Pages

பால்ய காலம் - 6 முதல் 10 வயது வரை

Thursday, November 19, 2009
இது வரை எனது வலைப் பூவில் நான் படித்த எனக்குப்பிடித்த பதிவுகளை மட்டுமே சேர்த்து இருந்தேன்.
இனி எனது அனுபவம், எனது இளமைக்காலம், என் பார்வைியல் அரசியல், என் பார்வைியல் சினிமா, எனது சமூகம், எனது நண்பர்கைள்ப பற்றி இனி
கிறுக்கப்போகிறேன்........

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டம், பவானி அருகே சிற்றாறும், காவிரியும் சங்கமிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இனிய கிராமத்து மண்வாசனையுடன் உள்ள குக்கிராமத்தில் பிறந்தேன். நான் 1 முதல் 5வது வரை படித்தது எமது ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
நான் நிறைய குரும்பு செய்வேன் அதனால் தினமும் எனக்கு எனது முதல் ஆசான்களிடம் பூசை (அடி) பின்னி எடுத்துவிடுவார்கள் இன்றும் என் பால்ய நண்பர்கள் என்னிடம் கிண்டலடிப்பார்கள். நான் படிக்கும் போது அடித்த லூட்டிகள் நிறைய ஞாபகங்கள் இருக்குகின்றது. இங்கு முக்கியமாக எனது நண்பர்கள் விஜயகுமார், செந்தில், அருள்(இவன்கூட தினமும் சண்டை போடுவேன்), வேலுச்சாமி, வேல்முருகன், பரந்தாமன் (இன்று இவன் என் கூட இல்லை), சக்தி (கம்பு சுற்றுவதில் வீரன்), முருகானந்தம் இன்னும் பலர் இவர்கள் அனைவருடன் இன்றும் தொடர்பில் உள்ளேன். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியில் சிற்றாறு உள்ளது இங்கு தண்ணீர் வந்தர்ல மீன் பிடிக்கச் செல்வோம் இப்படி செல்லும் போது ஒரு நாள் தண்ணீர் அதிகமாக வரும்போது நான் அடித்து செல்லப்பட்டேன் நடு ஆற்றில் சிக்கிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்(அப்போது எனக்கு நீச்சல் தெரியாது,
நான் நீச்சல் கற்றது தனிக்கதை) எனது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பாலத்தின் மேல் சென்று கொண்டு இருந்தவன் வந்து என்னைக்காப்பாற்றி எனது வீட்டில் கொண்டு சேர்த்தான் அம்மாவிடம் அன்று செம்ம பூசை அது பத்தாது என்று அடுத்தநாள் அம்மா எனது ஆசானிடம் பள்ளி வந்து கூறிவிட்டாள் அன்று விழுந்த அடி வாழ்க்கையில் இன்று வரை நினைவிருக்கிறது.

இந்த வயதில் ஊார்திருவிழா வந்தா குஷி தான் அதுவும் எங்க ஊர்பண்டிகை மே மாதாம் தான் வரும் இங்க அடிக்கும் கூத்து அன்று முதல் இன்று வரை கம்பத்து ஆட்டம் ஆடுவேன் இதைப்பற்றி தனியா எழுதுறன்.

ஊரில் சின்ன வயதில் விளையாடும் விளையாட்டு இன்னும் நினைத்தால் சந்தோசம் தான் நொங்கு வண்டி ஓட்டுவது, டயர் வண்டி ஓட்டுவது, தெல்லு (சோடா பாட்டில் மூடியை வைத்து கல்லால் அடித்து வியைாடுவது), குண்டு, பம்பரம், கண்ணாமூச்சு, இடு பந்து, கொழை கொழையா முந்திரிக்கா,
கில்லி (இதில் பல வகை பில்லுக்குச்சி, கஞ்சி காச்சுதால்) சனி ஞாயிறுகளில் கூட்டாஞ்சோறு, மீன் பிடித்து சுட்டு தின்பது இவ்விளையாட்டுக் கெல்லாம் எங்கள் தலைவர் விஜயகுமார் தான். இப்படி எல்லாம் விளையாடி, அடிவாங்கி ஒரு வலியாக 5ம் வகுப்பு பாஸ் செய்து 6 வது படிக்க பொரிய ஸ்கூல்க்கு அனுப்பினாங்க..... அங்க வாங்கின கொடுத்த அடி, உதை, குத்து, சந்தோஷம், முதல் காதல், திருட்டு தம் இன்னும் நிறைய இருக்கு....
அநேகமா நியைற மொக்ககை போட்டுட்டன்னு நினைக்கிறேன் (நினைக்கிறது என்ன பெரிய மொக்கைன்னு உங்க மனது சொல்லுது சின்னப்பையன விட்டுறுங்க....................)

9 comments:

{ தேவன் மாயம் } at: November 19, 2009 at 11:25 PM said...

ஊரில் சின்ன வயதில் விளையாடும் விளையாட்டு இன்னும் நினைத்தால் சந்தோசம் தான் நொங்கு வண்டி ஓட்டுவது, டயர் வண்டி ஓட்டுவது, தெல்லு (சோடா பாட்டில் மூடியை வைத்து கல்லால் அடித்து வியைாடுவது), குண்டு, பம்பரம், கண்ணாமூச்சு, இடு பந்து, கொழை கொழையா முந்திரிக்கா,
கில்லி (இதில் பல வகை பில்லுக்குச்சி, கஞ்சி காச்சுதால்) சனி ஞாயிறுகளில் கூட்டாஞ்சோறு, மீன் பிடித்து சுட்டு தின்பது இவ்விளையாட்டுக் கெல்லாம் எங்கள் தலைவர் விஜயகுமார் தான். இப்படி எல்லாம் விளையாடி, அடிவாங்கி ஒரு வலியாக 5ம் வகுப்பு பாஸ் செய்து 6 வது படிக்க பொரிய ஸ்கூல்க்கு அனுப்பினாங்க..... அங்க வாங்கின கொடுத்த அடி, உதை, குத்து, சந்தோஷம், முதல் காதல், திருட்டு தம் இன்னும் நிறைய இருக்கு...///


நல்ல சுவையான மொக்கை!!!

{ சங்கவி } at: November 21, 2009 at 2:25 PM said...

தங்கள் வருைக்ககு நன்றி!

{ Prasanna } at: November 21, 2009 at 2:31 PM said...

ரொம்ப இயல்பா நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க :)

{ சங்கவி } at: November 21, 2009 at 3:41 PM said...

தங்கள் வருைக்ககு நன்றி.....
பிரசன்னகுமார்

{ விக்னேஷ்வரி } at: November 23, 2009 at 4:36 AM said...

சிறு வயது குறும்புகள் எப்போதும் இனிக்கும். நல்ல கொசுவத்தி.

{ சங்கவி } at: November 23, 2009 at 7:19 AM said...

நன்றி.....

விக்கி......

{ தியாவின் பேனா } at: November 23, 2009 at 11:46 PM said...

நல்ல எளிமையான நடையில் எழுதியிருக்கிறிங்கள்

{ சங்கவி } at: November 24, 2009 at 3:54 AM said...

தங்கள் வருகைக்கு நன்றி...
தியா....

{ தமிழரசி } at: April 5, 2010 at 2:16 AM said...

தேவன் மயம் சார் சொன்ன மாதிரி சுவையான மொக்கை தான்...

Post a Comment