Pages

ஆரோக்கியமாய் இருக்கவேண்டுமா?...... இதைஎல்லாம் சாப்பிடலாமே........?

Sunday, December 13, 2009எனது அலுவலத்தில் மதியம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அன்று எனது தோழிகளும் எங்களுடன் அமர்நது உணவு அருந்தினார்கள்.
அன்று நான் அவரைக்காய் பொறியல், இன்னொரு நண்பர் பாகற்காய், புடலங்காய் பொறியல் இதை எல்லாம் எங்கள் தோழிகள் மூவருக்கும் கொடுத்தோம் அதற்கு அவர்கள் சொன்ன பதில் நாங்க நாட்டுக் காய் எல்லாம் சாப்பிடமாட்டோம் என்றார்கள். வேறு என்னதான் சாப்பிடுவீர்கள் என்றால் இங்கிலீஸ் காய்களான கேரட், பீன்ஸ், பீட்டூட், பட்டாணி, முட்டைகோஸ் தான் சாப்பிடுவார்களாம். என்ன இவர்கள் நாட்டுக்காய்களின் அருமைகளை சொன்னால் இவர்கள் சொன்ன பதில் நாங்க எல்லாம் கான்வென்ட்ல படிச்சோம் அங்க இதேல்லாம் சாப்பிட மாட்டோம் நாங்க அப்ப இருந்து இங்கிலிஸ் காய்கறிதான் சாப்பிடுகிறோம் எங்க வீட்டில் எங்களுக்கு இதுதான் பிடிக்கும்  என்று சொல்லிவிட்டார்களாம் அதனால அவங்க சமைச்சாலும் இவர்களுக்குத் தரமாட்டார்களாம். இப்ப என் தோழிகளுக்கு வயது 24 இவர்களுக்கு இதன் மகத்துவத்தை சொன்னால் யோசிக்கிறார்கள்.
ஐந்தில் வளையதாது ஐம்பதில் வளையுமா இந்த பழமொழிதான் எனக்கு ஞாபகம் வந்தது. கீரை சாப்பிடுவீர்களா என்றால் அவர்களிடம் இருந்து வந்த பதில் ஜயே... எனக்கு அது புடிக்கவே புடிக்காது. அப்புறம் அவர்களுக்கு ஒவ்வொரு மகத்துத்தையும் எடுத்துக்கூறி அப்புறம் ஒரு ஆறு மாதத்தில் கொஞ்சம் சாப்பிட பழகிவிட்டார்கள் அவர்கள் அம்மாவிடம் பேசினால் பரவாயில்லை தம்பி இப்பவாவது சாப்பிடுதுங்களே என்றார்கள்..

இப்ப இருக்குறவங்களே சாப்பிடுவதில்லை இனி அடுத்ததலைமுறையாவது சாப்பிடுமா கேள்விக்கூறியே பதில். எனக்கு இருந்த தோழி போல் எத்தனை நண்பர்கள் நமது காய்கறிகளின் மகத்துவம் தெரியாமல் சாப்பிடாமல் இருக்கிறார்களோ. இது என் நினைவிற்கு வந்தது அதனால் எனக்கு தெரிந்த காய்கறிகளையும் அதன் மகத்துவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன் அதனால் இந்தப்பதிவு...


முருங்கை காய் :

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.


சுரைக்காய் :


சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது. கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

புடலங்காய் :
இது ஒரு சத்துள்ள உணவாகையால் கிடைத்தபோது வாங்கி சமைத்து உண்ணலாம்.மேலும் இது பத்தியத்துக்கு மிகவும் சிறந்த காய். எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய புஷ்டியைக் கொடுக்கவல்லது. இதனால் ஏற்படும் தீமைக்கு கடுகுப் பொடி, கரம் மசாலா மாற்றhகும்.
இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்

பீர்க்கங்காய் :

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.


வெண்டைக்காய் :

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.

அவரைக்காய்:

அவரைக்காயில் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உட்கொள்ளலாம்.
இதைச் சமைத்து சாப்பிட்டால் உடலை உரமாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் ஏற்ற காய் ஆகும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். அவர்களுக்கு மிகவும் நல்லது.

பயத்தங்காய்:
இது நல்ல உணவுப் பொருள். இதனுடைய சுபாவம் குளிர்ச்சி ஆகும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். காற்றை நீக்கும்.
இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சற்று பிஞ்ஞாக சமைப்பதே நலம்.
ஆனால் ஒரு கண்டிஷன். இந்தக் காயை மருந்து உண்ணும் காலங்களில் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.அகத்திக்கீரை:
சித்தமுறைப்படி, அகத்திக் கீரையை 30 நாட்களுக்கு ஒரு முறையே உண்ண வேண்டும். அமாவாசை நாளன்று உண்பது மிகவும் உகந்தது. சூரிய உதயத்திற்கு முன் கீரையைப் பறிக்க வேண்டும். நாள் பட்ட கீரைகளை, சமைத்துண்ணுவது உடலுக்கு சிறப்புடையதன்று. வேறு மருந்துகளை(எந்தவகை / முறை மருந்து என்றாலும்)உட்கொள்ளும் காலங்களில் ,இதனை தவிர்த்தல் மிக நலம்.காரணம், உட்கொள்ளப்படும் மருந்தின் ஆற்றலை மிக மிக குறைத்து விடும். சுருங்க்ககூறின், நம் அகத்தின் தீயை அகற்றும். எனவே, அகத்தி என்றாகியது.

மணத்தக்காளிக் கீரை:
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது உணவில் உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன. இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

கொத்தமல்லிக் கீரை:
வயிற்றுவலி, வயிற்றுப் பெருமல் போன்ற நோய்களுக்கு கொத்தமல்லி ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

முளைக் கீரை:
பசியைத் தூண்டிவிடும் சக்தி இதற்கு உண்டு. சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு முளைக்கீரையை சேர்த்து கொடுத்தால், ‘சாப்பாடு கொடு’ என்று அடம் பிடிப்பார்கள்! காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைக்கீரையை அதிகம் சாப்பிடலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தக்கீரைக்கு மட்டுமே உண்டு.


பொன்னாங்கண்ணி:
விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

முருங்கைகீரை:
உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

இதை எல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும் என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் நாமும் பயன்படுத்தி பார்ப்போம் என உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எதையாவது விட்டு இருந்தால் நீங்களும் எனக்கு சொல்லுங்களேன்.........

47 comments:

{ வானம்பாடிகள் } at: December 14, 2009 at 1:19 AM said...

மிகப் பயனுள்ள இடுகை.

venkat at: December 14, 2009 at 2:50 AM said...

அருமையான.. உபோயகமான.. பதிவு வாழ்த்துக்கள்

{ பூங்குன்றன்.வே } at: December 14, 2009 at 2:58 AM said...

இப்ப இருக்கிற தலைமுறையே பிட்ஸாவை தான் சாப்பிட ஆசைபடுதுங்க.வரும் தலைமுறை? பயமாத்தான் இருக்கு.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எடுத்து சொன்னால் கேட்ட வாய்ப்புண்டு.நல்ல இடுகைக்கு நன்றி !

{ தியாவின் பேனா } at: December 14, 2009 at 5:48 AM said...

நல்ல ஆரோக்கியமான இடுகை
வாழ்த்துகள்

{ சங்கவி } at: December 14, 2009 at 7:08 AM said...

வாங்க வானம்பாடி சார்.....

நீங்க சொன்னது போல் இப்பதிவில் வாக்கியங்கள் சரியாக இருக்கின்றதா சார்......

{ சங்கவி } at: December 14, 2009 at 7:10 AM said...

வாங்க வெங்கட்.....

வாங்க பூங்குன்றன்.......

வாங்க தியா.........


தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

{ எஸ்.ஏ.சரவணக்குமார் } at: December 14, 2009 at 8:19 AM said...

ஆரோக்கியமான (இடுக்கை) விருந்து! நல்லா இருக்கு!!

{ ஜெனோவா } at: December 14, 2009 at 8:20 AM said...

ரொம்ப பயனுள்ள பதிவு நண்பா !
தொடர்ந்து எழுதுங்கள் !

{ சென்ஷி } at: December 14, 2009 at 8:53 AM said...

// வானம்பாடிகள் said...

மிகப் பயனுள்ள இடுகை.//

வழிமொழிகிறேன். நிறைய பயனுள்ள தகவல்கள் தலைவரே.. பகிர்விற்கு நன்றி!

{ Priya } at: December 14, 2009 at 9:32 AM said...

மிகவும் பயனுள்ள பதிவு...
படிக்கும் போதே ஆரோக்கியமா feel பண்ண வச்சிட்டீங்க.

agila at: December 14, 2009 at 12:44 PM said...

இங்கேயும் கோடைக்காலங்களில் நாட்டுக்காய்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் வாங்கி சமைத்து விடுவேன். நாட்டுக்காய்களில் சமைக்கும்போது வரும் ருசி காலிபிளவர் போன்ற காய்களில் வருவதே இல்லை.

{ விக்னேஷ்வரி } at: December 14, 2009 at 6:26 PM said...

பயனுள்ள பதிவு சங்கவி.

{ Chitra } at: December 14, 2009 at 8:03 PM said...

காய்கறிகள் போட்டோவிலும் ஆரோக்கிய விவரங்கள் இடுகையிலும் அருமை.

{ பாலா } at: December 14, 2009 at 9:15 PM said...

அருமயான தகவல்

{ சங்கவி } at: December 14, 2009 at 9:19 PM said...

வாங்க வாங்க .....

நெல்லை சரவணக்குமார்

ஜெனோவா

சென்ஷி

பிரியா

சின்னஅம்மிணி

விக்னேஷ்வரி

வாங்க சித்ரா வாங்க.........

நண்பர்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும்

நன்றி...... மீண்டும் வருக வருக............

{ கண்மணி/kanmani } at: December 14, 2009 at 10:38 PM said...

உண்மையிலேயே பயனுள்ள இடுகை.பீஸா,பர்கர்னு சாப்பிடறவங்க எங்கே நாட்டுக்காய்கறி பத்தி தெரிஞ்சிருக்கப் போறாங்க.
அடக்கடவுளே காய்கறியிலும் பாகுபாடா;((

{ கண்மணி/kanmani } at: December 14, 2009 at 10:39 PM said...

அருமை அவசியமான இடுகை.நீங்க தமிழ்மணத்துல இணையலையா

{ butterfly Surya } at: December 14, 2009 at 11:32 PM said...

Very interesting and useful.

Thanx for sharing.

Keep it up.

{ Vidhoosh } at: December 14, 2009 at 11:40 PM said...

நல்ல பகிர்வு. அருமையாக இருக்குங்க.
-வித்யா

{ aazhimazhai } at: December 14, 2009 at 11:43 PM said...

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல உபயோகமான பதிவு !!! பகிர்தமைக்கு நன்றிகள்

{ goma } at: December 15, 2009 at 12:50 AM said...

தமயந்தியின் பின்னூட்டப் பெட்டியில் உங்கள் பதிவின் லின்க் பிடித்து வந்தேன்.

காய்கறியில் டாப் டென் கவுண்ட் டெளன் வாசித்த மாதிரி இருந்தது.சூப்பர்.
இந்த பதிவு கோயம் பேடு ஸ்பெஷல்

{ karurkirukkan } at: December 15, 2009 at 1:02 AM said...

very good useful information

{ சங்கவி } at: December 15, 2009 at 1:32 AM said...

வாங்க கண்மணி.....

//உண்மையிலேயே பயனுள்ள இடுகை.பீஸா,பர்கர்னு சாப்பிடறவங்க எங்கே நாட்டுக்காய்கறி பத்தி தெரிஞ்சிருக்கப் போறாங்க.
அடக்கடவுளே காய்கறியிலும் பாகுபாடா;((//

என்ன செய்வது புதுமை என்கிற பெயரில் உடலை கெடுத்துக்கொள்கிறார்கள்......

{ சங்கவி } at: December 15, 2009 at 1:34 AM said...

Hi ButterFly Suriya.........

Welcome to You.....

{ சங்கவி } at: December 15, 2009 at 1:34 AM said...

//அருமை அவசியமான இடுகை.நீங்க தமிழ்மணத்துல இணையலையா//

தமிழ்மனத்தில் இப்பதான் இணைந்து இருக்கிறேன் கண்மணி...........

{ சங்கவி } at: December 15, 2009 at 1:37 AM said...

வாங்க வித்யா...........

வாங்க ஆழிமலை.......

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி

{ சங்கவி } at: December 15, 2009 at 1:41 AM said...

வாங்க கோமா........

//தமயந்தியின் பின்னூட்டப் பெட்டியில் உங்கள் பதிவின் லின்க் பிடித்து வந்தேன்.//

வந்துட்டீங்கள்ள அதுவே சந்தோஷம்........

//காய்கறியில் டாப் டென் கவுண்ட் டெளன் வாசித்த மாதிரி இருந்தது.சூப்பர்.
இந்த பதிவு கோயம் பேடு ஸ்பெஷல்//

கோயம்பேடு போயி உடல் நலத்திற்கு ஏதுவான காய்கறிகள் வாங்கினால் சந்தோஷந்தாங்க........

{ சங்கவி } at: December 15, 2009 at 1:44 AM said...

கண்மனி, சூர்யா, வித்யா, ஆழிமலை, கோமா, பாஸ் நீங்க எல்லாம் முதன் முறையாக வந்து இருக்கிறீங்க.... ரொம்ப சந்தோஷமா இருக்கு........

முடிஞ்சா அப்ப அப்ப வாங்க....

{ அண்ணாமலையான் } at: December 15, 2009 at 7:24 AM said...

வந்தாச்சு.. சந்தோஷமா?

{ மீன்துள்ளியான் } at: December 15, 2009 at 8:25 AM said...

நீங்க கீரைகளை பத்தி இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் .

புளிச்ச கீரை
அரை கீரை
முளை கீரை
தண்டன் கீரை
அது தவிர தடியங்காய் , கொள்ளு பற்றி எழுதுங்க ..
முக்கியமான துவையல் பத்தியும் எழுதுங்க (எள்ளு , கொத்தமல்லி , மல்லி )

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

{ டம்பி மேவீ } at: December 15, 2009 at 4:31 PM said...

thala..... nalla vishyam thaan...aanaal ennai madiri mess la sappidaravanga enna panna mudiyum nnu sollunga...

intha listyai poi master kitta kaatinga bad bad words la scold pannuvanga....

{ சங்கவி } at: December 15, 2009 at 10:09 PM said...

//வந்தாச்சு.. சந்தோஷமா?//

நிச்சயமா.. வந்தது துனை பேராசிரியராச்சே...................
வருகைக்கு நன்றி சார்.............

{ சங்கவி } at: December 15, 2009 at 10:11 PM said...

வாங்க மீன்துளி செந்தில்........

//நீங்க கீரைகளை பத்தி இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் .

புளிச்ச கீரை
அரை கீரை
முளை கீரை
தண்டன் கீரை
அது தவிர தடியங்காய் , கொள்ளு பற்றி எழுதுங்க ..
முக்கியமான துவையல் பத்தியும் எழுதுங்க (எள்ளு , கொத்தமல்லி , மல்லி )//

நிச்சயமாக தகவல்கள் திரட்டிக்கொண்டு இருக்கிறேன்
விரைவில் பதியப்படும்........

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.........

{ சங்கவி } at: December 15, 2009 at 10:14 PM said...

கவலைப்படாதீங்க டம்பிமேவி......

கொஞ்ச நாள் காத்திருங்க கல்யாணத்துக்கு அப்புறம்
மனைவி கையால இதையெல்லாம் சாப்பிடுங்க.........

{ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ } at: December 15, 2009 at 10:48 PM said...

நல்ல பதிவு நன்றி நண்பரே.

இந்த ஒரு காரணத்துக்காகவே நகரம் தள்ளி ஒரு கிராமத்தில் வீடு வாங்கி இருக்கிறேன். சிறிய அளவில் வீடு வைத்து, பெரிய தோட்டம் போட்டு நஞ்சில்லாமல் நல்ல உணவு உண்பதற்காக...

{ angel } at: December 15, 2009 at 11:13 PM said...

m neenga itha eluthirukadha enga amma patha nan avlothan

{ சங்கவி } at: December 15, 2009 at 11:24 PM said...

//m neenga itha eluthirukadha enga amma patha nan avlothan//

Wait I will inform u r Amma.....

Thank u for u r visit.....

{ சங்கவி } at: December 15, 2009 at 11:24 PM said...

//இந்த ஒரு காரணத்துக்காகவே நகரம் தள்ளி ஒரு கிராமத்தில் வீடு வாங்கி இருக்கிறேன். சிறிய அளவில் வீடு வைத்து, பெரிய தோட்டம் போட்டு நஞ்சில்லாமல் நல்ல உணவு உண்பதற்காக...//

தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி பாலா......

{ ராமலக்ஷ்மி } at: December 16, 2009 at 2:28 AM said...

நல்ல பதிவு.

{ ஜோதிஜி } at: December 16, 2009 at 6:45 PM said...

சிக்கல் இல்லாமல் எளிமையாக உள்ளே நுழைந்த தளம். உடம்பு சிக்கலை போக்கும் அத்தனை எழுத்துக்களுக்கும் வாழ்த்துக்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள். நன்றி தண்டோரா

{ Jaleela Kamal } at: December 20, 2009 at 5:02 AM said...

கீரை காய்கறிகள் பற்றி அருமையான தகவல், இரண்டு பாகமாக பிரித்து போட்டு இருக்லாம்.

{ Mangaiarkarasi } at: January 19, 2010 at 11:14 PM said...

Sang Kavi sir,

Your information regarding the nutritional value of the country vegetables was very very good and useful.Hope many people are benefitted by the information.
Keep up your good work !!!!

I dont know Tamil typing .That is why i am replying in English.i apologise for the same.

{ விஜய் } at: February 23, 2010 at 8:35 AM said...

மிக உபயோகமான தகவல்கள்.

வாழ்த்துக்கள்

(அகத்திக்கீரை ஒரு மது முறிவு கீரை. மது அருந்திவிட்டு அகத்திக்கீரை உண்டால் அவரது கதி அதோகதிதான்.)

விஜய்

{ prabhadamu } at: February 26, 2010 at 5:03 PM said...

மிகப் பயனுள்ள இடுகை

{ தங்கவேல் மாணிக்கம் } at: June 29, 2010 at 11:04 PM said...

சங்கவி, உங்களின் பதிவு முற்றிலும் உண்மை. சிக்கன், மட்டன் சாப்பிடுவதை நிறுத்தி வெறும் நாட்டுக்காய்கறிகளை உண்ண ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள் உடல் இலேசாக எந்த வித தொந்தரவும் இன்றி இருக்கிறது. என் வீட்டில் அதிகம் பயன்படுத்துவது நாட்டுக்காய்கறிகள் மட்டுமே. பதிவுக்கு வாழ்த்துக்கள்

{ sweatha } at: July 28, 2010 at 11:38 AM said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

{ Ananthi (அன்புடன் ஆனந்தி) } at: September 16, 2010 at 8:15 PM said...

நாட்டுக் காய்கறிகள் பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.. நன்றி.

Post a Comment