈரோடு மாவட்டத்தில் கிடா விருந்துக்கு என்று தனி அடையாளம் உண்டு. அது போல கிடா விருந்து மாதிரி தனியாக சமையல்காரரை ஏற்பாடு செய்து அசத்தலாம் என்றதும் தாமோதர் அண்ணனின் விசேசங்களுக்கு சமைக்கும் பரமு என்ற சமையல்காரரை ஏற்பாடு செய்தார்.

விருந்து ஆரம்பம்...


முதலில் இரவில் வரும் பதிவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தோம் இரவு வந்த பதிவர்களில் என் பங்காளி பிரபாகர், கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, கும்க்கி, எழில் மற்றும் ஈரோடு குழும உறுப்பினர்கள் தான் இருந்தோம் நான் கடைசியாகத்தான் வந்தேன் உள்ளே வரும் போதே அரூரன் ஒரு தட்டு நிறை ஆம்லெட் உடன் வந்தார். தாமோதர் சந்துரு அண்ணாவிடம் என்ன சிறப்பு உணவு இரவுக்கு என்றேன் இரவு முட்டை என்றார். 

முட்டை தோசை, ஆம்லெட், கலக்கி என்று வரிசையாக வந்தது. நாம் எப்பவும் இட்லிக்கு சாம்பார் சட்னி சேர்த்து தான் சாப்பிடுவோம் ஆனால் இரவு உணவிற்கு சிக்கென் குழம்பு வைத்திருந்தார் பாருங்க சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அதன் சுவை தனி (இரவு வராத பதிவர்கள் ரொம்ப மிஸ் பன்னீட்டீங்க).

தாமோதர் அண்ணனிடம் என் பங்காளி அண்ணா காலை என்ன சிறப்பு என கேட்க முட்டை பூரி என்றார் என்னது முட்டை பூரியா என்று எல்லோரும் வாயைப் பிழந்தோம். காலைல மட்டுமல்ல மதியம் வந்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் பேசுவோம் என்றார்.

இரவு நானும், பங்காளியும் அதைப்பற்றி  ஒரு சிறு விவாதமே நடத்தினோம். காலை எங்க அடுத்த பங்காளி அண்ணன் ஜாக்கி வந்தார். நான் பிரபாகர், ஜாக்கி, கார்த்திகை பாண்டியன், ஆர்.கே சரவணன் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் இரவு உணவைப்பற்றியும், முட்டை பூரியைப்பற்றியும் சொன்னேன் கார்த்திகை பாண்டியன் நீங்க சொல்றத பார்த்தா இப்பவே பசிக்குதுங்க என்றார். ஜாக்கியோ என்னடா சொல்ற முட்டைல பூரியா வந்து பார்க்கிறேன் என்றார்.

காலை உணவு இட்லி, தோசை, பூரி, முட்டை பூரி அதற்கு தக்காளி குருமா, அற்புதமான தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசால் என அசத்தினர். பூரில முட்டைய பார்த்ததும் எனக்கு எப்படி சாப்பிடவது என்று தெரியவில்லை. வழக்கமாக ஆப்பாயில் சாப்பிடற மாதிரி சாப்பிட்டு அசிங்கப்பட்டேன் ஆனால் எம் பங்காளி பிரபாகர் தாமோதர் அண்ணனை கூப்பிட்டு எப்படி சாப்பிடுவது என கேட்க சூப்பரா சொன்னார் பூரி, முட்டை மேல மசால் ஊற்றி மூன்று சுவையையும் ஒன்றாக சாப்பிடு என்றார். பிரபா சாப்பிட்டு விட்டு அருமையான சுவை என்றார். ஜாக்கி காலைல அடிச்ச கமெண்ட் பாசக்காற பயலுக காலைல சாப்பாடே அசத்திட்டீங்க மதியம் எதிர் பார்க்கிறேன் என்றார்.

மதியம் ஈரோட்டு மண்ணிற்கே உரித்தான தலைவாழை இலையுடன் சாப்பாடு போடுங்க என்றார் பறிமாறுபவர் இருங்க வரும் என்று சொல்லைவிட்டு மட்டன் வறுவல் கொஞ்சம் கிரேவியுடன் ஒரு கால்கிலோ வைத்தார், அடுத்து பள்ளிபாயைம் சிக்கன் ஒரு கால்கிலோ, தக்காளி முட்டை , தலைக்கறியும் குடலும் வைத்தனர் கடைசியாக கொஞ்சம் சாப்பாடு, சாப்பாட்டுக்கு ஓர் அற்புதமான கறிக்குழம்பு, ரசம், தயிர் என வயிறு நிரம்ப என்றும் சொல்லும் படியான ஓர் சாப்பாடு.

தேநீர் காலையும், மாலையும் தேநீர் மீண்டும் மீண்டும் குடிக்கலாம் என்ற வகையில் இருந்தது பாராட்டத்தக்கது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எதை மறந்தாலும் நிச்சயம் சாப்பாட்டை மறக்க முடியாது என்று கூறினால் மிகையாகது..
இந்த அற்புதமான உணவிக்கு பின் நிறைய நண்பர்களின் உழைப்பு இருக்கிறது காலை 4 மணிக்கே சென்று ஜாபரும், கார்த்தியும் கறி எடுத்து வந்தனர். அண்ணன் தாமோதர் சந்துரு வெங்காயத்தை தூக்கிட்டு அங்கே இங்கே என்று பறக்கிறார் ஆருரன் ஒவ்வொருவராக உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு பறிமாறுகிறார். கதிர் கறியை இரத்தம் சொட்ட சொட்ட இரண்டாவது மாடிக்கு தூக்கி செல்கிறார். இவர்களின் உழைப்பே இன்று அனைவரும் பாராட்டு வகையில் உணவு அமைந்ததற்கு முக்கிய காரணம்..

இந்த முறை வரஇயலாத பதிவர்கள் எல்லாம் அடுத்த முறை வாங்க வாங்க அடுத்த ஸ்பெசல் காத்திருக்கு.
Read more »

ஈரோடு சங்கமத்தில் குவிந்தனர் பதிவர்கள்...

Sunday, December 26, 2010 26 comments
ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக இன்று நடந்த பதிவர் சங்கமத்தில் பதிவர்கள் குவிந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர் சங்கமம் சிறப்பாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு இன்று நடந்தது.

சனிக்கிழமை மதியத்தில் இருந்தே பதிவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர் அவர்களுக்கு இரவு உணவு பறிமாறப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். காலை 9 மணியில் இருந்து பதிவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சரியாக 10.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களும் பேச்சும்

சிறுகதைகளை உருவாக்குவோம்  என்ற தலைப்பில் எழுத்தாளர். பெருமாள் முருகன் சிறுகதைகளை எப்படி எழுதுவது அதற்கு எப்படி தயார் செய்ய வேண்டும் என்று சிறப்பாதொரு விளக்கம் அளித்தார்.

உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர். பாமரன் அவர் இணையத்தையும் கணினியையும் எவ்வாறு பழகினார் அவர் எவ்வாறு இணையத்தில் எழுத ஆரம்பித்தார் என்று அவருக்கு உரிய கோவை வழக்கில் பேசினார்.

குறும்படம் எடுக்கலாம் வாங்க என்ற தலைப்பில் அருண் (தமிழ்ஸ்டுடியோ. காம்) குறும்படம் எப்படி எடுப்பது, குறும்படம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகான விளக்கத்தை அளித்தார். குறும்படம் எடுப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுகிறேன் என்றார்.

இவர்கள் பேசியதும் பதிவர் அறிமுகம் நிகழ்ச்சி நடை பெற்றது. அதற்கு பின் கொங்கு மண்டலத்திற்கே உரித்தான விருந்தோம்பலுடன் அற்புதமான சைவ அசைவ உணவுகள் பறிமாறப்பட்டது.

நிழற்படங்களில் நேர்த்தி என்ற தலைப்பில் ’கருவாயன்’  சுரேஷ்பாபு அழகான விளக்கத்தையும் அதற்கு பல புகைப்படங்களின் வேறுபாடுகளை எடுத்துக்கூறினார்.

உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பில் சிதம்பரன்.கி அவர்கள் உலக திரைப்படங்கள் பற்றியான அவர் பார்வையை அழகாக கூறினார்.

இன்றைய இணையமும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் ஓசை செல்லா அவர் பதிவுலகின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை எப்படி இருந்தது என்பதையும் இணையத்தில் எவ்வாறு சம்பாரிப்பது என்பதை பற்றியும் கூறினார்.

நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் என்ற தலைப்பில் லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்) பல புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு அப்புகைபடத்தை விளக்கம் கூறி விவரித்தார்.

பதிவர்கள் கலந்துரையாடலை திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் சிறப்பாக நடத்தினர்.

இந்த வருடம் ஈரோடு சங்கமம் மிகச்சிறப்பாக நடைபெற்றது புதிய பதிவர்கள் வந்து குவிந்தனர். பல பிரபல பதிவர்களும், வாசகர்களும், எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவை ஈரோடு பதிவர் குழுமத்தின் சார்பாக கதிர், ஆருரன், பாலாசி, ஜாபர், ராஜா, சந்துரு மற்றும் குழும உறுப்பினர்கள் விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் அன்பாக அரவணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தனர்...

விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் ஈரோடு வலைப்பதிவர் குழுமம் சார்பாக நன்றி...

குறிப்பு 
நான் எடுத்த புகைப்படம் பங்காளி பிரபாகர்கிட்ட இருப்பதால் புகைப்படம் போடமுடியவில்லை. நாளை கிடைத்ததும் வெளியிடுகிறேன்.

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிவர் எங்கள் அன்பு பங்காளி ஜாக்கி சேகர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 

மேலும் பல விவரங்களும், புகைபடங்களும் நாளைய பதிவில்...
Read more »

சங்கவியும் தம்மும்...

Friday, December 24, 2010 41 comments

நான் முதன் முதலாக புகைபிடித்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான். எங்கள் ஊர் திருவிழாவிற்கு நாடகம் உள்ளுர் அண்ணன்கள் எல்லாம் நடிப்பார்கள் அந்த வருடம் நீந்த தெரியாத மீன்கள் என்ற நாடகத்தில் சின்ன பசங்க நாங்கள் நடிக்கிற சீன் கொடுத்து எங்கள தம் அடிக்க வெச்சாங்க அப்பவே எனக்கு அந்த புகை பிடித்துவிட்டது 10 நெம்பர் பீடி அப்பத்தான் எனக்கு அறிமுகம் ஆகியது. நாடகம் முடிந்த பின் அதை மறந்து விட்டேன்.

10வது படிக்கும் போது சாதா கோல்டு சிகரெட் குடிப்போம் அதுவும் கொஞ்ச நாளில் எங்கள் விடுதி வார்டனுக்கு தெரிய வர மிதி மிதி என மிதித்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார் அப்புறம் அது மறந்து விட்டது.

அப்புறம் மேல் படிப்பு படிக்கும் போது தான் முதன் முதலாக அறிமுகமாகியது வில்ஸ் பில்டர் அப்பதான் நன்றாக புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். வீட்டு பாத்ரூமில் தம் அடிப்பது. ஆத்துக்குப் போய் தம் அடிப்பது, ஊருக்குள்ள இருட்டில் ஒண்டி அடிப்பது என திருட்டு தம் அடிக்கும் சுகமே அப்ப தனியாக இருந்தது. அந்த கால கட்டத்தில் தான் புகையை உள் இழுத்து ஒரு சிப் டீ சாப்பிட்டு விட்டு புகையை விடுவது, சுருள் புகை விடுவது என புகையைப்பற்றியான அத்தனை கலைகளும் கற்றது அந்த கால கட்டத்தில் தான். நான் தம் அடிச்சி சைட் அடிக்கும் போது ஒரு பிகரு ரூட் விட்ட கதை எல்லாம் இருக்குது. (அது விரைவில் பதியப்படும்)

பிற்காலத்தில் வேலைக்கு சென்ற பிறகும் இப்பழக்கம் தொடர்ந்தது நான் முதன் முதலில் வில்ஸ் குடிக்க ஆரம்பித்தபோது அதன் விலை 1.25 பைசா ஒரு நாளைக்கு சராசரியாக 15 குடிப்பேன். இது ஒரு 5 வருடமாக தொடர்ந்தது. ஈரோட்டில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்யும் போது எதிரே உள்ள பெட்டிக்கடையில் மாதம் அக்கவுண்ட் மட்டும் 600 ரூபாய் வரும்.

2003ம் வருடம் திடீரென ஒரு நாள் பல்வலி வந்தது பல் மருத்துவரிடம் சென்று வாயைக்காட்டினாள் அவர் புதிதாக கடவாய்ப் பல் முளைக்கிறது ஆனால் முளைக்கும் பல் திரும்பி இருக்கிறது இதை பிடுங்கி தான் ஆகவேண்டும் என்றார். சரி பிடுங்குங்க என்று வாயைத்திறந்தேன். அவரும் ஊசி போட்டு அந்த இடத்தை கிழித்து கொரடு போட்டு ஒரு இரண்டு மணி நேரம் போரடினார் பல் பிடுங்க... அப்பதான் சொன்னார் நான் மருத்துவ தொழில் ஆரம்பித்து  இதுதான் நான் பிடுங்கும் முதல் கடவாய் பல் என்று. (உனக்கு நாந்தானா கிடைச்சேன் என்று கடவுளை வேண்டினேன்) அப்புறம் ஒரு வழியாக பிடுங்கிவிட்டார்.

பல் பிடுங்கியதால் ஒரு வாரத்திற்கு புனல் வைத்து தான் சாப்பாடு ஊற்றினர். ரசம் சாதமும், தயிர் சாதமும் தினமும் புனல் வைத்து ஊற்றப்பட்டது ஒரு பத்து நாள் ஆனபின்பு தான் ஆகா சிகெரெட் பிடிச்சு 10 நாள் ஆச்சு என்று திருட்டு தம் அடிக்க மொட்டை மாடி சென்று பத்த வைத்து இழுத்தேன் குமட்டலாக வந்தது சரி வேண்டாம் என்று தூக்கி விசிவிட்டேன் அடுத்த நாள் முதல் அலுவலகம் சென்று வந்தேன். ருசியாக சாப்பிட்டு 15 நாள் ஆச்சி என்று எதிரே இருந்த பாஸ்ட்புட் சென்று சில்லிசிக்கன் சாப்பிட்டு ருசி கண்டேன்(அடுத்த நடக்கும் விபரீதம் தெரியாமல்)

2 நாள் கழித்து மீண்டும் பல்வழி என்ன வென்று மருத்துவரிடம் ஓடினால் பல் புடுங்கிய இடத்தில் இருக்கும் ஓட்டையில் ஒரு சிக்கன் எழும்பு அதை எடுத்து மறுபடியும் தையல் போட்டு மீண்டும் புனல் சாப்பாடுதான். அப்படியாக ஒரு நாற்பது நாள் போய்விட்டது. நிலமை சரியாகி எதிரே இருக்கும் பெட்டி கடையில் எவ்வளவு அக்கவுண்ட் அமவுண்ட் என்றதும் 20 ரூபாய் என்றார்கள். அப்ப தான் தம் அடிச்சு 40 நாள் ஆச்சு என்று நினைப்பு வந்தது.

புகை உடல்நலத்துக்கு கேடு என்று அறிந்தும் தம் அடித்தோம் அந்த சுவையை அறிதோம் இப்ப 40 நாள் குடிக்காம இருந்ததால் எந்த இழப்பும் இல்லை இனி ஏன் குடிக்க வேண்டும் சகலமும் கற்று மற என்ற பழமொழிக்கு ஏற்ப புகையை கற்று மறந்தாச்சு என்று அன்றில் இருந்து இன்று வரை புகை பிடிப்பதில்லை அந்த நாள் 25.12.2003 கிட்டத்தட்ட 7 வருடம் ஆகிறது புகையை பிடித்து. அன்றில் இருந்து இன்று வரை தம் அடிப்பதில்லை யாருக்கும் தம் வாங்கித் தருவதில்லை என்று நான் எடுத்த முடிவை இன்று வரை கடைபிடிக்கிறேன்...

சத்தியமாக நான் நல்லவன் நல்லவன்... நம்புங்க மக்களே....
Read more »

23.12.2010 அஞ்சறைப்பெட்டி

Thursday, December 23, 2010 42 comments
உள்ளுரில் இருந்து உலகம் வரை........


சென்னை சைதை அண்ணாசாலையில் உள்ள என்.சி.ராஜா அரசு மாணவர் விடுதி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்துள்ளனர் இது மிக தவறு தங்களது கோரிக்கைகளை சொல்ல பல்வேறு வழிகள் உள்ளன தை விட்டு விட்டு சாலை மறியல் செய்யும் போது பொதுமக்கள் தான் பலர் பாதிக்கப்டுகின்றனர். தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல வில்லை என்றால் அரைநாள் சம்பளம் பிடிக்கும் நிறுவனங்கள் எல்லாம் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் அன்று அவர்களுக்கு தேர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது இதனால் சரியான நேரத்திற்கு தேர்வுக்கு செல்ல முடியாமல் போகலாம். அண்ணாசாலையை பொறுத்த வரை போக்குவரத்து மிகவும் அதிகமான ஓர் இடம் தினமும் லட்சக்கணக்கான வாகனம் செல்லும் இடம். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற போரடுவது தவறில்லை பொதுமக்கள் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் போராட்டம்.

-------------------------

அந்தியூரில் இருந்து சித்தாருக்கு  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன் வழியில் ஓரு ஊரில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர் வயதானவர்களும் அடக்கம் கொஞ்ச தூரம் சென்றதும் அடுத்த ஊரில் ஒரு 50 பெண்கள் வரிசையாக சாலை ஓரத்தில் இருக்கும் புல், பூண்டுகளை அகற்றிக்கொண்டு இருந்தனர் பக்கத்தில் ஒருவர் கையில் நோட்டு பேனா சகிதம் நின்று கொண்டு இருந்தார் இவர்கள் என்ன செய்கிறார்கள் சேவை இயக்கத்தினாரா என்று கேட்டேன் இல்ல சார் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் சார். நானும் ஊருக்கு சென்று 3 மணியளவில் திரும்பி வந்தேன் சாலையோரம் வேலை செய்தவர்கள் எல்லாம் மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டு இருந்தனர்அந்த கூட்டத்தில் எனக்கு சின்னபாட்டி செங்காத்தி ஆயா நின்று கொண்டு இருந்தார் இறங்கி விசாரித்து விட்டு என்ன செய்யறீங்க என்று விசாரித்ததில் ஒரு நாளைக்கு 100 சம்பளத்தில் வேலை செய்கிறேன் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வேலை செய்வோம் மகராசன் தினமும் 100 தறாங்க நல்ல இருக்கனும் என்றார்வேலையே செய்யாம 100 கொடுத்தா வாங்க கசக்குமா?

------------------------- 
 சனிக்கிழமை இரவு பெங்களூர் செல்வதற்காக ஈரோடு இரயில் நிலையத்திற்கு சென்றோம் 9 மணி இரயிலுக்கு 8.30 மணிக்கு சென்று விட்டோம் இரயில் 1 மணி நேரம் தாமதம் என்றார்கள் ஆனால் வந்த நேரம் 11.30 நாங்களும் ஏறி பெர்த்தில் படுத்து தூங்கினோம் திடீரென 2 மணிக்கு டீ சாப்பிடலாம் என்று எழுந்தேன் வண்டி இது எந்த ஊருங்க என்று அங்க இருந்த ஆண்டிகிட்ட கேட்டேன் ஈரோடு என்றார் என்னது ஈரோடா? இந்த ரயில் நாகர்கோயிலில் இருந்து இப்படி லேட்டாகத்தான் வருதுங்க என்றார் பெங்களூரில் மனைவிக்கு 11 மணிக்கு இரயில்வே தேர்வு சரி போய்விடலாம் என்று நொந்து உட்கார்ந்து இருக்கும் போது மேல்ல மேல்ல ஆடி ஆசைந்து பெங்களூரை இரயில் சென்றடைந்த நேரம் காலை 9.30. ஈரோட்டில் இருந்து TVS 50இல் போயிருந்தாக் கூட 7 மணி நேரத்தில் போய் இருக்காலம் என் தலைவிதி. அப்புறம் விசாரித்தேன் நாங்கள் சென்ற இரயில் ஸ்பெசல் இரயிலாம் ஸ்பெசல் ரயில் எல்லாம் எப்பவும் இப்படித்தான் போகுமாம். இனி டிக்கெட் புக் செய்யும் போது பார்த்து செய்யுங்க.

-------------------------

பலவற்றை கடந்து வந்த ஐரோப்பியர்களுக்கு, இம்முறை குளிர்காலம் தாக்குபிடிக்க முடியாமல் தவிக்கும் அபாயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

டிசம்பர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கும் சவால் விடும் இம்முறை குளிர்காலம் சர்வதேச விமான பயணிகள் மீதே முதலில் கை வைத்திருக்கிறது.

 ஜேர்மனியில் மாத்திரம் 450 ற்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளன. லண்டனில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு வேறு வழியின்றி  விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. போலந்தில் 93 பேர் தமது பலியாகியுள்ளனர். 25 வருட வரலாற்றில் மிக அபாயகரமான பனிக்காலத்தை அந்நாடு சந்தித்துள்ளது
 
-------------------------

 சிங்கப்பூர் நாட்டில் பிறந்த மேனியாக திரிகின்றமை நாகரிகமாக மாறி வருகின்றது.இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் குறைந்தது 105 ஆண்கள் வீதிகளில் நிர்வாணமாக திரிந்து இருக்கின்றார்கள் என்று போலீசாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து உள்ளன.

குயின்வேய்ஸில் உள்ள மக்டோனால்ட் உணவகத்துக்கு சுமார் கடந்த வார ஆரம்பத்தில் காலை 4.00 மணி அளவில் நிர்வாணமாக சென்ற ஒருவர் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்ய முயன்று உள்ளார்.

அதே போல ஓடும் பஸ்ஸில் கடந்த புதன்கிழமை மதியம் ஒரு பெண் நிர்வாணமாக ஏற முயன்றார். ஆனால் பொது இடங்களில் நிர்வாணமாக திரிகின்றமை சிங்கப்பூரில் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

-------------------------


 பிரிட்டனில் பாடசாலை சிறுவர்கள் இருவருக்கு 14 வயதில் குழந்தை பிறந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் இளவயதில் குழந்தை பெற்றுள்ள தம்பதியினராக இவர்கள் கருதப்படுகின்றனர்.

ஜெமி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி ஏப்ரல் வெப்ஸ்டருக்கு இன்னமும் முகத்தில் குழந்தைத்தனம் மாறவில்லை.


சிறுமி 13 வயதாக இருந்த போது தன்னுடைய காதலன் நாதனுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் கருவுற்றிருக்கிறாள். தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகியுள்ளது. குழந்தையை நன்றாக வளர்ப்பது குறித்து பெற்றோர் இருவரும் இணைந்து ஆலோசித்தும் வருகின்றனர். தற்போது குழந்தை சிறுமியுடனும் அவர்தம் தாய் தந்தையரிடத்திலும் வளர்ந்து வருகிறது

நாட்டு நடப்பு


ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஐதராபாத்தில் கடந்த 17-ந்தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி அவரை கைது செய்து மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியும் உண்ணாவிரதம் இவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஆந்திர மக்கள் எல்லாரும் உன்னும் விரதம் நடத்த வேண்டும்.. இது ஓர் அரசியல் நாடகம். 

நாட்டு மக்கள் இன்று அதிகம் உச்சரிக்கும் சொல் வெங்காயம். இதன் விலை இன்று விர் என்று உயர்ந்திருக்கிறது 80 முதல் 100 வரை விற்கப்படுகிறது ஏற்கனவே வெங்காயத்தால் டெல்லியில் ஆட்சியை இழந்த பி.ஜே.பி  இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியவில்லை வெங்காய விலையை அரசு எப்படி கட்டுப்படுத்தும் என்று இந்திய விவசாய அமைச்சர் சரத்பவாரிடம் கேட்டால் இன்னும் 3 வாரங்களில் குறைந்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது வரை பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்திருக்கலாம்.  

ராகுல் தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசின் கூட்டணி பற்றி அறிவிக்கப்போகிறாராம். ராகுல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதால் காங்கிரசுக்கு கூடுதல் ஓட்டு கிடைக்காது..


தகவல்

கடல்குதிரை

மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

உலகிலேயே ஆண் வர்க்கத்தில்  கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் உயிரினம் கடல்குதிரை தான்.

மொக்கை ஜோக்
 
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்! 


ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
 
அறிமுக பதிவர் 

பத்திரிக்கையாளர் சேக்கிழான் எழுதும் எழுதுகோள் தெய்வம் நாட்டை சீரழிக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது இந்த வலைப்பூ..


தத்துவம்

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

குறுஞ்செய்தி

படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....
ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...

நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...
நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

சமீபத்தில் ஓர் இருசக்கர வாகனத்தில் பார்த்த வசனம்...
100ல போனா 108 வரும்...

--------------------- 

வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....
Read more »

இரத்த விருத்திக்கு பேரீச்சை

Wednesday, December 22, 2010 31 comments

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.


ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
பேரீச்சையின் பயன்கள்
கண்பார்வை தெளிவடைய
 
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
Read more »

ஏர்செல்லும் நான் பட்ட அவஸ்தையும்

Tuesday, December 21, 2010 31 comments
என்னுடைய மொபைல் எண்ணாக ஏர்செல்லை பயன்படுத்துகின்றறேன் கிட்டத்தட்ட 8 வருடமாக போஸ்ட்பெய்டு இணைப்பில் இதே எண்ணை பயன்படுத்தி வருகிறேன். அதிகமாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் வேலை எனக்கு இல்லை. கடந்த வாரம் திடீரென பெங்களுர் செல்ல வேண்டியதாகி விட்டது நாம் எங்கே சென்றாலும் முதல் கேட்கும் கேள்வியே அங்க போன ஏர்செல் எடுக்குமா? எடுக்கும் என்றார்கள் ஆனால் ரோமிங் ஆக்டிவ் செய்ய வேண்டும் என நண்பன் விளக்கினார்.

நான் ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். அவர்கள் பதிலுக்கு இல்ல சார் நீங்க எங்க மொபைல் வாங்குனீங்களோ அங்க போய் எழுதி கொடுங்க அப்ப தான் செயல்படுத்த முடியும் என்றார்கள் இல்லிங்க என்னால் செல்ல முடியாத அவசர கால உதவி செய்யுங்கள் என்றேன் ஒரு 3 நிமிடம் கழித்து சரி சார் நாங்க உங்க வேண்டுகோளை எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள் சரி என்றேன்.

அடுத்த நாள் காலை ஓசூர் தாண்டி கொஞ்ச நேரத்தில் ஏர்செல் டவர் அவுட் நண்பனிடம் சொல்லி வாடிக்கையாளர் சேவை மையத்தை கேட்க சொன்னால் சார் உங்க வேண்டுகோள் ஏற்கப்பட்டு இன்னும் 24 மணி நேரத்தில் சரி செய்யபடும் என்று கூறிஉள்ளனர்.

ஆனால் சரி செய்யப்படவில்லை. தினமும் 24 மணி நேரத்தில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் அருகில் இருப்பது செல்போன் தான் தினமும் நிறைய போன்கள் பேசிக்கொண்டு இருந்த நான் அன்று ஒரு நாள் கையில் செல் இருந்தும்  எந்த அழைப்பும் அழைக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. அன்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் ஏர்செல்லால்.

இன்று காலை மறுபடியும் ஏர்செல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு கேக்கும் போது வந்த பதில் Sorry sir Technical Problem நீங்க கேட்ட எந்த தகவலும் தற்போது தர இயலாது சிரமம் பார்க்காமல் ஒரு 1 மணி நேரம் கழித்து பேசுங்க இது தான் வாடிக்கையாளர் சேவை மையம் கூறிய பதில்...

எனது கிரிடிட் லிமிட் 3500 நான் மாதம் கட்டும் கட்டணம் 700 என்ற போதிலும் எப்ப பிரச்சனை வந்தாலும் சாரி சார் டெக்னிக்கல் ப்ராப்ளம் இதே பதிலை சொல்கிறார்கள்.

சரி தவறு நம் மேல் தான் இத்தனை பிரச்சனைக்கு அப்புறம் நாம் ஏன் இங்கு இருக்கவேண்டும் இதே எண்ணை எப்படி மற்றொரு தொலை தொடர்புக்கு மாற்றுவது தமிழ்நாட்டில் இந்த வசதி நடைமுறைக்கு வந்து விட்டதா தெரிந்தால் சொல்லுங்க மக்களே...
Read more »

2011 சட்டமன்ற தேர்தல் அறிக்கை

Monday, December 20, 2010 23 comments
தமிழகத்திற்கு வரும் 2011ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக கூட்டணி பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். கூட்டணி மட்டுமின்றி எந்த தேர்தல் என்றாலம் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தான் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும்.

ஒவ்வொரு கட்சியியும் அவர்கள் கூட்டணிக்கு தரும் முக்கியத்துவம் போல் தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு மக்கள் மனதில் பதிக்வேண்டும் எனில் தேர்தல் அறிக்கை முக்கியம்.

தேர்தல் அறிக்கை ஓர் கட்சியின் கொள்கை விளக்கமாகவும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் தொலை நோக்கு திட்டமாகவும் இருக்கும். அக்கட்சியின் பொருளாதார கொள்கையை பட்டியலிட்டு இருக்கும். ஒவ்வொரு கட்சியும் கொள்கை ரீதியான அறிவிப்புகள் முன்னுரிமையாக இருக்கும்.

வங்கிகளைத் தேசியமயமாக்குவது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வரவேற்பது அல்லது தடுப்பது, மின் உற்பத்தியில் தன்னிறைவு, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு முன்னுரிமை போன்றவை கொள்கை அறிவிப்புகள்.

மக்களின் அன்றாட அல்லது அவ்வப்போதைய பிரச்னைகளையும் தங்கள் கட்சி கூர்ந்து கவனிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், ஒரு சில அறிவிப்புகளும் வாக்குறுதிகளும் இடம்பெறும். இப்படித்தான் தேர்தல் அறிக்கைகள் முன்பெல்லாம் இருக்கும்.

ஆனால் தற்போது தேர்தல் அறிக்கை என்றாலே இலவச அறிவிப்புகள் தான் இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும் மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை அனைவரது மனத்தையும் கவர்ந்தது வெற்றிக்கு உதவியது.மக்களுக்கு அரிசி 1 ரூபாய், இலவச கலர் டிவி போன்றவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை இந்தியாவில் பிற மாநிலத்தவரும் அவர்களது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு மக்களை கவருகின்றனர்.

அனைவரது நோக்கம் அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் அதற்கு மிகவும் மக்கள் எதிர்பார்ப்பது தேர்தல் அறிக்கை.

இந்த வருடம் வரும் தேர்தல் அறிக்கையில் கீழ் கொடுத்துள்ள எல்லாம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

1.ரேசன் அட்டை வைத்து இருந்து அந்த வீட்டில் பட்டதாரி இருந்தால் அவர்களுக்கு ஓர் இலவச லேப்டாப்.

2.ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் இலவச செல்போன்

3.அனைவருக்கும் அரசின் இலவச சிம்கார்டு மற்றும் மாதம் 100ரூபாய்க்கு இலவசமாக பேசும் வசதி.

4.இணையதள சேவை பயன்படுத்து பவர்களில் கிராமப்புரத்தில் இருப்பவருக்கு ஒரு மாதம் இலவசம் ஒரு மாதம் குறைந்த பட்ச கட்டணம் 1.

5. பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை இலவச விருந்து முட்டையுடன்.

6. கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி.


7.விவசாயிகளுக்கு இருக்கம் அனைத்து கடனும் தள்ளுபடி

8. மாணவர்களுக்கு இலவச பஸ், இரயில் பாஸ்

9. பள்ளிகளில் காலை இலவச உணவு

10. ஏழை ஆண்களுக்கு திருமண உதவி திட்டம்

போன்ற இலவச திட்டங்கள் நிறைய இருக்கும். நம்ம மக்களும் மாற மாட்டார்கள் இலவசத்தை அதிகம் எதிர்பார்ப்பது மக்கள் தானே. இந்த நிலைமை என்று மாறுமோ?
Read more »

வலையுக பங்காளிகளே நாங்க ரெடி நீங்க ரெடியா?

22 comments

என் இனிய வலையுலக பங்காளிகளே...

வணக்கம்.

வருகிற 26.12.2010 ஈரோடு சங்கமத்தில் எங்கள் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சார்பாக அழைப்புக்கள் பதிவுகளிலும் அழைபேசி எண் உள்ளவர்களை அழைபேசியிலும், சாட்டில் உள்ள பங்காளிகளை சாட்டிலும் ஈரோடு சங்கமத்தில் பழக அழைத்துக்கொண்டு இருக்கிறோம். சங்கமத்தில் முகம் அறியாமல் எழுத்தின் மூலம் பூத்த நட்புகளை சந்திக்க ஓர் அற்புதமான வாய்ப்பு இது. 

நாள்    :  26.12.2010 ஞாயிறு

இடம் : டைஸ் and கெமிக்கல்ஸ் மஹால் URC நகர், பெருந்துறை ரோடு,  ஈரோடு.

நிகழ்ச்சி நிரல்

11.00 மணி வரவேற்பு

பதிவர்களின் சுய அறிமுகம்

வலைப்பூ - ஒரு மாற்று ஊடகம் 

சிறுகதைகளை உருவாக்குவோம்

மதிய உணவு

புகைப்படங்களில் நேர்த்தி

நீங்களும் குறும்படம் எடுக்கலாம்

வலைப்பூக்களில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் (அ) உலகத் திரைப்படங்கள்

பதிவர்களின் கலந்துரையாடல் 

தேநீரோடு நிகழ்ச்சி நிறைவு

பங்காளிகளே அனைவரும் வருக...

வலையுக பங்காளிகள் அனைவரையும் 
எதிர்பார்த்து காத்திருக்கும் 
பங்காளி...
Read more »

எனது எதிரிகள்...

Saturday, December 18, 2010 24 comments
நமது சமுதாயத்தில் தினமும் நாம் பல முகங்களை பார்க்கிறோம், பழகுகிறோம் நமக்கு அனைவரும் பிடிப்பதில்லை வெகு சிலரே நம்மை கவருகின்றனர் மீண்டும் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறோம். இதில் நண்பர்கள் குறைவு, பிடிக்காதவர்கள் (எதிரிகள்) அதிகம். ஏன் அவர்கள்  பிடிக்கவில்லை இதுவே எனது எதிரிகள்.....


பொது இடத்தில்
புகை பிடிப்பவர்கள்.......

எச்சில் துப்புபவர்கள்.....

தண்ணி அடித்து விட்டு
வாகனம் ஓட்டுபவர்கள்...
பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்.....

பேசுகிறேன் என்று சொல்லி
மொக்கை போடுபவர்கள்......

நான் சொல்வது தான் சரி
என்பவர்கள்.......

தனது தவறை
ஓத்துக்கொள்ளாதவர்கள்......

மனைவியை அடிப்பவர்கள்.......

முககவசம் அணியாமல்
வாகனம் ஓட்டுபவர்கள்.......

ஏழை மக்களை வயிற்றில்
அடிப்பவர்கள்.......

வேலை வாங்கித்தருகிறேன் என்று
அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள்.......

கூடவே இருந்து குழி
பறிப்பவர்கள்........

என்னிடம் பணம் இருக்கிறது
என்னால் எல்லாம் செய்யமுடியும்
என்று அகந்தையில் இருப்பவர்கள்........

மக்களுக்கு சேவை செய்கிறேன்
என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்.......

இவை அனைத்தையும் விட
நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
துரோகிகள்.......

இன்னும் நிறைய இருக்கு.........
என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்.......
Read more »

சீக்கிரம் போய்ச் சேரனுமா தம் அடிங்க...

Friday, December 17, 2010 35 comments

மச்சி வாட ஒரு தம் போட்டுட்டு வரலாம் இன்று நிறைய இடங்களில் நண்பர்களிடம் ஒலிக்கும் வார்த்தைகளில் ஒன்று. புகை நமக்கு பகை, புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ன சொன்னாலும், எப்படி விளம்பரப்படுத்தினாலும் இன்று புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. புகைப்பழக்கம் ஒழிக்க முடியாத ஒன்று புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் உடலுக்கு தீங்கான விசயம் என்று. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் புகைபிடிப்பவர்கள் பார்த்து புகைப்பதை விட்டால் தான் புகையை ஒழிக்க முடியும்.

முக்கியமாக இளைய சமுதாயம் நிறைய புகைப்பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர் இதற்கு காரணம் அவர்களின் வருவாய். படிக்கும் போது அவ்வப்போது திருட்டு தம் அடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அதே வேலைக்கு செல்லும் போது தைரியமாக அடிப்பார்கள் கேட்டர்ல் சம்பாரிக்கறமல்ல இது தான் பதிலாக இருக்கும்.

புகைக்க ஆரம்பிக்க சில காரணம்

1. நண்பர்கள் அவன் பிடிக்கிறதை பார்த்து நாமும் குடித்தால் என்பதால்

2.சினிமாவில் நடிகர்கள் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகவும் காட்டுவதால் இவர்களும் ஆரம்பித்து விடுகின்றனர்.

3.வீட்டில் அப்பா குடிப்பதை தினமும் பார்க்கும் போது நாமும் குடிச்சா என்ன

4.சக நண்பர்களிடம் நானும் குடிப்பேன் என பெருமை பீத்துவதற்காக

5.வேலைல டென்சனா இருக்குது அதனால குடிச்சேன் என்பது

6.தம் அடிச்சாதான் சுறுசுறுப்பா இருக்கமுடியும் என்ற நினைப்பு

இப்படி பல தேவையில்லாத காரணங்களுக்காகத்தான் புகை பிடிக்கன்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சப்பை கட்டுவது. புகை பிடித்தால் எனக்கு அது நடந்தது இது நடந்தது என யாரும் சொல்ல முடியாது.

புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்...

கடந்த வருடம் என் நண்பன் இறந்த புகை பழக்கத்தால் கேன்சர் வந்து இறந்தார் அவரைப்பற்றிய எங்கள் நண்பர்களுடன் பேசியதால் அவர் நினைவாக இப்பதிவு...
Read more »

16.12.2010 அஞ்சறைப்பெட்டி

Thursday, December 16, 2010 31 comments

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மார்கழி மாதம் முதல் நாள்.. மார்கழி என்றாலே எழுத்தாளர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் உற்சாகம் தான். இம்மாதத்தில் தான் அனைத்து வீட்டிலும் கோலத்தை பார்க்க முடியும். கடும் குளிர் இருந்தாலும் இம்மாத நிகழ்வுகளால் குளிர் காணமல் போய்விடுகிறது. சென்னைவாசிகள் இப்போதே எந்த சபாவில் என்றைக்கு யார் இசைநிகழ்ச்சி என்று ஒவ்வொரு நாளும் எண்ணியபடி இருப்பர். அடுத்த முக்கிய நிகழ்வு புத்தகத் திருவிழா இந்த வருடமும் புத்தகத்திருவிழா களை கட்டும்.

-------------------------


இந்த வார விடுமுறையில் கோவையில் தான் இருந்தேன் சாய்பாபா காலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றுகிறார்கள் அதற்காக சாலையை அகலப்படுத்தி வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன இந்த சாலையில் ஒரு ஆறு முறை பயணம் செய்தேன். உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு போனேன் என்று கேள்விப்பட்டு இருக்கேன் ஆனால் அன்று தான் அனுபவித்தேன். சாலை புதுப்பிக்கிறார்கள் போக்குவரத்து பாதிப்பு சகஜம்  ஆனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து தனியார் பேருந்தும் ஓலிப்பானை அழுத்திக்கொண்டு வாகனதையும் வேகமாக இயக்குகிறார்கள். அவர்கள் செல்லும் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் செல்கிறார்கள்..


-------------------------

பதிவுலகின் பிரபல பதிவர் நண்பர் வால்பையன் அருண் அவர்கள் கோவை வடகோவை சிந்தாமணி அருகே வெங்கிடுசாமி சாலையில் ஓர் புதிய உணவகத்தை திறந்து உள்ளார் மனைவி சகிதமாக சென்று நண்பரை வாழ்த்த சென்றேன். அழகான இடத்தில் நிறைய வேலைப்பாடுகளுடன் துவங்கி இருந்தார். அருணின் எழுத்தைப்போலவே உணவகமும் ரசிக்கும் படி இருந்தது. கோவை வரும் பதிவர்கள் கை நனைக்க ஓர் நல்ல இடம் இருக்கிறது வந்தா மிஸ் பண்ணிடாதீங்க...


-------------------------

கடந்த திங்கட்கிழமை என் பதிவுலகில் மறக்க முடியாத நாள் ஓர் பதிவை போட்டு விட்டு பதில் கமெண்ட் போட்டுக்கொண்டு இருந்தேன் 6 மணி அளவில் என் சங்கவி வலைப்பூவைக் காணவில்லை மிகுந்த போரட்டங்களுக்கு பின் அடுத்த நாள் காலை கூகுள் ஆண்டவர் மீண்டும் என் சங்கவியை என்னிடம் ஓப்படைத்தார். இதற்கு பதிவுலகில் நண்பர்கள் எனக்கு செய்த உதவியை மறக்க இயலாது..

-------------------------

கோவையில் தினமும் சுங்கம் நிர்மலா கல்லூரி வழியாகத்தான் அலுவலகத்திற்கு  வருவேன். அவ்வழியில் தினமும் நிறைய இளைஞர்களும் பெற்றோர்களும் பெட்டியுடன் நிற்பார்கள். அவசரமாக வருவதால் என்ன என்று பார்க்க நேரம் இருக்காது. சமீபத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த என் தம்பி நின்று இருந்தான் அவனையும் அவன் அப்பாவையும் பெட்டியுடன் பார்த்தேன் உடனே இங்க என்ன பன்ற எப்படி இருக்கின்றாய் என்று விசாரிக்கும் போது அவன் சந்தோசமாக அண்ணா எனக்கு இந்திய இராணுவத்தில் வேலை கிடைச்சிருக்கு என்று சந்தோசமாக சொன்னான். எனக்கும் இன்ம் புரியா ஓர் மகிழ்ச்சி.தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு உயிரை துச்சம் என நினைத்து அவன் கண்களில் எந்த பயமும் இல்லாமல் அவன் மகிழ்ச்சியை மட்டும் பார்த்தேன். இன்று நம்நாட்டில் நிறைய வேலைகள் உள்ளன அனைத்துக்கும் நல்ல சம்பளம் கிடைக்கின்றது ஆனால் இந்த இளைஞனைப்போல் இரானுவத்தை தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு என் ராயல் சல்யூட்...
 
-------------------------


ரஷியா- இங்கிலாந்து இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷியா இங்கிலாந்தில் பெரிய அளவில் உளவு வேலைகளை பார்த்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபர்கள் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் ஆகியோரிடம் உளவு பார்க்கும் பணிகள் நடந்து உள்ளன.

இதற்காக 20 அழகிகளை பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் தொழில் அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் “செக்ஸ்” விருந்து படைத்து உளவு தகவல்களை சேகரித்து ரஷியாவுக்கு அனுப்பி உள்ளனர்.

தகவல் கிடைக்க எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க...
 
-------------------------

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் அரசு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் இலங்கை தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். மற்ற பகுதிகளில் சிங்களத்தில் பாடப்படும். ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த வழக்கத்தை அதிபர் ராஜபக்சே இப்போது ரத்து செய்து உள்ளார். இவருக்கு ஒத்துழைத்தவர்கள் எல்லாம் இன்று என்ன சொல்வார்கள் கண்டனம் தான் சொல்ல முடியும் வேறு ஒன்றும் செய்ய முடியாது.


மறுப்பு அறிக்கையாக வழக்கம் போல் இருமொழியிலும் தேசியகீதம் பாடப்படும் என்று கூறி உள்ளனர்.


-------------------------


அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாரன் வைஸ் ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டார். 2200 பேரிடம் இது நடத்தப்பட்டது. அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர்கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற பிரச்சினைகளில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

அதிக நேரம் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களின் விந்து சக்தி குறைகிறது. எனவே வாரத்துக்கு 5 மணி நேரத்துக்குள் மட்டுமே ஆண்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

------------------------- 

கடந்த வருடம் புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்தது அதற்கு இங்கு உள்ளவர்களும் ஆமாம் என்றனர். ஆனால் இன்றைய அனைத்து பத்திரிக்கைகளிலும் புலிகளால் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி எப்படி அழிந்தவர்களால் இவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்? யாருக்கு தெரியும்...

நாட்டு நடப்பு

2011 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இதில் அதிமுக தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்வது மட்டுமல்லாமல் பிரச்சார பீரங்கியாக நடிகர் விஜய்யை களம் இறக்கலாம் என தெரிகிறது. இந்த முறை தேர்தல் பணி ரேசில் அதிமுக தீவிரமாக உள்ளது.

இயக்குநர் சீமானின் விடுதலை வரவேற்கத்தக்க ஒன்று யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளலாம் என யாருக்கும் எண்ணம் இனி வராது நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்பளிக்கிறது. இனி தமிழனுக்காக ஒரு குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்..

இந்த ஆண்டு மட்டும் 8 முறை பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது கேட்டால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் அதனால் தான் என்று சப்பைகட்டு கட்டுகின்றனர். ஆனால் பக்கத்து நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை நம்மை விட குறைவு அவர்களும் இறக்குமதி செய்த எண்ணெய்களையே உபயோகப்படுத்துகின்றனர் ஏன் என்ற கேள்வி எனக்கு மட்டும்ல்ல 100 கோடி மக்களுக்கும் தான்.

தகவல்


மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.


மொக்கை ஜோக்


பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
 
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.


------------------------- 

ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
-------------------------
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா. 

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
 
அறிமுக பதிவர்

வலைப்பதிவில் உள்ள பதிவர்களை எல்லாம் தங்களுக்குள்ளே தாங்களே கலாய்த்துக் கொள்வார்கள் இது மிக இயற்கையாகவும், சிந்திக்க வைக்கவும், சிரிக்க வைக்கும் இருக்கும் மாதிரி பதிவுகளை எழுத வேண்டும். இதைப் போல் நிறைய பதிவர்கள் எழுதுகிறார்கள் அனைத்தும் ரசிக்கக்கூடியது இதில் சமீபத்தில் வலைப்பதிவிற்கு வந்து சக வலைப்பதிவரைப்பற்றி அற்புதமாக சிரிக்கும் படி எழுதுவதில் வைகை எனப்படும் பதிவரை சொல்லலாம்.. இவர் நம் சக பதிவர்களை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி இருப்பார்... பார்த்து நீங்களும் சிரியுங்களேன்...

http://unmai-sudum.blogspot.com/

தத்துவம்
காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.
உயிர் பிரியும் முன் பலமுறை இறப்பார்கள் கோழைகள், வீரனுக்கு மரணம் ஒருமுறைதான்

இன் முகமே சிறந்த சிபாரிசுக்கடிதம்

குறுஞ்செய்தி

மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”

-----------------

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா ?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GRANTEE & NO WARRANTY.
Read more »